Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

KUK 15

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் 15

"ரெண்டு கொடுத்தாச்சு! போதும்..! விடுடா! வர வர உனக்கு வாலு அதிகமாகிடுச்சு... சொல்பேச்சே கேக்குறது இல்ல.." என செல்லமாக கோபித்தபடி ராமிடம் இருந்து விலகி தன் அலைபேசியை எடுக்க சென்றாள் மையு.



அவள் புடவை முந்தானையை எடுத்து முகத்தில் போட்டு மூடிக்கொண்டபடி, அவள் தோள்களை பற்றிக்கொண்டு, "கேக்க மாட்டேனே!! கேக்க மாட்டேனே!" என அவள் பின்னே ரயில் வண்டி ஓட்டினான் ராம்.



அவள் மொபைலை கையில் எடுப்பதற்குள் அழைப்பு நின்றுவிட, "பாரு, இப்போவும் கட் ஆகிடுச்சு ராம்... உன்னால தான்..." என சொல்லிக்கொண்டே அவன் முகத்தில் இருந்த தன் புடவையை விலக்கினாள் மையு.



"யாரு மையு கால் பண்ணுனது?"



மைதிலி கையில் மொபைலை வைத்து நோண்டிக்கொண்டிருக்க, பின்னின்றபடியே அவள் தோள் வளைவில் தன் முகம் வைத்து, அவளிடையோடு தன் கைகளை கோர்த்து, அவள் செய்வதையே பார்த்து கொண்டிருந்தான் ராம்.



"சந்தோஷ் தான்"



"அவனுக்கு வேற வேலை இல்லை மையு... அவன் கடக்குறான்...."



"பேசிட்டு இருக்கும்போதே கட் ஆகிடுச்சுடா!!"



மறுபடியும் அழைப்பு வரவே, ராமிடம் உதட்டின் மேல் விரல் வைத்து 'ஸ்ஸ்ஸ்' என சொல்லிவிட்டு மொபைலை காதில் வைத்தாள். அவனும் பதிலுக்கு அவளை போலவே 'ஸ்ஸ்ஸ்' என செய்து காட்ட, தன் இடையை சுற்றி இருந்த அவனின் மற்றொரு கையில் வலிக்காமல் கிள்ளினாள்.



"சொல்லு சந்தோஷ்... இங்க சிக்னல்லே இல்லை இவ்ளோ நேரம்...." போனில் பேசிக்கொண்டே ராமிடம் கண்களால் பால்பாயாசத்தை காட்டினாள் மையு.



அதற்கு காற்றில் அடித்துக்கொள்ளும் ஜன்னல்கதவாய், தன் தலையை வேகமாக இடவலமாக ஆட்டி மறுப்பை தெரிவித்தான் ராம்.



"மைதிலி.. எனக்கு சரியா கேட்கலை... விட்டு விட்டு கேக்குது..." என சந்தோஷ் போனில் கூவினான்.



"சரி நான் வெளில வந்து பேசுறேன்... டூ மினிட்ஸ் லைன்ல இரு..." என சொல்லிவிட்டு பால்பாயசத்தோடு ராமையும் அழைத்துக்கொண்டு வெளியில் இருந்த கல் பெஞ்சில் அமர்ந்தாள் மைதிலி.



"இப்போ கேக்குதா.... சொல்லு சந்தோஷ்....!!!"



"ஹான் கேக்குது... அது..... நீ இன்னும் எவ்ளோ நாள் அங்க இருக்கணும்?" எடுத்ததும் சந்தோஷ் அவ்வாறு கேட்க,



"கௌதம் அண்ணா நாளைக்கு வந்ததும் கேட்டு சொல்லுவாரு எனக்கு.... ஏன் சந்தோஷ்?"



"ஓ!! இல்ல, சும்மாதான்..." எதையோ மனதில் வைத்து சொல்லாமல் தவிர்ப்பது போன்றே தோன்றியது அவளுக்கு.



"நீ அங்க இருந்தது போதும் சந்தோஷ். கிளம்பி வந்துடு... உனக்கு ஏதும் பிரோப்ளம் வர போது..."



அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே, தான் சொட்டு விடாமல் குடித்து முடித்த பாத்திரத்தை தூக்கி காட்டினான் ராம்.



அவன் கன்னம் கிள்ளி முத்தம் வைத்தவள், காலி பாத்திரத்தை வீட்டினுள் வைத்துவிட்டு வரும்படி சைகையில் சொல்லி அவனை அனுப்பி வைத்தாள்.



பின், "இங்க ராம்க்கு ட்ரீட்மெண்ட் முடிஞ்சதும் நான் நேரா சென்னை வரேன் சந்தோஷ்... என்னை வரவேணாம்னு சொல்லாத!!! கண்டிப்பா நான் அங்க வரணும்...

கேக்க யாரும் இல்லன்னு நினைச்சுட்டாரு போல அந்த விஸ்வநாதன் ....." என்றாள் கோவமாய்.



"உன்னை வர வேணாம்னு சொல்லமாட்டேன் மைதிலி... முடிஞ்ச அளவு சீக்கிரமா கிளம்பி வான்னு சொல்லத்தான் கால் பண்ணுனேன்...."



வீட்டில் இருந்து அவளருகே வந்த ராம், அவள் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டான். அவள் கை அதன் போக்கில் அவன் தலை கோத, போனில் சந்தோஷிடம், " கொஞ்ச நேரம் முன்னாடி பேசுனபோ தான் என்னை வராதனு சொன்னா? இப்போ சீக்கிரமா வான்னு சொல்ற?!! என்னாச்சு உனக்கு? எதையாவது மறைக்குறியா?" என்றாள் குழப்பத்துடன்.



"எல்லாம் காரணமா தான் சொல்றேன் மைதிலி... நீ இங்க வந்த பிறகு நம்ம பேசி ஒரு முடிவுக்கு வரலாம்..."



"என்ன பேசணும்... என்ன முடிவு பண்ணனும்?"



"ஹய்யோ.. இப்படி கேள்வி மேல கேள்வி கேக்காத!! சொல்றத கேளேன்!!" அதற்குமேல் போனால் அனைத்தையும் சொல்லிடுவேனோ என்ற பயத்தில் எரிச்சல் காட்டினான் சந்தோஷ்.



"சரி சரி கத்தாத... இங்க வைத்தியர் கிட்ட பேசிட்டு, சீக்கிரமா நான் வரேன்..."



"ம்ம்ம்... குட்... ராம் என்ன செய்யுறாரு?"



தன் மடியில் குழந்தையென துயில் கொள்ளும் ராமை பார்த்து காதலாய் சிரித்தபடி, "தூங்கிட்டாரு... ஓகே நீ அப்புறமா கால் பண்ணு... பை..." என சந்தோஷை துண்டித்துவிட்டு ராமின் முகம் நோக்கினாள் மையு.



கைகளால் அவள் இடையை வளைத்து பிடித்துக்கொண்டு நிம்மதியாக உறங்கி கொண்டிருந்தான் ராம்.



உறங்கும் அவனை தன் மடியோடு சேர்த்தணைத்தபடி, அவனையே வருடி கொண்டிருந்தாள் மைதிலி.



மாலை தென்றல் அவன்மீது மோதி, துயில் கலைந்துவிடுமோ! என எண்ணியவளாய், தன் புடவையை வேலி போல அவனை சுற்றி விரித்து கொண்டாள்.



அது ஒரு தாயின் கதகதப்பை கொடுத்ததோ என்னவோ,,, உறக்கத்தினூடே, அவளை மேலும் ஒட்டியபடி, படுத்துக்கொண்டான்.



மெல்ல குனிந்து, அவன் நெற்றியில் புரண்ட முடியை,, தன் செவ்விதழ் குவித்து நிதானமாய் ஊதி, புறம் தள்ளினாள்.



தன் பெருவிரலால் அவன் புருவத்தை மெதுவாக நீவிவிட்டபடி, அவன் இடப்பக்க நெற்றியில் சிறு முத்தம் ஒன்றை பதித்தாள்.

தூக்கத்திலும் அவள் ஸ்பரிசத்தை உணர்ந்து கொண்டதை போல மெல்ல அசைந்தான் ராம். அவள் வெற்றிடையில் தன் முகத்தை தேய்த்தவன் அவளுள் மேலும் புதைந்தபடி உறக்கத்தை தொடர்ந்தான்.



மைதிலிக்குதான் அவன் செய்கையில் தேகம் சிலிர்த்து அடங்கியது.



'இப்படியே இன்னும் நூறு ஜென்மம் இருக்கணும் ராம்.... உன் முகம் பார்த்துக்கிட்டே, உன்னை குழந்தை போல என் மடியில தாங்கிகிட்டே!! என் வாழ்க்கை இப்படியே, உன்னோடவே முடிஞ்சுடனும்...! அதை தவிர வேற எந்த கனவும் எனக்கு இல்லை.... என்னோட இந்த கனவு,, ஒருபோதும் கலைஞ்சுடவே கூடாது... உனக்கு நினைவு திரும்புனதும் என்னை விட்டு போய்ட மாட்ட தானே? என்னை வேண்டாம்னு சொல்லிட மாட்ட தானே?!'



அவன் முகம் பார்த்து தன் மனதில் அவனோடு பேசிக்கொண்டிருந்தாள் மைதிலி. அவளையும் மீறி கண்கள் கலங்கி நின்றது.



மனதிற்கு பிடித்தவர்கள் நம்மை விட்டு பிரியும்போது வரும் வலியை விட, அவர்கள் நம்மை விட்டு பிரிந்து விட கூடாது என நினைக்கும்போது வரும் வலி!!! கொடுமையானது. மைதிலி அந்த வலியை முழுதாய் அனுபவித்தாள்.



அவனை கண்களால் சிறைபிடித்தபடியே அவன்மீது சாய்ந்து கண்ணயர்ந்தாள் மைதிலி.



நேரம் நத்தயாய் நகர, சில தூரல்கள் தன் மீது தெறித்த பின்னரே, தங்களை இருள் போர்வை சூழ்ந்திருப்பதை அறிந்தாள் மைதிலி.



"மழை வரும் போலயே!! இவன் என்ன இன்னும் தூங்குறான்?"



"ராம்?? ராம்?? எழுந்துக்கோ ராம்!! மழை வரும் போல இருக்கு.. வீட்டுக்குள்ள போயிடலாம்..."



செவிடன் காதில் சங்கூதிய கதை போலானது.



"டேய் ராம்... மழை வருதுடா... எழுந்துரி..." அவனை தன்னிடமிருந்து பிய்த்தெடுக்க முயன்றாள் மைதிலி.



அவள் முயற்சிக்கு 'ம்ம்ம்' என பதிலுடன் இன்னும் இறுக்கமாய் அவளை பற்றிக்கொண்டான் ராம்.



"ராம்!!! அடம் பண்ணாத!!! வீட்டுக்குள்ள போய்ட்டு தூங்கு எழுந்துரி...."



'யாருக்கோ சொல்லு' என்பதை போல உறங்கிக்கொண்டிருந்தான் ராம்.



இனி வெளியே இருந்தால் நனைந்து விடுவோம் என உணர்ந்த மைதிலி , 'இவன்கிட்ட கொஞ்சல் எல்லாம் செட் ஆகாது... நம்ம பழைய மெத்தட் தான் கரெக்ட்...' என எண்ணிக்கொண்டு அவன் முதுகில் 'சுளீர்' என ஒரு அச்சாரத்தை வைத்தாள்.



அவள் அன்பில் முழி பிதுங்கி பதறி எழுந்தவன், பின் உதடு பிதுங்க அழ ஆயத்தமானான்.



அவனை தன் ஒரு முறைப்பில் அடக்கியவள், இழுத்துக்கொண்டு வீட்டினுள் புகுந்தாள். அவர்கள் செல்வதர்காகவே காத்திருந்ததை போல, மழையும் ராமை போல கதற தொடங்கியது.



நடு வீட்டில் நின்று கொண்டு கண்ணை கசக்கினான் ராம்.

"ஏன் மையு அடிச்ச?"



"மழை வருது,, எழுந்துரின்னு சொன்னா கேட்டியா? வேற என்ன பண்றது உன்னை....?"

இரவு உணவுக்கான வேளைகளில் ஆயத்தமானபடி ராமிற்கு பதிலளித்தாள் மைதிலி.



"ம்ஹும்.... வலிக்குது மையு.."

தனக்கு எட்டாத முதுகில் கைகளால் தேய்த்துவிட முயன்று கொண்டே சிணுங்கினான் ராம்.



"இன்னைக்கு உப்புமா தான் உனக்கு... நேரமாச்சு.. வேற செய்ய முடியாது இப்போ..."



"ம்ஹும்.. வலிக்குது மையு..."



"சரி சாப்பிடலாம் வா!!" என சொல்லிக்கொண்டே தட்டில் உணவுடன் கீழே அமர்ந்தாள் மைதிலி.



"மையு....!!! நான் வலிக்குதுனு சொல்றேன்... நீ கேக்கவே மாட்டேங்குற!? போ... உன்னோட நான் பேச மாட்டேன்..."



"ரொம்ப சூடா இருக்கு... !!! அங்க இருக்க விசிறி எடுத்து அப்டியே என் பக்கம் கொஞ்சம் வீசி விடேன் ராம்...!!"



தன்னை அவள் கண்டுகொள்ளவில்லை எனவும் அவள் மீது கோவம் வர, புசு புசுவென வேகமாக மூச்சுவிட்டான் ராம்.



அவன் செய்கையை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்து சிரித்தபடி உப்புமாவில் கவனமாய் இருப்பதாய் காட்டிக்கொண்டாள் மைதிலி.



அவளையே கோவமாக பார்த்துகொண்டிருந்த ராம், அவள் தன் கோவத்தையும் மதியாததை கண்டு, மேலும் கோவம் வர, அவளருகே புயல் வேகத்தில் பாய்தான்.



சென்ற வேகத்தில் சடாரென அவள் கைகளில் இருந்த தட்டை பிடுங்கி, அதில் இருந்த உப்புமாவை மொத்தமாக அள்ளி தன் வாய்க்குள் அடைத்துக்கொண்டு காலி தட்டை அவள் முன் வீசினான் ராம்.



அவன் தன் அருகில் வரும் வேகத்தை கண்டு சற்று மிரண்டு தான் போனாள் மைதிலி. பின் அவன் கோவத்தை வெளிப்படுத்திய விதத்தில் சிரிப்பு எழவே, அதை முயன்று முகத்தில் காட்டாமல், "இந்த உப்புமாகாகவா நீ இவ்ளோ வேகமா வந்த?" என்றாள்.



'தான் கோவத்தை காட்டிவிட்டோம்' என்ற மமதையில் ஒட்டுமொத்த உப்புமாவும் ஒரேசேர அவன் வாய் சேர்ந்திருக்க, மைதிலி இப்போதும் தன் கோவத்தை மதியாததை எண்ணி ஏமாற்றத்தில் வாய் பிளந்தான் ராம். அவன் வாயில் இருந்த உப்புமா கூட அவனை பார்த்து எள்ளி நகைத்தது.



மீண்டும் மூண்ட கோவத்தில் வேகமாக எழுந்து வெளியே செல்ல நகர்ந்தான்.



"ஹே எங்கடா போற??" தானும் அவனூடே எழுந்து வாசலின் குறுக்கே நின்றுகொண்டாள் மைதிலி.



"விய... வெய்ய பொய்யன்..." வாயடைத்த உப்புமா அவனை பேச விடாமல் செய்தது.



"என்னது? வெய்ய பொய்ய வா?"



வாயில் இருந்த உப்புமாவை முழுதாய் முழுங்கிவிட்டு, " நான் வெளில போறேன்.. போ" என்றான்.



"மழை பெய்யுது.. இதுல நீ எப்படி போவ???"



"நான் போவேன்!!!"



"சரி நாளைக்கு போ!!" மைதிலி ‘போ’ என்றதும்,



"ஹான்? நான் போகமாட்டேன் போ!!!" வீட்டுக்குள் சென்று அமர்ந்துக்கொண்டான்.



மனதில் சிரித்தபடி, " எல்லாத்தையும் சாப்பிட்டுடியே? நான் என்ன சாப்பிடுவேன்?" என வினவினாள்.



"நீ வேற பிளேட்ல இன்னும் வச்சுருக்க!? நான் பாத்தேன்.. ஹிஹி"



"கேடி டா நீ!!!"



இரவு அவள் அருகே படுத்தவன் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு கிடந்தான்.



"என்ன ராம்? தூக்கம் வரலையா??"



"ம்ஹும்... "



"இங்க வா!!"

அவள் கைவளைவில் தலை வைத்து அவன் படுக்க, அவனை தட்டி கொடுத்தபடியே நேரம் கடக்க... இருவரும் உறங்கினர்.



நள்ளிரவை கடந்த நேரத்தில்...!

-தொடரும்...
 
Top