Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pani Thirai - 5

Advertisement

Krithika Pradeep

Member
Member
யது குடுத்த ஒரு வாரம் டைம் முடிந்தது , இன்னும் கீதா-வால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை . கீதா அவள் அம்மா-விடம் கேட்டால் , நல்ல குடும்பம் தான் கீத்-மா , மோடெல்லிங்-ல இருந்தாலும் ஒரு வயதுக்கு மேல சாதிக்க முடியாது , அதான் பிசினஸ் ஆரம்பிச்சு குடுக்கறேன்னு சொல்றார்-ல , சரி சொல்லிடு .

கரெக்ட் தான் மா , அனா ஒரு பெரிய வாய்ப்பு வர மாதிரி இருக்கு , வந்தா கல்யாணம் எல்லாம் வேணாம்-னு சொல்லலாம்னு பாத்தா , அது முடிவாகரத்துக்கு இன்னும் கொஞ்ச நாள் ஆகும் போல அதான் யோசிக்கிறேன் .

இனி வருமா வராதா-னு தெரியாத விஷயத்துக்கு வெயிட் பண்ணி இருக்கிறதே விட்ற கூடாது கீத்-மா , சீக்கிரம் யோசிச்சு நல்ல முடிவை சொல்லு .

நீ சொல்றது எல்லாம் கரெக்ட் தான் மா , ஆனா அந்த சான்ஸ் மட்டும் கிடைச்சா பாலிவுட்-ல ஹீரோயின் ஆயிடலாம் , அப்புறம் யது எல்லாம் வேஸ்ட் மா.

அது தான் இன்னும் முடிவாகலியே , உன்னோட இண்டஸ்ட்ரி-லேயே நெறைய பேர் அதே ஒப்போர்ட்டுனிட்டி-கி போட்டி போட்டுட்டு இருகாங்க , என்ன பொறுத்த வரைக்கும் யது நம்ம பெஸ்ட் சாய்ஸ் .

சரி மா நீ சொல்றதையே கேட்கறேன் , யதுக்கு கால் பண்ணி ஓகே சொல்லிடறேன் , இல்லைனா இது தான் சான்ஸ்-னு அவங்க அம்மா வேற பொண்ண பாத்து கல்யாணம் பண்ணி வெச்சுடும் . கல்யாணம் ஆனா உடனே ஏதாவது சண்டை போட்டு தனியா போய்டணும் , இல்லைனா அந்த அம்மா என்ன நிம்மதியா இருக்க விடாது . எப்போ பாத்தாலும் குடும்பம் , கோவில் ,கடவுள், சொந்தம் அது இது-னு என்னோட lifestyle மாத்தி விற்றும் , இப்போவே யது-காக தான் கல்யாணத்துக்கு சரி சொலிருக்கும் .

கல்யாணம் வரைக்கும் அமைதியா இரு கீத்-மா , அதுக்கப்புறம் நீ சொன்னது தான அங்க சட்டம் ,அது வரைக்கும் அவங்க கிட்ட பாசமா இருக்க மாதிரி பாத்துக்கோ , இல்லைனா கல்யாணத்துல ஏதாவது பிரச்சனை வந்திட போகுது.

ஓகே மா , இப்போ போய் யது-கு போன் ஓகே சொல்லிட்டு வரேன் .

கீதா விடம் இருந்து கால் வரும் போது யது பழமுதிர் சுத்தி பார்த்து கொண்டு இருந்தான் , என்ன தான் எல்லா வேலைக்கும் ஆட்கள் இருந்தாலும் யது-கு எல்லாமே கரெக்ட்-அ இருக்க வேண்டும் .

சொல்லு கீதா என்ன காலைலேயே போன் பன்னிருக்க ஏதாவது முக்கியமான விஷயமா .

என்ன இவன் இப்படி கேக்கறான் , நம்ம கிட்ட பேசுனத மறந்துட்டானா இல்லை விளையாடுறானான்னு தெரிலயே . சரி நாமளே சொல்லலாம் . என்ன யது பேபி நம்ம கல்யாணம் பத்தி பேசலாம்-னு கூப்பிட்டேன் .

ஓ அதெல்லாம் ஞாபகம் இருக்கா , நான் கூட நீ மறந்துட்டேனு நினைச்சேன் .

சாரி பேபி ஒரு வாரம் முடியறப்போ போன் பன்னுறதுக்கு எனக்கு கொஞ்சம் இங்கே எல்லாம் செட் பண்ண வேண்டியது இருந்துச்சு .

எனக்கு கோவம் கீதா , நான் உன் லைப்-ல சூஸ் தி பெஸ்ட் போல-னு நினைச்சேன் , நீ என்ன உண்மை-ஹ லவ் பன்னிருந்தா நான் கேட்ட உடனே சரி சொல்லிருக்கணும்ல . ஆனா நீ மோடெல்லிங் பெஸ்டா இல்ல நான் பெஸ்டா -னு யோசிச்சி செலக்ட் பன்னிருக்க கரெக்ட் தானே.

என்னாடா இவன் நான் நினைச்சதை அப்படியே சொல்றான் . நோ நோ விட கூடாது சமாளி கீது என்று நினைத்தவள் .

இல்ல பேபி உன் மேல நான் உயிரையே வெச்சுருக்கேன் , நீ தான் என்போமே என்னோட சாய்ஸ் இங்கே என்னோட schedule எல்லாம் கான்செல் பண்ண டைம் ஆகிடுச்சு மத்தபடி நீ சாய்ஸ் எல்லாம் இல்ல பேபி . நீ மட்டும் தான் என்னோட ஒரே option .

யது இதை கேட்ட உடன் கொஞ்சம் கோவத்தை குறைத்தான் , சரி சொல்லு கீது எப்போ வந்து உங்க வீட்ல பேசட்டும் . இன்னும் மூணு மாசத்துல கல்யாணம் வெச்சுக்கலாம் ,
ரிஷிக்கும் செமஸ்டர் லீவ் ஆரம்பிச்சுடும் , கல்யாண வேளைக்கு அவன் சப்போர்ட் இருக்கும் , கூட கொஞ்சம் கடை எல்லாம் பாத்துப்பான் , நானும் கொஞ்சம் relax பண்ணிக்கலாம் .

கீதா மனதுக்குள் இன்னும் மூணு மாசத்துல கல்யாணமா , நான் கூட ஒரு ஆறு மாசம் டைம் குடுப்பானு பாத்தேன் , அதுக்குள் நம்ம வாழ்க்கை என்ஜோய் பண்ணலாம்னு பாத்தா எல்லா பக்கமும் ஆப்பு வைக்கறானே .
சரி பாத்துக்கலாம் இப்போதைக்கு சரி சொல்லி வைக்கலாம் என்று மனதுக்குள் நினைத்தாள் .

ஓகே பேபி நீங்க சொன்னா கரெக்டா தான் இருக்கும் , வீட்ல எப்போ வேணா வந்து பேசுங்க , அம்மா கிட்ட சொல்லிட்டேன் , அம்மா என்ன சொன்னாலும் அப்பா ஓகே சொல்லிடுவார் .
ஓகே கீது நானும் இங்கே பேசிட்டு நெஸ்ட் வீக் அங்கே வரோம்.

யது அவன் வீட்டில் சொன்ன உடன் வேலை துரிதமாக நடந்தது , அடுத்த வாரமே பேசி முடித்து , மூன்று மாதத்தில் கல்யாணம் என்று முடிவு செய்து வந்தார்கள் .

இதோ அதோ என்று நாட்கள் வேகமாக ஓடிவிட்டது , மது , ரிஷி அவன் நண்பர்கள் எல்லாருக்கும் பரீட்சை முடிந்து விட்டது . இனி அவர்கள் 3rd இயர் போய் விடுவார்கள் . பரீட்சை கடைசி நாளில் ரிஷி அவன் நண்பர்கள் எல்லாருக்கும் அண்ணன் கல்யாணத்துக்கு பத்திரிகை வைத்து கொண்டு இருந்தான் , ஓகே friends எல்லாரும் கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்துடனும் என்றான் .

மது மற்றும் ஷாலு-கு வீட்டிலேயே சென்று அவன் பெற்றோர்கள் பத்திரிகை வைத்து விட்டார்கள் , ஷாலு அவனின் உறவு , மது சின்ன வயதில் இருந்தே தெரியும் , அவர்கள் வீட்டினரையும் தெரியும் , ரிஷி அம்மா-வுக்கு மது இன்னொரு மகள் போல , எப்படியாவது மது-வை அவர்கள் வீடு மருமகள் ஆக்க வேண்டும் என்று ஆசை . யது லவ் பண்றேன் என்று சொல்லி விட்டான் . அதனால் ரிஷி-கு பாக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்.

இவர் ஒன்று நினைக்க தெய்வம் வேறு ஒன்று நினைத்துவிட்டது .
 
கடிகாரம் பெண்டுலம் போல மாடலிங்கா இல்லை யதுவான்னு கீதாவின் மனம் ஊஞ்சலாடுது
வேதநாயகிக்கும் மதுவைப் பிடிக்குமா?
வேதாம்மாவின் ஆசை நிறைவேறுமா?
இல்லை யதுவின் ஆசையா?
 
Top