Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pa 'We' Talks 4 - Diwali Specials 3

Advertisement

Heyyyyyyyyyyy friendsssssssssss..?????


Diwali wishes to you all.இனிய தீபாவளி திரு நாள் வாழ்த்துகள்

happiee to come with another episode of Pa'We' Talks.

here we uncover the other side of our favorite Ramya akka @RamyaRajan

thankssss for your courteous response akka.


Lets Starttttttttt..!!



1. எப்போ ஃப்ர்ஸ்ட் டைம் எழுத ஆரம்பிச்சீங்க..கதைன்னு இல்ல....லைஃப்லயே ஃப்ர்ஸ்ட் டைம் கேட்கிறேன்.?பள்ளியா..?கல்லூரியா?


நான் முதல்ல எழுதின கதையே நாவல் தான். முதல் கதை காதலின் தீபம் பெண்மையில 2014 எழுதினேன். அதுக்கு முன்னாடி கட்டுரை தான் எழுதி இருக்கேன்.
எல்லோரையும் போலத்தான். கல்யாணம் முடிந்த பிறகு தனிக் குடித்தனம். கணவர் மென்பொருள் இன்ஜினியர். கேட்கவே வேண்டாம், வீடு திரும்ப இரவு ஆகும். தனிமையை போக்க கதை படிக்க ஆரம்பிச்சேன். படிக்கச் ஆரம்பிச்சா சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியாது. ஒருநாள் என்ன படிக்கிறதுன்னு யோசிக்கும் போது, என் கணவரும், என்னோட தம்பியும், நீயே எழுதுன்னு கிண்டல் செஞ்சாங்க.
எழுத முடியாது சொல்றீங்களா, எழுதுறேன்னு சொல்லி அப்ப எழுத ஆரம்பிச்சது தான். பத்து எபி எழுதணும்ன்னு ஆரம்பிச்சது, 60 எபி எழுதினேன்.
தீப்பொறி போதும் இல்லையா பத்த வைக்க...

??

2. நான் முதன்முதலா உங்க கதை படிச்சது காதலின் தீபங்கள்...அதில இருந்து பனி சிந்தும் சூரியன் வரை நிறைய கூட்டுக்குடும்ப கதை எழுதி இருக்கீங்க..?ஏன் அப்படி..?any specific reason?

கதை படிக்கிறது அதிகம் பெண்கள்தான். குடும்பக் கதைகள் தான் எழுதுறோம். அப்ப சில கதைகள் கூட்டு குடும்பமா இருந்தா, படிக்க நல்லா இருக்குமேன்னு தோன்றது தான்.


3. உங்க வீட்ல என்ன சொன்னாங்க? உங்க கதை படிச்சு..? யாராவது படிப்பாங்களா...?

நான் எழுதினது ரொம்ப நாள் யாருக்குமே தெரியாது. என் கணவருக்கு மட்டும் தான் தெரியும். அவருக்கு ரொம்ப டைம் இருக்காது, இருந்தாலும் கிடைச்ச நேரத்தில அனிதாவின் அப்பா, நீயின்றி வாழ்வேனோ, சங்கீத ஸ்வரங்கள் படிச்சிட்டு ரொம்ப பாராட்டி இருக்கார்.
அம்மாவும் தங்கையும் படிச்சிட்டு, நீயா இப்படி எழுதுறேன்னு ஆச்சர்யப்பட்டாங்க. என்னோட கசின் அனு, என்னோட ப்ரண்ட் கூட, எப்பவும் ரொமான்ஸ் பத்தலைன்னு தான் சொல்வா. என்னோட மத்த ப்ரண்ட்ஸ் சில பேர் படிச்சிட்டு பாராட்டி இருக்காங்க.
என்னோட உறவினர்கள் கிட்ட நானா போய் எழுதுறேன்னு சொன்னது கிடையாது. ஆனா அவங்களுக்கு தெரியும்.


4. உங்க கதைக்குக் கிடைச்ச முதல் கமெண்ட் நினைவு இருக்கா...?அப்படி இருந்தா யாரு?

நல்லா நினைவு இருக்கு. பெண்மையில கார்த்திகா தான். எப்பவுமே நான் அப்டேட் போட்ட உடனே அவங்க தான் படிச்சிட்டு முதல் கமெண்ட்ஸ் சொல்வாங்க. நல்ல ஆரம்பம் சொன்னாங்க. அதுக்கு பிறகும் எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணி இருக்காங்க.

5. You portray a mature love...காதல் பத்தி உங்க கருத்து?

Love is blind அப்படின்னு சொல்வாங்க. ஆனா அப்படி இல்லாம கொஞ்சம் பக்குவமா யோசிச்சு முடிவு எடுத்தா நல்லா இருக்குமேன்னு நினைப்பேன். அதுதான் என்னோட கதையில இந்தக் கண்முடித்தனமான காதல் எல்லாம் இருக்காது. என்னோட கதைகளை வயது பெண்களும் படிக்கிறாங்க. அவங்களுக்கு தப்பான விஷயத்தை சொல்லக் கூடாதுன்னு நினைப்பேன். அதுவும் ஒரு காரணம்.


6. சங்கீத ஸ்வரங்கள், பனி சிந்தும் சூரியன், சுடும் நிலவு....இப்படி நிறைய பாடல் பெயர் வைக்கிறீங்க அக்கா....பாட்டு பிடிக்குமா/பாடுவீங்களா...?

பாட்டு கேட்க ரொம்ப பிடிக்கும். ஒரு பாடல் வரியில ஆரம்பிச்சது தான் இப்ப எழுதிற உப்புக் காற்று கதை. காதல் தலைப்புகளை வச்சா... யாராவது கேட்டா சொல்ல ஒருமாதிரி இருக்கு. அதனால இப்ப பாடல் வரிகளை தலைப்பா வச்சிடுறேன்.


7. பிடிச்ச சிங்கர் யாரு..? இசையமைப்பாளர்?

குறிப்பிட்டு சொல்ல முடியாது. எனக்கு நிறைய பேர் பிடிக்கும். ரஹ்மான் சார் மியூசிக் பிடிக்கும்.

8. அண்ட் டூ special mention நல்ல மாமியார் அண்ட் பாசிட்டிவிட்டி உங்க கதையில் இருக்கும்..?அது ஏன்..?எப்படி? உங்க மாமியார்ல inspire ஆனீங்களா?

ஏன் மா இப்படி மாட்டி விடுற? நான் எப்பவுமே உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். மாமியார் மருமகள் பத்தி மட்டும் இல்லை. அண்ணன் தங்கை பாசம் கூட என் கதைகளில் அதிகம் வரும். ஆனா எனக்கு அண்ணனே இல்லை. நமக்கு அப்படி ஒரு அண்ணன் இல்லையேன்னு ஏக்கமா கூட இருக்கலாம்.
உங்களுக்கு புரிஞ்சிருக்கும் நினைக்கிறன்.

??????

9. நிறைய கூட்டுக்குடும்ப கதை..நிறைய பெயர்கள்..?எப்படி யோசீக்கிறீங்க?

ரொம்ப கஷ்டமான விஷயம்தான். கதை கூட யோசிக்க நேரம் எடுக்காது. ஆனா பெயர் செலக்ட் பண்றது தான் எனக்கு கஷ்டமே. நிறைய பெயர் திரும்ப திரும்ப வரும்.


10. உங்க கதை படிச்சுட்டு எப்பவுமே கருத்தோ விமர்சனமோ இவங்க சொல்லனும்னு நிங்க எதிர்ப்பார்க்கிற,சொல்ற வெல் விஷர்...ப்ரண்ட் யாருக்கா?

யாரு சொன்னாலும் சந்தோஷம்தான். ஆனா நானா கேட்க மாட்டேன். அது நாம அவங்களை போர்ஸ் பண்ற மாதிரி இருக்கும். நிறைய பேர் தொடருந்து கமெண்ட்ஸ் கொடுக்கிறாங்க. கதை படிச்சிட்டு விமர்சனம் சொல்றாங்க, அவங்க எல்லோரோடதும் நான் எப்பவுமே ஆவலா எதிர்பார்ப்பேன்.


11. மூவிஸ்லாம் பார்ப்பீங்களா..?பிடிச்சவங்க..?

லவ் டு வாட்ச் மூவிஸ். ஆல் டைம் பேவரட் விஜய் சேதுபதி. ஆனா மாஸான படம் தான் தியேட்டர் போய் பார்ப்பேன். வீட்ல ஹாலிவூட் மூவிஸ் பார்பேன்.


12. தீபாவளி வருது..? பலகாரம்ல செய்வீங்களா..?உங்க குக்கிங் பத்தி சொல்லுங்க?

கண்டிப்பா... எழுதிறதுக்கு அப்புறம் ரொம்ப பிடிச்சது சமையல் தான். எனக்கு நல்லாவே சமைக்க வரும். அதுவும் பெஸ்டிவல் நாள்ல கண்டிப்பா நானே செஞ்சாதான் எனக்கு திருப்தி ஆகும். என் பையனுக்கு கூட வெளியே ஸ்நாக்ஸ் வாங்காம, நான்தான் செஞ்சுக் கொடுப்பேன்.


13. உங்க hobbies என்னக்கா?

இதுன்னு கிடையாது. எனக்கு எப்ப என்ன தோணுதோ பண்ணுவேன். திடிர்ன்னு உட்கார்ந்து தஞ்சாவூர் பெய்ண்டிங் கூட பண்ணுவேன். பாட்டுக் கேட்பேன், எதாவது இங்கிலீஷ் படம் பார்பேன்.


14. எந்த கதை உங்களோட பெஸ்ட்னு நீங்க நினைக்கிறீங்க...?

நாம நினைக்கிறது அப்படியே எழுதுவோமா அப்படின்னா பல நேரங்கள் இல்லை. ஆரம்பிக்கும் போது வேற ஒன்னு நினைச்சிருப்போம். ஆனா முடிக்கும் போது வேற ஒண்ணா வந்திருக்கும். ஆனா அனிதாவின் அப்பா, பனி சிந்தும் சூரியன், சங்கீத ஸ்வரங்கள், இது மூன்னும், நான் எப்படி எழுதணும்ன்னு நினைச்சேனோ, அப்படியே எழுதி முடிச்சேன். சோ எனக்கு ஸ்பெஷல்.


15. எந்த கதைமாந்தர் பிடிக்கும்..?hero heroine anyone from your story?

அந்தந்த கதை எழுதும் போது, அவங்கவங்களை பிடிக்கும். என்னோட எல்லா ஹீரோயின்ஸ் எனக்கு ஸ்பெஷல் தான். எனக்கு பொண்ணுங்களை அழு மூஞ்சியாவோ... இல்லை பார்பி டால் மாதிரியோ காட்ட பிடிக்காது. என்னோட கதாநாயகிகள் சுயமரியாதையை இழக்காத பெண்களா இருக்கிறதைதான் நான் விரும்புவேன்.


16. ரியல் லைஃப்ல inspire ஆகி எழுதிய கதையோ கதாபாத்திரமோ இருக்கா?

நாம பார்த்து அல்லது பழகினவங்களோட சாயல் கண்டிப்பா இருக்கும். ஆனா நான் யாரை யோசிச்சு எழுதினேனோ, அவங்களே படிச்சாலும், இது நாமதான்னு கண்டுபிடிக்க முடியாது. மொத்தமா அப்படியே ஒருத்தரை எழுதினது இல்லை.
நாம கற்பனை பண்ணி எழுதிறதை விட... எனக்கு உண்மை சம்பவங்களை அடிப்படையா வச்சு எழுத பிடிக்கும். நான் முழு கதையும் அப்படி எழுதுனது இல்லை. ஆனா அங்கங்கே நான் சேர்க்கும் சில சம்பவங்கள் உண்மையா நடந்தது தான்.

17. உங்க கதையில எது எனக்குப் பிடிக்கும்னு உங்களுக்கு எதாவது கெஸ் இருக்கா...?( நல்லா யோசிச்சு சொல்லுங்கக்கா)

ஹாஹா.... இதுக்கு பெரிய கெஸ் எல்லாம் தேவை இல்லை. சுடும் நிலவு தான... ஏன்னா ஹீரோயின் பெயர் பவித்ரா.
:p:ROFLMAO::ROFLMAO::love:

18. இப்படி ஒரு கதை எழுதனும்னு எதாவது ப்ளான் இருக்கா..?forfuture..?historical thriller நு வேற ஜானர்ல..?

கண்டிப்பா...புதுசு புதுசா ட்ரை பண்ணனும்ன்னு ஆசை இருக்கு. ஆனா அதை ஒழுங்கா பண்ணனும்.


19. RR nu அழகா இருக்கே..ஒரு R நீங்க..இன்னொரு R யார்க்கா?

Very discipline and sincere person. இப்பன்னு கிடையாது, கதை எழுதுவதற்கு முன்னே ,நான் பொழுதுபோக்குக்காக நிறைய வேலைகள் பார்த்து இருக்கேன். எப்பவுமே நான்தான் நல்லா சம்பாதிக்கிறேனே, நீ ஏன் வேலை பண்றன்னு, என் கணவர் சொன்னதே இல்லை. நான் விரும்பினதை செய்யும்சுதந்திரம் எனக்கு இருந்தது.

கல்யாணத்துக்கு பிறகு எத்தனையோ பெண்கள், புகுத்த வீட்டிற்காக தன்னை மாற்றிக் கொண்டு இருக்காங்க. ஆனா எனக்கு அப்படி இல்லை. அதுக்கு காரணம் என் கணவர் தான்.

நான் எழுத்தாளர் என்பது என்னை விட அவருக்குத்தான் பெருமை. என் ப்ரண்ட்ஸ், அவர் ப்ரண்ட்ஸ் கிட்ட எல்லாம் பெருமையா சொல்வார்.
அவர் எனக்கு கொடுத்த சுதந்திரத்தை நானும் தவறா பயன்படுத்தியது இல்லை. என் குடும்பதிற்கான நேரம் போகத்தான் நான் எழுதுவது. எழுதுறேன்னு வீட்ல ஒண்ணுமே பண்ண மாட்டேங்கிறா, அப்படியெல்லாம் யாரும் சொல்ற மாதிரி நான் நடந்துகிட்டது இல்லை.


?

20. கதை எழுத ஆரம்பிச்சு உங்களுக்கு வந்த மாற்றங்கள்...?

எப்பவுமே சுற்றி உள்ளவங்களை கவனிப்பேன். இப்ப இன்னும் அதிகம் கவனிக்கிறேன். எழுத்தாளர்களுக்கு சமூக பொறுப்பு இருக்கு. ஒரு எழுத்தாளரா என்னோட பொறுப்புகள் அதிகரிச்சதா உணர்கிறேன். பொய்யான விஷயங்கள் கதையா இருந்தாலும் என்னால எழுத முடியாது.

Spread positivity that is my wish.

மிக்க நன்றி பவித்ரா. என்னோட மனசுல உள்ள விஷயங்களை பகிர்ந்துகொள்ள நல்ல சந்தர்ப்பம் கொடுத்ததற்கு. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
உங்கள் கதைகளில் வரும் கதாநாயகிகள் நீங்கள் சொன்ன மாதிரி சுயமரியாதை தெளிவாக இருக்காங்க ஒரு சில கதைகளில் ரெம்ப குழந்தை தனமான ஹீராயின ஏத்துக்க முடியாது இப்ப யாரும் அப்படி இல்லை
 
சூப்பர் ரம்யா மேம் நீங்க எந்த உறவு களும் எந்த உறவாலும் பாதிக்காத வண்ணம் கதையை கொண்டு செல்லும் பாங்கு எனக்கு மிகவும் பிடிக்கும் எனக்கு ராம் அபர்ணா தான் ரொம்ப பிடிக்கும்
 
:love::love::love:

சூப்பர் ரம்யா......

AA & SS :love: :love: :love: PSS ராம் அபர்ணா தான் நான் முதலில் படிச்சது :love:
கதை மாதிரியே பதிலும் (y)(y)(y) அதிலும் வீட்டுக்காரரையும் கதை படிக்க வச்சுட்டீங்களே :D

Avare thaan padichaar
 
Top