Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Idhayam Ketkum Kadhal 7.2

Advertisement

Riyaraj

Tamil Novel Writer
The Writers Crew
இதயம் கேட்கும் காதல்…
பகுதி
7(2)

மதி, "போடா, போய் வீட்டில் சாப்பிட்டு, நல்லா தூங்கு. அதோட மறக்காம போன ஆப் பண்ணி வச்சிட்டு. இல்ல உன்ன சிவராத்ரி கொண்டாட வச்சிடுவான் அந்த கேடி" என நக்கலாய் சொல்லி சிரித்தாலும், அவர் சொல்வதில் இருக்கும் உண்மை புரிந்ததால்..
"நிச்சயமாம்மா" என கூறி அங்கிருந்து வெளியேறி, தனது வாகனத்தில் இல்லத்தை நோக்கி பறந்தான் சந்துரு.

*****
"செழியா.. டேய் செழியா.. என்னடா பண்ணிட்டு இருக்க போன வச்சிட்டு? டின்னர் ரெடியாகி எவ்வளவு நேரமாச்சு. கூப்பிட்டுட்டே இருக்கேன். காதுலயே விலலையா?!" என்ற சந்திரம்மாவின் வார்த்தையில், ஏற்கனவே போனில் தனக்கு வேண்டிய தகவல் கிடைக்காத கடுப்பில் இருந்த செழியன், அதே கடுப்பில் ..

"காதில விழுந்ததால, காது அடச்சு போச்சு மூன். அதான் கேட்கல" என நக்கலாக பதிலை சொல்ல, அவனை முறைத்தவர்.
"காலைல தானே சொன்னேன். மூன் அப்படி கூப்பிடாதேன்னு. இப்ப மறுபடியுமா" என்று முகத்தை அஷ்ட கோணலாக்கி சொல்ல.
"ஏன் நா அப்படி கூப்பிட கூடாது?! அப்பா மட்டும் மூனூ.. மூனூ ன்னு கொஞ்சலாம்? நா சொன்னா கசக்குதோ" என இன்னும் குழந்தையில், தந்தையிடம் மல்லுக்கு நின்று, தாயிடம் உரிமை பாராட்டும் பிள்ளையாய் கேட்க..

வளர்ந்தாலும், இன்னும் அதே சிறு வயது செழியனை காண்பது போன்று இருந்ததால், அவனின் பேச்சிற்கு பதிலாய், அந்த நாட்களில் அவனை சமாதானம் செய்வது போலவே அவனை அணைத்து நெற்றியில் இதழ் பதித்தபடியே, "எப்பவும் நா உனக்கு தான்டா மூன். அவர டீல்ல விட்டுடலாம். ஓகே வா" என கேட்க.
தாயின் ஸ்பரிசத்திலும், கிடைத்த அன்பு முத்தத்திலும் அதுவரை இருந்த டென்ஷன் நீங்கியவனாய், மீண்டும் தனது துடுக்கு தனத்தை கையிலெடுத்தவன்,

"பசிக்கு சோறு போடுவேன்னு பார்த்தா, இப்படி கொஞ்சியே நேரத்த ஓட்டி, தூங்க வச்சிடுவ போலவே மூன். வா .. வா .. வந்து களியோ கேப்பையோ செஞ்சிருப்பில்ல. அத கொட்டு தின்னுட்டு தூங்கறேன்" என கூறி, தன் ஒற்றி கண்ணை சிமிட்டி, தாயை வாரிவிட்டு, சிரிப்போடு டைனிங் ஹால் நோக்கி ஓடினான், செழியன்.

இப்போது சிரிப்போடு செல்லும் மகனை வாஞ்சையுடன் பார்த்த சந்திரம்மா, "எப்போதும் அவன் இதே மகிழ்ச்சியுடன் நிம்மதியாய் வாழ வேண்டும். அதற்கு கடவுளாகி போன தன் கணவர் துணையாய் நிற்க வேண்டும்" என்ற வேண்டுதலுடன் அவனுக்கு பரிமாற சென்றார்.

தனக்கு மாலை வந்த தகவல் படி, அடுத்து என்ன செய்வது என்பதை முன்னரே தீர்மானித்து விட்டதால், அவர் தெளிவாக இருக்க, அவரின் மகனோ தனக்கு கிடைக்காத தகவலால், மனதில் குழப்பம் இருந்தாலும், தாயிற்காக சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு சென்றான்.

என்ன ஆனாலும் சரி நாளை மீண்டும் இதழினியை சந்தித்து பேசுவது என்னும் முடிவுக்கு வந்தவனாய் உறக்கத்தை தழுவினான்.
அடுத்த நாள் அவனுக்கான நாளாய் இருக்குமா?!
**********

"ஹரி .. நீ சொல்றது.. செய்யறது. எதுவும் சரியில்லடா" என்ற பார்வதியின் பேச்சில், எரிச்சலான ஹரி,
"இதழினி வீட்டுல இருந்து வந்தது .. முதலா இதையே சொல்லிட்டு இருக்கம்மா நீ. நானா அந்த பொண்ண பார்த்தேன். நீ தானே பார்த்த, இப்ப அவள எனக்கு பிடிச்சிருக்கு சொன்னா, கட்டி வைக்காம, வேற பொண்ணு பார்க்கறேன்னு சொன்னா, என்ன அர்த்தம்.. சொல்லுங்க?" என்று கோபமாய் கேட்க,

"எல்லாம் சரி தான்டா. ஆனா நீ வீடு கட்ட தேவையானது அங்க தேறாது போலவே. அதோட மத்த பொண்ணுங்களும், அடுத்தடுத்து இருக்கு. இது தெரியாம நம்ம போயிட்டோம். அதான். நா என்ன சொல்ல வர்றேன்னா" என மீண்டும் ஆரம்பிக்க.
"அம்மா .. நிறுத்துங்க. உன்னால தான் நா இப்ப இப்படி இருக்கேன். கவர்மெண்ட்ல வேலைல இருக்கேன்னு பேரு. ஆனா ஒரு பேங்கல லோன் வாங்க முடியல.

காரணம் பர்சனல் லோன் அவ்வளவு இருக்கு எனக்கு. இதுல ஒரு பைசா கூட எனக்காகன்னு வாங்கினது இல்ல. எல்லாமே நீங்க கேட்டதற்குகாகவும், நம்ம கவிக்கா, தீபாக்காகவும் தான்..

இதுவரை எனக்காகன்னு யோசிக்காத நா, இப்ப எனக்கே எனக்குன்னு ஒண்ணு தான் வேணுமின்னு கேட்கறேன். ஏன் புரிஞ்சுக்காம பேசறீங்க?!" என்றான் கோபமும், ஆதங்கமும் கலந்து.

அவனின் ஆசையும், ஆதங்கமும் புரிந்தாலும், பார்வதியோ, "இங்க பாரு ஹரி. அப்பவும் சரி, இப்பவும் சரி நா, நம்ம குடும்பம் நல்லா இருக்க தான் எல்லாமே செய்யறேன். பொண்ணுங்க வாழ்க்கைக்காக இவ்வளவு நாள் செஞ்சிட்டேன்.

இப்ப நீ, நல்ல இருக்கணுமின்னா என்ன செய்யனுமோ அதை செய்ய சொல்றேன். கொஞ்சமாவது உனக்கு வீடுகட்ட உனக்குன்னு வர்றவ கிட்ட, இருந்து கிடச்சா, அதனால கட்ட போற வீட்டுல ராணி மாதிரி வாழ போறது அவ தானேடா. வாடகை இல்லாம, சொந்தமா வீட்டுல இப்ப இருக்கறது சாதாரணமா?! அது அவளோட எதிர்காலத்துக்கும் நல்லது தானேடா.

கடன் இல்லாம இருந்தா தானே, நாளைக்கே குழந்தைங்கன்னு வரும் போது, அடுத்தடுத்து செலவுகளை சமாளிக்க முடியும். குழந்தைங்க வரும் போது கடனோட இருந்தா, அப்ப நீ வீடு கட்டின கடனை அடைப்பியா, இல்ல குடும்பத்துக்கு வேண்டியதை செய்ய பார்ப்பியா?! அதனால ஒழுங்க நா சொல்றத கேளு" என அவர் தான் இதழினியை வேண்டாம் என்பதற்கான காரணத்தை தெளிவாக்கிவிட்டே ஓய்ந்தார்.

தன் தாயின் வார்த்தையை கேட்டவனின் மனமோ, "இதழினியையும் இழக்க முடியாது. அதே நேரம் தாயின் சொல்லில் இருக்கும் நியாயமும் சரியே! என்பதால், நாளை இதழினியிடம் நேரில் பேசிவிடுவது' என்ற முடிவுடன் உறங்க சென்றான்.

யார் முடிவு யாருக்கு சாதகமாய் மாறும் ?
 
Top