Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

NENA 8.1

Advertisement

Admin

Admin
Member

பகுதி – 8

ஜெனியிடம் சொன்னது போல் புனிதாவும் ப்ரித்வியும் ஜெப்ரி திருமணம் முடிந்த முன்று நாட்கள் சென்று இவர்களுடன் வந்து தங்கினர். ஜெனிக்கும் விடுமுறை நேரம் என்பதால்... பொழுது நன்றாகக் கழிந்தது.

நான்கு நாட்கள் சென்ற நிலையில்... ஒரு நாள் வெளியே சென்றுவிட்டு வந்த ஸ்டீபனின் முகம் சரியே இல்லை... அவர் முகத்தில் கோபம், விரக்தி ஏமாற்றம் எல்லாமே கலந்து இருந்தது.

அவர் எப்பவும் அதிகம் பேசமாட்டார்தான்... கோபக்காரர்தான். இருந்தாலும் முகத்தில் எதுவும் காட்டமாட்டார். சாதாரணமாகத்தான் இருப்பார். ஆனால் இப்போது அவர் முகத்தில் இருந்தே எதோ சரியில்லை என்று புரிந்தது.

வீட்டில் யாரோடும் சரியாகப் பேசவில்லை... எதோ யோசித்துக் கொண்டே இருந்தார். ப்ரித்வி இருந்ததால் வேறு வழியில்லாமல் அவனுடன் பேசினார்.

ப்ரித்வியே புனிதாவிடம் “என்ன ஆச்சு உங்க அப்பாவுக்கு?” என்று கேட்டான். புனிதாவுக்குத் தெரிந்தால் தானே பதில் சொல்ல முடியும். அவளுக்கும் ஒன்றும் புரியவில்லை.

என்ன பிரச்சனை என்று தெரியாமல் லீனா தன் கணவரின் முகம் பார்ப்பதும், வீட்டு வேலை பார்ப்பதுமாக இருந்தார். ஜெனியை பற்றிக் கேட்கவே வேண்டாம். ஸ்டீபன் மற்றவர்களிடமாவது இரண்டொரு வார்த்தை பேசினார்... ஜெனியிடம் சுத்தமாகப் பேசவில்லை. அப்போதும் ஜெனிக்கு தன் காதல் விஷயம் அவருக்குத் தெரிந்திருக்கும் என்று தோன்றவில்லை...

எப்போதாவது ஒருமுறை ஸ்டீபன் இல்லாத நேரம் ஜெனி ராஜேஷை செல்லில் அழைப்பாள். சிறிது நேரம் பேசிவிட்டு வைத்து விடுவாள். அதுவும் கடந்த நான்கு நாட்களாக ராஜேஷ் செல்லை எடுக்கவும் இல்லை. ஜெனி அவனோடு பேசவும் இல்லை. அதனால் ஜெனி வேறு எதோ காரணம் என்று நினைத்தாள்.

அன்று இரவு எல்லோரும் ஒரு குழப்பத்துடனே உறங்க சென்றனர். ஜெனி உறங்கிவிட்டாள் . ஆனால் புனிதாவிற்குதான் உறக்கம் வரவில்லை. அவள் ப்ரித்வி உறங்கியதும் தண்ணீர் குடிப்பது போல் வெளியே வந்தவள், தன் பெற்றோரின் அறையைப் பார்க்க...

அந்த நடு இரவிலும் அவர்கள் அறையில் விளக்கு எரிந்தது. அதோடு உள்ளே பேச்சு குரலும் கேட்டது. புனிதாவிற்கு அவள் அம்மா அழுவது போலவும் இருந்தது.

அவர்கள் அறைக்குப் போவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தவள், என்ன என்று தெரியாமல் தன்னால் நிம்மதியாக உறங்க முடியாது என்று தோன்ற, துணிந்து தன் பெற்றோரின் அறை வாயிலில் நின்று “அம்மா...” என்று அழைத்தாள்.

அப்போது அவளுக்குத் தெரியவில்லை... தனக்கு இனி எப்போதும் நிம்மதியான உறக்கம் இருக்கப் போவதில்லை என்று...

புனிதாவின் குரல் கேட்டதும் லீனா எழுந்து வெளியே வந்தார். “என்ன டா இந்த நேரத்தில...” என்று கேட்டவரின் குரலே சரியில்லை...

“ஒன்னும் இல்லை மா தண்ணி குடிக்க வந்தேன்.”

“மாப்பிள்ளை தூங்கிட்டாரா...”

“ம்ம்... தூங்கிட்டார் ...” என்றவள், தன் தாய்க்கு ஜாடை காட்டி தனியாக அழைத்தாள்.

லீனா திரும்பி தன் கணவரை பார்க்க... ஸ்டீபன் கட்டிலில் படுத்திருந்தார். லீனா விளக்கை அனைத்து விட்டு கதவை சாற்றிக்கொண்டு புனிதாவோடு சமையல் அறைக்குச் சென்றார்.

“என்ன ஆச்சு மா?” புனிதா கேட்டதும், லீனா அழுது விட்டார். என்னவோ ஏதோவென்று புனிதாவின் மனம் தவிக்க ஆரம்பித்து. ஒருவழியாக லீனா தன்னைத் தேற்றிக் கொண்டு சொல்ல ஆரம்பித்தார். அவர் சொன்ன விஷயத்தைக் கேட்ட புனிதா அதிர்ச்சியடைந்தாள்.

சிறிது நேரம் சென்று அதிர்சியில் இருந்து வெளியில் வந்தவள்...... தன் அம்மாவை தேற்றி அவரைப் படுக்க அனுப்பி விட்டு தானும் உறங்க சென்றாள்.

மறுநாள் காலை ஜெனியை லீனா எழுப்ப... ஜெனி எழுந்து உட்கார்ந்தவள் “இன்னைக்கு லீவ் தான எதுக்கு மா இவ்வளவு சீக்கிரம் எழுப்புனீங்க?” என்று கேட்டவள், லீனா பதில் சொல்லாமல் இருக்கவும் அவர் முகத்தைப் பார்க்க...

லீனா முகமே ஒரு மாதிரி இருந்தது. ஜெனி “என்ன ஆச்சு மா?” என்று கேட்ட நொடி, லீனாவின் கரம் ஜெனியின் கன்னத்தில் இடியாக இறங்க....

தன் அம்மா தன்னை அடித்ததை நம்ப முடியாமல் அதிர்ச்சியில் ஜெனி இருந்தாள். இதுவரை லீனா அவளை அடித்ததே இல்லை.

“உன்னைப் படிக்கக் காலேஜ் அனுப்பினா... நீ என்ன வேலை பண்ணி இருக்க? இதுக்குத்தான் நீ காலேஜ் போனியா...” லீனா ஆத்திரமாகக் கத்த... ஜெனிக்கு அப்போதுதான் விஷயம் புரிய ஆரம்பித்தது.
அவளுக்குப் பயத்தில் கை கால் உதற ஆரம்பிக்க... மூளையோ யார் சொல்லி இருப்பா என்று யோசிக்க...

“உன் காலேஜ் ப்ரொபசர் அப்பாவுக்குத் தெரிஞ்சவராம். அவர் அப்பாவை போன் பண்ணி பார்க்கனும்னு வர சொல்லி... உன் கதை எல்லாம் சொல்லி இருக்கார்.”

“தன் பெண்ணைப் பத்தி ஒருத்தர் தவறா சொல்லும் போது உங்க அப்பாவுக்கு எவ்வளவு அவமானமா இருந்திருக்கும்?”

“எப்படி இருந்த மனுஷன் இப்ப அவரைப் பார்க்கவே முடியலை... உங்க அக்காவும் உன்னை மாதிரி தான காலேஜ் போய்ட்டு வந்தா... அவ ஒழுக்கமா தான இருந்தா.... உனக்கு ஏன் அப்படி இருக்க முடியலை...”

“காலேஜ் படிக்கும் போது உனக்கு என்ன காதல்?”

“அம்மா ராஜேஷ் ரொம்ப நல்லவன் மா... “ ஜெனி முதல் முறையாக வாயை திறந்தாள்...

“நீ ரொம்பக் கண்ட... கொஞ்ச நேரம் காலேஜ்ல பார்த்ததை வச்சு உனக்கு அவன் நல்லவனா கெட்டவனான்னு தெரிஞ்சிடுச்சா...”

“அப்படியே அவன் நல்லவனா இருந்தாலும்... இது உனக்குத் தேவையான வேலையா...உன்கிட்ட இருந்து இதை நான் நிச்சயமா எதிர்பார்க்கலை ஜெனி.” வருத்தமாகப் பேசிய தன் தாயை பார்த்த ஜெனியின் கண்கள் கலங்க....

“ஏன் மா... எனக்குப் பிடிச்சவரோட என்னோட லைப் இருக்கனும்ன்னு நினைக்கிறது தப்பா...” என்றாள்.

ஜெனிக்கு இப்படியெல்லாம் பேச தெரியுமா என்பது போல் லீனா பார்த்தார். “ரொம்ப மாறிட்ட ஜெனி... காதல் உன்னை மாத்திடுச்சு..... உன்னைப் பத்தி யோசிக்கிற நீ... ஏன் நம்ம குடும்பத்தைப் பத்தி யோசிக்கலை?....”

“ராஜேஷ் குடும்பத்தைப் பத்தி எல்லாம் உங்க அப்பா விசாரிசிட்டார். அவங்க ரொம்பச் சாதாரணமான குடும்பம். உங்க அக்காவை பெரிய இடத்தில செஞ்சிட்டு. உன்னை எப்படி இந்த மாதிரி ஒரு குடும்பத்தில செய்ய முடியும்.”

“உங்க அக்காவோட புகுந்த வீட்ல நம்மை மதிப்பாங்களா... நீ உன் வாழ்க்கையை மட்டும் இல்லை... உங்க அக்கா வாழ்க்கையையும் சேர்த்துக் கெடுக்கப் பார்க்கிற....” என்றார் லீனா வேதனையாக...

“ராஜேஷ் கூட நல்லா வருவான் மா...” என்றாள் ஜெனி குரலில் ஏக்கத்துடன்.

நீ சொன்னா கேட்க மாட்டியா என்பது போல் பார்த்த லீனா “நான் உங்க அப்பாகிட்ட... நம்ம ஜெனி நாம சொன்னா கேட்டுப்பா... நீங்க கவலைப்படாதீங்கன்னு சொன்னேன். ஆனா நீ எல்லோரையும் கஷ்ட்டபடுத்திப் பார்க்கனும்ன்னு நினைக்கிற... அப்புறம் உன் இஷ்டம்.” என்றவர் அறையில் இருந்து சோர்வாக வெளியே சென்றார்.

ஜெனிக்கும் தன் அம்மாவிடம் அப்படிப் பேசியது வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் வேறு வழியில்லை. அவள் அம்மா வெளியே சென்றதும், ராஜேஷிடம் பேசுவோம் என்று நினைத்து ஜெனி அவளின் செல்லை எடுக்க...

அப்போது சரியாக உள்ளே வந்த லீனா ஜெனியை பார்த்து முறைத்தவர், அவள் கையில் இருந்த செல்லை பிடிங்கிக் கொண்டு சென்றார். அவள் அப்பாவை பார்க்க பயந்து கொண்டு ஜெனி அறையிலேயே இருந்தாள்.

ப்ரித்வி தன் சென்னை அலுவலகத்திற்குப் புனிதாவின் விசா விஷயமாகச் செல்ல வேண்டியது இருந்ததால் அவன் அங்கே கிளம்பி சென்றான்.

அவன் கிளம்பியதும் ஸ்டீபன் லீனாவை பார்க்க... அவர் சென்று ஜெனியை அழைத்து வந்தார். ஜெனிக்குக் கை கால் எல்லாம் உதறியது. அவள் பயத்துடன் ஸ்டீபனின் எதிரில் இருந்த சோபாவில் உட்கார்ந்தாள்.

தன்னிடம் தன் காதலை விட்டு விடச் சொல்லி தன் தந்தை சொல்வார் என்று எதிர்பார்த்த ஜெனிக்கு ஏமாற்றமே... ஸ்டீபன் அதைத் தவிர மற்றது எல்லாம் பேசினார்.

முதலில் அவள் ராஜேஷை எப்போது எங்கே சந்தித்தாள் என்பதில் ஆரம்பித்து... தினமும் எங்கே நின்று இருவரும் பேசுவார்கள்... இருவரும் எங்கெல்லாம் வெளியில் சென்றார்கள் என்று கேட்க...

ஜெனிக்கு நிமிர்ந்து யாரையும் பார்க்க முடியவில்லை... இது எல்லாம் அப்பாவிடம் சொல்லக்கூடிய விஷயமா... அதனால் அவள் மெளனமாக இருந்து பார்த்தாள்... அப்போதும் ஸ்டீபன் விடவில்லை...

“எனக்கு எல்லாம் தெரியும். நீ எங்க போன... என்ன பண்ண எல்லாம் தெரியும். இருந்தாலும் நீயே எல்லாத்தையும் சொல்லணும். இன்னைக்கு எதாவது ஒரு விஷயத்தில அலட்சியமா இருந்திட்டா... நாளைக்கு அது பெரிய பிரச்சனை ஆகலாம்.” என்றவர், சொல்லாமல் இங்கிருந்து ஒரு அடி கூட அசைய முடியாது எனபது போல் அழுத்தமாக உட்கார்ந்து இருந்தார்.

லீனாவும், புனிதாவும் வேறு... சொல்லு என்பது போல் ஜெனியை வற்புறுத்த... ஜெனிக்கு வேறு வழியில்லை... அவள் மெதுவாக ஒவ்வொன்றாகச் சொல்ல ஆரம்பித்தாள்.

நரகம் என்று கேள்வி மட்டுமே பட்டிருந்த ஒன்றை ஜெனி அன்று அனுபவித்தாள். ஜெனியிடமிருந்து அவள் சினிமாவுக்குச் சென்றது உட்பட... எல்லா விஷயத்தையும் வாங்கி விட்டே ஸ்டீபன் அவளை விட்டார்.

எந்தத் தியேட்டர்... யாரெல்லாம் போனீங்க... எந்தச் சீட்ல உட்கார்ந்த... ஒரு கேள்வியையும் விட வில்லை... அவருக்குப் பதில் சொல்லி முடித்த போது ஜெனி ‘கடவுளே ! காதலும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்’ என்ற நிலையில் தான் இருந்தாள்.

வீட்டினர் முன்பு தன்னுடைய தனிப்பட்ட விஷயத்தைப் பேசும்படி ஆனது ஜெனிக்கு மிகவும் தன்னிரக்கமாக இருந்தது. அவள் யாருடைய முகத்தையும் பார்க்க விரும்பாமல்... அவள் அறைக்குள் சென்று முடங்கினாள்.

லீனா அல்லது புனிதா ஒருவர் மாற்றி ஒருவர் ஜெனிக்கு துணைக்கு இருந்தனர். புனிதாவுக்கு ஜெனியை பார்க்க மிகவும் வேதனையாக இருந்தது. அவளால் அழ மட்டுமே முடிந்தது. வேறு என்ன செய்ய முடியும்.

அவளுக்குத் தன் புகுந்த வீட்டினரை பற்றிக் கவலை... சும்மாவே பானுவும், லின்சியும் அவளை மதிக்கமாட்டார்கள். இன்னும் இந்த விஷயம் வேறு தெரிந்தால்... தன்னை அவர்கள் கேவலமாகப் பார்ப்பார்கள் என்று நினைத்தாள்.

சிறிது நேரம் சென்று மீண்டும் விசாரணை கமிஷன் ஆரம்பித்தது. ஜெனி ஹாலுக்கு வர மறுத்ததால் ஸ்டீபனே அவள் அறைக்கு வந்தார்.

ஜெனி ராஜேஷை திருமணம் செய்தால் என்னென்ன பின் விளைவுகள் ஏற்படும் என்பதைப் பற்றிப் பட்டியலிட்டார்.

“நீ இன்னும் அந்த ராஜேஷை கல்யாணம் பண்ணும் முடிவில் இருந்தால்... நானும் உன் அம்மாவும் இந்த ஊரை விட்டே எங்காவது போய்டுவோம்.”

“உங்க அக்காவை உங்க அத்தான் விட மாட்டார்தான். ஆனா அவங்க நம்ம குடும்பத்தோட எந்தச் சம்பந்ததும் வச்சுக்க மாட்டங்க. உங்க அக்காவையும் நாம இனி பார்க்க முடியாம போகலாம்.”

“அவங்க அளவுக்கு நாம வசதி இல்லைனாலும்... நம்ம குடும்பத்தில அவங்க சம்பந்தம் செஞ்சதே... நம்மைக் குடும்பத்தைப் பத்தி நல்லவிதமா கேள்விபட்டதுனாலதான்.”

“நான் எவ்வளவு காட்டுபாடா இருந்து என்ன லாபம். என் குடும்பத்தை என்னால நல்லபடியா காப்பத்த முடியலை...” ஸ்டீபன் கடைசியாகச் சொன்னதைக் கேட்ட ஜெனி, மனதளவில் முற்றிலும் உடைந்தே போய் விட்டாள். லீனாவும் புனிதாவும் வாய்விட்டே அழுதனர்.
 
:love: :love: :love:

பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்காதுன்னு சொன்னால் ஓகே........
எப்போவும் அவங்க இவங்க என்ன நினைப்பாங்க இப்படியே போகுது.........
 
Last edited:

o_Oo_Oo_O
 
Top