Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pani Thirai - 1

Advertisement

Krithika Pradeep

Member
Member
வணக்கம் ,

கேட்ட உடனே கதைதிரியை உருவாக்கி குடுத்த மல்லிகா மேம்-க்கு நன்றிகள் பல .

நான் கிருத்திகா பிரதீப் . இனி உங்கள் அனைவரோடும் இங்கே என் கதைகளோடு பயணிக்க போகிறேன் . உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன் . தவறை சுட்டிக்காட்டினால் கண்டிப்பாக மாற்றிக்கொள்வேன் .
பனித்திரை இரு குடும்பங்கள் பற்றிய கதை , காதல் நட்பு துரோகம் என்ற கலவை கொண்டது .

நன்றி


கோவையில் முக்கியமான இடம் காந்திபுரத்தில் கம்பீரமாக இருந்தது ' நந்தன் பழமுதிர் நிலையம் ' .

மூன்று தளத்தை கொண்ட கட்டிடம் . வீட்டுக்கு தேவைப்படும் அனைத்துவகை காய்கறி மற்றும் பழங்கள் அனைத்துமே மிக தரமாக கிடைக்கும்.

கோவையில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட கடைகள் இருக்கிறது , எல்லாமே மிக முக்கியமான இடங்களில்.

காந்திபுரம் கட்டிடத்தில் கணக்கு வழக்கில் பிரச்சனை காரணமாக யதுநந்தன் மிக தீவிரமாக தனது கணினியை பார்த்து கொண்டு இருந்தான் . சின்ன தவறை கூட பொறுத்துக்கொள்ளமாட்டான் .

வேதாந்தம் பரம்பரை கோடீஸ்வரர் , மனைவி வேதநாயகி , இரண்டு மகன்கள் மூத்தவன் தான் யதுநந்தன் இளையவன் ரிஷி . ரிஷி மிகவும் கலகலப்பானவன் வீட்டின் செல்லப்பிள்ளை . அதுவே யதினந்தன் மிகவும் அமைதி , கோவக்காரன் , எல்லோர் மீதும் பாசம் அதிகம் ஆனால் வெளியே காமிக்க மாட்டான் .
அதே நேரம் RS புறத்தில் ஒரு வீட்டில் பாட்டு சத்தம் கேட்டு கொண்டிருந்தது , குத்து பாட்டுக்கு அந்த ஏரியா குழந்தைகளுடன் மதுவந்தி ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தாள் . அவளது அம்மா பாட்டை நிறுத்து என்று கத்துவது காதில் கேட்காமல் குதித்து கொண்டு இருந்தால்.

அவள் மதுவந்தி , அப்பா அம்மாவின் செல்ல பிள்ளை , ஒரே ஒரு தம்பி ருத்ரன் , அப்பா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டிருக்கிறார் . மதுவந்தி இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருக்கிறாள் , ருத்ரன் +12 படித்து கொண்டிருக்கிறான் .

மது-வும் , ரிஷி-உம் ஒரே காலேஜ் , சின்ன வயதில் இருந்து நண்பர்கள் .
 
உங்களுடைய "பனித்திரை"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
கிருத்திகா பிரதீப் டியர்
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
கிருத்திகா பிரதீப் டியர்
 
Last edited:
Hai ithunundu thundu thukada than kathaya.cheating. Atleast character introduction koduthu irrukalam.ithu ponggu.
 
Top