Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MP 21

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம் – 21

ஓசை எழுப்பிய அலைபேசியை சட்டைபையில் இருந்து எடுத்த ஜீவா, அதில் ‘அம்மா’ என மின்னிய எழுத்துகளை பார்த்தவுடன், பச்சை வண்ணம் இருந்த பக்கம் ஸ்க்கீரினை தேய்த்துவிட்டு சந்தோஷமாக காதில் வைத்தான்.

ஃபோனிலோ அவன் தாய் அந்த சந்தோஷத்துக்கு உலை வைத்தார். “ஜீவா நிலேஷ் குட்டிக்கு காலையிலந்து ஃபீவர் ஜாஸ்தியா இருக்கு. எப்போவுமே கொடுக்குற மாத்திரையும் குடுத்துட்டேன்டா. அப்போவும் குறையல…

டாக்டரை வீட்டுக்கு வர சொல்லுபா. நீயும் முடிஞ்சா சீக்கிரமா வீட்டுக்கு வா.”

“நான் வீட்டுக்கு கிளம்பிட்டேன்மா. டாக்டரை நானே கூட்டிட்டு வந்துடறேன். சரியா வைச்சுடறேன்மா…” லட்சுமி சொன்னதை கேட்டு வேறு எந்த சிந்தனைகளும் இல்லாமல், பையனின் நினைவுகளே அவனை ஆக்கிரமித்தன.

மருத்துவரோ நிலேஷை பார்த்துவிட்டு, மாத்திரை மருந்துகளை எழுதிக் கொடுத்து ஒரு ஊசியையும் போட்டுவிட்டு சென்றார். ஓடி விளையாடும் மகன் சோர்ந்து படுத்திருப்பதை காண இயலாமல், அவன் அருகிலேயெ இருந்து பார்த்துக் கொண்டான் தந்தையவன்.

ஆனால், ஜுரமோ நான் போவேனா என்பது போல, நிலேஷிடமே குடியிருந்தது. மூன்று நாட்கள் கழித்து, எடுத்து பார்த்த பிலட் டெஸ்டில் குழந்தைக்கு வந்து இருப்பது டைப்ஃபாயிட் என்பதை கண்டறிந்தனர்.

ஹாஸ்பெட்டலில் இரண்டொரு நாட்கள் இருப்பது நல்லது என மருத்துவர் பரிந்துரை செய்ய, ஜீவா அன்பரசிக்கு மொபைலில் அழைத்து செய்தியை தெரிவித்தான். கேட்ட அன்புக்கு மனது பதற வினோத்துடன் மருத்துவமனை விரைந்தாள்.

ஓய்ந்து போய் படுத்திருந்த மகனை கண்டதும், உள்ளம் உடைந்து போனது அந்த அன்பு தாய்க்கு! தன் உதிரத்தில் உதிக்காத உயிராக இருப்பினும், தன் கண்ணின் மணியாக பாவித்த உயிரன்றோ??

நிக்கி குட்டியும் தன் அண்ணன் படுத்திருப்பதால், அழுத வண்ணமே இருந்தாள். எப்போதும் அன்னையின் மடியிலேயே தவழ்ந்தாள். அவளையும் கவனித்துக் கொண்டு அடுத்த நாள் மாலை வரை எப்படியோ சமாளித்தாள் அன்பு.

காலையிலிருந்து ஜுரம் கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்ததால், மாலை வீடு திரும்பலாம் என டாக்டர் கூறினார். தன் கழுத்தை கட்டிக் கொண்டு, “அம்மாமா போவாதமா… அம்மா வேணும், அம்மா போவாதமா…” என அழும் மகனையே கையாலாகத் தன்மையுடன் பார்த்தாள் அன்பு.

“உங்க பிரச்சனையை காரணம் காட்டி, பையனை வறுத்தாதிங்க ஜீவா. அவனை அவனோட அம்மா கூட அனுப்பி வைங்க.” குடும்பநல மருத்துவர் கூறிய வார்த்தைகளை கேட்டு, மேலும் அன்பின் மனது துடித்துப் போயிற்று. தன்னுடைய சுயநலத்துக்காக குழந்தை இப்படி பாடு படுகிறானே என்ற வெதும்பல் இதயத்தை கூருப் போட்டது!!

அவர்களுக்குள் இருக்கும் கணக்குபடி பார்த்தால், குழந்தைகளை அவள் அடுத்த நாள் தான் கூட்டிச் செல்ல வேண்டும். உடம்பு சரியில்லாத பையனை விட்டுச் செல்ல துளியும் மனமில்லை அன்புக்கு. கண்களில் மன்றாடலுடன் அவள் ஜீவாவை நோக்க, அவளின் கண்களின் பாஷையை புரிந்துக் கொண்டான்.

“அம்மா, இங்க இருக்குற பசங்களோட திங்க்ஸ் எல்லாம் பாக் பண்ணுங்க. ரெண்டு பேரையும் நானே அவளோட வீட்டுல டிராப் பண்றேன்.” இதை கேட்டதும், வினோத் ஜீவாவை புன்னகையுடன் நோக்க, அன்புவோ அதிர்ச்சியில் உறைந்தாள்.

அவள் அதிர்ச்சிக்கு காரணம் இரண்டு! அவன் ‘அம்மா’ என விளித்து, லட்சுமியிடம் சாதாரணமாக பேசியது ஒர் காரணமென்றால், எந்தவித தயக்கமும் இல்லாமல் குழந்தைகள் இருவரையும் அவனே வீட்டில் விடுகிறேன் என்கிறானே??

என்ன ஆகிற்று இவனுக்கு, என மூளையை கசக்கிய போது தான் அன்புக்கு உரைத்தது. இரண்டு நாட்களாக ஜீவா அவளிடம் ஒழுங்காக தயங்காமல் பேசியது. இது எப்படி சாத்தியமாகிற்று?! ‘லட்சுமியம்மாவிடமும் அப்படியே தான் போல?? அம்மா மன்னிச்சு விட்டுடாங்களா?

என்ன தான் டிவோர்ஸே வாங்கினாலும் லட்சுமியம்மாவிடம் அன்பு பேசாமல் இருந்ததே கிடையாது. அதனால், அவர் தன் மகனிடம் பேசாமல் இருக்கும் விஷயம் இவள் அறிந்ததே!

அப்படியிருக்கும் போது, எப்படி அம்மா பேசினார் என அன்பரசி திகைத்து நிற்க, வினோத் அவள் அருகில் வந்தான். “போதும்… ஷாக்க கொர, ஷாக்க கொர… கிளம்பு வீட்டுக்கு, குட்டிய தூக்கிட்டு.”

அவனை நோக்கி உதடை சுளித்துவிட்டு, வீடு திரும்பும் வேலையில் ஆழ்ந்தாள். அவர்கள் இருந்த ரூம்மின் வாயிலில் நின்றுக் கொண்டு ஜீவா, “வினோத் ஒரு நிமிஷம்.” என்று கூப்பிட்டான்.

வினோத்தும் பின்னேயே போகவும், மேலும் விழிகளை விரியவிட்டாள் நம் ஹீரோயின். ‘என்னயா நடக்குது இங்க??’ என்ற ரேஞ்சில் அவள் இருக்க, வெளியே ஜீவா அன்பரசியிடம் எதை பற்றியும் சொல்ல வேண்டாம் என வினோத்திடம் கேட்டுக் கொண்டான்.

தானே சில நாட்களில் பேசுவதாக அவன் வாக்களிக்க, வினோத் சம்மதித்தான். “பட், சீக்கிரமா சொல்லிடுங்க ஜீவா. ஏற்கனவே அவளுக்கு டவுட் வந்துருக்கும் இப்போ!” வினோத்துக்கு பதிலாய், சந்தோஷமாக தலையசைத்தான் அந்த கணவன்.

பின் சில மணி நேரங்களில், குடும்பம் மொத்தமும் அன்புவின் வீட்டில் வந்து சேர்ந்தனர். நிலேஷ் அசதியில் தூங்கவும், நிக்கித்தா விளையாடிய நேரமாக பார்த்து தன் மகனுடன் லட்சுமியும் ராகவனும் கிளம்பினர்.

அவர்கள் கிளம்பியதும், நிலேஷையின் சிறு அசைவிற்கும் ஓடும் தாயாக மாறிப் போனாள் அன்பு. மலரும் வினோத்தும் நிக்கித்தாவை பார்த்துக் கொள்ள பொழுது அப்படியே சென்றது அன்புக்கு.

அடுத்த நாள் மலருக்கும் வினோத்துக்கும் நிச்சயத்தார்த்தம். ஆதலால், காலையிலிருந்து காலில் சுடு தண்ணீர், இல்லை இல்லை கொதிக்கும் தண்ணீர் ஊற்றியது போல பம்பரமாக சுழன்றாள் அன்பு.

காலை பத்தரை மணிக்கு தொடங்கிய நிச்சயத்தார்த்தம் அழகாக பன்னிரெண்டு மணிக்கு முடிந்தது! விழா தொடங்கும் முன்பே லட்சுமியும் ராகவனும் தங்களின் அட்டென்டன்ஸை போட்டனர். ஆனால், அன்பரசி எதிர்பார்க்காதது ஜீவாவின் வருகை.

முன் தினமே ஜோடியாக மலரும் வினோத்தும் அவனை அழைத்திருந்தனர். அவன் வந்ததால் அவளுக்கு நன்மையே! நிக்கித்தாவை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை அவன் ஏற்றுக் கொள்ள, நிலேஷை அவள் தாங்கினாள்…

அனைத்தும் முடிந்து அன்றைய மாலை வீட்டில் இளைப்பாறிய தருணத்தில் தான் மலரும் வினோத்தும் ஷாப்பிங் போகலாம் என கூப்பிட்டனர். இருவரையும் மாறி மாறி முறைத்து விட்டு, “நிலுக் குட்டிய யாரு பார்த்துபா?? நீங்க ரெண்டு பேரும் வேணும்னா போயிட்டு வாங்க… நான் வரல…” என்று மறுத்தாள்.

“உனக்கு மட்டும் தான் மூளை வேலை செய்யுமா?? எங்களுக்கு தெரியாதா குட்டிய பார்த்துக்கனும்னு?? இப்போ வீட்டுக்கு லட்சுமியம்மா வராங்க… அவங்க பார்த்துப்பாங்க அவனை!”

“வரேன்பா… கரக்டா வந்துட்டேன் பாரு.” வினோத் கூறி முடிக்கவும் அவர் வாயிலில் வந்து நிற்கவும் சரியாக சின்காக, வாயை பிளந்து நின்றாள் அன்பரசி. அதேன் மேல், அவள் சொல்வதற்கும் மறுப்பதற்கும் எதுவும் இல்லை…

ஷாப்பிங் எங்கே போகலாம் என பேசியபடியே மூன்று பேரும் காரில் ஏறி அமர, வினோத்தும் மலரும் ரகசிய மொழிகளை பறிமாறிக் கொண்டனர்.

ஏறியது முதல் அன்பரசியை வெளியே பார்க்க விடாமல், மலரும் வினோத்தும் பேசியே பிசியாக வைத்தனர். திடீரென்று கார் நிற்க, எங்கே இருக்கிறோம் என அன்பரசி சுற்றி பார்க்க முகம் கோவத்தில் சிவந்தது.

அதற்குள் மற்ற இருவரும் இறங்கி விட வேறு வழி இல்லாமல் இவளும் இறங்கி, கேள்விக் கனைகளை வீசி ஏறிந்தாள். “என்ன மலர் நீயும் இவன் கூட சேர்ந்துட்டு பொய் சொல்ல ஆரம்பிச்சுட்டல?? நீ எதுக்குடா இப்போ என்னை இங்க கூட்டிட்டு வந்துருக்க?? நான் கொஞ்சம் சிரிக்கறது பிடிக்கலைனா சொல்லிடு…

நான் வீட்டுலையே உட்கார்ந்து அழறேன்! சும்மா சும்மா இங்க கூட்டிட்டு வந்து என்னை கொல்லாத!!” இப்படி அன்பு சித்திரவதை அனுபவிக்க காரணம் அவர்கள் வந்திருந்தது அவளின் வாழ்க்கையில் ஒரு முக்கிய இடம் பெற்றிருந்த கடற்கரைக்கு!

அவள் கோவமாக அடுத்து பேசுவதற்குள், அவளை மேலும் எரிச்சல் ஊற்ற ஜீவா அங்கே வந்து சேர்ந்தான். ஜீவாவை பார்த்ததும் கோபம் கடல் அலைகள் போல பொங்கி எழ, அன்பரசிக்கு கோவத்தில் உடம்பு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.

என்ன செய்கிறோம் என அறியாமலே யாரிடமும் பேசாமல் விறுவிறுவென நடக்களானாள். ஒரு பத்து நிமிடம் நடந்ததும் கால் வலித்த பின்பு தான் புரிந்தது, அவள் ரோட்டின் பக்கம் நடப்பதற்கு பதிலாக, கடலை நோக்கி நடந்து வந்தது!! ‘சே, கோவத்துல எங்க போறோம்னு கூட தெரியாம வந்துட்டோமே??’

திரும்பி அவள் பார்க்க ஜீவா அவளின் நேர் பின்னே நின்றுக் கொண்டு, அவளை ஏக்கமாக பார்த்தபடி நின்றான். “இன்னும் எவ்வளவு நாள் என்கிட்டயிருந்து இப்படி ஓடிட்டே இருக்க போற அன்பு??”

ஜீவாவின் அழுத்தமான கேள்வியில் அவனின் ராணியம்மா விக்கித்து நின்று இருக்க, அவன் மேலும் பேசினான். “ஓடிட்டே இருக்கறதால எதுவும் மாறப் போறதில்லை. நான் கொஞ்ச மனசு விட்டு பேசனும்னு நினைச்சுட்டு வந்திருக்கேன். சண்ட போடவோ குத்தி காட்டி பேசவோ வரலை!”

அங்கே இருந்த படகின் மேல் சாய்ந்தபடி ஜீவா கூற, அன்பு வேறு வழி தெரியாமல் கடலை நோக்கினாள். “இந்த பீச்சுக்கும் நமக்கும் எதோ சம்மந்தம் இருக்கு இல்லையா? உன்கிட்ட லவ் சொன்னது, கல்யாணத்துக்கு முன்னாடி நிறைய வாட்டி மீட்டிங் போட்டது, நிக்கி குட்டி வயித்துல இருக்கும் போது உன்னை கூட்டிட்டு வந்தது… அப்புறம் கொஞ்ச நாள் முன்னாடி உன்னை வெறுப்பேத்தி கஷ்டப்படுத்தினேன்.

தென், அன்னிக்கு நீ காசு திரும்ப குடுக்கறனு வந்தப்போ திட்டினது…” இப்போது அன்பரசி கண்களால் முறைத்து தள்ள, “சாரி அன்னிக்கு நான் அப்படி பேசியிருக்க கூடாது!” என அடங்கினான் அந்த கள்வன்.

“இப்போ எதுக்கு இதெல்லாம் சொல்றேன்னா, நம்மையும் மீறி ஒரு சக்தி தான் நம்மள திரும்ப இங்க கூட்டிட்டு வந்திருக்கு. இனிமேலும் வர வைக்கும். எனக்கு நம்பிக்கை இருக்கு…”

ஜீவா பேசியதை கேட்டு அன்பரசிக்கு ஒன்றுமே புரியவில்லை! ‘இவனுக்கு என்ன தலையில எதாவது அடிபட்டுடுச்சா?? எதுக்கு இப்படி உளர்றான்??’ அவளின் புரியாத பாவனையை பார்த்து, தன் மனதில் அரங்கேறிய உணர்ச்சிகளின் போராட்டத்தை விளக்கினான் ஜீவா.

அவன் பேசி முடித்துவிட்டு ஆவலே வடிவாக அவளின் முகத்தை நோக்க, அன்பரசி குழப்பமான பார்வையை வீசியபடி இருந்தாள். அவன் தன் முகத்தையே பார்ப்பது புரிந்து, பேச வேண்டிய நிற்பந்தத்தில் இருந்தாள்.

“இப்போ நீங்க சொன்னதை கேட்டு என்ன சொல்றதுனு எனக்கு தெரியல…. சீரியஸா எனக்கு புரியல! உங்க மனசு மாறினது நல்லது தான்… பட், இந்த மூணு வருஷமா நான் பட்ட கஷ்டம் எல்லாம் ஒண்ணுமே இல்லைனு ஆகிடாதுல??

குழந்தைங்க இல்லாம, நீங்க இல்லாம, யாருமே இல்லாம, நான் மட்டும் அனுபவிச்ச வேதனை எனக்கு மட்டும் தான் தெரியும்!” நடுவில் அழுகை பேச்சை தடை செய்ய, தேம்பலின் ஊடே தன் மனதை வெளியிட்டாள் அந்த உத்தமி.

“என்ன தான் வினோத் என்னை தாங்கினாலும், நான் எல்லாரையும் எவ்வளவு மிஸ் பண்ணேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். ‘அனாதையா பொறந்தேன்… அனாதையாவே போய் சேர்ந்துருவேன் போல’ன்னு எத்தனை ராத்திரி அழுதுருக்கேன் தெரியுமா?”

கண்களை துடைத்துக் கொண்டு மீண்டும் தொடர்ந்தாள் அன்பு. “நான் தப்பு பண்ணேன் தான் ஒத்துக்கறேன். ஆனா, டிவோர்ஸ் குடுக்குற அளவுக்கு என்ன பண்ணேன்னு எனக்கு சுத்தமா புரியல… நிறைய நாள் இதை யோசிச்சே எனக்கு தூக்கமே வந்தது கிடையாது.”

“ஒரு வேளை உங்க மேல எனக்கு அன்பே இல்லைனு நீங்க முடிவு பண்ணிட்டீங்களா?? எனக்கு தெரியல… அப்போ இருந்த ஈகோவும் பிடிவாதமும் அதை கேக்க விடலை. இப்போ நீங்க சொல்லித் தான் புரிஞ்சுது… ஒரு பக்கம் குழந்தைங்களுக்காக தான் நம்மள அவரு சகிச்சிட்டு இருந்தார் போலன்னு ஒரு நினைப்பு மனசுக்குள்ள.

என்னால இதையெல்லாம் தாண்டி உங்க கிட்ட டிவோர்ஸ் வேணாம்னு சொல்ல முடியலை… மனசு முழுக்க பாரமா இருந்தாலும், தேவையில்லாத இடத்துல நம்ம எதுக்கு இருக்கனும்னு தான் தோனுச்சு! டிவோர்ஸ் வந்தப்புறம் இனிமே லைப்ஃல எனக்கு இருக்கறது நிலேஷும் நிக்கித்தாவும் தான்னு முடிவு பண்ணேன்.

நடுவுல எனக்காக கல்யாணத்த தள்ளி போட்டுட்டு இருந்த வினோ வேற… இதேல்லாம் சேர்ந்து தான் ரொம்ப ரீசேர்வ்டாகிட்டேன். மலர்கிட்ட மட்டும் தான் கொஞ்சம் ஃப்ரீயா பேச முடியுது! சோ, இப்போ….. இனிமேலும் நம்ம சேர்ந்து வாழறத பத்தி என்னால யோசிக்க கூட முடியாது! சாரி.”

எது அவளை இவ்வளவு தூரம் மனம்விட்டு பேச வைத்தது என அவளே அறியாள். அன்பு தன் மனதை புடம் போட்ட விளக்காக விளக்கி கூறவும், அவளின் பேச்சை கேட்டு மேலே எப்படி பேசுவது என யோசித்தான் ஜீவா.

“ஹ்ம்ம்ம்…. நீ பட்ட கஷ்டம் எனக்கு புரியுதுனு ஒரே வார்த்தைல சொல்லி முடிக்க விரும்பல ராணி. பட், நானும் இந்த மூணு வருஷமா நிம்மதியா இருந்ததில்ல… அப்பா ஒரு வருஷமா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோன்னு ஒரே டார்ச்சர்.

ஆனா என்னால உன்னை மறக்கவே முடியல! கொஞ்சம் கூட முடியல. அப்போ தான் ஒண்ணு புரிஞ்சுது. என்னால உன்னை எப்போவுமே மறக்கவே முடியாதுனு.”

“என்னாலையும் உங்கள முழுசா மறக்க முடியல ஜீவா. உண்மை அது தான். ஐ அக்ஸப்ட்! அதே நேரத்துல, சூடு வாங்கின பூனை மாதிரி தான் நானும் இப்போ இருக்கேன். ரெண்டு பேர் மேலையும் தான் தப்பு இருந்துச்சு. பிரிஞ்சிட்டோம்!

திரும்ப எதுக்கு முதலயிருந்து ஆரம்பிக்கனும்?? வேணாமே இப்படியே இருந்திடலாம். எனக்கு இப்போ நோ பிராப்ளம்ஸ். நீங்க அப்பா சொன்ன மாதிரி இன்னொரு…”

“எனக்காக, நம்ம குழந்தைங்களுக்காக முக்கியமா உனக்காக திரும்ப ஆரம்பிக்கனும் ராணி. உனக்கு புரியுதா, நம்ம பிரிஞ்சு இருந்தா அது எவ்வளவு தூரம் அவங்கள பாதிக்கும்னு??”

ஒரு பெரு மூச்சை வேண்டா வெறுப்பாக எறிந்து விட்டு, அமைதியாக இருந்தாள் அன்பு. சில நிமிடங்களிலேயே தன் நினைவுகளிலிருந்து மீண்டு வந்து, முடிவாக பேசினாள். “சும்மா பேசிட்டே இருந்தா ஒண்ணும் ஆகறதில்ல. எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா, வீட்டுக்கு போக ரொம்ப டிராப்பிக்கா இருக்கும். சோ, நான் வீட்டுக்கு கிளம்புறேன்.”

கூறிவிட்டு அவள் பாட்டுற்கு நடையை கட்டினாள். வழக்கம் போல செல்லும் அவளையே சிந்தனையுடன் பார்த்தான் அவளின் கணவன். அவள் காரின் அருகில் வந்து நின்றதும், காரில் ஏறினர் புதிதாக சேர்ந்த ஜோடி.

“சாரிக்கா… இவரு தான் உங்ககிட்ட சொல்லக் கூடாதுனு சொல்லிட்டாரு. அதனால தான்…”

மலரிடம் தலையசைத்து விட்டு தன் நினைவுகளில் மூழ்கினாள் அன்பு. வினோத்தும் எந்த வம்பும் செய்யாமல் வர, அன்றைய பொழுது கழிந்தது.

அடுத்த நாள் பள்ளிக்கு விடுமுறை கூறிவிட்டு, குழந்தைகளை கவனித்தாள் அன்பரசி. வினோத் அவளிடம் பேச முயன்று, வெற்றிகறமாக ஒவ்வொரு முறையும் தோல்வியுற்றான். அன்றைய நாளும், மாலை வரை எல்லாம் ஒழுங்காக சென்றது தான்.

அதன் பிறகு தான் பிரச்சனையே ஆரம்பித்தது!! மாலை ஐந்து மணி அளவில், காலிங் பெல் அடிக்க கதவை திறக்க ஓடினாள் அன்பு. கதவை திறந்தால் வாசலை அடைத்துக் கொண்டு, ஜீவா இரண்டு மூன்று பெட்டிகளுடன் நின்று இருந்தான்.

கேள்விக் குறியுடன் அன்பு அவன் கண்களை பார்க்க, அவன் கண்களோ சிரித்து, பின் சிமிட்டியது இமைகளை! அதிர்ச்சியுடன் அன்பரசி பார்க்கும் போதே வீட்டின் உள்ளே வந்தவன், “நானும் இனிமே இங்க தான் இருக்கப் போறேன் அன்பு. குழந்தைங்கள பார்க்காம என்னால இருக்க முடியல!” என்றானே பார்க்கலாம்?!

‘அடப்பாவி!!’ மனதுக்குள் கருவியபடி, அன்பரசி குழந்தையென மாறி முழிக்கலானாள்!!!
 
Top