💞💞💞 மின்மினி முத்தங்கள் 💞💞💞 💞😍😍😍 விமர்சனம் 😍😍😍

Advertisement

Ram priya

Well-known member
Member
30+ வயதுடைய நாயகன் _ நாயகியின் திருமணத்திற்கு பின்னரான நேசத்தை சொல்லும் கதை 💕💕💕💕

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

மைமலர்குழலி : நம் கதையின் நாயகி 😍😍😍 இரண்டு தங்கைகளுடன் பிறந்து... தந்தையின் அரவணைப்பின்றி அவரின் மறைவுக்குப் பிறகு தாயின் உழைப்பில் கஷ்டத்தை மட்டுமே பார்த்து வளர்ந்தவள் 😊😊😊

படிப்பை பிடிமானமாக கொண்டு முன்னேறி தங்கைகளை படிக்க வைத்து சிறந்த முறையில் திருமணம் நடத்தி முடித்து ☺️☺️☺️ குடும்பத்திற்கு ஆணிவேராக, தாய்க்கு தலை மகளாக திகழ்பவள் 🥰🥰🥰🥰

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

அகமுகிலன் : நம் கதையின் நாயகன் 😍😍
கந்தசாமி/மாரியம்மாள் தம்பதிக்கு ஒற்றை மகனாக விவசாய குடும்பத்தில் பிறந்தவன் ☺️☺️☺️☺️ படித்த படிப்புக்கு வேலை கிட்டாமல்... சொந்த ஊரை விட்டு செல்ல மனமில்லாமல் கிடைத்த வேலையை செய்து கொண்டு... வீட்டின் வசதியை கூட்டும் முனைப்பில் திருமணத்தை தள்ளி போட்டவன் 😊😊😊

அத்தை மகள் மீது விருப்பம் இருந்தும் தாய்க்கு பிடிக்காத காரணத்தால் அவளை கடந்து வந்து ( கடந்து வந்ததாக நினைத்து கொண்டு) நாயகியின் கரம் பிடிப்பவன் 💖💖💖💖

💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

நாயகிக்கு குடும்ப சூழல், தாயை பார்க்கும் பொறுப்பின் பொருட்டு அவளுக்கு வேலை மிக மிக அவசியம் அதன் பொருட்டு வாழும் இடத்தை விட்டு விலக முடியாத காரணத்தால் திருமணம் முடிந்து அவன் அவன் வீட்டில், அவள் அவள் வீட்டில் 😧😧😧 அதனால் இருவரும் சந்தித்த பிரச்சினைகள் 😨😨😨 அதனை பேசி தீர்த்துக் கொள்ளும் நேர்த்தி ☺️☺️☺️☺️ கணவனின் கனவுக்கு கை கொடுக்கும் பாங்கு 💞💞💞
இருவரும் நடத்திய அழகான குடித்தனத்தை மிக அருமையாக காட்சி படுத்தியுள்ளார் கதாசிரியர் 🤩🤩🤩🤩

💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

மாரியம்மாள்....பக்கா மாமியார் மெட்டீரியல் 😊😊😊😊
திருமண வாழ்வில் கடந்து வந்த பாதை அவரை கடினமானவராக மாற்றி விட்டது அதன் காரணமாக எதிலும் குற்றம், பார்க்கும் அத்தனையிலும் குற்றம் கண்டு பிடிக்கும் இவர் கதைக்கு சுவாரஸ்யம் கூட்டும் கதாபாத்திரம் ☺️☺️☺️ இவரை சமாளிப்பது சவாலான விஷயம் தான் தந்தைக்கும் மகனுக்கும் 😊😊😊

🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

அருமையான கதை 🤩🤩🤩
நிறைவான முடிவு 😍😍😍
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா ❤️❤️❤️❤️
 
🤩🤩🤩🤩🤩எப்படி இதை மிஸ் பண்ணேன் தெரியல... இவ்ளோ பெரிய விமர்சனம் எதிர்பாக்கல...


கதைமாந்தர்களை அழகா காட்சிப்படுத்திட்டிங்க. துவக்கத்தில் இருந்து முகிலன் குழலியுடன் பயணித்து ஊக்கப்படுத்தி விமர்சனம் பதிவிட்டு அவங்க பயணத்தை அழகாகிட்டீங்க... அன்புக்கும் வாழ்த்துக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் சிஸ் 😍🙏❤️❤️❤️❤️
 

Advertisement

Advertisement

Back
Top