Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழியாக நான் இமையாக நீ 3

Advertisement

TNWContestWriter080

Well-known member
Member
அத்தியாயம் 3

மருத்துவரின் அறைக்குள்
நுழைந்த ரவிச்சந்திரன்,
அவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு, தங்களது கம்பெனியின், புதிதாகத்
தருவிக்கப்பட்ட,
மருந்துகளின் விபரங்களை
மருத்துவர் ஷீபாவிடம் ,
எடுத்துக் கூறினான்.
" சார், எனக்கு வேண்டியது,
சமீபத்தில ரிலீஸ் ஆன
பிரொஜஸ்டிரான்
ஊசிகளைப்
பத்தின விளக்கமும் அதுக்கான டாகுமெண்ட்ஸும் தான்
சும்மா கருமுட்டை வளர்ச்சியை மட்டும் பார்த்துக்கிட்டு
ரிசல்ட்டை ஆண்டவன் கையில விடறதுக்கு நான் என்ன,
தர்ம ஆஸ்பத்திரியா
நடத்திட்டு இருக்கேன்.
போன மாசம், ஐ.வி.எப் ,
மட்டும் மொத்தமே முப்பத்தைந்து சதவீதம் தான் பாஸிடிவ்.
அதனால, கருவைத் தங்க
வக்கிறதுக்கான,
பிரொஜஸ்டிரான் ஊசிகள்,
இன்னும் அதிகமான
டோஸேஜ் கிடைக்குமா. இது விஷயமா நான் உங்க எம்.டி கிட்டயே பேசினேனே. அவர் எதுவும சொல்லலையா?
" என்று கேட்டாள் ஷீபா.
"டாக்டர், பிரொஜஸ்டிரான்
ஊசிகளை அதிகமாப் போடறது பெண்களுடைய கர்ப்பப்பையை அதிகமாப் பாதிக்கும்னு தானே, அதுக்கான
டோஸேஜை ஒரு
லிமிட்டுக்குள்ள வச்சிருக்காங்க . எல்லாம் தெரிஞ்ச நீங்களே
இப்படி கேட்கறீங்க?" என்று
கேட்டான் ரவிச்சந்திரன்.
ஷீபா அவனை நோக்கி ஓரு
அலட்சியப் பார்வையைச்
சிந்தி விட்டு. " ம், ஓ.கே சார். நீங்க கிளம்புங்க..இன்னும்
ரெண்டு நாள்ல உங்களுக்கான ஆர்டர், ஃபைலை நான் அனுப்பி வைக்கிறேன் " என்று சொல்லி விட்டு வெளியே காத்திருக்கும் அடுத்த நபருக்காகத் தனது, அழைப்பு மணியை அழுத்தினாள் ஷீபா.
ரவிச்சந்திரன் சற்று எரிச்சல் உற்றவனாகி , இருக்கையை விட்டு எழுந்து கொண்டான்.
" ஓ.கே டாக்டர், நீங்க கேட்கிற
மெடிசின்ஸ் பத்தி நானும்
மேற்கொண்டு எங்க எம்.டி
கிட்ட கேட்கிறேன். " என்று சொல்லி விட்டு அறையை விட்டு வெளியேறினான்.

ரவிச்சந்திரன் காத்திருக்கும் விவரத்தை ரிசப்ஷனில
நினைவு படுத்தி விட்டுத்
தனது தோழி, பிரீத்தாவைத் தேடினாள் வெண்ணிலா.
' நான் வெயிட் பண்ணச் சொல்லிட்டுத் தானே போனேன்..அதுக்குள்ளே இவ எங்கே போயிட்டா. அவளே பார்க்க, என்னமோ
மாதிரி , இளைச்சுக் கருத்துப் போய் இருக்கா.
உதடெல்லாம் காய்ஞ்சு போய் என்னவோ பல நாள் நோய்ல விழுந்தவ மாதிரி இருக்கா. அதான் அவ கிட்ட பேசுவோம்னு நெனச்சேன். ம், அதுக்குள்ள போயிட்டாளா ' என்று எண்ணியவாறே , மருத்துவமனை வாயிலுக்கு அருகில் நின்று கொண்டிருந்தாள் .
அவளது பணி நேரம் முடிந்து விட்டிருந்தது. இப்போது, செவிலியர்க்கான உடுப்பில் இருந்து மாறி, சுடிதாருக்கு வந்திருந்தாள் .
கொண்டை கலைந்து, நீள்
ஜடையாகி விட்டிருந்தது.
பிரீத்தாவைக் காணவில்லை என்பதைத் தெரிந்து கொண்டதும் அவள் ரிசப்ஷனில் இருந்த சிஸ்டரிடம் அவளைப் பற்றி விசாரிக்கலாம் என்று எண்ணியவளாய், அங்கு சென்றாள் .அவள் அங்கே செல்வதற்கும், ரவி தனது
ஆர்டருக்காக ரிசப்ஷனை அணுகுவதற்கும் சரியாக இருந்தது.
ரவிச்சந்திரனின் முகம், மீண்டும் எதிர்பாராத விதமாக வெண்ணிலாவை அவ்விடத்தில் கண்டதும், மிகவும் பூரித்து
விட்டது. ' அடடே, நீ இன்னும் கிளம்பலையா. முதல்ல ஹாஸ்பிட்டல் யூனிஃபார்ம்ல, இப்போ சுடிதாரில,
இன்னும் கொஞ்ச நேரத்தில பட்டுப் புடவையிலயா? இதை நான் எதிர்பார்க்கவேயில்ல! சரி, இவளுக்கு டியூட்டி முடிஞ்சுடுச்சு போல வீட்டுக்குத் தான்
கிளம்பிட்டா போல இருக்கு.
இன்னும் எதுக்கு வெயிட்
பண்றே ரவி , நாம அடுத்து போற ஹாஸ்பிட்டல் பூந்தமல்லி ரோட்டில. மேடத்தைப் போரூரில டிராப் பண்ணிட்டுப் போயிடலாமா? கேட்டுப் பார்த்துடுவோம் ' என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன்
வெண்ணிலாவை நெருங்கி, " மேம், நான் ரவிச்சந்திரன். உங்களுக்கு என்னைத் தெரியுதா? எதுக்கு சுத்தி வளைச்சுப் பேசிக்கிட்டு. நான் நேரடியாவே விஷயத்தைச் சொல்லிடறேன் .. நான்...நான் தான், நம்ம வீட்டில அலயன்ஸ் பேசிட்டு இருக்காங்க..இல்லையா? எனக்கு உங்களைப் பிடிச்சுருக்கு. உங்களுக்கு ஓ.கேவா ? " என்று கேட்டான்.
வெண்ணிலா அவனை விசித்திரமாகப் பார்த்தாள். அவனது அந்த ஆர்வம் மிகுந்த காந்தக்
கண்களும் , அகண்ட தோள்களும், கண்களை நிமிர்த்திப் பார்த்தால் மட்டுமே, முகம் தெரிந்திடும் ஆறடி உயரமும்,அவளுக்குள்
சில, வேதியியல் மாற்றங்களை இறக்குமதி செய்து கொண்டிருந்தன.
அவள், பதில் சொல்லத் திணறினாள்.ஆனாலும் ரவி, அவளை விடவில்லை. " ம் , சொல்லுங்க பிளீஸ். ஏனோ உங்க கிட்ட மனசு விட்டுப் பேசணும்னு தோனுது. நான் இது வரைக்கும் கிட்டத்தட்ட, இருபத்தைஞ்சு, தடவை இப்படி பெண் பார்க்கன்னு போயிருக்கேன்.
எல்லாமே நல்லாப் போயிட்டு இருக்கும் போது, திடீர்னு பொண்ணுக்கு வேற மாப்பிள்ளை , முன்னாடி பார்த்த இடத்தில இருந்து, திரும்பவும் கேட்டு வர்றாங்கன்னு சொல்லிட்டு கல்யாணத்தை நிறுத்திடுவாங்க. இல்லைன்னா, என் கிட்டேயே, பொண்ணுக்கு உங்களைப் பிடிக்கலை தம்பின்னு சொல்லிடுவாங்க. படிப்பு, வேலை குடும்பம்னு நான் ஒரு சின்ன வட்டத்துக்குள்ளேயே சுத்திட்டு இருந்ததுனால, எனக்கு இந்தப் பொண்ணுங்களோட மனசைப் பத்தி எல்லாம் எதுவும் தெரியாமலே போயிடுச்சு . சொல்லுங்க உங்களுக்கும் என்னைப் பிடிக்கலையா? " என்று கேட்டான்.
" அட, இதென்ன இப்படி, கேக்கறீங்க. அதான் சாயங்காலம் எங்க வீட்டுக்கு வரத் தானே போறீங்க. அப்ப சொல்றேனே, எல்லார் முன்னாடியும். ஏன் இப்படி டென்ஷன் ஆகறீங்க. ரிலாக்ஸ்டா இருங்க . நான் கிளம்பறேன். நீங்களும்
பத்திரமாப் போயிட்டு வாங்க. பை சார் " என்று சொல்லி விட்டு முன்னேறத் தொடங்கிய அவளை " ஹலோ, ஹலோ வெண்ணிலா, நிலா நில்லுங்க ஒரு
நிமிஷம். நான் அடுத்து பூந்தமல்லி ரோட்டுக்குத் தான் போகணும். என் கூட வாங்களேன்.
நான் உங்களைப் போரூரில
இறக்கி விட்டுடறேன் " என்று
கேட்டான்.
" என்ன இது. இப்படி கேட்டுக்கிட்டு இருக்கீங்க? விட மாட்டீங்க போல இருக்குது. நான் எங்க அப்பாவைத் தவிர வேற யாரு கூடயும் பைக்ல போனதில்லை சார். பிளீஸ், எல்லாம் முடிவாகட்டும் அப்புறம் நான் உங்க கூடத் தானே எப்பவும், வரப் போறேன் " என்றாள் வெண்ணிலா.
" நீங்க தப்பாப் புரிஞ்சுக்கிட்டீங்க, பைக் இல்லை, என்னோட கார்ல தான் வாங்கன்னு கூப்பிடறேன் " என்று ரவிச்சந்திரன் தவிப்புற்ற குரலில் சொல்ல , வெண்ணிலாவின் கண்கள் அவனது கண்களை ஆராய்ந்தன, அங்கே குழந்தைத் தனமான ஒரு ஆர்வத்துடன், அவளை சொந்தம் கொண்டாடும், உரிமையும் அதீதமாகத் தென்பட,
இவளது கண்களுக்குள்ளும் சட்டென, அவை பற்றிக் கொண்டு விட்டன.
ஒரு கணம் செய்வதறியாது நின்று கொண்டிருந்த அவள், பின் மெதுவான காற்றின் தொனியில், " ம், சரி போகலாம் " என்று சொன்னாள்.
கண்கள் இரண்டும், உரசிக் கொண்டாலே காதல் , பற்றிக் கொண்டு அணுக்கள் தோறும் பரவி விடும் என்பதால் தான், அதனைக் காதல் வைரஸ் என்றனரோ??
ரவிச்சந்திரன், பெரு மகிழ்வுடன் தனது காரின், பின் இருக்கைக் கதவினைத் திறந்து விட, அவனைக் கடந்து வந்த வெண்ணிலா, முன் சீட் கதவினைத் திறந்து கொண்டு, அதில் இருந்த ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் அமர்ந்து கொண்டாள்.
இருவரும் பேசிக் கொண்டு இருந்ததையும், வெண்ணிலா ரவியின் காரில் ஏறிக் கொண்டு சென்றதையும், அங்கே மருத்துவமனைக்கு எதிர் சாரியில் இருந்த காபி ஷாப்பில், அமர்ந்து, காபி குடித்துக் கொண்டிருந்த, ஒருவனது இரு விழிகள், அசைவின்றி கவனித்து
க் கொண்டிருந்தன.
ரவியின் கார் கிளம்பியதும், அவனும் தனது வண்டி நிறுத்தப்பட்டு இருந்த இடம் நோக்கி விரைந்தான்.
பின், தனது இண்டிகாவைக் கிளப்பிக் கொண்டு, ரவியின் மாரூதியைப் பின் தொடர்ந்து செல்லத் தொடங்கினான்.
ரவி , வெண்ணிலா தனக்கு அருகில் அமர்ந்து கொண்டு பயணித்திடுவாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அவனது விழிகள், அவளை விட்டு அகலாமல், ஆராய்ந்து கொண்டு இருப்பதைக் கண்ட வெண்ணிலா, " சார், ஏதோ நீங்க ரொம்ப ஆசையா கேட்டீங்கன்னு தான், நான் உங்க கூட வரதுக்கு ஓ.கேன்னு சொன்னேன். அதுக்காக இப்படியே என்னைப் பார்த்துக்கிட்டே வரப் போறீங்களா? எனக்கு ரொம்ப அன் ஈசியா இருக்கு சார் ." என்றாள்.
" ம்ம், எனக்கும் தான் அன் ஈசியா இருக்கு. நீ இப்படி சார், சார்னு கூப்பிடறது. என்னைப் பேர் சொல்லிக் கூப்பிட்டா என்ன? " என்று கேட்டான் ரவி.
" பேரு. சொல்லியா. அது ரொம்பப் பெரிசா இருக்கே! ரவி..ச்ச..ந்திர..ன். ம்ம், நான் ரவின்னு கூப்பிடலாமா? " என்று கேட்டாள் வெண்ணிலா.
" என், பேரை எப்படி கூப்பிடறதுன்னுங்கிறது உன்னோட சொந்த விருப்பம் தான். அதில எல்லாம் நான் தலையிட மாட்டேன் " என்று சொன்னான் ரவி.
வெண்ணிலா, சிறிது யோசித்தாள். அவளது இதழ்களுக்குள், சிறு கீற்றான புன்னகை ஒளிர்ந்தது.
அதனைக் கண்ட ரவி, " என்ன இப்ப எதுக்கு இந்த சிரிப்பு? " என்று கேட்டான்.
" இல்லை, நம்ம ரெண்டு பேருக்கும் இடையில உள்ள பொருத்தம்; அது பேருல கூட இருக்கு பார்த்தீங்களா? நீங்க ரவி; அதாவது சூரியன்; சுட்டெரிக்கும் பகல் வெளிச்சம் உங்களுடையது!
நான் வெண்ணிலா ; பால் நிலா, இரவின் குளிர் ஒளி! அதுவும் சூரிய ஒளியைப் பிரதிபலித்தே நான் ஒளி பெறுவேன் ; அதாவது இனிமே இந்த ரவியைச் சார்ந்து தான் இந்த வெண்ணிலா; கரெக்டா சொல்லிட்டேனா " என்று புன்னகை மாறா முகத்துடன் கேட்க, ரவி அந்த புன்னகை முகத்திற்குள் காணாமல் போய் விட்டிருந்தான்.
' ரொம்ப அழகா இருக்கேடி நீ ' என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் அதன் பிறகு, அவளிடம் எதுவும் பேசவில்லை.
அவனது கவனம் முழுவதும், வண்டியைச் செலுத்துவதிலேயே இருந்தது.
சில நிமிடங்களில் போரூர் வந்து விட்டிருந்தது. ரவிக்கு அவளைக் கீழே இறக்கி விடவே மனம் வரவில்லை.
" ஹாய், இப்படியே எங்கேயாவது நாம ரெண்டு பேரும் இந்த வண்டியிலேயே எங்கேயாவது போயிட்டே இருக்கலாமா ? எனக்கு உன்னை இப்படி நடு வழியிலே இறக்கி விடவே மனசு வரலை. பேசாம நீ என் கூட எங்க வீட்டுக்கே வந்துடறியா இன்னிக்கே,?" என்று கேட்டான் ரவி.
வெண்ணிலா அவனை முறைத்தாள். அவள் பதில் சொல்ல வாயெடுப்பதற்குள், அவளது அலைபேசி பொதுவாகச் சிணுங்கியது.
அவளது அம்மா மேனகாவின் எண்கள் தான் திரையில் ஒளிந்து கொண்டிருந்தன.
" ஹலோ, அம்மா, இதோ நான் போரூர் வந்துட்டேன். இன்னும் அரை மணி நேரத்தில நான் வீட்டில் இருப்பேன் " என்று சொன்னாள்.
" வெண்ணிலா, நான் உன் கிட்ட சொல்ல மறந்து போயிட்டேன். இன்னிக்கு உன்னைப் பொண்ணு பார்க்க வர்றாங்கடி. அதனால போரூரில உடனே பஸ் கிடைக்கலைன்னா , நீ ஒரு ஷேர் ஆட்டோ பிடிச்சு சீக்கிரமா வீடு வந்து சேர்ந்திடு. லேட் ஆக்கிடாதே என்ன? சரியாம்மா. ஓ.கேடா அப்ப நான் வக்கிறேன் " என்று சொன்னாள் மேனகா.
அவளது முக பாவனைகளைக் கவனித்துக் கொண்டிருந்த ரவி, " என்ன மேம்? இப்பத் தான் நான் உன்னைப் பார்க்க வர்ற மேட்டரையே உங்க வீட்டில ரிலீஸ் பண்றாங்க போல. " என்று கிண்டல் தொனியில் கேட்டான்.
" ஆமாம், அம்மா சொல்ல மறந்து போயிட்டாங்களாம். சரிங்க, என்னை அந்த ஆட்டோ ஸ்டாண்டு கிட்ட இறக்கி விடறீங்களா? நான் ஷேர் ஆட்டோலயே வீட்டுக்குப் போயிடுவேன். பஸ் இந்த டைமுக்கு, கூட்டமா தானே இருக்கும் " என்றாள்.
" ம்ம், சரி..ம் அப்புறம் உன்னோட அடுத்த ஸீன்ல நீ பட்டுப் புடவைல தானே வருவே. எனக்கு லோட்டஸ் பிங்க் கலர் ரொம்பப் பிடிக்கும். அந்தக் கலர்ல நீ புடவை வச்சிருக்கே தானே? " என்று கேட்டான் ரவி.
" ம், இல்லை வாங்கித் தர்றீங்களா? " என்று பொய்யான கோபத்துடன் வினவினாள் வெண்ணிலா
"வாங்கித் தந்துடுவேன், ஆனா அதுக்கு டி.நகர் போகணுமே. பரவாயில்லையா, அப்புறம் லேட்டாயிடுச்சு, அது இதுன்னு சொல்லக் கூடாது " என்றான்.
அவனது உரையாடல்களில் எல்லாம், எப்படியாவது வெண்ணிலாவைப் பிரிந்திடும் நொடியினைத் தாமதப்படுத்திட வேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கி இருந்தது.
ஆனால் ,என்ன செய்ய? காலத்திற்கும், இடத்திற்கும் அவனது தவிப்பு புரியவில்லை என்பதால், போரூர் ஷேர் ஆட்டோ ஸ்டாண்டு, வந்து விட, வண்டியை ஓரங் கட்டி அவளை இறக்கி விட்டுத் தனது மாருதியைப் பூந்தமல்லி சாலையை நோக்கிச் செலுத்தினான் ரவி.

மாருதியில் இருந்து இறங்கிக் கொண்டு அவனுக்கு விடை கொடுத்துவிட்டு நடக்கத் தொடங்கிய வெண்ணிலாவை, இரு முரட்டுக் கரங்கள், பிடித்து இழுத்துக் கொண்டன.
சற்றே சுதாரித்துக் கொள்ளும் முன், இண்டிகாவுக்குள், திணிக்கப்பட்டாள் வெண்ணிலா.
(வரும்)
'
 
அழகாய் இருந்தது இவர்கள் சந்திப்பு
தூக்கிட்டாங்களே வெண்ணிலாவை யாரது.
Interesting update
 
Top