9.நின்னோடு தமியனாய்

Advertisement

Kalpana saravanan

Well-known member
Member
எழுத்துக்குப் பின்னே… ✍️

“நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை” என்ற தலைப்பில் நிறைய பதிவுகளைப் பேஸ்புக்கில் பார்த்திருக்கிறேன்.அதில் சில விஷயங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கும். சில விஷயங்களைப் பார்க்கும்போது, ஏழாம் அறிவு படத்தில் வரும், “சயின்ஸ்னு சொல்லாம சாமினு நம்மை பழக்கப்படுத்தி இருக்கிறார்கள்” என்ற வசனம் உண்மைதானோ என்று கூடத் தோன்றும்.

அதை நினைவுபடுத்தும் வகையில் ஒரு கதையைப் படிக்க நேர்ந்தது.

பிரபல எழுத்தாளரும் பேச்சாளருமான சுதா மூர்த்தி அவர்களின் "The Magic of the Lost Story"என்ற புத்தகத்தைப் போன வாரம் படிக்க நேர்ந்தது. அதில் நிறைய அறிவுப்பூர்வமான விஷயங்கள் இருந்தன. அதில் என்னைக் கவர்ந்த ஒரு பகுதியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு பழமையான சிவன் கோவிலில் பண்டிதர் ஒருவர் தினமும் பூஜை செய்து வந்தார். அந்தக் கோவிலில் ஒரு எலி அங்கும் இங்கும் ஓடி அவருக்குத் தொந்தரவு கொடுத்தது. பூஜைக்கு இடையூறாக இருந்ததால், அவர் ஒரு முடிவெடுத்தார்.

பூஜை நேரத்தில் மட்டும் அந்த எலியை ஒரு கயிற்றில் கட்டி வைத்துவிட்டு, பூஜை முடிந்ததும் அவிழ்த்துவிடுவார்.

நாட்கள் கடந்தன. அந்த எலியும் இறந்துவிட்டது. பண்டிதரும் காலமாகிவிட்டார்.

அவருக்குப் பிறகு அவரது மகன் கோவிலில் பூஜை செய்ய ஆரம்பித்தான். தந்தை தினமும் செய்த பூஜை முறைகளை அவன் கவனித்திருக்கிறான். அதனால், தந்தையைப் போலவே ஒரு எலியைப் பிடித்து வந்து பூஜை நேரத்தில் கட்டி வைத்துவிட்டு, பூஜை முடிந்ததும் அவிழ்த்துவிட்டான்.

இதைப் பார்த்த கோவிலுக்கு வந்த மக்கள், “எதற்காக இப்படிச் செய்கிறாய்?” என்று கேட்க, அவனோ, “என் தந்தை இப்படித்தான் செய்வார். அதில் ஏதோ நன்மை இருக்கிறது. அதனால்தான் நானும் செய்கிறேன்” என்று கூறினான்.

அதன்பிறகு மக்களும் அவரவர் வீடுகளில் எலியைப் பிடித்து, பூஜை நேரத்தில் கட்டி வைக்க ஆரம்பித்தார்கள். இப்படியாக அந்தக் கதை நகர்ந்தது.

கதையைப் படித்ததும் எனக்கு ஒரு விஷயம் தோன்றியது. நாமும் சில நேரங்களில் எதற்காகச் செய்கிறோம் என்ற காரணமே தெரியாமல், காலம் காலமாகச் செய்துவரும் பழக்கங்களை அப்படியே பின்பற்றிக் கொண்டிருக்கிறோமோ என்று!

சரி, இந்தக் கதையைப் படித்துவிட்டு யோசித்துக் கொண்டிருந்த எனக்கு, ஒருவழியாக என் எபியையும் முடிக்க வேண்டிய வேலை இருந்தது.

அதையும் முடித்துவிட்டேன் தோழிகளே! படித்துவிட்டு உங்கள் கருத்துகளைத் தாருங்கள்! ❤️

 
Apo last min twist Bhupathi & engalukuma 🙄🙄🙄🙄🙄🙄😏😏😏😏😏 sangeetha nalla varuve ma ne kasu kuduthu kovil sonnathe munnadiye solliruntha ivan konjam sutharichurupan🤣🤣🤣🤣🤣
 

Advertisement

Advertisement

Back
Top