Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Nee Enai Neengaathae Anbae 5

Advertisement

Admin

Admin
Member

பகுதி – 5

தன் குடும்பத்தினரிடம் நலம் விசாரித்து முடித்ததும், ப்ரித்வி புன்னகையுடன் புனிதாவை நோக்கி செல்ல... அவள் பயத்துடன் ஜெனியின் கையைப் பற்றிக்கொண்டாள்.

ப்ரித்வி வருவதைப் பார்த்து ஜெனி அங்கிருந்து செல்லப்பார்க்க... புனிதா அவளை விட்டால் அல்லவா... ஜெனி தர்மசங்கடத்துடன் அங்கேயே நின்றாள்.

புனிதா அவள் கையில் வைத்திருந்த மலர்கொத்தை வெட்கத்துடன் ப்ரித்வியிடம் நீட்ட... அவன் புன்னகையுடன் “தேங்க்ஸ்...” என்றபடி பெற்றுக்கொண்டான்.

ஜெனி இப்போதாவது தன் கையை அக்கா விடுவாளா என்று பார்த்தவள், அவள் இன்னும் விடவில்லை என்றதும், வலுக்கட்டாயமாகத் தன் கையை உருவிக்கொள்ள...

அவளைப்பார்த்து புன்னகைத்த ப்ரித்வி “நல்லா இருக்கியா ஜெனி?” என்றதும் “ம்ம்... நல்லா இருக்கேன் அத்தான்.” என்றபடி அங்கிருந்து சென்று தன் அம்மாவின் அருகில் நின்று கொண்டாள்.

ப்ரித்வியும், புனிதாவும் பேசிக்கொள்ளட்டும் என்று மற்றவர்கள் விலகி சென்றனர். செல்வராணி ஜெனியோடு பேசியபடி நடந்தார்.

“காலேஜ் எக்ஸாம் முடிஞ்சுதா ஜெனி...”

“இல்லை ஆன்டி... இனிமே தான்.”

“உங்க அக்காவும் கொஞ்ச நாள்ல US போய்டுவா... அப்புறம் உன் ராஜ்ஜியம் தானா உங்க வீட்ல...” என்று செல்வராணி சிரிக்க... ஜெனி பதிலுக்குப் புன்னகைத்தாள்.

ப்ரித்வியும், புனிதாவும் பேசியபடி கார் பார்கிங் வரை வந்தனர். கார் பார்கிங் வந்ததும் ஸ்டீபன் மற்றவர்களிடம் விடைபெற... அவரைத்தொடர்ந்து அவர் குடும்பத்தாரும் விடைபெற்றனர்.

ப்ரித்விக்குப் புனிதாவை விட மனமே இல்லை... அவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். புனிதா எல்லோரிடமும் சொல்லிக்கொள்ள... அவளைப் பின்பற்றி ஜெனியும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு காரில் சென்று ஏற... அப்போதுதான் அங்கு விஜய் வந்தான்.

அவனும் ஜெப்ரியும் பெட்டிகளை அவர்கள் காரில் வைக்கச் சென்றிருந்தனர். விஜய் ஜெனியை பார்க்க... காரில் ஏறிய ஜெனியும் அப்போதுதான் விஜய்யை கவனித்தாள். விஜய் அவளையே பார்ப்பதால் விடைபெறுவது போல் அவள் தலையசைக்க... விஜய் பதிலுக்குப் புன்னகைத்தான்.

இரண்டு மகன்களும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து வந்ததால்... செல்வராணி மகன்களுக்குப் பிடித்த உணவுகளைச் சமைத்து பெரிய விருந்தே ஏற்ப்பாடு செய்தார்.

ஜெப்ரி எல்லாவற்றையும் ஒரு கட்டு கட்ட... ப்ரித்வி உணவை அளந்து கொண்டிருந்தான். அவனைப்பார்த்த ஜெப்ரி “என்ன ஆச்சு?” என்று ஜாடையில் கேட்க....

“உனக்கு என்ன ப்ரின்சி இங்கயே இருக்கா... எனக்கு அப்படியா..” ப்ரித்வி சொன்ன தொனியில் அனைவரும் சிரித்து விட...

“இன்னும் ரெண்டு நாள்ல தான் பதிவு திருமணம் இருக்கே அப்ப பார்க்கத் தான போற..” ஜெப்ரி சமாதனம் செய்ய....

“ஆமாம் ப்ரித்வி... இன்னும் ரெண்டு நாள்தான்.” சொன்ன விஜய்யின் குரலில் அவ்வளவு துள்ளல் இருந்தது.... அவன் எதற்குச் சொல்கிறான் என்று செல்வராணிக்கா புரியாது... அவர் மகனை அர்த்தத்துடன் பார்த்துவிட்டு சென்றார்.

புதன் காலை அழகாக விடிய... எல்லோரும் பதிவு திருமணத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர். இந்த முறை பதிவு அலுவலகத்திற்கு முதலில் ஸ்டீபன் குடும்பம் வந்து மற்றவர்களுக்காகக் காத்திருந்தனர்.

புனிதா சன்ன கரையிட்ட பட்டுபுடவையில் மிதமான நகைகள் அணிந்து வந்திருந்தாள். ஜெனி சுடிதாரில் இருந்தாள். சிறிது நேரம் சென்று ஆரோகியராஜின் குடும்பமும், ஜோசப்பின் குடும்பமும் இரு கார்களில் வந்து இறங்கினர்.

காரில் இருந்து இறங்கிய ப்ரின்சியைப் பார்த்து புனிதா, ஜெனிதா இருவருமே அசந்து விட்டனர். ஏனென்றால் பதிவு திருமணத்திற்கே அத்தனை ஆடம்பரமாக வந்திருந்தாள் ப்ரின்சி. அவள் வீட்டில் அவளுக்கென்று கொடுத்த அத்தனை நகைகளையும் போட்டுக்கொண்டு வந்துவிட்டாள் போலிருந்தது... ஆனால் அதுவும் அவளுக்கு அழகாகத்தான் இருந்தது.

ஆரோக்கியராஜ், ஜோசப் இரு குடும்பங்களுமே ஸ்டீபன் குடும்பத்தை விட வசதியானவர்கள். புனிதா ஜெனி இருவருக்குமே அது தெரியும் என்பதால் அவர்கள் அதைப் பற்றிப் பெரிதாக நினைக்கவும் இல்லை... நாம் அவர்களைப் போல் இல்லை என்ற வருத்தமும் இல்லை.

ஒரு நொடி பிரம்மிப்பாகப் பார்த்தவர்கள் அடுத்த நொடி சாதாரணமாக இருந்தனர். ப்ரின்சியின் அம்மாவும், தங்கையும்தான் ரொம்பவும் அலட்டிக்கொண்டனர். அதோடு ஸ்டீபன் குடும்பத்தையும் இளக்காரமாகப் பார்த்தனர்.

விஜய்தான் எல்லோரையும் விடப் பரபரப்பாக இருந்தான். அவன் வந்ததும் பதிவு அலுவலகத்தின் உள்ளே சென்று விட... ப்ரித்வியும். ஜெப்ரியும் அவரவர் ஜோடியுடன் பேசிக்கொண்டு இருந்தனர்.
விஜய் வந்து இரு ஜோடிகளையும் அழைத்துக்கொண்டு எதிரில் இருந்த ஸ்டுடியோவிற்குச் செல்ல... ஜெனியும் லின்சியும் உடன் சென்றனர்.

திருமணப் பதிவிற்க்கு புகைப்படம் தேவை என்பதால் அங்கே வந்திருந்தனர். ப்ரித்வி ஜெப்ரி இருவரும் வெளிநாட்டில் இருந்ததால்.... முன்பே எடுத்து வைத்திருக்கவில்லை....

முதலில் ஜெப்ரியும். ப்ரின்சியும் சேர்ந்து நின்று எடுக்க... அப்போது லின்சி அவர்களை இப்படி நில்லுங்கள் அப்படி நில்லுங்கள் என்று பாடாய்ப் படுத்த..... ஆனால் அதே ப்ரித்வியும் புனிதாவும் புகைப்படம் எடுக்கும் போது... ஜெனி விலகி நின்று அவர்களைப் பார்த்ததோடு சரி.... அவளாக வாயைத் திறக்கவில்லை.

புகைப்படம் எடுப்பதற்கு முன் புனிதா சரியாக இருக்கிறதா என்பது போல் தன் தங்கையைப் பார்க்க.... ஜெனியும் பார்வையாலையே பதில் சொன்னாள். விஜய் தள்ளி நின்று அதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தான்.

புகைப்படம் எடுத்ததும் எல்லோரும் பதிவு அலுவலகத்திற்கு வர... விஜய் மட்டும் சிறிது நேரம் சென்று புகைப்படங்களோடு வந்தான். அவன் வந்ததும் எல்லோரும் பதிவாளர் அறை நோக்கி சென்றனர்.

எடுத்து வந்த புகைப்படங்களை விண்ணப்பத்தில் ஓட்டி கையப்பம் இட்டு சான்றிதழோடு கொடுக்க... உடனே அதைப் பதிவும் செய்து கொடுத்துவிட்டனர்.

பதிவு திருமணம் முடிந்ததும் முன்பே பேசி வைத்திருந்தபடி... எல்லோரும் விஜய்யின் டுளிப்ஸ் உணவகத்திற்கு மதிய உணவுக்குச் சென்றனர்.

ஜோசப்பின் காரில் ஜெப்ரி ஓட்டுனர் இருக்கையில் அமர...... அவன் அருகில் ப்ரின்சி உட்கார்ந்தாள். பின் இருக்கையில் அவள் பெற்றோர் இருந்தனர். ஆனால் அதே இங்கு ப்ரித்வி ஓட்டுனர் இருக்கையில் உட்கார... அவன் அருகில் ஸ்டீபன் உட்கார்ந்தார். பின் இருக்கையில் புனிதா ஜெனி மற்றும் அவர்கள் அம்மா லீனா உட்கார்ந்து இருந்தனர்.

விஜய்யும் ஜெப்ரியும் ப்ரித்வியைக் கிண்டலாகப் பார்க்க.... அவன் நொந்து போய் இருந்தான். சகோதரர்களின் ரகசிய பார்வையைக் கவனித்த ஜெனியும் புன்னகைத்தாள். அதைக் கண்டுகொண்ட விஜய் அவளைப்பார்த்துச் சிரித்துக்கொண்டே அவனின் காரை எடுத்தான்.

போக்குவரத்து நெரிசலில் விஜய்யின் ஹோட்டலுக்கு வந்து சேரவே மதியம் இரண்டு மணி ஆகி விட்டது. அந்த நேரத்தில் ஹோட்டலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பார்ட்டி ஹாலில் இவர்கள் குடும்பம் மட்டும் உணவு அருந்த விஜய் ஏற்பாடு செய்திருந்தான்.

ஒரே மேஜையில் பேசிக்கொள்ள வசதியாகப் பெரியவர்கள் எல்லோரும் ஒரு பக்கமும், இளையவர்கள் எல்லாம் ஒரு பக்கமும் அமர்ந்தனர்.
‘நல்லாயிருப்பீங்க டா சாமி...’ என்று மனதிற்குள் நினைத்த ப்ரித்வி புனிதாவின் அருகில் அமர்ந்து கொண்டான். புனிதாவின் மறுபுறம் ஜெனி அமர்ந்தாள். அதே போல் எதிரில் லின்சி ப்ரின்சி ஜெப்ரி அமர்ந்திருந்தனர்.

உணவு வகைகளைச் சரி பார்த்து விட்டு வந்த விஜய் எல்லோரையும் சாப்பிட அழைக்க... பப்பே லஞ்ச் என்பதால் அவரவரே விரும்பிய உணவை எடுத்துக்கொள்ள எழுந்து சென்றனர்.

முதலில் எல்லோரும் சூப் எடுத்துக் கொண்டு வந்து அமர... விஜய் ஸ்டார்ட்ரை டேபிளுக்கே வரவழைத்தான். சூப்போடு ஸ்டார்ட்டர் சாப்பிட மிகவும் நன்றாக இருந்தது. மற்ற ஹோட்டலை விட இங்கே வித்தியாசமான சுவை இருந்ததால்... ஜெனி ரசித்துச் சாப்பிட்டாள்.

லின்சியின் அருகில் அமர்ந்திருந்த விஜய் ஜெனியை பார்க்க.... அவள் வித்தியாசமான சுவையுள்ள உணவுகளை விரும்பி சாப்பிடுவதைப் பார்த்தவன், வேலை ஆளை அழைத்து... அங்கே இருந்ததைத் தவிர இன்னும் மற்ற சில உணவு வகைகளையும் கொண்டு வர செய்து....மற்றவர்களின் கவனத்தைக் கவராமல் ஜெனி அந்த உணவு வகைகளைச் சாப்பிடுவது போல் பார்த்துக்கொண்டான்.

ப்ரித்வியும் புனிதாவும் பேசிக்கொண்டே சாப்பிட்டதால்... ஜெனி அமைதியாக உணவு அருந்திக் கொண்டு இருந்தாள். அவளாகப் பேசும் வழி இல்லை என்றதும், விஜய் அவனாகவே பேச்சை ஆரம்பித்தான்.

“ஜெனி...” முதலில் விஜய் அழைத்த போது ஜெனிக்கு கேட்கவேயில்லை... அவள் குனிந்து உணவை சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள்.

“ஜெனி...” இன்னும் சற்று அழுத்தமாகவும், சத்தமாகவும் விஜய் அழைக்க... ஜெனி நிமிர்ந்து பார்த்தாள்.

ஜெனியை பார்த்து புன்னகைத்த விஜய் “எதாவது பேசேன் ரொம்பப் போர் அடிக்குது” என்றான் தன் சகோதரர்களைக் காட்டி... அவர்கள் இருவரும்தான் பிஸியாக இருந்தார்களே....

விஜய்யை பார்த்து சிரித்த ஜெனி... என்ன பேசுவது என்பது போல் யோசிக்க... “நான் இங்க இருக்கும் போது உங்களுக்கு எப்படிப் போர் அடிக்கலாம்.” என்று லின்சி ஆரம்பிக்க....

“நீ இவ்வளவு நேரம் பிஸியா சாப்பிட்ட இல்ல... அதையே இப்பவும் பண்ணு. நான் ஜெனிகிட்ட பேசணும்” என்றவன் “எப்படி இருக்கு food? நல்லா இருக்கா....” என்றான்.

“ம்ம்... ரொம்ப நல்லா இருக்கு. வித்தியாசமா இருக்கு டேஸ்ட்” என்று ஜெனி சொன்னதும், விஜய் “தேங்க்ஸ்...” என்று சொல்ல...

“நீ எங்க இது மாதிரி ரெஸ்டாரன்ட் போய் இருக்கப் போற... அதனால உனக்கு வித்தியாசமா தான் இருக்கும்...நான் எல்லாம் தினமுமே விதவிதமா தான் சாப்பிடுவேன்.” விஜய் தன்னை ஓரங்கட்டிய கோபத்தில் லின்சி பேச....

லின்சியின் பேச்சுக்கு ஜெனி சட்டென்று பதில் கொடுக்கவும் இல்லை... அவள் சொன்னதற்கு முகம் மாறவும் இல்லை... அவள் அதே புன்னகை முகத்துடன்தான் இருந்தாள்.

விஜய்க்குதான் கோபம் வந்து விட்டது. “என்னைப் பொறுத்தவரை நம்ம நாட்லையே தினமும் வித விதமா சாப்பிடுவது பிச்சைக்காரன்தான். நீ எப்ப அந்த லிஸ்ட்ல சேர்ந்த....” விஜய் கிண்டலாகக் கேட்க... லின்சியின் முகம் கருத்தது.

“முதல்ல மத்தவங்க கிட்ட எப்படிப் பேசனும்ன்னு தெரிஞ்சா பேசு... இல்லைன்னா சும்மா இரு. நீ எப்படி எங்க குடும்பத்துக்கோ அதே மாதிரி தான் ஜெனியும். இனி மரியாதையா நடந்துக்கோ...” சொன்ன விஜய்யின் குரலில் இருந்தே அவனின் கோபத்தை உணர்ந்த லின்சி எழுந்து சென்று தன் அம்மாவின் அருகில் உட்கார்ந்து கொண்டாள்.

தன்னால் அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை வந்து விட்டதோ என்பது போல் ஜெனி பார்க்க... விஜய் “நாங்க ரெண்டு பேரும் எப்பவுமே இப்படித்தான். நீ சாப்பிடு...” என்றதும், ஜெனியின் முகத்தில் புன்னகை மீண்டும் வந்து ஒட்டிக்கொள்ள... அவள் சாப்பிட ஆரம்பித்தாள்.

உணவு முடிந்ததும் எல்லோரும் ஆரோகியராஜின் வீட்டிற்குச் செல்வதற்காகக் கிளம்ப... “அம்மா கொஞ்ச நேரம் நாங்க பீச் பக்கம் போயிட்டு வரோம் மா...” ஜெப்ரி செல்வராணியிடம் கோரிக்கை வைக்க...

“சரி ஆனா அரை மணியில திரும்பிடணும். அதுக்கு ஓகேன்னா போங்க இல்லைன்னா வேண்டாம்.” செல்வராணி கண்டிப்புடன் சொல்ல... அவரது மகன்கள் சரி என்றனர்.

அவர்களைத் தனியே பீச்க்கு அனுப்ப ஸ்டீபன் வெகுவாகத் தயங்க...
“அண்ணா அது எல்லாம் என் பசங்க நல்லா பார்த்துப்பாங்க... இந்த வயசுல என்ஜாய் பண்ணாம வேற எப்ப பண்ணப்போறாங்க.... போயிட்டு வரட்டும்.” செல்வராணி எடுத்துச் சொன்னதும் ஸ்டீபனும் அரைமனதாகச் சரி என்றார்.
பெரியவர்கள் எல்லோரும் வீட்டிற்குக் கிளம்ப... இளையவர்கள் கடற்கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். லின்சி இவர்களோடு வரவில்லை... அவளும் வீட்டிற்குச் சென்று விட்டாள்.

ப்ரித்வி, புனிதாவிர்க்கு இடைஞ்சலாக இல்லாமல் ஜெனி அவர்களின் பின்னே மெதுவாக நடக்க... விஜய் ஜெனியோடு இணைந்து நடந்தான்.
“உனக்குக் கோபமே வராதா.... ஜெனி” விஜய்யின் கேள்விக்கு.... ஜெனி புன்னகையைத்தான் பதிலாகத் தந்தாள்.

“கோபபட வேண்டிய இடத்தில கோபப் படனும் ஜெனி... இல்லைன்னா மத்தவங்க நம்ம மேல அட்வான்டேஜ் எடுத்துப்பாங்க....”

விஜய் சொல்வது ஜெனிக்குப் புரியத்தான் செய்தது. ஆனால் சின்ன வயதில் இருந்தே தன் தந்தையின் சொல்படியே வளர்ந்ததால்... அவளுக்குத் தன் உணர்வுகளை வெளிக்காட்டி பழக்கமில்லை... அவளுடைய நெருங்கிய நண்பர்கள் இடத்திலும், இப்போது சில நாட்களாக ராஜேஷிடமும்தான் தன் உணர்வுகளை வெளிபடுத்துகிறாள்.

இதை விஜய்யிடம் சொல்லவா முடியும் அதனால் “உங்களுக்கு ஏன் ரெஸ்டாரன்ட் வைக்கணும்ன்னு தோனுச்சு....” என்று பேச்சை மாற்றினாள். விஜய்க்குப் பிடித்தமான கேள்வி. அதனால் அவன் விருப்பத்துடன் பதில் சொன்னான்.

“நாங்க மூன்னு பேருமே எங்க அம்மாவுக்குப் பசங்க இல்லையா... அதனால அம்மாவுக்கு உடம்பு முடியலைன்னா... நான் அவங்களுக்குச் சமையல்ல ஹெல்ப் பண்ணுவேன்.”

“எனக்கு எப்பவுமே சமைக்கப் பிடிக்கும்... அம்மாவோட சேர்ந்து புதுப் புது டிஷ்ஷெஸ் நாங்களே கண்டுபிடிப்போம்.”

“சிக்கன் ரெசிபிஸ்ல எல்லாம் நிறைய வெர்ஷன்ஸ் ட்ரை பண்ணி இருக்கோம். அதை மத்தவங்க சாப்பிட்டு பாராட்டும் போது ரொம்ப ஹப்பியா இருக்கும்.”

“அப்படி வந்த ஆர்வம்தான். B.E., படிச்சு முடிச்சதும்... என்னோட மனசு அந்த லைன்ல போக விரும்பலைன்னு ... எனக்கு நல்லாவே புரிஞ்சுது... வீட்ல அம்மா அப்பாகிட்ட என்னோட ரெஸ்டாரன்ட் வைக்கிற ஆசை பத்தி சொன்னேன்.”

“அவங்க மத்த பேரன்ட்ஸ் மாதிரி அதை இதைச் சொல்லி என்னைத் தடுக்கலை... ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி அதைப் பத்தி முழுசா தெரிஞ்சிட்டு ஆரம்பின்னு மட்டும்தான் சொன்னாங்க... எனக்கும் அதுல நம்பிக்கை இருந்தது.”

“நான் ஒரு வருஷம் கேட்ரிங் படிச்சேன்... பிறகு ஒரு ரெண்டு மூன்னு ரெஸ்டாரன்ட்ல வேலை பார்த்தேன். சமைப்பது ஒரு வேலை இல்லை.. அது ஒரு கலைன்னு புரிஞ்சது. விரும்பி முழு ஈடுபாடோட செய்யறதுனால அந்தக் கலை எனக்கு நல்லாவே வந்தது.”

“பிறகு ஒரு வருஷம் ஆஸ்திரேலியா போய் ஹோட்டல் மானேஜ்மென்ட் படிச்சிட்டு வந்து இந்த ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ணேன்.”

“Very interesting. நீங்க ஹோட்டலை நிர்வாகம் தான பண்ணப்போறீங்க... ஏன் கேட்ரிங் படிச்சீங்க?....” ஜெனியின் ஆர்வமான கேள்விக்கு

“நிர்வாகம் மட்டும் பண்ண தெரிஞ்சா போதுமா... நாம செய்யுற தொழில்ல ஆணி வேர் வரை தெரிஞ்சிருந்தாதான்... எதாவது ப்ரச்சனை வந்தா சமாளிக்க முடியும்.”

“நான் முதலாளி அப்படின்னு ஒரு சேர்ல போய் ஜம்முன்னு உட்கார்ந்துகிட்டா... என்னோட ஹோட்டலும் மத்த ஹோட்டல் மாதிரிதான் இருந்திருக்கும். ஆனா எனக்கே சமையல் தெரியும்கிற போது... இங்க வேலை பார்க்கிற சமையல் ஆட்களோட சேர்ந்து புதுப் புது டிஷஸ் கண்டு பிடிப்போம்.”

“ஓ.... அதனால தான் உங்க ஓட்டல்ல கூட்டம் நிரம்பி வழியுதா... நான் மதியம் பார்த்தேனே... நிறையப் பேர் சாப்பிட இடம் இல்லாம வெளிய காத்திருந்தாங்க....”

ஜெனி சொன்னதைக் கேட்ட விஜய் புன்னகைக்க... இருவரும் பேசியபடி கடற்கரைக்கு வந்திருந்தனர். மற்ற இரு ஜோடிகளும் சற்று தள்ளி மணலில் உட்கார்ந்திருந்தனர்.

ஜெனி கடல் அலையில் ஆர்வமாக நிற்ப்பதை பார்த்த விஜய் அவனும் அவளுடன் சேர்ந்து நின்றான். அவனுக்கு அவளோடு இருந்த நேரம் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருந்தது. விஜய் ஜெனியின் முகத்தை ஆர்வமாகப் பார்க்க... ஜெனி வேறு எதோ யோசனையில் தூரத்தை வெறித்துக்கொண்டு இருந்தாள்.
 
super sis sema
 
Top