Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

25. விடை தேடி

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
நான் என்ன சொன்னாலும் கேட்ப தானே கீர்த்தனா..

ஆமாம்மா...

அப்போ நீ... நீ... இப்போவே எனக்கு ஒரு வாக்கு கொடுக்கணும்.

நீங்க எது சொன்னாலும் நான் கேட்பேன் ம்மா.

அப்போ இப்போவே இந்த சன்னிதானத்திலேயே உன் கண்ணு முன்னே இருக்குற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ.

அம்மா...

ஆமா கீர்த்தனா. உன்னோட பலன் நான் மட்டும் இல்ல. என் பலனோட அவளும் சேர்ந்தா மட்டும் தான் உனக்கு பலம் முழுமையடையும்.

அம்மா... அது அது எப்பிடி ம்மா முடியும்.

அதெல்லாம் முடியும். அதை ரத்தினம் ஐயாவும் பட்டரும் பார்த்துக்குவாங்க. நீ இப்போ சம்மதம் மட்டும் என்கிட்ட சொல்லு.

அம்மா.....

ம்ம்.. கீர்த்தனா... அம்மா கேக்குறேன்... சொல்லு.

சரிம்மா சம்மதம்...

அவ்வளவு தான் ஒரு அழகிய சிரிப்போடு அவரது குரல் அத்தோடு நின்று விட, மெல்ல கண் திறந்தான் தனா.

கண் திறந்த வேளை தனக்கு எதிரே நின்றிருக்கும் யாழினியை பார்க்க, இதுவரை அவன் பேசிய வார்த்தைகளைக் கேட்டு அவனையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள் அவள்.

பின் மெதுவாக ரத்தினத்தையும், நீலகண்டரையும் பார்க்க அவர்களோ ஓர் அர்த்தச் சிரிப்புடன், குமரவேல் ஐயா, இதுவரை நீங்க நெறய உதவி பண்ணிருக்கீங்க.

ஆனா இப்போ நடக்க போற விஷயம் நாங்க தீர்மானிச்சது இல்ல. உலகாளும் அந்த ஈசனும், நீங்க உயிரா வணங்குற அந்த அம்பாளும் தீர்மானிச்சது.

ரத்தினம்..

நேத்து உங்களுக்கு அம்பாள் என்ன வாக்கு கொடுத்தா. யாழினி கொடுத்த வாக்குல கடைசியா சொன்னதை மட்டும் எல்லார் கிட்டயும் சொல்லுங்க.

அவரும் சொன்னார்.

தவித்துக் கொண்டிருக்கும் படகு ஒன்று உன்னால் கரை சேர போகிறது. படகிற்கு துடுப்பாக ஓர் உயிர் அமைய வேண்டிய நிலையில் உன் முடிவே பல உயிர்களை காக்கும்.

இதுக்கான அர்த்தம் உங்களுக்கு புரிஞ்சுதா.

யோசித்த குமரவேல், விடை கிடைக்க அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்த்தார்.

ரத்தினம்...

ஆமா ஐயா. தத்தளிக்கிற படகா இருக்குற தனாவுக்கு உங்க பேத்தி தான் துடுப்பு. அவள் கழுத்துல ஏறுற மாங்கல்யம் தான் தனாவையும் சரி அவனோட குடும்பத்தையும் சரி காப்பாத்த போகுது.

இனி நாங்க சொல்லுறதுக்கு ஒன்னும் இல்ல. உங்களோட முடிவு தான் இறுதி. நல்லா யோசிச்சு முடிவெடுங்க.

அம்மா யாழினி நீயும் தான். உனக்கும் இதுல விருப்பம் இருந்தா மட்டும் தான் இது நடக்கும். இல்லயினா நாங்க வற்ப்புறுத்தல.

குமரவேல் அம்மன் திருவுருவத்தை பார்த்தபடியே அமர்ந்து விட்டார்.

இதைத் தான் சூட்சகமா எனக்கு சொல்லியிருக்கிறாள். நான் தான் புரியாம இருந்திருக்கேன்.

இத்தனை காலம் நீ தான் கதின்னு உன்னச் சுத்தியே வந்திட்டு இருக்கேன். உன்னோட வாக்க கேட்பேனா மாட்டேனான்னு பரிட்ச்சை வச்சு பார்க்கிறயா.

உன்னோட எண்ணமே இது தான்னா. நான் ஏன் மறுக்க போறேன். உன் விருப்பப்படியே இங்கேயே இப்போவே கல்யாணம் நடக்கட்டும்.

யாழினி... இங்க வா.

இது நாம வணங்கும் இந்த அம்பாளோட வாக்கு. உனக்கு இதுல சம்மதமா.

அம்பாளையும் குமரவேலையும் மாறி மாறி பார்த்தவள், சரி என தலையசைத்தாள்.

ரத்தினம்... எங்களுக்கு பரிபூரண சம்மதம். ஆக வேண்டிய வேலையை கவனிக்க.

நாளைக்கு விடியல்ல நாம பயணத்தை தொடங்கியே ஆகனும்.

இதுவரை நடந்த அத்தனையையும் வெறும் பார்வையாளராக பார்த்துக் கொண்டிருந்த வேலனை அழைத்த ரத்தினம்,

என்ன வேலா.. இப்பிடி அமைதியா இருந்தா என்ன அர்த்தம். நீயும் இதுல முடிவெடுக்க வேண்டியது அவசியம் தானே வேலா.

இதுல நான் சொல்ல என்ன இருக்கு சாமி. ஏற்கனவே நீங்க நடந்ததை சொன்னது பெரிய பாரமா இருக்கு. அக்கா இவ்வளவு கஷ்டப்பட்டா அவங்க உயிர விட்டிருக்கனும்.

மாமாவும் சரி அக்காவும் சரி அவங்களோட கஷ்டத்தை ஒரு வார்த்தை கூட வெளிய சொல்லவே இல்ல. நினைக்க நினைக்க ரொம்ப வேதனையா இருக்கு.

என் அக்கா குடும்பம் நல்லா இருக்க, என் உயிரையும் குடுப்பேன் சாமி. அப்படியிருக்க, கடவுளே இது தான் நடக்கணும்னு சொல்லும் போது நான் மறுத்து பேச ஒன்னும் இல்ல. இப்போவே கல்யாணம் நடத்த எனக்கும் சம்மதம் தான்.

தனா அப்புறம் என்ன உன்னோட எண்ணங்கள் நிறைவேறி உன் குடும்பத்தோட உயிர்கள் அத்தனையும் நல்லா இருக்கணும்னா, நீ யாழினி கழுத்துல தாலி கட்டி தான் ஆகனும்.

நீலகண்டரே அம்மன் கழுத்துல இருக்குற மாங்கல்யத்தையே கட்ட வச்சிடலாம். நீங்க பூஜையை ஆரம்பிங்க.

தனா இங்க வா. யாழினி மா நீயும் வா.
ரெண்டு பேரும் இப்பிடி கிழக்கு பார்த்து நில்லுங்க.

அவசரத்துல நடக்குற கல்யாணமா இருந்தாலும், இது ஆண்டவன் போட்ட முடிச்சு. மனமொத்து சீரும் சிறப்புமா ரெண்டு பேரும் வாழ்ந்து காட்டணும்.

எந்த தீய சக்தியால உன் குடும்பம் அழிஞ்சுச்சோ, அதே சக்தியை நீங்க அழிச்சு வாழ்வாங்கு வாழணும்.

ரத்தினம் இருவருக்கும் ஆசி வழங்கிக் கொண்டிருக்க, நீலகண்டரும் பூஜையை முடித்து மாங்கல்யத்துடன் வந்து நின்றார்.

அந்திசாயும் நேரம். இது தான் இவர்களது முகூர்த்த நேரம் போல.ஆடம்பரம் இல்லை, ஆசி வழங்க ஆயிரம் பேர் இல்லை. கூடியிருக்கும் ஐவரின் ஆசியோடு, என்றும் எப்போதும் உன்னை கைவிடமாட்டேன் என அகரயாழினியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன் சரிபாதியாக ஏற்றுக்கொண்டான் தனா.

இங்கு அந்த உருவத்தை அழிக்கும் பலம் மேலும் பலம் பெற்றுக் கொண்டிருக்க, அங்கே தனாவின் வீட்டில் அது தன் ஆட்டத்தை ஆடி முடித்திருந்தது.

இவர்கள் கிளம்பி சென்ற அன்று இரவு, மற்ற எல்லோரும் எப்போதும் போல உறங்கி விட, சித்தன் ஐயாவும், இளாவும் உறங்காமல் காவல் காக்கத் தொடங்கினர்.

எல்லாம் சாதாரணமாகவே இருக்க, பொழுது விடிந்து எல்லோரும் அவரவர் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெரும் உறுமல் சத்தம் அந்த கடைசி அறையிலிருந்து வீடே அதிரும் அளவு கேட்டது.

எல்லோரும் நடுங்கி போக, சித்தனும் இளமாறனும் ஓடி வந்தார்கள்.

எல்லோரும் அண்ணாந்து மாடியையே பார்த்துக் கொண்டிருக்க, சித்தன் சுமதியிடம் எல்லோரையும் ஒரே அறையில் இருக்கவைமா. என சொல்லிவிட்டு கையில் கங்கா தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு இளாவை மாடி படியின் தொடக்கத்தில் நிறுத்தி வைத்து
அவனது கையிலும் ருத்ராட்ச மாலையை கொடுத்து விட்டு மேலே சென்றார்.


விடை தேடி பயணம் தொடரும்...
Prabhaas...
 
Top