Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Karisal Kaathal - epilogue

Advertisement

எத்தனை கதைகள் படித்தாலும் ஒவ்வொன்றும் படிக்கும் போது கொடுக்கும் உணர்வு அனுபவம் தனி தான். இதுவும் அப்படி ஒரு காதல் கதை தான். ஆண் பிள்ளையே வாரிசு, அப்படி ஆண் பிள்ளை இல்லையெனில் அவர்களை மதிப்பது குறைவு அதுவும் உறவுகளுக்குள் அவர்களுக்கு வரும் சொத்திலிருந்து அனைத்திற்கும் வம்பு வரும்.. இப்படியும் இன்னும் பல ஊர்கள் இருக்கத் தான் செய்யுது.. அப்படி ஒரு ஊரில் பிறந்த நாயகி அண்ணன் தம்பி இல்லாததால் அனுபவிக்கும் இன்னல்கள், வருத்தங்கள், உறவுகள் திருமணம் இதெல்லாம் தான் இந்த கதையோட கரு...



வண்ணமதி - பெற்றோருக்கு மூத்த மகள், சுமதியின் அக்கா, ஆண் பிள்ளை இல்லாததால் சொத்தை தர மறுக்கும் பெரியப்பா சித்தப்பா குடும்பங்கள். நண்பனாக பார்த்தவன் இவளை காதலிக்க வருகிறது பிரச்சினை. படிப்பை விட திருமணம் அவசியம் எனும் சூழ்நிலையில் அவளின் அத்தை மகனுக்கு கல்யாணம் பண்ணி தராங்க(அதுக்கும் அவள் பெரியப்பா பெண் போட்டி). அவளின் பெரியம்மா செய்யும் தவறால் (அவளின் தோழன் மேல் பழிபோட்டு, இவளை அசிங்கப்படுத்தி) மைனர் பெண் திருமணம் என போலீஸ் மணமகனை பிடித்து போக தங்கைகளின் தூபத்தால் மாமனார் அதிகம் பேச காலையில் தாலி கட்டி மாலையில் வீட்டுக்கு வந்துடுறா. குடிகார தந்தைக்கு அப்போது தான் வருது புத்தி. படிக்க சித்தி வீடு செல்கிறாள். இடையில் அவளின் தோழனுக்கு திருமணமாகி இவளின் பெரியம்மா வின் பொறாமைக்கு அவள் தோழன் மனைவி இழந்து சிறை சென்று சிலுவை சுமக்கிறான்.. 10வருடம் கழித்து ஊருக்கு வரும் மதி யாரை திருமணம் செய்வாள்(அவளுக்கு நடந்த திருமணம் already ரத்து செய்ய பட்டிருக்கும்) என ஒவ்வொரு எபிக்கும் நமக்கு தான் அவஸ்தையா இருக்கும். இவள் யார நினைக்கிற எண்டு கண்டே பிடிக்க முடியாது அப்படி ஒரு எழுத்து நடை. ஒரு பக்கம் முத்துவ பார்த்து பரிதாப படுறா, அவன் சொன்னத அப்படியே செய்யுறா, இன்னொரு பக்கம் இவளை கோபமா பார்க்கும் மணி முகிலன், முகிலனை பார்த்தாலே பயப்படும் மதி, இதில் யார் தான் ஹீரோ??? முத்துவின் அவள் மேலான அக்கறை மற்றும் மணியின் அவள் மேலான கோபம் அதுக்கு என்ன காரணம்? என்ன தான் நடந்து இருக்கும் பத்து வருடம் முன்பு... கதையில் படிச்சு தெரிஞ்சுக்கோங்க... கிராமத்து மணம் மாறாமல் வெகு இயல்பான நடையில் அழகான காதல், கோபம், வருத்தம், பகை, வஞ்சம், நட்பு அப்படினு ரொம்ப அழகா கதையை குடுத்துருக்காங்க ரைட்டர்...

முத்து - படிக்கும் வயதில் ஒழுங்கா படிக்காம அவனின் வாழ்வு திசை மாறுது அவன் கொண்ட ஒரு தலை காதலால். நீங்கா துயரில் சொந்தங்களின் சூழ்ச்சியால் வீண் பழி சுமக்கும் அவனுக்கு வாழ்வை வண்ணமயமாக மாற்ற வருகிறாள் தேவதை. அவளை ஏற்று வாழ்வு வன்னமாகியதா இல்லை வர்ணம் இழந்ததா??

மணி முகிலன் - சாந்தமான மருத்துவர், கோபம் , பிடிவாதம் கொண்ட காதலன்.. இவன் வாழ்வும் இவனின் சொல்லப்படாத ஒருதலை காதலால் தான் திசை மாறுது சொந்தங்களின் சூழ்ச்சியால். காதலிக்காக வருடக்கணக்கில் காத்திருக்கும் இவனின் காதலை புரிந்து இவன் வசம் சேர்ந்தாளா காரிகை?

பார்வதி - மனோகரன் : வைராக்கியம் கொண்ட பெண்மணி, பெண்களையும் திடமா தைரியாம வளர்துருக்காங்க. பையனுக்கு பையனா ரெண்டு பெண்களும் இருக்காங்க. இவங்க பெண்ணின் வாழ்வில் நடக்கும் பிரச்சினைக்கு அப்பறம் எப்படி பெண்களை வளர்த்து நல்ல நிலமைக்கு கொண்டு வறாங்க அது தான் spcl. பெண்ணுக்கு கல்வி முக்கியம்னு நினைக்கிற அப்பா...

திலகா - எப்போதுமே திருந்தாத ஒரு ஜென்மம். பெற்ற பெண்ணின் வாழ்வை விட பொறாமையும் வறட்டு பிடிவாதமும் முக்கியம் என இருக்கும் பெண்மணி. அப்படியே இவரின் வாரிசாக இவரின் பெண் ராதா..

பாண்டி brothers - தாய் செய்யும் தவறுக்கு துணை போகாத, தங்கை மேல் பாசம் கொண்ட அண்ணன்கள்.. இவங்க அம்மாக்கு கவுண்டர் கொடுக்கிறது, அவங்களுக்கு புத்தி சொல்றது எல்லாம் சூப்பர்.


வினோ அருமையான தோழி.. நிறைய இடங்கள்ள மதிக்கு ஆதரவாக அவளுக்கு ஆறுதலா இருக்கா.. சுமதியுடன் சேர்ந்து கலகலக்கும் இடங்கள் அருமை..

முதல் பஸ் பயணம், கடைசியில் வரும் பஸ் பயணம், முகில் அவன் காதலியை வம்பிழுக்கும் இடங்கள், மனைவியின் மேல் காட்டும் அக்கறை, சுமதியின் கணவன் மீதான காதல், வினோவின் நகைச்சுவை இதெல்லாம் நான் ரசித்த இடங்கள்...

அழகான ஒரு கிராமத்து கதை குடுத்தது love you Ka.. இனியும் நிறைய நல்ல நல்ல கதைகளை குடுக்க வாழ்த்துக்கள் உமா அக்கா..
 
Top