Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

💚💜💚இளமயில் இதயத்திலே !💚💜💚-விமர்சனம்

Advertisement

View attachment 9460
கதையின் தொடக்கம் முதல் இறுதிவரை கதைக்களம் மிகவும் சுவாரஸ்யமாக பல இடங்களில் ரசிக்கவும், சிந்திக்கவும், வலிக்கவும், மகிழ்விக்கவும் செய்தது☺️☺️☺️☺️☺️☺️☺️☺️.

இளமயில் : அறிவும், அன்பும் நிறைந்த அழகிய மங்கை. தந்தையை இழந்து தாயுடன் நிராதரவான நிலையில் தந்தையின் போதனைகளை மனதில் நிறுத்தி வைராக்கியமும் துணிச்சலும் கொண்டு வாழ்க்கையை இவள் எதிர்கொண்ட விதம் அழகு. தாயின் தோழியுடனான நட்பில் அவர்களது குடும்பத்துடன் மிகவும் உன்னதமான உண்மையான உறவுகள் இவளுக்கு கிடைத்தது வரமே! தன் பதின்பருவ வயதில் மனதின் பருவ மாற்றத்தினால் காதல் இவளை ஆட்கொண்டது., எதிலும் அவசரமும் கோபமும் அந்த வயதில் தெளிவில்லாததால் மனதளவில் தன்னைத் தானே வருத்திக்கொண்ட நிகழ்வுகள் வேதனையே. உரிய வயதில் இவளிடம் தெளிவும், வளர்ச்சியும் அனைத்து செயல்களிலும் இருந்தாலும் காதலில் இவள் மிகவும் மனம் குன்றியவளே.. நிதர்சனம் எவ்வாறு இருப்பினும் அதன் உண்மை தன்மையை அறிய முற்படாததால் இவள் பட்ட வலிகளும் துயரங்களும் ஏராளம்.. தன் மனம் கவர்ந்த நாயகனின் பிடித்தமான துறையை தேர்ந்தெடுத்து படித்து அதில் விரிவுரையாளராக மேம்படுத்திக் கொண்டு உயர்ந்தது அருமை

இளங்குமரன் : உயர்ந்த குணமும், தூய மனமும் கொண்ட பெற்றவர்களின் போதனையில் உயர்ந்து தூய எண்ணமும் சிந்தனையும் கொண்ட நல்ல ஆன்மகன். படிக்கும் பருவத்தில் தந்தையின் அறிவுரையின்படி எதையும் சிந்தித்து பொறுமையுடன் செயல்படுத்தி நெகிழ் செய்தான். தன் காதலின் மீது ஒரு தெளிவை ஏற்படுத்திக் கொண்டு அந்தக் காதலை எந்த குறையும் பார்க்காமல் தூய அன்புடன் கரம் சேர்க்க இவன் எடுத்த முயற்சிகள் அருமை.

கல்வியில் சிறந்து விளங்கி மருத்துவத்துறையை தேர்ந்தெடுத்து அத்துறையில் இவன் சிறப்பாக பணியாற்றுவது அருமை.

💚💜💚💜💚💜💚💜💚💜💚💜💚
💞இளமயில் -இளங்குமரன்💞
💚💜💚💜💚💜💚💜💚💜💚💜💚

காதல் மிகவும் அழகானது 💞🧡💞
காதல் இவர்களின் வாழ்விலும் அழகு சேர்த்தது ஆனால் அந்த காதலை அடைய இவர்கள் வாழ்வின் பல போராட்டங்களை சந்தித்து தெய்வத்தின் ஆசியாலும் நல் உள்ளங்களின் ஆதரவினாலும் ஆத்மார்த்தமான திருமண பந்தத்தில் ஒன்றிணைந்தது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுத்தது. இளங்குமரன் தன் மனம் கவர்ந்தவளின் மனதில் தெளிவையும், மனதின் ஆழத்தில் பதிந்துள்ள கருப்பு புள்ளியையும் நீங்க செய்ய உதவி செய்து உண்மையான காதலுடன் வாழ்க்கை பயணத்தை சிறப்புடன் வாழ்வது அழகிலும் அழகு.💞💞💞💞💞💞வாழ்க வளமுடன் அவர்களின் இரு முத்துக்களுடன்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

💚💜💚💜💚💜💚💜💚💜💚💜💚
💞💞
வாழ்க வளமுடன் 💞💞
💚💜💚💜💚💜💚💜💚💜💚💜💚

தியாகராஜன்-அம்பிகா : ☺️☺️☺️☺️
தியாகராஜன் ஐயா மிகவும் உயர்ந்த எண்ணமும், பண்பும் கொண்ட மாமனிதர் 🥰🥰🥰🥰🥰🥰இவரது தூய அன்பும் சரியான வழிநடத்தலும் தான் இவரது பிள்ளை குமரன் இன்று வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய காரணம்..

இளமயில் மீது இவர் கொண்ட பாசம் அளப்பரியது.

வாழ்க்கைத் துணைவியும், பிள்ளையையும், சுற்றங்களையும் இவர் அரவணைத்து நின்ற பாங்கு மனதை வருடி சென்றது.

அம்பிகா : தியாகராஜனுக்கு ஏற்ற துணைவி. இளமயில் வாழ்வில் வசந்தத்தையும் தனிமையும் போக்க இவர் எடுத்த முயற்சிகள் மூலமாக இளமயில் அன்னையை விட பலபடிகள் மேலானவராக உயர்ந்து நின்றார். இவரது நட்பின் மீதான பாசம் பசுமையானது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

மரகதம் : என்ன சொல்ல ஒரு ஆசிரியருக்கு பொறுமையும், புரிதலும் மிகவும் அவசியமான ஒன்று அந்தப் பொறுமையை இழந்தால் விளைவு விபரீதமாகும் அதை இவர் வாழ்விலும் காண முடிந்தது கொஞ்சம் பொறுமையை கடைப்பிடித்து இருந்தால் வாழ்க்கைத் துணையை இவர் இழக்க நேர்ந்திருக்காது 😒😒😒😒😒 இளமயில் தந்தையும் அவளுக்கு இருந்திருப்பார்.. உண்மையான நட்புடன் பழகிய அம்பிகாவிடம் இவர் அவர்களது செல்வ நிலையை சுட்டிக்காட்டி எடுத்தெறிந்து பேசியது இவர் மீது மதிப்பை குறைத்து விட்டது.. இளமயில் வாழ்வில் இவர் தெரிந்தோ தெரியாமலோ வலியை திணித்து விட்டார்., விதியின் பொம்மலாட்டத்தில் இவர் ஒரு கருவி மட்டுமே...

மனம் கவர்ந்த நிகழ்வு:
* மருந்தியல் மாணவி சுவாதி மூலம் மேக்னா சுரேஷ் அவர்கள் எழுதிய விழி வெப்ப சலனம் கதையில் வரும் ஒரு பெண் பூப்படைதல் நிகழ்வை மிக அழகாக குறிப்பிட்டது அருமை.

*அசோக் குமார் என்ற எழுத்தாளர் ஆறாம் கதவு என்ற கதையில் கற்பொழுக்கம் பற்றி குறிப்பிட்டு எழுதி இருப்பதை விழிப்புணர்வு கருத்தாக மாணவர்களுக்கு எடுத்துக் கூறிய நிகழ்வும் அருமை.

*முக்கியமாக அழகிய தமிழ் பெயர்களுக்கான தமிழ் இலக்கணம் தியாகராஜன் ஐயாவின் மூலம் விளக்கம் கொடுக்க செய்து எங்களையும் சிந்திக்கவும், ரசிக்கவும் வைத்தது அருமை☺️☺️☺️☺️☺️☺️☺️☺️.

மனதில் ஒரு நெருடல்: இளமயில் காதல் மிகவும் உண்மையானது தான், அந்தக் காதலை மறக்க முடியாமல் இவள் தவித்து நின்ற தருணங்கள் வேதனையானவையே ஆனால் தனக்கென்று ஒரு வாழ்க்கை பந்தத்தை அவளது அன்னை அர்ஜுனிடம் அமைத்துக் கொடுக்க முயற்சியில் இறங்கும் தருவாயிலே தன் மனதில் இளங்குமரன் மீதான காதலை அர்ஜுனிடம் தெளிவுபடுத்தி திருமணத்தை தடை செய்து அர்ஜுன் மனதில் வலியை ஏற்படுத்தாமல் இருந்திருக்கலாம் என்ற ஆதங்கம் அதிகமாக இருக்கின்றது.. அர்ஜுன் மிகவும் நல்லவன் அவனது மனதிற்கு ஏற்ப நல்வாழ்வு அமைந்துவிட்டது சற்று ஆறுதல் அளிக்கிறது. இளமையில் காதலை கீழாக எண்ணவில்லை,.. இதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

மறக்க முடியாதது: இளங்குமரன் -இளமயில் விரும்பி உண்ணும் தேன் மிட்டாய்💕💕💕💕💕💕💕.

@வாணி வெற்றி போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தோழி💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐.
அற்புதமான விமர்சனம் ❤️🤩🤩

முதலில் நேரமெடுத்து இத்தனை பெரிய நீண்ட விமர்சனத்தை வழங்கியதற்கு பேரன்புகள் சிஸ் ❤️

ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அலசி ஆராய்ந்து தெளிவாக விளக்கி அருமையாக எழுதியிருக்கிறீர்கள். மிகவும் ரசித்து வாசித்தேன்.

ஒவ்வொரு அத்தியாயத்தில் கதைக்கேற்ப நீங்கள் முன்பு பதிவிட்ட பாடல்கள் அனைத்தும் அவ்வளவு ரசித்தேன். இப்பொழுது இளமயில் இளங்குமரன் காதலுக்காக நீங்கள் குறிப்பிட்டிருந்த பாடலும் வெகு பொருத்தம். மிகவும் பிடித்தது. 🩷🩷🩷

எழுத்தாளரின் ரசனையை அப்படியே ரசித்து உள்வாங்கும் வாசகராய் என்னை பெருமகிழ்விற்குள் ஆழ்த்திவிட்டீர்கள். நெஞ்சார்ந்த நன்றி ❤️

மயிலுக்கு ஏற்கனவே மணமாகி விட்டதாக எழுதும் போதே அர்ஜூனை நினைத்து எனக்கு நெருடல் தான்‌. ஆனால் இந்தக் கதைக்கு அது தேவையாக இருந்தது. அவளின் நிலையை உணர்த்துவதற்கு தேவையாக இருந்தது‌. குமரன் மீதான காதலினால் அவனுடன் வாழ முடியாமல் போய்விட்டதாக நினைக்கும் அவள் குமரனை மணந்த பின்பு தான் தனக்கிருக்கும் பிரச்சனையே வேறு என்கின்ற புரிந்துணர்வுக்கு வருகிறாள்.

நிச்சயமாக அர்ஜூனிடம் அவள் கூறியிருக்க வேண்டும். அதனால் தான் அவளே கூறுவது போல் தான் அர்ஜூனுக்கும் அவனின் குடும்பத்திற்கும் கொடுத்த கஷ்டத்திற்கும் தண்டனையாக தான் யாருமற்ற அனாதையாய் மூன்று வருடம் தனித்த வாழ்ந்தேன் என்று கூறுவாள்.

ஆக தங்களின் நெருடல் மிகச் சரியானது தான் சிஸ். அதை நீங்கள் குறிப்பிட்டதும் சரியே! என் பக்கம் அதை மனத்தில் வைத்துக் கொண்டு நான் எழுதியதை கூறியிருக்கிறேன்.

மற்றபடி அர்ஜூனுக்கு தனிக்கதை எழுதும் போது மேலும் விவரங்கள் எழுத முடிகிறதா என்று பார்க்கிறேன்.

தங்களின் விரிவான விமர்சனத்திற்கும் வாழ்த்துக்கும் அன்பிற்கும் பேரன்புகளுடன் நெஞ்சார்ந்த நன்றிகள் சிஸ் ❤️🤩😍

சொல்ல மறந்துட்டேன், உங்கள் பிக் ரொம்ப ரொம்ப பிடிச்சிது. I loved it 😍😍😍

இந்தக் கதைக்கான தங்களின் அன்பிற்கும் மெனக்கெடல்கள் அனைத்திற்கும் நன்றி நன்றி நன்றி 🙏🩷🩷🩷
 
உங்களுக்கு விமர்சனம் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி சிஸ்டர்🥰🥰🥰🥰🥰🥰🥰.

இளமயிலை சுற்றியே இந்த கதைக்களம் நகர்ந்தது, அவளது காதலின் ஆழம் நிச்சயம் புரிகிறது, அவளது மனதில் குமரன் மீதான காதல் ஒவ்வொரு அணுவிலும் இருப்பதால் அர்ஜுனுடன் இல்லற வாழ்க்கையில் அடி எடுத்து வைத்தாலும் ஒன்றி வாழ இயலாத நிலையும் புரிகிறது... ஒரு ஆதங்கம் மட்டுமே முன்பே சொல்லவில்லையே என்று தான் அதற்கான காரணம் இளமையில் வாயிலாக என்னால் புரிந்து கொள்ளவும் முடிகிறது....☺️☺️☺️☺️☺️.

உங்களுடைய அன்புக்கு மிக்க நன்றி🥰🥰🥰🥰🥰🥰
 
Last edited:
Top