3.நின்னோடு தமியனாய்

Advertisement

Kalpana saravanan

Well-known member
Member
எழுத்துக்குப் பின்னே.... ✍️

டவுன் வண்டி, ஜன்னல் ஓர சீட்டு, இளையராஜா பாட்டு... இதெல்லாம் சொர்க்கம்!

அப்படி ஒரு ஏகாந்த வேளையிலே நான் போய்ட்டு இருந்தேன்....

திடீரென பஸ் அடுத்த ஸ்டாப்பில் நிற்க, ஒரு டீன் ஏஜ் பெண் ஏறினாள். எண்ணெய் வைத்து படிய வாரிய தலை, சிவப்பு நிற சுடி, ஜிமிக்கி கம்மல், தலை நிறைய மல்லிகைப்பூ....

அடடா! வாழ்க்கை மறுபடியும் பழைய காலத்துக்கே திரும்புது போல இருக்கேனு சந்தோஷமா மறுபடியும் இளையராஜா பாட்டுக்குள்ள போனே....

ஆனா அந்த சிவப்பு நிற சுடியோ, உட்கார்ந்ததும் இன்ஸ்டாகிராமை ஓபன் செய்து இரைச்சலைத் தெறிக்க விட்டது.

அவ்வளவுதான்... இளையராஜாவின் மெலடியை ரசித்துக் கொண்டிருந்த என் மனசுக்குள்ள திடீரென இரைச்சலான ஒரு DJ இறங்கியாச்சு! 😭😂

ஒரு சின்ன வேண்டுகோள்... உங்க Reels-ஐ நீங்க எப்படி வேணும்னாலும் பாருங்க. ஆனா பக்கத்தில உட்கார்ந்திருக்கரவங்களையும் கொஞ்சம் நினைச்சு பாருங்க.... எங்களுக்கும் கொஞ்சம் ஏகாந்தம் தேவைப்படுதுங்க!

சரி... அந்தப் பயணத்தில் கிடைத்த எரிச்சலை அப்படியே மனசுக்குள்ள சுமந்துட்டு வீட்டுக்கு வந்து எழுத உட்கார்ந்தேன்.

அந்த மனநிலையில்தான் இன்றைய அத்தியாயம் உருவானது.

படிச்சுப் பாருங்க... 😜


 

Advertisement

Advertisement

Back
Top