Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

KUK 02

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் 2

அவள் மூளை உணர்த்திய செய்தியில் ஸ்தம்பித்து நின்றாள் மைதிலி. தன்முன் அசையாது நின்றவளின் தோள் தொட்டு உலுக்கினான் அவன்.

அவன் உலுக்கலில் தெளிந்தவள், "ஹான்? என்ன??? "என்றாள்.

"எனக்கு பயமா இருக்கு,,, வீட்டுக்கு போனும். நான் காணா போய்ட்டேனு தெரிஞ்சா அடிப்பாங்க... சாப்பாடு போட மாட்டாங்க.... எனக்கு ரொம்ப பசிக்கும்... நான் அழுதுட்டே இருப்பேன்.... ப்ளீஸ் என்ன கூட்டிட்டு போ,,, " விடாமல் அழுதவனை என்ன செய்வது என தெரியாமல் விழித்தாள் மைதிலி.

"Ok ok cool,,, நீங்க இங்க எப்படி வந்தீங்க??? யாரோட வந்தீங்க??? எப்படி Miss ஆனீங்க!? இதெல்லாம் சொல்லுங்க.... அப்போதான் எனக்கு கண்டுபுடிக்க சுலபமா இருக்கும்...."

"நாங்க பெரிய்ய்ய்ய கார்ல வந்தோம்... அது கருப்பு கலர்ல இருக்கும்.... என்கூட முத்து அண்ணனும், விச்சு மாமாவும் வந்தாங்க.... அப்பறம் என்னை அருவிகிட்ட உக்கார சொன்னாங்க... ரொம்ப நேரமாகியும் அவங்கள காணல....." கண்களை துடைக்க துடைக்க கண்ணீர் பெருகியது அவனுக்கு.

"Oh god,,, please stop crying like this,,, கண்ண துடைங்க... அப்போதான் நான் Help பண்ணுவேன்....."

தான் போட்டிருந்த சட்டையை தூக்கி வேகமாய் கண்களை துடைத்தான் அவன்.

"That's good, இங்க வந்து போரவங்க விவரம் எல்லாம் Main officeல இருக்கும். அங்க கேட்ட Details சொல்லுவாங்க... நான் என் ரூம்க்கு போய் போன் செஞ்சு கேக்குறேன். நீங்க இங்கயே இருங்க..."நகரப்போனவளின் இடக்கையை தன் இருகைகளால் பற்றியவன், "என்னை விட்டு போகாத.... பயமா இருக்கு எனக்கு...."மீண்டும் கண்களில் அருவி கொட்டியது.

இம்முறை அவன் கண்களை, தன் கைகளால் துடைத்துவிட்டு, பின் அவனை அவளின் அறைக்கு அழைத்து சென்றாள்.

தான் எதற்காக இப்படி செய்கிறோம் என்பதை அவள் யோசிக்ககூட இல்லை. அவனின் வாட்டம், மைதிலியை வாட்டியது.

அறைக்கு சென்றவள், அங்கே தங்குபவர்களுக்கான பிரத்யேகமான தொலைபேசியில் அலுவலகத்தை தொடர்பு கொண்டாள்.

"ஹலோ! 048 Speaking, i need an information, இன்னைக்கு ஈவனிங் இந்த ஏரியாக்கு carல வந்த ஒருத்தர பற்றி Details சொல்லமுடியுமா? "

எதிர்முனையில் இருந்தவரோ, 'இதெல்லாம் வச்சு எப்படி தகவல் சொல்ல முடியும்... எவ்வளவோ கார் இந்த ரோட்டுல போகுது!!இந்தம்மா என்ன லூசா? 'என நினைத்தான்.

அவன் மனதில் நினைத்ததை கண்டுகொண்டவள் போல, "இல்ல சார், இங்க வந்தவரு ஒன்ன மறந்து விட்டுட்டு போய்ட்டாரு. அதை திரும்ப குடுக்கனும்.... சோ, I need some details,,"

"அப்படீங்களா மேடம்... அப்போ சரி. நாங்க எந்தமாறி Details சொல்லனும் உங்களுக்கு...."

"அவங்க இங்க Stay பண்ணலனு நெனைக்குறேன்... Sight seeing. மாறி வந்துருக்காங்க.. அவங்க கார் நம்பர், இல்லனா அது Relatedஆ வேற டீடெய்ல்ஸ் தெரிஞ்சா ஈஸியா இருக்கும்."

"But இங்க Stay பண்ணுறவங்க பத்தின தகவல் மட்டும்தானே நாங்க கலெக்ட் பண்ணுவோம்!!? "

"அப்படியா?!! " சில நொடி தயங்கியவள், பின் வேகமாய் "CCTV?? அதுல Store ஆகிருக்கும்தானே!!! நீங்க எனக்கு அந்த கார் நம்பர் மட்டும் நோட் பண்ணிக்குடுங்க."

"சரிதான் மேடம். ஆனா இந்த ரோட்டுல நெறைய கார் போக வர இருக்கே!! "

"நம்ம இருக்க ஏரியாலஇருந்து வெளிய போன கார் குறைவாதானே இருக்கும். அதுல கொஞ்சம் பெரிய கருப்பு கலர் கார் கண்டுபுடிக்குறது ஈஸிதான். Please make it fast... " பேசிவிட்டு போனை வைத்தவள் அவனை காணாது திகைத்தாள்.

"எங்க போய்ட்டான்?? இருட்டுல எங்க போய் தேடுறது அவன?? "

அது சிறிய வீடுதான் என்பதால் படுக்கையறை விட்டு வெளியே வந்ததுமே அவனை பார்த்துவிட்டாள்.

கதவின் பின்னால் ஒரு மூலையில் உடலை குறுக்கியபடி படுத்திருந்தான். அவனருகே சென்றவள், தன்னைமறந்து அவனை ரசிக்கத்தொடங்கினாள்.

அவள் கைகள் தானாக அவன் சிகையை கோதியது. காற்றிலாடும் அவன் சிகைக்குள் விரல் நுழைத்து விளையடியவள், எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாலோ!! தொலைபேசியின் ஒலியில் எழுந்து சென்றாள்.

"சொல்லுங்க சார்... கார் நம்பர் கிடைச்சுதா?? "

"எஸ் மேம்.. TN 45 KR 4242"

"தேங்க்யூ சார். "

"மேம் நீங்க ஏன் சிரமப்படுறீங்க! ? அந்த பொருள எங்ககிட்ட குடுங்க. நாங்க HANDOVER பண்ணிடுறோம்..."

"ஹோ!! நோ நோ!!! நானே ரிடென் பண்ணிக்குறேன். தேங்க்யூ " அவர் மேலும் குடைவதற்க்குள் CALLஐ கட் செய்துவிட்டு 'உப்ஃ' என காற்றை ஊதித்தள்ளினாள் மைதிலி.

நன்றாக இருட்டிவிட்டதை கண்டவள், இரவு உணவை தயாரிக்க அந்த சிறிய சமையலறைக்குள் சென்றாள்.

அப்போதுதான் அவள் புத்திக்கு உரைத்தது, அவன் எங்கே தங்குவானென்று.. ஒற்றை படுக்கையறை கொண்ட அந்த சிறிய மரவீட்டில் அவளும் அவனும் எப்படி ஒன்றாக தங்க முடியும் என குழம்பி போனாள்.

'தேவையில்லாத வேலை பார்க்குறேனா!? இங்க எதுக்கு வந்தேன்! இப்போ என்ன பண்ணிட்டு இருக்கேன்...?!?

குழப்பத்திலேயே சமையலை முடித்தவள், அவனை எழுப்ப அருகில் சென்றாள். ஆனால் அவனை எழுப்பும் முறை தெரியாது தன்னைதானே நொந்துக்கொண்டாள்.

'அவன் பெயர் என்னனு கூட கேக்கலயே!?? கடவுளே!! நான் செய்யுறதெல்லாம் சரிதானா!?? எழுப்பிட்டு கேப்போம்! '

"ஹலோ!! ஹலோ மிஸ்டர்,, எக்ஸ்கியூஸ் மீ! சார்!! அடேய் எழுந்திரிடா!!! " விதவிதமாய் அழைத்துப்பார்த்தும் சிறு அசைவுகூட இல்லாமல் உறங்கிக்கொண்டிருந்தான் அவன்.

வேறு வழி இல்லாமல் அவனின் தோளை தொட்டு உலுக்கியதும் அடித்து பிடித்துக்கொண்டு எழுந்தான். "என்னை அடிச்சுடாதா!! எனக்கு ரொம்ப வலிக்கும், ப்ளீஸ் அடிக்காத.. ரொம்ப பசிச்சுச்சு.. அப்படியே தூங்கிட்டேன்... இனி தூங்க மாட்டேன். அடிக்காத...."

'எதுக்கு இவ்ளோ பயப்படுறான்? '

"ஹே ரிலாக்ஸ்.. நான் அடிக்கலாம் மாட்டேன்... உன்ன சாப்பிட கூப்புடலாம்னு எழுப்பினேன்.."

"நீ என்னை அடிக்கமாட்டியா!? "பாவமாக விழிவிரித்து கேட்டான்.

"இல்லை, அடிக்கமாட்டேன்..."

"நெஜமா?? "

"நெஜமாதான்... சரி இப்போ சாப்புடலாம். வா! "

டைனிங் டேபிளில் அமர்ந்து உணவை தட்டில் பரிமாறி கொண்டிருந்தாள் மைதிலி. "ஹே ஏன் கீழே உட்காந்துட்ட? இங்க வா!! "என தன்னருகே இருந்த நாற்காலியை சுட்டிக்காட்டினாள்.

"அய்யய்யோ மேலே உக்காந்தா எனக்கு சாப்பாடே போடமாட்டாங்க... விச்சு மாமா வந்து அடிப்பாங்க.. நான் மாட்டேன் பா!! "

"இங்கதான் விச்சு மாமா இல்லையே!? மேல வந்து உக்காரு.. வா!! "

தயங்கியபடியே மேலே வந்து அமர்ந்தான்... அவளை பார்த்தபடியே உணவை உண்டவனை பார்த்து 'என்ன? என புருவம் தூக்கினாள் மைதிலி.

"நீ ரொம்ப நல்லவ.. அடிக்கமாட்ற! திட்டமாட்ற! சூப்பரான சாப்பாடு குடுக்குற!! எனக்கு உன்னை ரொம்ப புடிச்சுருக்கு "

மனதில் இருப்பதை அப்படியே சொல்லிவிட்டான். ஆனால் அவன் சொன்ன விஷயங்கள்?? தன்னை திட்டவோ அடிக்கவோ யாரும் இல்லை. விதவிதமாய் சுவையாய் வேலையாட்களின் பக்குவத்தில் உணவு. "தனிமை" தவிர குறை என்று மைதிலிக்கு எதுவும் தோன்றியது இல்லை.

அவள் யோசனையை கலைக்கும்படி "உனக்கு என்ன புடிக்குமா?? " ஆறடியில் சிறு குழந்தையென தலைசாய்த்து கண்களில் கெஞ்சலுடன் கேட்டான்.

அவள் விழிகள் அவன் முகத்தை விட்டு அகல மறுக்க, உறைந்து போனாள்.

"அப்போ உனக்கும் என்னை புடிக்கலையா? " கண்கள் தேங்கிய கண்ணிரில் பளபளக்க
முகம் சுருங்கி போனது அவனுக்கு..

"ஹேய் நான் புடிக்கலனு சொன்னேனா? உன்னை எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு..." அவன் கன்னம் கிள்ளி சிரித்தாள் மைதிலி.

சட்டென முகம் பிரகாசிக்க, "என்னை புடிக்குமா உனக்கு? " மீண்டும் கேட்டு உறுதிப்படுத்துக்கொண்டு சிரித்தான் அவன்.

"சரி தூங்கலாம், வா! நேராச்சு " படுக்கையறைக்குள் நுழைந்தாள் மைதிலி. அவளை பின்தொடராது, முன்பு படுத்திருந்த இடத்தில் (கதவருகில்) சென்று படுத்தான்.

"இங்க ஏன் படுக்குற? உள்ள வா!! மெத்தைல படு...
சொன்னா கேக்கனும்.. உள்ள வா!"

அவனை இழுத்துக்கொண்டு உள்ளே சென்று, அந்த பெரிய Bedல் இரு ஓரங்களில் இருவரும் படுத்து உறங்கினர்.

பொழுது அழகாய் விடிந்தது. சூரிய ஒளி ஜன்னல் வழியே மேனியில் பட, இயற்கை காற்று தலைகோத, பறவைகளின் பாடலில் கண் திறந்த மைதிலி முதலில் பார்த்தது, வெகு இயல்பாய், மழலை முகத்துடன் கைகளை குறுக்கியபடி உறங்கும் "அவனை"தான்.

'இவன் எல்லாரமாறியும் சாதாரணமா இருந்துருக்க கூடாதா? ஏன் இவனுக்கு இந்த குறையை வச்ச கடவுளே?! '

அவள் அறையின் தொலைபேசி குரலெழுப்பியது.

"Hello mam, good morning, have a pleasant day! Do you need anything now mam? "

"No,,, thanks..."

"MaM.....?"

"Yes"

"உங்களோட தங்கியிருக்கிறவர் பற்றிய டீடெய்ல்ஸ் சொன்னா, Recordல நோட் பண்ணிப்போம்."

'அய்யோ என்ன சொல்லுறது இவங்ககிட்ட? உண்மைய சொன்னா இவன போலீஸ்ல handover பண்ணிடுவாங்க. அப்புறம் எங்க அனுப்பி வைப்பாங்களோ!? என்ன பண்ணலாம்...?'

"Hello mam "

"Yeah! He's my husband. I will tell you the further details later"

Receiverஐ வைத்துவிட்டு யோசித்தாள் மைதிலி. 'நான் ஏன் இவன என்னோட ஹஸ்பெண்டுனு சொன்னேன்?'

"நான் உன் Husband ஆ? "

அவன் குரலில் திருப்பியவள் அவன் கேள்வியில் திருதிருவென முழித்தாள்.

-தொடரும்...


GUYS, THIS IS MY SECOND STORY! எழுத்து பழகுன காலத்துல கிறுக்கி வச்சது! நிறைய இடங்கள்ள வார்த்தை கோர்வைகள் இல்லாம இருக்கு, அது எனக்கே தெரியுது..! மீண்டும் இதை திருத்தி எழுத எனக்கு காலநேரம் கூடி வரவில்லை! அதனால் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி படிங்கப்பா!!
 
Top