Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

KUK 11

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் 11

"சந்தோஷ்ஆ????"


கேசவன் சொன்னதை நம்ப முடியாமல் கேட்டாள் மைதிலி. அவளின் அதிர்ச்சியை உணர்ந்த கேசவன், "மைதிலி நீ அவனை தப்பா நினைக்காத!!! உன் நல்லதுக்காகத்தான்" அவர் சொல்லிமுடிப்பதற்குள்,


"மையூயூயூயூ... நான் வந்துட்டேன்...." முதல் நாள் பள்ளி முடிந்து வரும் குழந்தையென துள்ளி குதித்து கத்தியபடி இவர்கள் வீட்டருகே வந்து கொண்டிருந்தான் ராம்.


மையூவினருகே புதியவரை கண்ட ராம், அமைதியாக மைதிலியிடம் சென்று நின்று கொண்டான்.


ராமை ஆராய்ச்சி பார்வை பார்த்த கேசவன், "இங்க வா" என்பது போல் சைகை செய்தார்.


அவர் அழைப்பதை பார்த்ததும், 'போகவா' என்ற முகத்துடன் அருகில் இருந்த மைதிலியை பார்த்தான். ஆனால் அவள் இதை எதையும் கவனிக்காமல் தன் சிந்தனையில் உழன்று கொண்டிருந்தாள்.



அதை புரிந்து கொண்ட கேசவன்,, "நான் மைதிலியோட அங்கிள்.. உங்களை பாக்க தான் வந்தேன்... இங்க வா" என அழைத்தார்.



மைதிலியை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே அவரிடம் சென்ற ராமை தன்னருகே அமர்த்திக்கொண்டார் கேசவன்.


அவனின் தோளில் கை போட்டுக்கொண்டபடி, "சொல்லு ராம்! உனக்கு மைத்திலியை புடிக்குமா?? " என்றார்.


"ம்ம்.... ரொம்ம்ம்ப புடிக்கும் எனக்கு, மையுக்கும் என்னை ரொம்ப புடிக்கும்.... " முகம் விகாசிக்க சொன்னான்.



"ஓ! உன்னால அவளை நல்லா பார்த்துக்க முடியுமா???" தன்னடுத்த கேள்வியாய் தொடுத்தார்.



"ம்ம்ம்... நான் நல்லா பாத்துப்பேன் அங்கிள்..."



"இவ்ளோ உறுதியா சொல்றியே!! எப்படி பாத்துப்ப அவள?"



"நல்லா பார்த்துப்பேன் அங்கிள்" சொன்னதையே திரும்ப சொன்னான் ராம்.


"நல்லா பார்த்துப்பண்ணா ? எப்படி? மைதிலி எதாது வேணும்னு ஆசைப்பட்டு கேட்டா என்ன பண்ணுவ நீ?" தன் அஸ்திரத்தை எறிய குறி பார்த்தார்.



"உடனே வாங்கிகுடுத்துடுவேன் அங்கிள்...."



"ஓ!! உடனே வாங்கிதருவியா?? எவ்ளோ காசு வச்சுருக்க நீ??"



"காசு? மையு பர்ஸ்ல இருக்கும்... அதுல இருந்து எடுத்துப்பேன்!”



"மைதிலி பர்ஸ்ல காசு தீந்து போச்சின்னா? அப்போ என்ன பண்ணுவ?"



"தீந்து போச்சுன்னா? தீந்து போச்சுன்னா??? காசு வாங்கணும்..."



"யார்ட்ட காசு வாங்குவ?? யாராவது காசு சும்மா தருவாங்கள்ளா? மாட்டாங்க தானே"



"ஹ்ம்ம்.... அப்போ நான் என்ன பண்ணனும்???" வெள்ளந்தியாய் கேட்டான்.



"வேலைக்கு போனாதானே காசு கிடைக்கும்?"



"ம்ம்ம்... ஆமா..."



"அப்போ நீ என்ன பண்ணனும்??"



"வேலைக்கு போனும்... வேலைக்கு போய் காசு சேர்த்து , மையுக்கு புடிச்சதை நான் வாங்கி கொடுப்பேன்...." துடங்கிய கலக்கம் தூர ஓடியது அவனுக்கு.



"ஹ்ம்ம்... குட்... என்ன வேலைக்கு போவ??? உனக்கு யாரு வேல கொடுப்பா??"



"வேலை கேட்டா கொடுப்பாங்க... நான் வேலைக்கு போய் காசு சேர்ப்பேன்...."



"உனக்கு யாரும் வேலை கொடுக்க மாட்டாங்க..."



"ஏன் கொடுக்க மாட்டாங்க?? நான் கெஞ்சி கேட்டா கொடுப்பாங்க..."



"உன்ன மாறி ஒரு பைத்தியகாரனுக்கு யாருமே வேலை கொடுக்க மாட்டாங்க ராம்..." அஸ்திரத்தை அவன் மீது முழு வேகத்தில் ஏவினார்,



அதுவரை இவர்கள் பேச்சில் இடையிடாது, சந்தோஷை நினைத்து கோவத்தில் இருந்த மைதிலி, கேசவனின் கடைசி வரியில் திகைத்து திரும்பினாள்.



"அங்கிள்? என்ன பேசிட்டு இருக்கீங்க ராம் கிட்ட? " அவர்களின் அருகே சென்று ராமை கைப்பற்றி தன்னருகே இழுத்து வந்தாள் மைதிலி.



"இப்படிதான் பேசுவீங்களா அங்கிள் நீங்க?? ராம் குழந்தைமாறி.....!! அவன்கிட்டபோய் என்னென்னவோ சொல்லிக்கிட்டு!!!

நாங்க இங்க நிம்மதியா இருக்கோம்.... தயவுசெஞ்சு எங்களை தொல்லை பண்ணாதீங்க.... நீங்க கிளம்பலாம்...." பேச்சு முடிந்தது என்பதை போல் ராமுடன் வீட்டினுள் புகுந்து கொண்டாள் மைதிலி.



அடுப்பை பற்றவைத்து பாலை காய்ச்சி, ராமிற்கு கொடுத்துவிட்டு அவன் அருகே அமர்ந்து கொண்டாள்.



ராம் பாலை குடிக்காமல் முகத்தை தொங்கபோட்டுக்கொண்டு இருப்பதை பார்த்த மைதிலி,"ராம்? குடி!" என்றாள்.



அவளையே பார்த்தவன், " நான் பைத்தியமா மையு?" என கண்கள் கலங்க கேட்டான்.



"ஹே என்னடா நீ? அவர்கிட்ட நம்ம சொல்லிக்காம கல்யாணம் செஞ்சுகிட்டதால கோவத்துல இப்படி பேசிட்டாரு. என் செல்லத்துக்கு ஒண்ணுமே இல்ல... சரியா???" என அவனை தேற்றினாள் மைதிலி.



அப்போது வாசலருகே அரவம் தெரிய பார்வை பதித்தவள், கேசவனை கண்டு தலை குனிந்தாள்.



'தன் பெற்றோர் இறந்தபிறகு இதுநாள் வரை தனக்கு துணையாய் இருந்து தன் தேவைகளை பார்த்து பார்த்து செய்தவருக்கு இன்று தான் செய்துருக்கும் மரியாதையை நினைத்து மனம் துவள குற்றவுணர்வில் நின்றாள் மைதிலி’



அவளை கனிவாய் பார்த்த கேசசன், "மைதிலி! உனக்கு தெரியாதது இல்லமா... நான் என் குடும்படத்தோட இருந்த நாட்களை விட உன்னோட இருந்த நாட்கள் தான் அதிகம்... சின்ன வயசுல யார்கூடயும் சேராம ஒதுங்கியே இருந்த! நானும் உன்னை மாத்தாம,, உன் போக்குல விட்டுட்டேன்....

நீ என்னை எப்படி நினச்சேன்னு எனக்கு தெரியாது! ஆனா நான் உன்னை என் சொந்த பொண்ணா தான் நினைச்சேன்.... தொழில் விஷயத்துல என்னைக்கும் உன் முடிவு தப்பா இருந்தது இல்லை... ஆனா,வாழ்க்கைனு வரப்போ!!!! தப்பா போய்டகூடாதேனு பயத்துலதான்... ஏதோ!!

விடு மா... நீ நல்லா இருந்தா அதுவே போதும்... நான் கிளம்புறேன்" கண்கள் பனிக்க திரும்பி சென்றவரை ஓடி சென்று கட்டிக்கொண்டு அழுதாள் மைதிலி.



"அங்கிள்!!!! சாரி அங்கிள்!!!! என்னை மன்னிச்சுடுங்க.... நீங்க ராம் கிட்ட அந்தமாறி சொல்லவும், நானும் யோசிக்காம பேசிட்டேன்... சாரி அங்கிள்..."



"விடு மைதிலி.... உன்மேல என்னைக்கும் எனக்கு கோவம் வராது.... உனக்கு எவ்ளோ வயசானாலும் என் கண்ணுக்கு நான் மூணு வயசுல பார்த்த அந்த குட்டி பாப்பா தான் தெரியுது!!!" அவர் கண்களில் இருந்து இருதுளி கீழிறங்கியது.



"அங்கிள்! ராம்மை சரி பண்ணிடலாம்... நீங்க அவரை ஏதும் சொல்லாதீங்க ப்ளீஸ்...." மைதிலியின் முகத்தை மௌனமாய் வெறித்தார் கேசவன். அவர் பார்த்து வளர்ந்த பெண், இட்டதனை வருடத்தில் ஒருநாளும் அவரை பாசமாய் நெருங்கியது இல்லை, நெருங்கி வருபவரையும் நெருங்க விட்டதில்லை. இன்றோ யாரென்றே தெரியாத ராமிற்க்காக தன்னிடம் கெஞ்சுகிறாள் என்றால், அவள் மனதில் ராம் எத்தனை அழுத்தமாய் நிறைந்திருக்க வேண்டும் என புரிந்துக்கொள்ள முயன்றார்.



மனதில் அதை உணர்ந்துக்கொண்ட பின்னோ, பெருமூச்சு விட்டு, "உனக்கு இவ்ளோ புடிச்ச உன்னோட ராமை, என்னோட மருமகனை! நான் என்னம்மா சொல்ல போறேன்?!! ம்ம்ம்" என்றார்.



கேசவன் தங்களை ஏற்று கொண்டதில் அகமகிழ்ந்த மைதிலி, ராமை அழைத்து இருவருமாக கேசவன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.



"வந்தவனுக்கு இன்னும் நீ தண்ணி கூட குடுக்கலடா?!" என கேசவம் கேட்ட பிறகே மைதிலி மெலிதாய் தலையில் அடித்துக்கொண்டு சூடான பால் கொண்டு வர சென்றாள்.



அவள் சென்றதும் கேசவன் அருகே சென்ற ராம், "அங்கிள்!? எனக்கு யாரும் வேலை குடுக்க மாட்டாங்களா? நான் பைத்தியமா!? நீங்க எனக்கு ஏதாது வேலை தரீங்களா? நான் காசு சேக்கனுமே?" என கேட்டான் மிக வருத்தத்துடன்.



'தான் சொன்னது அவன் மனதை பாதித்திருப்பதை உணர்ந்த கேசவன் தன்னை உளமார திட்டிக்கொண்டார்.



"உன்கிட்ட சும்மா விளையாண்டேன் ராம்... நீங்க இங்க இருந்து வந்ததும் உனக்கு வேலை ரெடியா இருக்கும்... "

வேலை உறுதி என சொன்னதும்தான் ராம் முகத்தில் பழைய பொலிவு வந்தது.



"இன்னும் எவ்ளோ நாள் இங்க இருக்கணும் மைதிலி...?!" பாலை பருகியபடியே கேட்டார் கேசவன்.



"10 டேஸ் ஆகும்னு நெனைக்குறேன் அங்கிள்..."



"ம்ம்ம்... சரிம்மா.... எந்த ஹெல்ப் வேணும்னாலும் என்கிட்ட கேக்க தயங்காத!!! நான் கிளம்புறேன் மைதிலி... இப்போ கிளம்புனா தான் சரியா இருக்கும்..." அவர் எழுந்துக்கொள்ள,



"இப்போவே போனும்மா? நாளைக்கு போலமே அங்கிள்?" என்றாள் மைதிலி.



"மைதிலி இண்ட்ஸ்ட்ரிஸ்" அப்பிடின்னு ஒன்னு மும்பைல இருக்கு.. நியாபகம் இருக்கா??" என சிரித்துக்கொண்டே கேட்டார் கேசவன்.



"என்னால உங்களுக்கு தான் ஒர்க் லோட் அதிகம் ஆச்சு அங்கிள்.... முடிஞ்சவர சீக்கிரமா வரபாக்குறேன்...." ‘முடியாது’ என தெரிந்தாலும் ஒப்புக்காக விரைந்து வருவதாய் சொன்னாள் மைதிலி.



"பரவாலைடா!!! ஹெல்ப் பண்ண வசதியா இருக்குமேன்னு தான் சந்தோஷ வர வச்சேன்... ஆனா அவன் துப்பரிஞ்சுட்டு சுத்திட்டு இருக்கான்!!!ஹாஹா!!!"ஹாஸ்யம் போல அவர் சிரிக்க,



"சந்தோஷா? அவனை எதுக்கு நீங்க கூப்பிடிங்க அங்கிள்??!" என புருவம் சுருக்கினாள் மைதிலி.



"MBA முடிச்சுட்டு வெள்ளைக்காரனுக்கு உழைச்சு கொட்டிட்டு இருந்தான்... அதான் நீ இல்லாத சமயம் உதவியா இருக்கும்னு கூப்பிட்டேன்.... !" மீண்டும் அவர் அதையே சொல்ல,



"அதுக்கு ஏன் அங்கிள் அவனை கூப்பிட்டீங்க?" என்று புதிர் புரியாமல் வினவினாள்.



"பெத்த புள்ள இதுக்கு கூட உதவலன்னா, பின்ன எதுக்குமா?? அப்பாக்கு உதவி பண்ணுவோம்னு இல்லாம ஜேம்ஸ் பான்ட் வேலை பார்க்கிறான்... நீயாது நல்ல புத்தி சொல்லி ஆஃபீஸ்க்கு அனுப்பி வை...

சரிம்மா நான் வரேன்....

மாப்பிளை நான் கிளம்புறேன்... மைதிலியை பார்த்துக்கோங்க" என சொல்லிவிட்டு காத்திருந்த, அந்நாளின் கடைசி மலைதேச ஜீப்பில் ஏறி கொண்டு கையசைத்தார்.



சந்தோஷ் தான் யாரென்று அவளிடம் சொல்லியிருபான்னு என நினைத்தவர், பெரிதாய் அலட்டிக்கொள்ளாமல் கிளம்பிவிட்டார்.



அவர் சென்றதை கூட உணராத மைதிலி, "கேசவன் அங்கிள் பையன் தான் சந்தோஷா?" என வாய்விட்டே சொன்னாள்.

"கடவுளே!!! இன்னும் எவ்ளோ ஷாக் தாண்டா கொடுப்பீங்க???" என அதிர்வுகளின் அயர்ச்சியில் அருகிலிருந்த ராமின் தோள்களில் சாய்ந்து நின்றாள்.

பொழுதுகள் பல புலர்ந்து நாட்கள் அமைதியாய் நகர்ந்தது. அன்று காலை "மையு!!!! நான் போனுமா!??" என சினுங்கிக்கொண்டிருந்தான் ராம்.



"எழுந்துருச்சதுல இருந்து இன்னும் எத்தனை தடவை இதே கேள்வியை நீ கேட்ப ராம்?" மிரட்டல் தொனியில் கேட்டாள் மைதிலி.



"நீ போக வேணான்னு சொல்ற வரைக்கும்!!!" அசராமல் அவன் பதில் சொல்ல,



"அட!! என் ராம்க்கு பேச கூட தெரியுதே!!!" சிரித்தாள்.



"ம்ஹும் ம்ஹும்!" காலை உடைத்துக்கொண்டு அவன் சிணுங்க,



"சிணுங்காத ராம்.... அங்க போறதுல என்னடா கஷ்டம் உனக்கு??"



"எனக்கு பிடிக்கல மையு.... தலைவலி வருது!"



"தலைவலிக்குதா? அங்க என்ன பண்றாங்க உன்னை???"



"போனதும் ஏதோ குடிக்க கொடுப்பாங்க... வுவாக்கா இருக்கும்.... கசக்கும்.... அப்புறம் என்ன படுக்க சொல்லுவாங்க.. தலைல ஏதோ க்ரீனா தடவுவாங்க... நான் தூங்கி போயிடுவேன்.... "



"ம்ம்ம்... இவ்ளோதானே??? இதுல உனக்கு என்னடா கஷ்டம்... தூங்கி எழுந்து வர போற!? அவ்ளோதானே???"



"ம்ஹும்.. நான் உன்னோடவே இருக்கேன் மையு.... பிலீஸ்...."



"இல்லடா... கொஞ்ச நாள் இவங்க சொல்றமாறி நீ செஞ்ஜா அப்பறம் எப்பவும் நீ என்னோடவே இருக்கலாம்.... நான் சொன்னா நீ கேட்ப தானே ராம்???"



"ம்ம்.. கேக்குறேன்..." குரல் உள்ளே போனது ராமிற்கு.



"ம்ம்ம்.. அப்போ சமத்தா கிளம்பி அங்க போங்க... ஈவினிங் உனக்காக பால்பாயசத்தோட நானும் வெய்ட் பண்ணிட்டு இருப்பேன்...."



"ம்ம்ம்"



இவ்வளவு சொல்லியும் ராம் அசையாது அமர்ந்திருப்பதை கண்டு, 'ம்ம்ம் ம்ம்ம்’னு சொல்லிட்டு உட்காந்தே இருந்தா எப்படி ராம்?? எழுந்து போ, நேரமாச்சு!! " என்றாள்.



வேறு வழியின்றி வாசலருகே சென்ற ராம்,"நான் போறேன்.. ஆனா நீ எதாவது குடு...." என இழுக்க,



"ஈவினிங் வந்ததும் பால்பாயசம் தரேன் ராம்... இப்போ போய்ட்டு வா..." என்றாள் அவள்.



"அது ஈவினிங்க்கு... இப்போ எதாது குடு .... அப்போதான் போவேன்!!"



"என்னடா அடம் பண்ணிட்டு இருக்க? இப்போ எது செஞ்சாலும் நேரமாகிடும்... ஒழுங்கா கிளம்பி போ.... டைம் ஆச்சு பாரு..."



அப்போதும் அவன் போகாமல் இருப்பதை பார்த்த மைதிலி, "இது வேலைக்கு ஆகாது... நானே உன்னை கொண்டு போய் விட்டுட்டு வரேன்... வா" என வெளி நோக்கி சென்றாள்.



அவள் கைப்பற்றி உள்ளே இழுத்தவன்,,"நானே போறேன் மையு" என்றான்.



"ம்ம்ம்... அப்படி வா வழிக்கு.... !! கிளம்பு கிளம்பு...."



"கெளம்புறேன்... ஆனா இங்க ஒண்ணு குடு..." என தன் இடக்கண்ணத்தை காட்டினான் ராம்.



மெலிதாய் அதிர்ந்த மையு, "இது என்ன புதுசா?" என வினவினாள்.



"நம்ம தான் இப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டோம்ல...? ஹஸ்பென்ட் அண்ட் வைப்ஃ ஆகிட்டா பண்ணலாம்... தப்பு இல்ல.... "



நம்மக்கே கிளாஸ் எடுக்குறானே!? என எண்ணிய மைதிலி, " ஹான் ராம்? உன் கோச்சிங் கிளாஸ் முடியுற வரைக்கும் இதுமாறி ஏதும் பண்ண கூடாதுடா" என சமாளித்தாள்.



"ஆனா நீ அந்த வீட்டுல இருக்கும்போது குடுத்துருக்கியே? அப்போ நான் கிளாஸ் போகலையே!" இரவில் அவன் தூங்கியப்பின், அவனுக்கு தெரியாமல் கொடுப்பதாய் எண்ணி மைதிலி கொடுத்த முத்தங்களை நினைவாக சொன்னான் ராம்.



மனதினுள் "கேடி" என நினைத்தாலும்,,, இதழ்கள் தானாக அவன் கன்னத்தை தொட்டு மீண்டது.



"கொடுத்தாச்சுல்ல? கிளம்பு...."



"இங்க இன்னொன்னு!" அவன் தன் மறுக்கன்னத்தை காட்டவும், அவனை செல்லமாக முறைத்தவள், "நீ ஈவினிங் வா, கொடுக்குறேன் .. " என சிரித்துக்கொண்டே அவனை வழியனுப்பினாள்.



கேசவன் அங்கிள் வந்து சென்று இரண்டு நாட்களாகியும், மைதிலி சந்தோஷிடம் பேச முயற்சி செய்யவில்லை. தன் நலனுக்காகவே அவன் இவ்வளவும் செய்கிறான் என நினைத்தவளுக்கு, அவன் மீது இருந்த கோவம் குறைய தொடங்கியது.



'சந்தோஷை பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சுதான்.. அதுக்காக போட்டோல அவனை பாத்து கூட கண்டுபுடிக்க முடியாத அளவுக்கு இருந்துருக்கேனே!!!' என மீண்டும் மீண்டும் தன்னையே திட்டிக்கொண்டாள் மைதிலி.



அப்போது சந்தோஷிடமிருந்து மைத்திலிக்கு அழைப்பு வந்தது. 'எடுக்கலாமா? வேண்டாமா?' என்ற தயக்கத்தின் பின் அழைப்பை ஏற்றவள்,, ஏதும் பேசாமல் இருந்தாள்.



பொறுத்து பார்த்த சந்தோஷ் பின்பு அவனே, "மைதிலி?? என் மேலே செம்ம கோவத்துல இருப்பானு நினைக்குறேன்... என் சைடுல இருக்க காரணத்த நான் சொல்றேன்.... அப்புறம் நீயே முடிவு பண்ணிக்கோ..." என சொன்னவன் அவள் பதிலுக்கு காத்திராமல் தன் பக்க நியாயத்தை சொல்லத்தொடங்கினான்.



"அப்பா என்னை இந்தியா வர சொன்னதும் என்னனு கூட கேக்காம உடனே கிளம்பி வந்தேன்... அப்போதான் அப்பா நீ பேசுனது எல்லாம் சொன்னாரு... உன்னை தேடி கண்டுபுடிக்க எதுமே பண்ண வேணாம், அவளே சொன்னமாறி வந்துடுவா! நீ எனக்கு பிசினஸ்ல மட்டும் கொஞ்ச நாள் ஹெல்ப் பண்ணுன்னு சொன்னாரு...

எனக்கு மனசு கேட்கல.. அவருக்கு உன்னை பற்றி தெரிஞ்சுருக்கு... பட் நான் ரொம்ப பயந்தேன்... உனக்கு ஏதும் ஆகிடுமோன்னு!



அந்த நேரத்துல தான் நீ ஒரு டீடெக்ட்வ் ஏஜென்சிய அப்ரோச் பண்ண விஷயம், எங்களுக்கு தெரிய வந்துச்சு... அப்பாகிட்ட உண்மைய சொல்லாம, FRIENDS GET TOGETHERனு சொல்லிட்டு கிளம்பிட்டேன்.... அப்புறம் நடந்தது உனக்கே தெரியும்....



உன் கூட இருக்கவன் நல்லவனா கெட்டவனானு தெரியாம எப்படி உன்னை அவனோட விட்டு வைக்க முடியும்?? திடீர்னு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொல்லவும் பயங்கர ஷாக்.. அதான் நீ பாதுகாப்பா இருக்கியான்னு தெரிஞ்சுக்க அப்பாவை அனுப்பினேன்....!!! " என தன் நீண்ட உரையை நிறைவு செய்தான் சந்தோஷ்.



அவன் சொல்வதை பொறுமையாக கேட்ட மைதிலி, தன் மேல் அக்கறை காட்ட இத்தனை பேர் இருந்தும் அதை உணராமல் "தனிமை" சிறையில் தானே அகப்பட்டிருந்ததை எண்ணி தன்னையே நொந்து கொண்டாள் .



"அப்பா சொன்னாரு... ரெண்டு பேரும் ஒரே லவாங்கி தானாம்..!!" அவன் குரலில் கேலி தெரிய,



"என்னது? லவாங்கியா???" என்றாள் புரியாமல்.



"லவ்ஸ் மா... லவ்ஸ்....!!! இது கூட தெரியலையா!!!? சரி ட்ரீட்மெண்ட் எப்போ முடியும்?? எனக்கு உங்களை பார்க்கணும் போல இருக்கு!!!"



"இவ்ளோ அக்கறை இருக்கவன் நேர்ல கிளம்பி வந்துருக்கணும்....!!"



"கரேக்ட் தான்.... ஆனா என் முதலாளி எனக்கு லீவு குடுக்கலையே!! நான் என்ன பண்ணனுவேன்!!" என சிவாஜி பாணியில் சந்தோஷ் சொன்னதை கேட்ட பிறகே, அவன் ராம் வீட்டில் வேலை செய்வது நினைவு வந்தது மைத்திலிக்கு.



"ஹே நீ ஏன் இன்னும் அங்கயே இருக்க??? கிளம்பி வா!!! இனி நீ ஒன்னும் துப்புதொலக்க தேவை இல்லை....."



"ஹாஹா!!! இனி தான் நான் இங்கே இருக்கணும் மைதிலி... உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லதான் கால் பண்ணுனேன்....!" சட்டென அவன் குரலில் தீவிரம் குடி கொண்டது.



"என்னாச்சு சந்தோஷ்?? எனிதிங் சீரியஸ்?"



"ஹ்ம்ம்.. யூஷுவலா மதியம் விஷ்வநாதன் சார் வீட்டுல இருக்காமாட்டாரு. பட் நேத்து அவரு வீட்டுக்கு வந்தாரு,, அவர்கூட இன்னும் ரெண்டு பேரு வந்தாங்க....

நேரா சாரோட ஆஃபீஸ் ரூம்குள்ள போய்ட்டாங்க... அவர்கூட வந்த ரெண்டு பேரு யாருன்னு விசாரிச்சேன் இங்க இருக்க வேலைக்காரங்க கிட்ட... அதுல ஒருத்தர் பேமிலி டாக்டர் , இன்னொருத்தர் அவங்க குடும்ப வக்கீல்னு சொன்னாங்க..

எனக்கு என்னவோ சந்தேகமா இருந்துச்சு..."



"எதாது பிசினஸ் டிஸ்கஷன்னா இருந்துருக்கலாமே சந்தோஷ்!!!?" இடைபுகுந்தாள்.



"அது என்னனு தெரிஞ்சுக்கலாம்னு தான் ரூம்க்கு வெளிபக்கம் இருந்த வின்டோகிட்ட நின்னு கேட்டேன்... "



"ஒட்டுக்கேட்டியா?"



"நான் அப்படி கேட்டதால் தான் இவனுங்க குட்டு வெளில வந்துருக்கு....."



"தெளிவா சொல்லு சந்தோஷ்!!!"



அங்கு அவன் கேட்டதை கொசுவர்த்தி சுருளுக்கு பின் ஓட்டி காட்டினான் சந்தோஷ்.



"பார்ட்னர்.... இன்னும் எவ்ளோ நாள் இதையே சொல்லுவீங்க? அந்த லூசுபயல கொன்னுடுங்கனு சொன்னேன்னா இல்லயா அப்பவே!? ச்சை!!!!" என அலுத்துக்கொண்டான் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் டாக்டர் மூர்த்தி.



"அவன் அப்பனை லாரி உட்டு தூக்குன மாறி இவனையும் செஞ்சுருக்கணும்... அதை விட்டுட்டு உங்க புள்ள சொன்னான்னு அவனை எங்கயோ போய் "டாட்டா" காட்டி கலட்டி விட்டுட்டு வந்துருக்கீங்க!!?" என தன் பங்கிற்கு பொரிந்தான் நீதிக்கு போராடும் உத்தமன் வக்கீல் வரதன்.



அதுவரை அமைதியாய் இருந்த விஷ்வநாதன் பெரும் சிரிப்புடன் பேச தொடங்கினார்.



"இருவது வருஷம்......!!! எப்படி எப்படி?? இர்ர்ர்ர்ருவது வருஷம்!!!!!

இந்த சொத்துக்காக நாயா காத்திருந்தேன். ஹும்ம்! குறுக்கு வழியில அடையனும்னு தான் பிளான் போட்டேனே ஒழிய,, என் மச்சான்ன கொன்னுட்டு அடையனும்னு நினைக்கல...



என்ன பண்றது,, அவன் கெட்ட நேரம்!!!! என் நோக்கத்த மோப்பம் புடிச்சுட்டான்.... அநியாயமா எதிரில் வந்த லாரிகாரன் அவனை தூக்கி வீசிட்டான்... ஹாஹா!!!!



சரி எல்லாம் முடிஞ்சுதுன்னு பார்த்தா,, இது எப்படியோ உங்க ரெண்டு பேருக்கும் தெரிஞ்சு போச்சு!!! என் முன்னாடி சமமா உட்காந்து என்னையே கேள்வி கேக்குற அளவுக்கு தைரியம் வந்துடுச்சு!! உங்களையும் கொல்றதுக்கு ரெண்டு நிமிஷம் ஆகாது... " என நிறுத்தி அவர்களுக்கு குளிர் பரவுவதை அடிகண்ணில் பார்த்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.



"நம்ம பண்ற பாவம் புள்ளைங்களை சேரும்னு சொல்வாங்க... அதான் கொஞ்சம் யோசிக்குறேன்..." என நிறுத்தினார்.



பதறிய மூர்த்தி, "சார், நான் நம்ம நல்லத்துக்கு தானே சொல்றேன்.. ராம் கதை முடிஞ்சா தானே நம்ம இந்த சொத்தை முழுசா அனுபவிக்க முடியும்?" அவரை தொடர்ந்த வரதனும், "ஆமா சார், லீகளி ராம் செத்துட்டான்னு ப்ரூப் பண்ணுனா தான் நம்ம சொத்தை எடுத்துக்க முடியும்.... அவனை கண்டுபுடிச்சு தீத்து கட்டுற வழிய பாக்கலாம்" என தயந்து பேசினர் இருவரும்.



"ம்ம்ம்... ரிஷி சொல்றான்னு நானும் யோசிக்காம பண்ணிட்டேன்... தேடுவோம்!!! எங்க போயிருக்க போறான்!!! வரட்டும் இங்க.... ஒரு death certificate வாங்கிடலாம்!"



அவர் சொன்னதை கேட்டு 'நம்ம தலை தப்பிச்சுது' என வெளியேறினர் டாக்டரும் வக்கீலும்.



அத்தோடு கொசுவர்த்தி சுருளை சுருட்டி உள்ளே வைத்தான் சந்தோஷ்.



"ராமோட அங்கிள் இவ்ளோ மோசமானவரா ??? கண்டிப்பா இவரால தான் என் ராம்க்கு இப்படி ஆகிருக்கணும் சந்தோஷ்..... ஒரு கொலை பண்ணவே தயங்காதவரு, வேர எது வேணாலும் செய்ய தயங்க மாட்டாரு.... நீயும் அங்கே இருக்காத! உடனே கிளம்பி வா "



"ம்ம்ம்... அதுக்காக தான் உன்கிட்ட இதை சொன்னேன்... ட்ரீட்மெண்ட் முடிஞ்சதும் நேரா மும்பை வீட்டுக்கு போய்டு... இந்த பக்கமே வர வேணாம்.... நானும் சீக்கிரமா கிளம்பி வரேன்..."



மைதிலி பதில் சொல்வதற்குள் மொபைல் சிக்னல் தடைபட்டுப்போனது.



"ச்சா!! இந்த சிக்னல் வேற நேரம் காலம் தெரியாம" என சந்தோஷ் புலம்பியபடி திரும்ப, அவன் எதிரே கைகளை கட்டிக்கொண்டு மேசை மீது ஒய்யாரமாக சாய்தபடி நின்று கொண்டிருந்தான் விஷ்வநாதனின் ஒரே மகன் ரிஷிகேஷ்....



அவன் விழிகள் சந்தோஷையே உக்கிரமாய் வெறித்தது.

-தொடரும்...
 
Top