Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

AnuSubas "காதல் பிசாசு"

Advertisement

Anusuba

Tamil Novel Writer
The Writers Crew
படபடவென கதவு அடிக்கும் சப்தம். நன்கு உறக்கத்திலிருந்த அவள் எழுந்தாள்.அவள் தான் மாயா..நம் கதையின் நாயகி..ஆனால் அவளால் முடியவில்லை. ஒரு கரம் அவளை இறுக அணைத்து இருந்தது. மெதுவாக அந்த கையை விலக்கிவிட்டு எழுந்தாள். வெளியே பயங்கரமாக காற்று வீசிக்கொண்டிருந்தது. அதனால்தான் ஜன்னல்கள் திறந்து கொண்டது. ஜன்னல்கள் அடுத்த முறை திறக்கா வண்ணம் லாக் செய்தாள்.
"நல்ல மழை வரும் போல இருக்கே "என்று நினைத்தவள் டொக் டொக் என்ற சப்தத்தை கேட்டு நின்றாள்.சத்தம் வந்த திசையை நோக்கி சென்றாள்.பாத்ரூமிலிருந்து தான் வந்தது.அவளுக்கு சிறிது பயமாக தான் இருந்தது.வியர்த்து கொட்டியது.கதவை திறந்தாள்.குழாயை சரியாக மூடாமல் வந்ததினால் அதிலிருந்து சொட்டும் தண்ணீரின் சப்தம்..உள்ளே சென்று அதனை மூடிவிட்டு திரும்பினாள்.
மணி என்ன இருக்கும் என நினைத்தவள் மணியை பார்க்க அது ஐந்து என காட்டியது.இதுக்கு மேல தூங்க முடியாது என நினைத்தவள் பாத்ரூமிற்கு சென்று முகத்தை கழுவிவிட்டு ப்ரிஜ்ஜில் இருந்த பாலை எடுத்து கொண்டு சமயலறை நோக்கி சென்றாள்..தனக்கு மட்டும் கொஞ்சமாக டீ போட்டு எடுத்து கொண்டவள் சமையல் வேலைகளை ஆரம்பித்தாள்.என்ன சமைக்கலாம்..என யோசித்தவள் நம்ம வீட்டு எஜமானுக்கு பொங்கல் ரொம்ப இஷ்டமே என நினைத்தவள் ஒரு பானையில் நீரை ஊற்றி அடுப்பை பற்ற வைத்தாள்.தண்ணி கொதிக்கட்டும் அதுக்குள்ள நாம டீ குடிச்சிடலாம் என நினைத்தவள் டீயை குடிக்க ஆரம்பித்தாள்.அவள் ஒரு வாய் குடித்தவுடன் தன்னவனின் நினைவு அவளது முகத்தை சிவக்க செய்தது...
எப்போதுமே அவனுக்கு அவள் தான் வேண்டும். அவளின் அழகு வேண்டும்.வளைவு நெளிவு தன்மையோடு இருக்கும் அவளுடைய உடம்பு வேண்டும்.
" எப்போதுமே கூறுவான் உன் அழகுக்கு நான் அடிமை" காலமெல்லாம் எனக்கு நீதான் வேண்டும்." இந்த அழகுப் பெட்டகம் தான் வேணும்" என்று கொஞ்சுவான். அவன் அவ்வாறு கூறும் போது பெருமையாக இருக்கும். கிறக்கமாய் இருக்கும் .மயக்கமாய் இருக்கும். சுகமாய் இருக்கும்.
தடதடவென சப்தம். நிஜம் உறைக்க திரும்பியவள் தண்ணீர் மூடியிருந்த தட்டு கீழே விழுந்து கிடப்பதை கண்டாள்.
"ஐயோ தண்ணி கொதிச்சிடுச்சு போலயே" என்று நினைத்தவள் தம்ளரை கீழே வைத்து விட்டு அரிசியை கழுவி போட்டாள்..தேங்காய் துருவி அரைத்து சட்னி செய்தாள்.அதன்பிறகு பொங்கலை செய்து முடித்துவிட்டு ,பாலை நன்கு காய்ச்சி எடுத்துக்கொண்டு, பாத்திரங்களை துலக்கி வைத்துவிட்டு, அடுப்படியை சுத்தம் செய்துவிட்டு வெளியே வரும்போது மணி ஆறரை ஆகியிருந்தது...
பிறகு தானும் சென்று குளித்துவிட்டு வெளியே வந்தவள் "அய்யய்யோ லேட்டாயிடுச்சே" என்று கூறிக்கொண்டே தன் மகன் உறங்கும் இடத்திற்கு வந்தாள்..
அழகாய் கை-கால்களை மடக்கிக்கொண்டு உறங்கும் தன் மகனை நின்று ரசித்தாள்.. அவனை எழுப்பவே மனம் இல்லாமல் அவனை எழுப்பினாள். எழுப்பியவள் அவனுக்கு பல் தேய்த்துவிட்டு, குளிக்க வைத்து, உணவு பரிமாறி அவனை பள்ளி வேனில் அனுப்பி வைத்துவிட்டு வீட்டிற்கு நுழையவும், அவளுடைய செல்போன் ஒலிக்கவும் சரியாக இருந்தது...
எடுத்தவள் "சீக்கிரம் வந்துடுறேன் மேடம்"
"எல்லாம் பிரிபர் பண்ணிட்டேன் மேடம்"
"நல்ல வேல ஞாபக படுத்துனீங்க"கண்டிப்பா எடுத்துட்டு வரேன் என்று கூறிவிட்டு வைத்தவள் அடுத்த அரைமணி நேரத்தில் ரெடியாகி மறந்திடாமல் நேற்று இரவு தைத்து வைத்த பிளவுஸை எடுத்து கொண்டு அந்த பிரபலமான கல்லூரிக்குள் நுழைந்தாள்..
அந்தக் கல்லூரியே விழாக்கோலம் பூண்டிருந்தது. அந்த கல்லூரியில் படிக்கும் மாணவ ,மாணவிகள் வண்ண வண்ண உடைகளை உடுத்திக் கொண்டு அமர்ந்திருந்தனர்.. பேராசிரியர் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
இங்கு அமர்ந்திருக்கும் அனைவருக்கும் மேலும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை நீங்கள் தந்த ஆதரவை இந்தப் பேச்சுப் போட்டிக்கு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்...இப்போது நம் கல்லூரியில் பயிலும் மாணவி மாயா தனது பேச்சை தொடங்குவார்.. என்று கூறிவிட்டு அவரது இருக்கையில் அமர்ந்துகொண்டார்..
"காதல் "இன்று கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பு. காதலைப் பற்றி அறியாதவர்கள் இந்த உலகில் தான் உண்டோ? கண்டிப்பாக இருக்க முடியாது. உலகத்தில் சிறந்தது எதுவென்று கேட்டால் காதல் என்று தான் கூறுவார்கள்.. காதலுக்குக் கண்ணில்லை என்று கூறுவார்கள். "காதல் இல்லையேல் சாதல்" என்று ஒரு பழமொழி உண்டு. காதலுக்கு கண்கள் இல்லை. ஆமாம் கண்கள் இல்லை, வயது இல்லை, அப்படிப்பட்ட காதலை பற்றி ஒரு குட்டி கதை சொல்லணும் ஆசைப்படுறேன்..
ஒரு ஊரில் ஒரு பெண் இருந்தாள். அந்தப் பெண் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். ஸ்கூல் டாப்பர். பேச்சு, கட்டுரை, ஓவியம் எல்லாத்திலேயும் முதல் மாணவி.. அவ பேரு ருத்ரா.. இந்த அசாத்தியமான திறமைகளில் மயங்கி வெகு சீக்கிரமாகவே "திருமதி"ஆகிவிட்டால் ருத்ரா.
ஒருநாள் அந்தப் பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது. அப்போது பேச்சுப் போட்டிக்கு நடுவராக வந்தவரை காதலித்து பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டாள்..
அவளது கணவன் அவளை தாங்கினான். தலைமேல் வைத்துக் கொண்டாடினான். அவர்களது காதல் வாழ்க்கை சீரும் சிறப்புமாக இருந்தது. அவர்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்க ஒரு குழந்தை உருவானது. இந்த உலகிலேயே அவர்கள்தான் மிகவும் மகிழ்ச்சியான தம்பதியினராய் இருந்தனர். அவள் தன் கணவன் மீது உயிரையே வைத்திருந்தாள். அவன் மீது அவ்வளவு மயக்கம் அவருளுக்கு அதனால்தான் என்னவோ தன் கணவன் தன்னை விட்டு வேறு ஒருத்தியை நாடிச் சென்றது தெரியாமல் போய்விட்டது..
அந்த விசயம் அவளுக்கு தெரிந்த போது அவள் மூன்று மாதம்..
உங்களுக்கு மனசாட்சி இல்ல.. என்னையும் எங்கள் குழந்தையையும் விட்டுட்டு வேற ஒருத்தி கூட போக உங்களுக்கு எப்படி மனசு வந்தது.. சரிங்க எங்களை கூட நீங்கள் நினைக்க வேண்டாம் .வயித்துல மூணு மாச குழந்தை இருக்கே அது கூடவா உங்களுக்கு ஞாபகம் இல்லை.
அடச்சே உன் கூட பெரிய ரோதனையா போச்சு. எப்ப பாரு குழந்தை, மூத்திரம், பீத்துனினு .. இந்த வயசுல இப்படி ஒரு வாழ்க்கை தேவையா?
என்னங்க உங்களுக்கு குழந்தை பிறந்ததில் சந்தோஷம் இல்லையா? அதுக்குள்ள நாங்க அலுத்து போயிட்டோமா?
ஆமாண்டி எனக்கு சந்தோஷமே இல்ல. எப்படி டி சந்தோஷம் இருக்கும் .கையில ஒன்னு வயித்துல ஒண்ணுனு புள்ளைய பெத்து வச்சுக்கிட்டு
இருக்கிற..இந்த தண்டனையை ஆயுசுக்கும் என்னால அனுபவிக்க முடியாது?
உன் கிட்ட வந்தாலே எனக்கு கொமட்டுது. நீ அழகா இருக்கேன்னு தானடி உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..
அப்போ காதலிச்சு கல்யாணம் பண்ணல... அழகுக்காக தான் கல்யாணம் பண்ணிட்டியா?
ஆமான்டி... ஆனா எப்போ உனக்கு புள்ள பொறந்ததோ அப்போவே உன் அழகெல்லாம் போச்சு... அவ புருஷன் வெளிநாட்டில் இருக்கான். அவளுக்கு குழந்தை எல்லாம் கிடையாது. அவ அவ்வளவு அழகு.இந்த வயசுலயும் எவ்வளவு ஜிவ்வுனு இருக்கா தெரியுமா!புள்ளகுட்டி இல்லாததுனால தான் உடம்பை கட்டுக் குலையாம வச்சிருக்கா.. அவதான் வேணும் எனக்கு.!
ச்சீ... வாய மூடு ...உன்ன சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்ல.. அவள சொல்லணும்.. அடுத்தவ புருஷன்னு தெரிஞ்சும் ஆசைப்படுறாளே??
ஏய் அவளப் பத்தி எதுவும் பேசுன உன்னை தள்ளி வெச்சுடுவேன்...
நீ என்னடா என்ன தள்ளி வக்கிறது.நான் தள்ளி வக்கிறேன் உன்ன..உனக்கும் எனக்கும் எதுவும் இல்ல.இனிமே இந்த கட்ட வேகுற வரைக்கும் எனக்கு என் குழந்தைங்க தான்.இனிமே எங்க வாழ்க்கையில நீ இல்ல."குட்பை"
இப்படி சொன்னதும் வெளியேறினான் அவன்.
அந்த இடமே அவ்வளவு அமைதி.அவள் முகத்தில் லேசாய் புன்னகை விரிய இப்ப சொல்லுங்க காதல்னா என்ன.?
அந்த இடமே அவ்வளவு அமைதி..
மாயா தொடர்ந்தாள்.
இப்போ எங்கே பார்த்தாலும் காதல்.பள்ளிக்கூடத்துக்குப் போகாம பஸ் ஸ்டாண்டில் கடலை போடுற பையன், கடற்கரை மணலில் காதல் பேசும் மாணவர்கள், திரையரங்கின் நெருக்கத்தில் உடல் உரசும் தருணத்தில் எத்தனையோ தடுமாறும் இளைஞர்கள், மாணவர்கள் .
எல்லா இடத்திலும் காதல். "இந்த பஸ் எங்க போகும்" காதல்."இந்த அட்ரஸ் எங்க இருக்கு" காதல். "இந்த பஸ் இங்க நிக்குமா"! காதல். கஷ்டம்தான். இந்த வயதின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துவது கஷ்டம்தான். இதற்கு யாரைக் குறை சொல்ல முடியும்.? எந்தப் பக்கம் திரும்பினாலும் காதல் .திரைப்படங்களும், திரைப்படப் பாடல்களும், தொலைக்காட்சிகளும், இப்படி எதை திறந்தாலும் காதல் .காதல். காதல். அதை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் காதல் ஒன்றுதான்..காதலிப்பது மட்டுமே " தேசிய வேலை" என்பது போல் எந்தப் பக்கம் திரும்பினாலும் காதல்.. காதலர்களாக இருப்பது மட்டுமே வாழ்க்கையின் தகுதி என நினைக்கும் இளைஞர்கள் எப்படி தப்பிக்க முடியும்?
வியர்வை சிந்தி உழைக்கும் அப்பா, முதுகெலும்பு உடைய வீட்டிலும், வெளியிலும் வேலை செய்யும் அம்மா, அக்கா, தங்கை ,அண்ணா, தம்பி எல்லாம் மறந்து போகும். காதல் ஒன்றே போதும்.நாம் காதலிக்கும் பொண்ணுங்க கூட போன்ல பேச "டாப்பாப்" செய்ய நம்ம அப்பா கைய தான் எதிர்பார்த்து நிற்கிறோம்.அப்படி பட்ட நமக்கு எதுக்கு காதல். நீதான் என் உயிர். நீ தான் என் உலகம். உன்னை தங்கத் தாம்பாளத்தில் வச்சு காப்பாற்றுவேன், என்று காதலியிடம் கூறும் மாணவனுக்கு குடிக்கக் கஞ்சி இருக்காது, கஞ்சி இருந்தா உப்பு இருக்காது,உப்பு இருந்தா ஊறுகாய் இருக்காது, என்ற நிஜம் எப்போது உரைக்கும்.
நான் காதலிக்க வேண்டாம் என்று கூறவில்லை.
எதையும் எதிர்பார்த்து வருவதில்லை காதல்.நன்றாய் பேசுங்கள். காதலுக்காக காத்திருப்பது ஒன்றும் தவறு இல்லையே? படித்து முடிக்கும் வரை காத்திருங்கள். நிஜமான காதல் காத்திருக்கும். அதற்குள் நீங்கள் நிறைய பக்குவப் படுவீர்கள். நிதானமாக முடிவு எடுக்கக் கற்றுக் கொள்வீர்கள். முதல் காதலை விட சிறந்த காதல் உங்களுக்கு கிடைக்கும். யார் கண்டார்?நிஜ காதல் என்றும் சாகாது. அது எதிர்ப்பவர்களுக்கு முன்னால் நிமிர்ந்து நின்று வாழ்ந்து காட்டும்.
முதலில் படிப்பு,படிப்பு, படிப்பு ,படியுங்கள். படிப்பு ஒன்று தான் வாழ்க்கை. குறைந்தபட்ச படிப்பையாவது படியுங்கள். அதற்குள் வாழ்க்கை என்றால் என்ன? என்று புரியும் .படித்த படிப்பிற்கு சொற்ப சம்பளத்தில் வேலை கிடைத்தால் கூட நிம்மதி தான். அதை வைத்து தான் காதலித்தவளுக்கோ, அல்லது தன்னை நம்பி வந்தவளுக்கோ, ஒரு முலம் பூவையாவது வாங்கி கொடுக்க முடியும். கட்டில் உறவுக்கு முன் ஓர் இனிப்பையாவது வாங்கிக் கொடுக்கலாம்.. அவளுக்கு தேவையானதை செய்யலாம்.. ஒரு சின்னதாக ஒரு வீடு, குழந்தை என மகிழ்ச்சியாக வாழலாம். அதைவிட்டு என்னால் இது எல்லாம் முடியாது. ஆனால் எனக்கு காதலிக்க தெரியும் .நீ தான் என் உலகம் .உனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். என்று வசனம் பேசுவீர்கள் என்றால் "சாரி"உங்களுக்கு காதல் தேவையில்லை. காதலுக்கு நீங்கள் தேவையில்லை..
அந்த இடமே கர கோஷத்தால் நிரம்பி வழிந்தது.இத்துடன் என் உறையை முடித்து கொள்கிறேன் என்று கூறிவிட்டு தனது ஒன்பது மாத வயிரை சுமந்து கொண்டு அமர்ந்தாள் அவள்.வீட்டில் ருத்ரா என்றும் கல்லூரியில் மாயா என்றும் அழைக்கப்படும் ருத்ர மாயா...
 
Awesome sis.?????
நல்ல கருத்துக்களை நச்சுனு சொல்லியிருக்கீங்க??. அற்புதம்??.
அருமையான சிறுகதை ???.
 
Top