விரல் கோர்த்திடும் வரம் போதுமே - ஒரு குட்டி முன்னோட்டம்

Advertisement

மித்து😍

Well-known member
Member
"அப்பா!! எனக்கு.. எனக்கு இவரை பிடிச்சிருக்கு ப்பா!!" என அங்கு கைகளைக் கட்டிக் கொண்டு நின்றிருந்த வினயை சுட்டிக்காட்டி வந்தனா தயக்கத்துடன் கூறியே விட,

வந்தனாவிற்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது என அங்கிருந்த அனைவரும் பயம் கலந்த வியப்புடன் அடுத்து நடக்கப் போவதை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தனர்.

குறிப்பாக, நாட்டரசன் இதைக்கேட்ட பின் கை நீட்டி விடுவாரோ என அவரைத் தடுக்கவும் தயாராகவே நின்றிருந்தனர்.

ஆனால் இவர்கள் எண்ணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு நிகழ்வு தான் அடுத்து நடந்தது.

நிச்சயம் நாட்டரசன் கோபம் கொண்டு, ஒரு அடிதடி நடக்கப் போகிறது என அனைவரும் எதிர்பார்த்திருக்க, அவரோ யாரும் கனவில் கூட நினைத்துப் பார்த்திராத ஒரு செயலை செய்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தார்.

மகளின் முடிவைக் கேட்டபின் அவரின் கண்கள் வினய் மற்றும் வந்தனாவை தான் ஆழ்ந்து நோக்க, அவர் பார்வையில் இருந்து அவர் என்ன நினைக்கிறார் என்றே கணிக்க முடியவில்லை.


சற்று நேரம் அனைவரையும் பதற்றத்தில் ஆழ்த்தியவர், இறுதியில் புன்னகையுடன் வந்தனாவை அழைத்து, "உன் ஆசை தான் எனக்கு முக்கியம் டா.. "என அவளின் தலையில் வாஞ்சையாய் கை வைத்துக் கூற,

அவர் சம்மதித்து விட்டார் என்பதைக் கிரகிக்கவே சில நொடிகள் தேவைப்பட்டது அங்கிருந்தவர்களுக்கு.

புரிந்ததும் வந்தனா கண்ணீருடன், "அப்பா!!!" என அவரின் மார்பில் சாய்ந்துக் கொள்ள,


பல வருடங்கள் கழித்து மீண்டும் உணர்ந்த மகளின் ஸ்பரிசத்தில், நாட்டரசன் மீண்டும் புதிதாய் ஜனித்தார்
.


தந்தை - மகள் இருவரும் தனி உலகில் இருக்க, இங்கே மற்ற குடும்ப உறுப்பினர்கள் வினய்யிடம் தங்களின் மகிழ்ச்சியையும் வாழ்த்தையும் பகிர்ந்து கொண்டனர்.

அனைவரிடமும் அவன் இன்முகமாய் பேசி பதிலளித்தாலும் அவனின் கண்கள் என்னவோ வந்தனாவைத் தான் பூவைச் சுற்றும் வண்டாய் சுற்றி வந்தது.

அதைக் கண்டுகொண்ட நாட்டரசன், மகளை தன்னிடமிருந்து பிரித்து, "போய் பேசிட்டு வா!! நாங்க அங்க இருக்கோம்" என வினயிடம் அனுப்பி வைக்க,

இப்போது வந்தனாவிடம் வந்து ஒட்டிக் கொண்டது வெட்கம்.

அவன் பார்வை தன்னையே மொய்ப்பதைக் கண்டு, அவளின் கால்கள் நகராமல் சண்டித்தனம் செய்ய,

அவளின் தவிப்பை ரசித்தவனின் இதழோரம் ஒரு ரகசியப் புன்னகை குடிகொண்டது.

இருவருக்கும் இடையில் இருந்த அந்த இருபது அடித் தொலைவை அவள் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் வரையில் பொறுமை இல்லாத வினய், சட்டென அவளை நெருங்கியிருக்க,

ஆடவனின் திடீர் அண்மையில், பெண்மைக்கு மூச்சடைக்கும் உணர்வு.

அவளின் ஒவ்வொரு உணர்வுகளையும் தனக்குள் உள்வாங்கிக்கொண்ட வினய்யின் மனதில் ஆயிரமாயிரம் வண்ணப் பூக்கள் பூத்து மலர்ந்து மணம் வீச, அவன் முகம் மலர்ந்து விகசித்தது.

இருவருக்கும் இடையில் இடைவெளி குறைகையில், வந்தனாவின் இதயம் தாளம் தப்பிக் குதிக்க, அவளின் மூச்சுக்காற்று மோத, அவன் மோட்சம் அடைந்தான்.

"வதனா!!!" குரலில் மென்மை கொட்டிக் கிடக்க,

பெண்ணவளின் மதிமுகம் நிமிர்ந்து அவளின் மனம் கவர்ந்தவனை நோக்கியது.

கண்கள் நான்கும் மௌனமாய் ஒரு காவியத்தை அரங்கேற்ற, இருவருக்குள்ளும் நீடித்த மௌனத்தை, காதல் நிரப்பியது.

"இனி கட்டிக்கலாமா???" என அவன் கேட்க,

நாட்டரசனின் சம்மதமும் கிடைத்த பின் அவனைக் காக்க வைப்பதில் பிடித்தம் இல்லாத வந்தனாவும், "ம்ம்.. சீக்கிரமே!!!" எனத் தன் சம்மதத்தை தெரிவிக்க,

அடுத்த நொடி அவன் கைகளுக்குள் பாந்தமாய் சிறை பட்டிருந்தாள் அவனின் காதலி.

அவள் திருமணத்திற்கு கேட்கிறான் என நினைத்து சம்மதம் கூறியிருக்க, அந்தக் கள்வனோ அவளை சிறையெடுக்க அனுமதி கேட்டிருக்கிறான் என அந்த சிறுபெண்ணுக்கு புரியவில்லை பாவம்.

முதலில் அவன் அணைப்பில் அதிர்ந்து, பின் விலக முயன்று, இறுதியில் தன் கூட்டை சேர்ந்து விட்ட நிம்மதியுடன் அவன் மார்பில் தலை சாய்த்தது பெண்மை.







இது இதற்கு முன் கதையில் வந்ததில்லை.. இதற்கு பின்னும் எப்போதும் கதையில் கனவாகக் கூட வரப்போவதில்லை என்று கூறிக்கொண்டு ஓட்டமெடுக்கிறார் பதிவர்😂😝
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top