Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
கரிசல் 19:

நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து அனைவரும் சாப்பிட்டு முடிக்க, மீண்டும் ஒவ்வொருவராய் மதியின் அருகில் வந்து அமர்ந்தனர்.

“என்னப்பா...? எல்லாரும் சாப்பிட்டாச்சுல? நல்ல நேரம் முடியறதுக்குள்ள பொண்ணை அழைச்சுட்டு கிளம்புங்கப்பா..!” என்று பெரியவர் ஒருவர் சொல்ல...

“ஆமாம்..! கிளம்புங்க...!” என்றபடி அனைவரும் கிளம்ப ஆயத்தமாயினர். அதற்கு முன்னாடியே முகிலனைக் கிளம்ப சொல்ல, அவனோ மனமே இல்லாமல் கிளம்பி சென்றான்.

கிராமத்தில் மண்டப்பத்தில் வைத்து திருமணம் செய்வது எல்லாம் அரிது. முதல் நாள் இரவே பெண்ணை அழைத்துக் கொண்டு போய், மாப்பிள்ளை வீட்டில் அல்லது மாமன், மச்சினன் வீட்டில் தங்க வைப்பது வழக்கம்.

இங்கு மதியும், முகிலனும் ஒரே ஊர் என்பதால், அதிக ஏற்பாடு தேவையில்லாமல் போனது. நடந்தே சென்று விடும் தூரம் என்பதால், அனைவரும் அவளை அழைத்து செல்ல தயாராகினர்.

மதிக்கு அப்போதே அழுகை துவங்கியது. நடப்பது அவளுக்கு புதிதாய் இருந்தது. இது நாள் வரையில் மற்றவர்கள் வீட்டில் அவள் தங்கியதில்லை. இனியும் அப்படி இருக்கமுடியுமா..? இனி முகிலனின் வீடு தான் அவள் வீடு..! என்று மனதில் பதிய வைத்தனர் அனைவரும் சேர்ந்து.

மதியின் கண்கள் கலங்கியிருந்ததைப் பார்த்த பார்வதிக்கும் கண்கள் கலங்க, விவரம் தெரியாத சுமதியோ அழுதே விட்டாள்.
“எல்லாரும் சேர்ந்து எங்க அக்காவை எங்க கூட்டிட்டு போகப் போறீங்க..?” என்று அவள் சிறுபிள்ளைத்தனமாய் கேள்வி கேட்க,

“உங்க அக்காவுக்கு காலையில கல்யாணம். அதனால உங்க அத்தை வீட்டுக்கு தான் கூட்டிட்டு போறோம்..!” என்றனர்.

“எங்க அக்கா எப்ப திரும்பி வருவா..?” இது சுமதி.

“உங்க அக்கா இனி இங்க எல்லாம் வர மாட்டா..! இனி உங்க மலர் அத்தை வீட்ல தான் இருப்பா..!” இது உறவினர்கள்.

“அப்ப நான் எப்படி தனியா இருக்குறது..?” இது சுமதி.

“அது பழகிடும் சுமதி. உங்க அக்கா பக்கத்துலதான் இருக்க போறா..! நீ நினைச்சா உடனே போய் பார்த்துக்கலாம்..!” என்று சொல்லி புரிய வைத்தனர்.

“அதெல்லாம் வேண்டாம். எங்களுக்கு தான் வீடு இருக்குள்ளா..? எங்க அக்கா இங்கயே இருக்கட்டும். நான் அக்காவை விட மாட்டேன்..!” என்று சுமதி அவளைக் கட்டிக் கொண்டு அழ...

வயதில் முதிர்ச்சியும், பக்குவமும் இல்லாத மதியும் தங்கையுடன் சேர்ந்து அழுதாள்.

“என்ன மதி..? அவதான் சின்ன பிள்ளை..! நீயும் சேர்ந்து அழுதா, அவ இன்னமும் அழுவா..?” என்று உறவினர்கள் கடிந்து கொள்ள,
“சுமதி..! அக்காவை விடு..!” என்று பார்வதி கொஞ்சம் அதட்டலாய் சொல்ல, அம்மாவிற்கு பயந்து, மதியை விட்டு விலகினாள் சுமதி.
எதற்கும் கலங்காத மனோகரனுக்கு கூட கொஞ்சம் கண்கள் கலங்கியது.

“குத்துவிளக்க எடுத்து கைல குடுங்க..! நேரம் ஆச்சு..” என்று கூட்டத்தில் ஒருவர் சொல்ல, மதியின் கையில் ஒரு குத்து விளக்கு கொடுக்கப்பட்டது.

சரியாக அந்த சமயத்தில் வந்து சேர்ந்தனர் பார்வதியின் தங்கையும், அவரின் மகள் வினோதினியும்.

“என்ன இவ்வளவு நேரம் கழிச்சு வரீங்க..?” என்று பார்வதி மனந்தாங்களுடன் கேட்க,

“அக்கா...! நாங்க சேலத்துக்கு எப்பவோ வந்துட்டோம்..! உங்க ஊருக்கு பஸ்சும் கிடைக்கலை ஒன்னும் கிடைக்கலை. ஒரு வழியா வந்த பஸ்ல வர இவ்வளவு நேரம்..” என்று பார்வதியின் தங்கை ஆற்றாமையாய் சொல்லி முடித்தார்.

மதியைக் கண்ட வினோதினி பாய்ந்து அணைத்துக் கொள்ள, சுமதி அதை அதிசயமாய் பார்த்தாள்.

“எப்படி இருக்குற மதி..?” என்றாள் வினோதினி.

“நல்லா இருக்கேன் வினோ..! நீ எப்படி இருக்குற..?” என்றாள் மதி பதிலுக்கு.

“எனக்கென்ன..? நான் நல்லா இருக்கேன். இப்போ என்ன அவசரம்..? உடனே கல்யாணம் பண்ணனும்ன்னு...! ஏன் பெரியம்மா மதியை மேல படிக்க வைக்கிறேன்னு நீங்க தான சொன்னிங்க...?” என்று வினோதினி குறைபட,

“வினோ பேசாம இரு..! பெரியவங்க மாதிரி பேசாம வாயை மூடு.நம்மைக் கேட்டா எல்லாம் செய்றாங்க..?” என்று அவர் தன் கோபத்தைக் காட்டினார்.

“உன்கிட்ட சொல்லக் கூடாதுன்னு இல்லை. டக்குன்னு முடிவு பண்ணியாச்சு.அதான் உடனே சொல்ல முடியலை.இப்ப என்ன எப்படியோ வந்துட்டல்ல. எங்க உங்க வீட்டுக்காரர் வரலையா..?” என்று பார்வதி கேட்க,

“இல்லக்கா அவருக்கு லீவு இல்லை. அதான் நானும் வினோவும் மட்டும் வந்தோம்..!” என்றார் பார்வதியின் தங்கை.

“சரி சரி பேசிட்டு இருந்தா, நல்ல நேரம் போய்டும்.. கிளம்புங்க...!” என்றபடி மதியை அழைத்துக் கொண்டு கிளம்பினர் அனைவரும்.
வினோதினியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாள்.

பெண்கள் பாதிப் பேர் முன்னால் செல்ல, மதியை நடுவில் விட்டு, பாதிப் பெண்கள் பின்னால் சென்றனர்.

பார்வதியும்,மனோகரனும் செல்லவில்லை. அது முறையும் இல்லை என்பதால் அவர்கள் வீட்டிலேயே தங்கிவிட்டனர்.

மதியை அழைத்துக் கொண்டு சென்ற பின்பு, அடக்கி வைத்திருந்த கண்ணீர் எல்லாம் பார்வதிக்கு வெளிவர, உள்ளே சென்று வாய்விட்டு அழ ஆரம்பித்தார்.

“அக்கா.. என்னக்கா நீ..? நீ தான முன்னாடி நின்னு எல்லாத்தையும் பண்ணின..? இப்ப நீயே இப்படி அழுதா..அங்க மதிக்கு யாரு ஆறுதல் சொல்றது..?” என்று அவரின் தங்கை அவரைத் தங்க,

“என் பிள்ளை கடைசி வரைக்கும் நான் படிக்க வைப்பேன்னு நம்புனா..? ஆனா அதை என்னால நிறைவேத்த முடியாம போய்டுச்சே..!” என்று அவர் அழுக,

“நீ அவசரபட்டிருக்க கூடாதுக்கா..!” என்று அவர் சொல்ல,

“நான் எங்க அவசரப்பட்டேண்டி, எல்லார் வாயிலையும் என் மக விழுக வேண்டாம்ன்னு தான் சரின்னு சொல்லிட்டேன்..!” என்றவர் தன் கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டார்.

“நடந்ததை இனி மாத்த முடியாதுக்கா..! அவளுக்கு ஒரு நல்லது நடக்க போறப்ப, இப்படி அழுகலாமா..?” என்று அவர் சொல்ல,
“உண்மைதான்..! முகிலன் மாதிரி ஒரு பையனைத் தேடுனாலும் கண்டுபிடிக்க முடியாது. எனக்கு ஒரே ஆறுதல் முகிலன் மட்டும் தான்...!” என்று முகிலனை மட்டுமே நம்பினார் பார்வதி.

“அப்பறம் என்னக்கா? கவலை விடு..! போய் ஆக வேண்டிய வேலையைப் பார்ப்போம்..!” என்றபடி அவர்கள் இயல்பிற்கு திரும்பினர்.
“அங்கு மதியை அழைத்துச் சென்று முகிலனின் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு மாமன், மச்சினன் வீட்டில் தங்க வைத்தனர்.
மதிக்கு சந்கோஜமாய் இருந்தது. இதுவரை இப்படி எங்கும் அவள் சென்றதில்லை. வினோதினி மற்றும் செல்வி, கங்கா என அனைவரும் அருகில் இருக்கவும் அவளுக்கு கொஞ்சம் பதட்டம் இல்லாமல் இருந்தது.

“என்னாச்சு மதி? முகம் ஒரு மாதிரி இருக்கு..?” என்றாள் வினோதினி.

“முத்து வந்திருக்கான்..!” என்றாள்.

“முத்துவா..? அது யாரு..?” என்று வினோ கேட்க,

“எங்கடி இருக்கான் அவன்..?” என்றாள் கங்கா கோவமாய்.

“ஜன்னலுக்கு வெளிய பாரு..!” என்று மதி சொல்ல, எட்டிப் பார்த்தாள் கங்கா. இருட்டில் சரியாகத் தெரியாவிட்டாலும் அது முத்து தான் என்பது உறுதியாகத் தெரிந்தது.

“இந்த லூசுப்பையன் அடங்கவே மாட்டானா..? ஏற்கனவே நடந்த பிரச்சனை எல்லாம் பத்தாதா...? அந்த பெரியம்மா இவனை இங்க விட்டுட்டு அங்க என்ன பண்ணுது..?” என்று கங்கா பொரிந்து தள்ளினாள்.

“எதுக்கு வந்திருக்கான்னு கேளு கங்கா..! ஏதாவது முக்கியமான விஷயமா இருக்க போகுது..!” என்றாள் மதி.

ஏனென்றால் அந்த இருட்டிலும் அவனின் முகம் அவ்வளவு தவிப்பாய் இருந்தது. எதையோ சொல்லத் துடிப்பவனைப் போல் இருந்தான் முத்து. அதனால் தான் என்னவென்று கேட்க சொன்னால் மதி.

“ஆமா...! ரொம்ப முக்கியமான விஷயம் பேச வந்திருப்பான். எவடி இவ..? ஏற்கனவே நடந்த பிரச்சனை பத்தாதா..?” என்று கடுப்பாக சொன்னவள் அவனை நோக்கி சென்றாள்.

“டேய் முத்து..! இந்த நேரத்துல இங்க என்ன பன்ற..? இப்ப எதுக்காக இங்க வந்து நிக்குற..? உன்னைய இங்கன பார்த்தா எல்லாரும் மதியைத்தான் தப்பா நினைப்பாக, பேசாம போய்டு..!” என்றாள் கங்கா.

“என்ன கங்கா..? நீயே இப்படி பேசுனா எப்படி..! உனக்கு என்னைய நல்லாத் தெரியும்ல...நான் நிஜமாவே மதிக்கு கெடுதல் நினைப்பேனா..?” என்றான்.

“இங்க பாரு முத்து..நீ நல்லவனா, கெட்டவனான்னு எனக்கேத் தெரியலை.ஆனா ஒன்னு மட்டும் உறுதியா தெரியும்..நீ இங்க இப்படியே நின்னுட்டு இருந்தா, கண்டிப்பா ஒரு பிரச்சனை வரும். அது மட்டும் தெள்ளத் தெளிவா தெரியுது. அதனால நீ முதல்ல இங்க இருந்து கிளம்பு..” என்று கங்கா சொல்லிக் கொண்டிருக்க,

கங்கா எதற்காக பயந்து கொண்டிருந்தாளோ அது தான் அங்கு நடந்தது.ஆனால் வெளிப்படையான சண்டையாக நடக்கவில்லை.

“பார்த்திங்களா அண்ணே..! நான் சொன்னப்ப நீங்கதான் நம்பலை.இப்ப நீங்களே பாருங்க. அவன் அவளுக்காக வந்து அங்கன நிக்குறதும், உடனே இவ அந்த கங்காவ தூது அனுப்புறதும்...எனக்கென்னவோ சரியா படலை அண்ணே..!” என்று பெரியசாமிக்கு மந்திரம் ஓதிக் கொண்டிருந்தார் திலகா.
 
பெரியசாமிக்கும், அன்று மதியின் வீட்டில் பார்த்த காட்சியும், இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் காட்சியும் மாறி மாறி கண்ணில் வந்து போனது.

“திலகா, இப்ப என்னம்மா பண்றது..?” என்று பெரியசாமி புரியாமல் கேட்க,

“அண்ணே..! இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை..! என்ன கல்யாணமா முடிஞ்சிருக்கு..? வெறும் நிச்சயம் தான..?” என்று திலகா, சொல்ல வந்ததை சொல்லாமல் நிறுத்த,

“அதெப்படிமா திலகா முடியும். விடிஞ்சா கல்யாணம். எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு..!” என்று அவர் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தார்.

“உங்களுக்கு என்ன தோணுதோ அப்படியே செய்ங்க அண்ணே..! நாளைக்கு முகிலனுக்கு பொண்டாட்டியா ஆகிட்டு, ஏதாவது தப்புத் தண்டான்னு சொன்னா, உங்க குடும்ப மானமும் சேர்ந்து தான் பறக்கும். முகிலன் மருமவனோட நிலைமையைக் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க..!” என்று நல்லவர் போல், வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல், பேசிவிட்டு சென்றார் திலகா.

அவர் சென்ற பிறகு பெரியசாமி என்ன செய்வதென்று புரியாமல் யோசித்துக் கொண்டிருந்தார்.

அங்கு முத்துவோ இன்னமும் கங்காவுடன் வாதாடிக் கொண்டிருந்தான்.

“ஒரு தடவை..! பிளீஸ் கங்கா..!” என்றான் அழும் குரலில். அவன் கெஞ்சுவதையும், கங்கா அவனைத் திட்டுவதையும் மதி ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருக்க, அவளுக்கு அருகில் இருந்த வினோதினி...

“இப்ப அந்த முத்துவுக்கு என்ன பிரச்சனை..?” என்றாள்.

“தெரியலை வினோ..!” என்றாள் மதி.

“அவனால தான் பிரச்னைன்னு இப்ப கங்கா சொல்லிட்டு போனாளே..! அவன்னால என்ன பிரச்சனை மதி..?” என்றாள் வினோ.

“அது ஒரு பெரிய கதை வினோ..!” என்ற மதி பெருமூச்சு விட,

“அவன் யாரு உனக்கு..?” என்றாள் வினோ சரியாக பாயிண்டைப் பிடித்து.

“இதென்ன கேள்வி..? அவன் எனக்கு பிரண்டு..!” என்றாள் கர்வத்துடன்.

“ம்ம்ம்” என்பதோடு நிறுத்திக் கொண்டாள் வினோதினி. அங்கு முத்துவை சண்டையிட்டு ஒருவழியாக அனுப்பி வைத்து விட்டாள் கங்கா.

உள்ளே வந்தவளிடன்..”ஏன் கங்கா அப்படி பேசுன? பாவம் முத்து முகமே சரியில்லை..!” என்று மதி பாவமாய் சொன்னாள்.

“அடியேய்..! இங்க உனக்கு நிலைமையே சரி இல்லை..! கொஞ்ச நேரம் வாயை மூடுறியா..?” என்று கங்கா எரிந்து விழ, அப்படியே அமைதியாகிப் போனாள் மதி.

“எதுக்கு எங்க அக்காவைத் திட்டுறிங்க..?” என்று சுமதி முறைத்துக் கொண்டு கேட்க,

“ஏய் சிலுப்பி..! பேசாம இரு. இல்லை கொன்னுடுவேன்..!” என்று அவளையும் மிரட்டினாள் கங்கா.

முகிலன் வீட்டின் முன்பு போடப்பட்டிருந்த பந்தலும், கட்டியிருந்த வாழை மரங்களும், மைக் செட்டில் பாடிக் கொண்டிருந்த பாடல்களும், திருமண வீட்டிற்கான நிறைவைத் தந்து கொண்டிருந்தது.

வீட்டிலேயே திருமணம் என்பதால் பாதி ஜனங்கள் உறங்காமல் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். திருமண பந்திக்கு தேவையான சமையல் வேலைகள் ஒரு புறம் தொடங்க தயாராக இருக்க, வீடே சுறுசுறுப்பாய் இருந்தது.

“எப்பா ஏய்..! முதல்ல ஒரு கடுங்காப்பியை போடுங்கப்பா..! அப்பத்தான் சுறுசுறுப்பு வரும்..!” என்று ஒரு பெரிசு சொல்லிக் கொண்டிருக்க,

“சமையல் காரங்க போட்டுட்டு இருக்காக..!” என்ற பதில் எந்த மூலையில் இருந்து வந்தது என்று தெரியாமல் வந்தது.
யாரின் வீட்டிலாவது விசேஷம் என்றால், அன்றைக்கும் டெக்கில் படம் போடுவார்கள். தூங்காமல் இருப்பதற்காக.

அன்றைய தினமும் டெக்கில் படம் போட்டனர். முகிலன் தான் போட்டான்.

“என்ன படம்யா..?” என்று தாத்தா கேட்க,

“அஜீத் படம் தாத்தா..!” என்றான் முகிலன்.

“என்னது அசீத்தா..?” என்று பொக்கை வாய் தாத்தா கேட்க, சிரிப்பை அடக்கியவாறு டெக்கில் கேசட்டைப் போட்டுக் கொண்டிருந்தான்.

“டேய் மைக் செட்டுகாரனை பாட்ட நிறுத்த சொல்லுங்கடா..!” என்று ஒருவர் சத்தம் போட, மைக்செட் நிறுத்தப்பட்டு, அனைவரும் அமைதியாகினர்.

இளசுகள், பெருசுகள் என அனைவரும் கூடி இருக்க, வாலி திரைப்படம் போடப்பட்டது.

“எப்பா ராசா..முகிலா...! நீ போய் தூங்குப்பா..! கல்யாண மாப்புள்ள, இப்படி முழிச்சுக் கிடந்தா, காலையில கெடக்கண்ணு விழுந்துடும் ராசா..!” என்று ஒரு பாட்டி சொல்ல,

“சரி பாட்டி..! கொஞ்ச நேரம் கழிச்சு போறேன்..!” என்றபடி சற்று தள்ளி அமர்ந்தான் முகிலன்.

“ஏய் மதி..! முகிலன் அண்ணா டெக்குல படம் போட்டு விட்ருக்கு..! நாங்க போய் பார்த்துட்டு வரோம்டி..!” என்று செல்வி சொல்ல,

“என்ன செல்வி..? அதெல்லாம் வேண்டாம். இங்கயே இருப்போம்..!” என்றாள் கங்கா.

“ஹேய் வாடி கங்கா..! அஜித் படம் போட்ருக்காங்க..!” என்றாள் செல்வி ஆசையுடன்.

“நீங்க போயிட்டு வாங்க..! நான் தான் மதி கூட இருக்கேன்ல..” என்றாள் வினோதினி.

வினோ சொல்லவும் அங்கிருந்து ஆசையுடன் கிளம்பினர் இருவரும். சுமதியும் அவர்களுடன் சென்றாள்.

“இது ஒரு அதிசயம்ன்னு போறாங்க..!” என்று வினோ ஆச்சர்யமாய் கேட்க,

“இங்க இது அதிசயம் தான் வினோ..! இந்த ஊர்லயே முகிலன் மாமா வீட்ல தான் டிவி இருக்கு.அப்பறம் பொதுவுல ஒரு டிவி இருக்கு. அவ்வளவு தான்..!” என்றாள் மதி.

“பாவம் தான் இங்க இருக்குறவங்க எல்லாம்..!” என்றாள் வினோ.

“பேசுறதுக்கு வேற விஷயம் இல்லாததால தான், இங்க அடுத்த வீட்டுப் பிரச்னையை பேசுவாங்க..! பொழுது போகணும்ல..” என்றாள் மதி.

அங்கு முகிலன் கங்காவிடம்...”கங்கா..! மதி என்ன பண்றா..?” என்றான்.

அவளோ படம் பார்க்கும் மும்புறத்தில் இருந்தவள்... “அவ அங்க இருக்காண்ணா..!” என்றாள் டிவி திரையைப் பார்த்துக் கொண்டு.

“தனியாவா இருக்கா..?” என்றான்.

“கூட அவ சித்தி பொண்ணு வினோதினி இருக்கா..!” என்றாள்.

“நல்ல சந்தர்ப்பம் ஆச்சே..! எல்லாரும் இங்க படம் பார்க்குற ஆர்வத்துல இருக்காங்க..! இவங்க கவனம் இப்போதைக்கு அங்கிட்டு வராது.முகிலா..! ம்ம் உனக்கு நல்ல சான்சு..! போய் அவளைப் பார்த்துட்டு, ஒரு முத்தமாவது குடுத்துட்டு வந்துடு..!” என்று அவனின் மனம் அவனை உந்த...சமயம் பார்த்துக் கொண்டிருந்தான் முகிலன்.

அப்போது தான் மாப்பிள்ளைக்கு உரிய மனபாவத்திற்கு வந்திருந்தான்.அந்த நேரத்தில் அவனின் வயதும், அவளின் வயதும் மறந்து போனது அவனின் தவறு அல்ல. அது வயதின் கோளாறு. எப்படி பட்டவனையும் தடுமாற வைக்கும் வயதின் ஆர்வம். யாரையும் குற்றம் சொல்ல முடியாது.

“நீ படுத்து தூங்கு மதி..!” என்று வினோதினி சொல்ல,

“தூக்கம் வரலை வினோ..!” என்றாள் மதி.

“எக்ஸாம் எப்படி எழுதியிருக்க மதி..?” என்றாள்.

“நல்லா எழுதியிருக்கேன் வினோ..! நான் தான் ஸ்கூல் பர்ஸ்ட் வருவேன்..!” என்று அவள் பெருமையாய் சொல்ல,
“என்ன வந்து என்ன பிரயோஜனம்..? உனக்கு விடிஞ்சா கல்யாணம்..!” என்று சலித்துக் கொண்டாள் வினோ.

“கல்யாணத்துக்கு அப்பறம் படிக்க வைக்கிறேன்னு மலர் அத்தை சொல்லியிருக்காக..!” என்றாள் மதி அறியா பிள்ளையாய்.

“உன்னை சமாதானப் படுத்த சொல்லியிருப்பாங்க..! அது எப்படி நடக்கும்..?” என்று வினோதினி கேட்க,

“இல்லை, கண்டிப்பா படிக்க வைப்பாக. மணி மாமா மேல எனக்கு நம்பிக்கை இருக்கு..!” என்றாள் அப்போதும் விடாமல்.

“அப்படி நீ படிச்சா எனக்கும் சந்தோசம் தான் மதி..!” என்று வினோதினி பேச்சை முடிக்க,

வெளியே திலகாவின் சத்தமும், பெரியசாமியின் சத்தமும் கேட்டது.

“என்னண்ணே முடிவு பண்ணியிருக்கிங்க..?” என்றார் திலகா.

“என்ன பண்றதுன்னே தெரியலைமா..!” என்றார்.

“என்னமோ நடக்குறது நடக்கட்டும்..!” என்று திலகா சொல்ல,

“என்ன பெரியசாமி..! உனக்கு பெரிய மனசுயா..! அந்த புள்ளைய உன் பிள்ளைக்கு கட்டுறதும் இல்லாம, மேல படிக்க வைக்க போறியாமே..! இப்ப தான் மலரு சொல்லுச்சு. நல்லா இருய்யா..!” என்று ஒருவர் போற போக்கில் சொல்லி விட்டு போக,

“என்னண்ணே இதெல்லாம்..? அந்த சிறுக்கிய படிக்க வைக்க போறிங்களா..? ஏற்கனவே தலைகால் புரியாமா ஆடுவா..? இதுல இப்படித்தான்னு தெரிஞ்சா இன்னமும் ஆடுவாளே..!” என்றார் திலகா.

இந்த கல்யாணத்தையே திலகாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதற்கு பிறகு மதி படிக்க போவதையா விரும்புவார்.

“அட நீ வேறம்மா..? அந்த கழுதையை மேல படிக்க வைச்சு, அந்த கழுதை குடும்ப மானத்தைக் கெடுக்கவா..?” என்று சோர்ந்து போய் சொல்ல,

“என்ன சொல்ல வரீங்க..? புரியலை..” என்றார் திலகா.

“கல்யாணம் நடக்கட்டும்..! அப்பறம் இருக்கு வேடிக்கை. படிச்சு கிழிச்ச வரைக்கும் போதும், வீட்ல கிடன்னு சொல்லிட மாட்டேன்..!” என்றார்.

“அப்ப கல்யாணம் பண்றதுல உறுதியா இருக்கீங்க..?” என்றார் திலகா கோபத்துடன்.

“இப்ப ஒன்னும் பண்ண முடியாது. இப்ப கல்யாணத்தை நிறுத்துனா, அசிங்கம் என் பையனுக்கும் சேர்த்துதான்..!நடக்குறது நடக்கட்டும். பின்னாடி பார்த்துக்கலாம்..!” என்று சொல்லிவிட்டு செல்ல...எரிச்சலுடன் நின்றிருந்தார் திலகா.

பக்கத்து வீட்டின் அறையில் இருந்த மதிக்கும், வினோதிக்கும் வார்த்தைகள் அப்படியே அச்சுப் பிசகாமல் கேட்க, அப்படியே அதிர்ந்து அமர்ந்திருந்தாள் மதி.

ஏற்கனவே பெரியசாமி மாமாவுக்கு தன்னைப் பிடிக்கவில்லை என்பதை ஓரளவுக்கு ஊகித்து இருந்தாள். இப்போது அவர் வாயாலேயே கேட்டது தான் அவளுக்கு இன்னமும் அதிர்ச்சி.

[/QUOT
Super sis
 
Top