Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

26. விடை தேடி

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
கீழேயே எல்லோரையும் பத்திரப்படுத்தி விட்டு மேலே சென்றார் சித்தன்.

அங்கு அந்த உருவமா, பெரும் பெரும் உறுமலோடும் அந்த ரீங்கார சத்தத்தோடும் அங்கும் இங்கும் பறந்து தாவித் திரிந்தது.

ரீரிரீ.... ரிர்ரீ.... என்னைக் அழிக்கும் வழிவகையை அந்த நாதனைப் போல இவனும் கண்டு கொண்டானா??... எப்படி இது முடிந்தது. எப்படி நான் அறியாமல் விட்டேன். இத்தனை வழிமுறை நடந்து கொண்டிருந்திருக்கிறது அதை நான் தான் கண்டறியாமல் விட்டுவிட்டேன்.

ரீரிரீ.... ரிர்ரீ.... என்னை அழிக்க முடியுமா அவனால்... முடியுமா.... பார்க்கலாம் அவனா நானா என்று பார்த்து விடலாம். என்னை நெருங்க விடாமல் செய்யும் அவனது பலத்தையும் தாண்டி அவனது உயிரை குடித்து அழியா சக்தியாய் நான் உருமாறி காட்டுகிறேன்.

அது உன்னால முடியாது.

ரீரிரீ.... ரிர்ரீ.... என்னால் முடியாதா?
எல்லோரும் நடுங்க நடத்திக் காட்டுகிறேன் பார்.

அது ஒருகாலும் நடக்காது. நடக்கவும் என் அப்பன் விடமாட்டான். கூடிய சீக்கிரம் நீ அழியத்தான் போற.

அந்த ஈசனோட பூமியில, அவனோட ருத்ரதாண்டவம் தான் அரங்கேறுமே தவிர, உன்ன மாதிரி தீய ஜென்மத்து ஆட்டம் எல்லாம் செல்லாது.

ரீரிரீ.... ரிர்ரீ....என்னையே எதிர்த்து வாயாடுகிறாயா பித்தனே... என்று அவரது கழுத்தை எட்டிப்பிடிக்க வந்த நொடி, மந்திரத்தை உச்சரித்து கங்கா தீர்த்தத்தை எடுத்து அதன் முகத்திலேயே அடிக்க, ஏற்கனவே அழுகி உருகி போயிருந்த முகம் இப்போது, கருகி அதிலிருந்து புகை வரத் தொடங்கியது.

இப்போது சித்தன் வெற்றி சிரிப்பு சிரிக்க, உன்னால ஒருபோதும் என்னோட நிழலை கூடத் தொட முடியாது. ஆரம்பத்தில மிரட்டியது போல, இப்போவும் என்ன மிரட்ட முடியாது. இந்த குடும்பத்துக்கு துணையா அந்த ஈசனே இருக்கார். அவரை மீறி நீ என்ன கிழிக்க போறேன்னு நானும் பார்க்குறேன்.

எரிச்சலில் அந்த உருவம் கத்திக் கொண்டிருக்க,

எல்லாம் நல்ல படியா நடக்குற வரை இதுக்குள்ளையே கிட... என கதவை அறைந்து சாத்தி, கதவில் கங்கா தீர்த்தத்தை தெளித்து, வாசலில் அவர் கொண்டு வந்திருந்த திருநீற்றுச் சாம்பலை கோடு போட்டு விட்டு கீழே வந்தார்.

நடந்த நிகழ்வின் சத்தத்தை மட்டுமே கேட்டு நின்றிருந்த இளா, சித்தன் வந்ததும், உங்களுக்கு செம்ம தில்லு தான் தாத்தா. பேய் கிட்டயே பேச்சு வார்த்தை நடத்தி சவால் விட்டுட்டு வரீங்க.

ஹா..ஹா.. நீ பயந்து நடுங்குவேன்னு நெனச்சேன். சிரிச்சுகிட்டு இருக்க.

ஆரம்பத்துல பயமா தான் இருந்துச்சு தாத்தா. ஆனா எல்லாரையும் இழந்து தனா போராடும் போது அவனுக்கு துணையா நான் இல்லயின்னா நான்லாம் என்ன மனுசன். இனி என்ன வந்தாலும் பார்த்துக்கலாம் தாத்தா. எனக்கும் கொஞ்சம் உங்க தைரியத்தை ஊட்டுங்க.

வாங்க.. வாங்க. எல்லாரையும் சாப்பிட வைக்கலாம். அப்போ தான் சாப்பாட்டோட சேர்த்து தைரியத்தையும் எனக்கு ஊட்ட முடியும்.

நல்லா பேசுற இளா.

பின்னே பேசித்தானே ஆகனும் தாத்தா. இருக்குறமோ சகுறமோ, அதை சந்தோசமா ஏத்துக்கிட்டு நடந்துக்குவோம். ம்ம்... வாங்க வாங்க.

அண்ணி அண்ணி... வாங்க வாங்க பக்கத்து வீட்டில ஏதோ பேய் படம் பார்த்தாங்கலாம். அதான் அந்த சத்தம். நாம தான் தேவையில்லாம பயந்து நடுங்கிட்டோம். பிள்ளைகளை கூட்டிட்டு வாங்க, பசிக்குது சாப்பிடலாம்.

சித்தப்பா... அப்போ அது பேய் படமா.

அட ஆமாண்டா. இனி எந்த சத்தம் கேட்டாலும் பயப்படாம இருக்கணும் சரியா.

விளையாட்டுத் தனமாக பேசி பிள்ளைகளையும் மற்றவர்களையும் திசைதிருப்பி விட்டான் இளா.

காரணம் தெரியாதவர்கள் வேண்டும் என்றால் அதை நம்பலாம். ஆனால் சுமதி நம்பவில்லை. சித்தன் தாத்தாவை பார்க்க, அவரின் பார்வையின் பொருளறிந்து பயமில்லாமல் பிள்ளைகளை கவனிக்க ஆரம்பித்தாள் சுமதி.

.........

தனா, அகரயாழினி திருமணம் நடந்து முடிந்து, இருவரும் முதலில் அம்மன் முன்னேயே விழுந்து வணங்கி பின் பெரியோர்களின் முன்னே வணங்கி நின்றனர். ஐவரும் ஆசிர்வதித்து கோவிலை வலம் வந்து, பயணத்தை தொடங்க தயாராகலாம் என சொல்லி வீட்டிற்க்கு கிளம்பினார்கள்.

வீட்டிற்குள் நுழைய பூங்கொடிக்கு மகளது மாங்கல்யமே முதலில் கண்ணில் பட,
முதலில் அதிர்ச்சியில் அவரது அப்பாவை தான் பார்த்தார்.

அம்பாள் நடத்திய கல்யாணம். சந்தோசமா பிள்ளைகளை ஆசிர்வதி பூவு.

குழப்பம் இருந்தாலும், மகளின் திருமணத்தை கடவுளே இட்டது எனும் போது பயமில்லாமல், மனசார ஆசிர்வதித்தார்.

பின் எல்லோரும் இரவுணவை உண்டு விட்டு, பயணத்தை பற்றி விவாதித்து கொண்டிருக்க, தனா பூங்கொடியைத் தேடி வந்தான்.

அம்மா...

ஆங். வாங்க தம்பி.

அம்மா இந்த கல்யாணம் இப்போவே நடக்க வேண்டிய கட்டாயம் அதனால தான் உங்க கிட்ட கூட சம்மதம் கேட்க முடியல. மன்னிச்சுக்கோங்க அம்மா.

ஐய்யயோ அதெல்லாம் ஒன்னும் இல்ல தம்பி. நீங்க யாழினி கூட சந்தோசமா வாழ்ந்தா அதுவே எனக்கு போதும்.

சரிங்கம்மா... நான் அங்க இருக்கேன்.

சரிங்க தம்பி.

அதுவரை இருந்த சிறு குழப்பமும் நீங்கி நல்ல பையனா இருக்கான். இதுக்கு மேல என்ன வேணும். தாயே நீ தான் துணை. என வேண்டி விட்டு சென்றார் பூங்கொடியும்.

அதிகாலை மூன்று மணி இருக்கும் போதே எழுந்து எல்லோரும் கிளம்ப ஆரம்பித்தனர். இப்போது சென்றால் சூரிய அஸ்தமனத்திற்க்கு முன்னேயே அந்த குகைக்கு சென்று விடலாம் என கணக்கிட்டு கிளம்பினார்கள்.

குமரவேல், நீலகண்டர், ரத்தினம், வேலன், தனா என ஐவரும் கிளம்ப, அகரயாழினியை அம்மனை வேண்டி தனாவிற்கு விபூதி இடச்சொன்னார்கள்.

இதோ பயணம் இனிதே துவங்குகிறது.

வீட்டில் குலதெய்வத்தின் முன்பு யாழினி விளக்கேற்றி வைத்து அணையாமல் பார்த்துக் கொள்ள, அங்கு தனாவின் வீட்டிலும் விளக்கேற்றி சுமதி அதை அணையாமல் பார்த்துக் கொண்டாள்.

பயணத்தை தொடங்கிய சில மணி நேரத்திலேயே, முதல் மேட்டை அடைந்து விட்டனர். அங்கிருந்து நடந்து புல் அருவியை அடைய அப்போது தான் பொழுது புலரத் தொடங்கியது.

இன்று சற்று அதிகமாகவே அருவியில் நீர் கொட்டியது. கடவுளை வேண்டி, அந்த செங்கதிரோனை பார்த்த நிலையில் அருவியில் அப்படியே சிறிது நேரம் நிற்க, அன்று போல் இன்றும் ஏதாவது நிகழுமா என, குமரவேல் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆனால் அவருக்குத் தெரியவில்லை, அன்று போல் இன்றும் ஓர் நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது என.


விடை தேடி பயணம் தொடரும்....
Prabhaas...
 
Top