Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pa'We' Talks 7 - Weekend with Writers 3

Advertisement

சவீதா சிஸ் பத்தி நிறைய தெரிஞ்சுக்க உதவி செஞ்ச நம்ம பேபிக்கு முதல் வாழ்த்துக்கள்...

எல்லா கேள்விக்கும் உங்க பதில்கள் எல்லாம் ரொம்ப அருமையா இருந்துச்சு... வாழ்த்துக்கள்....
 
அருமையான பதிவு
சவீதாமுருகேசன் கதைகள் ரொம்பவே பிடிக்கும்
அவங்க வரவுக்கு காத்திருப்போம்
 
12.ஒரு‌ சுவாரசியமான சம்பவம் உங்க லைஃப்ல...கொஞ்சம் dramatic ah அப்படி

சின்ன வயசுல நான் பண்ண ஒரு வேலை என்னால மறக்க முடியாது. பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து விளையாடிட்டு இருந்தோம் கண்ணாமூச்சி தான்,எல்லாரும் எங்க போய் ஒளிவாங்க படிக்கட்டு கீழே, கட்டில் அடியில, கதவுக்கு பின்னாலன்னு ஆனா நான் இருக்கனே ரொம்ப வாலு, பீரோல போய் ஒளிஞ்சுக்கிட்டேன், இன்னொரு பொண்ணுக்கிட்ட நீ பூட்டிரு யாரும் கண்டுப்பிடிக்க மாட்டாங்கன்னு சொன்னேன். புல்லா மூடலை மூடினாப்போல அந்த பொண்ணுவிட்டுட்டு போய்ட்டா... நான் நிறைய டைம் அப்படி ஒளிஞ்சு இருக்கேன் அதுக்கு முன்ன, ஆனா அன்னைக்கு நான் நல்லா மாட்டினேன்... வெளிய வர முடியலை டோர் நல்லா ஒண்ணோட ஒண்ணு சிக்கிருச்சு, நல்ல வேளையா அந்த பொண்ணு பக்கத்து வீட்டு அங்கிள்கிட்ட சொல்லி அவரை கூட்டிட்டு வந்தா, அவர் நல்லா ஹைட் எங்க பீரோவும் ரொம்ப பெரிசு அவர் மேல் பக்கமா பிடிச்சு இழுக்க கதவு திறந்திடுச்சு, அதுக்குள்ளே எனக்கு தான் மூச்சு முட்டிப்போச்சு, ரொம்ப நேரம் ஆகலைன்னாலும் நான் ரொம்பவே பயந்துட்டேன்... அன்னையோட பீரோவுல ஒளியற வேலையை விட்டேன்...

வாட் எ ஐடியா :p :cautious:கண்ணாமூச்சிக்கு ஏன் டா corporate காரன் ரேஞ்சுக்குப் ப்ளான்..


13.சில்லுன்னு ஒரு காதல் writer ,எஹ் ..உங்களின் பார்வையில் காதல் எப்படி...


இந்த கேள்வி எல்லாம் நீ எப்படிம்மா பிடிக்கிற... அழகான புரிந்துணர்வுடன் உண்டாகும் காதல் எப்பவும் நிலைத்திருக்கும்ன்னு நினைக்கிறேன்...

ஹாஹா....அதெல்லாம் தானா வருது...what to do akka..:ROFLMAO::ROFLMAO:

14.உங்களை பயங்கரமா கலாய்க்கிற ஆள் யாரு?

என்னோட பிரண்ட் ஸ்ரீதர், அப்புறம்இந்த சக்தி பொண்ணு, அப்புறம் மீரா இவங்கலாம் பாரபட்சமே பார்க்காம கலாய்ப்பாங்க...


:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:மீரான்னா நம்ம சேமியா அக்காவா...ஹி ஹி


15.அண்ணா உங்க கதை படிச்சிருக்காஙகளா?

இதுவரைக்கும் படிச்சதில்லை... இனியும் படிப்பார்ன்னு எல்லாம் எனக்கு தோணலை, அவங்களுக்கு அவ்வளோ பொறுமை எல்லாம் இருந்ததில்லை...

அண்ணா படிக்கிற மாதிரி speed அஹ் எழுதுங்க ககா...:p


16.உங்க கிட்ட உள்ள ஒரு strange வினோதமான பழக்கம்..


நகம் கடிக்கறது தான்... பஸ் வரலைன்னு பஸ் ஸ்டான்ட்ல நிக்கும் போது விரல்பாவம்ன்னு சொல்ற அளவுக்கு மொத்தமா கடிச்சிருவேன்... (அம்மா, என் கணவர் யார் சொல்லியும் அந்த பழக்கம் மட்டும் என்னைவிட்டு இன்னும் போகலை)

நான் கேட்டது வினோதமான பழக்கம்..கெட்ட பழக்கமில்லக்கா..:cautious::mad:


nail bitingggg i hateeee it...


17.பிடிச்ச பாட்டு...பாடகர்..பாடகி...இசையமைப்பாளர்


பிடிச்ச பாட்டு : முன்பே வா என் அன்பே வா பூ பூவாய் (ரிபிட்டட் மோட்ல கேட்டுடே இருப்பேன்...)

பாடகர்: நம்ம பாடும் நிலா பாலு தாங்க (வண்ணம் கொண்ட வெண்ணிலவே ரொம்ப பிடிக்கும் அவர் பாட்டுல)


எனக்கும் பிடிச்ச பாட்டு..அதை விட இதோ இதோ என் பல்லவி...வாவ்வ்வ்வ்வ்வ்வ்

பாடகி: நம்ம ஜானகிம்மா (இஞ்சி இடுப்பழகி)

இசையமைப்பாளர்: இசைஞானிவிட்டா வேற யாரா இருக்க முடியும்

18.உங்களுக்கு ரொம்ப பிடிச்ச சாப்பிடுற item



பிரியாணி,வெண்ணிலா ஐஸ்கிரீம், குலோப்ஜாமூன், காஜுகத்லி இதெல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும்...

போதும் போதும்..லிஸ்ட் பெருசா போகுது...ஹாஹா
:ROFLMAO::p

19.உங்களுக்கு கதை எழுதுறதுல இது ல எது கஷ்டம்?


ஹீரோ ஹீரோயின் பெயர் வைப்பது.

கதை கரு செலக்ட் செய்ய

மத்த characters name choose பண்ண...

கதைக்கு பெயர் வைக்க


எனக்கு கதை பேரு கேரக்டர்ஸ் பேரு எல்லாம் செலக்ட் பண்றதுல எல்லாம் கஷ்டமே கிடையாது... லதா பைஜூ தான் என்னோட சில கதைக்கு டைட்டில் செலக்ட் பண்ணுறது, அதே போல கேரக்டர்ஸ், அப்புறம் சக்தி டைட்டில் செலக்ட் பண்ணி இருக்கா, சில கேரக்டர் பேரு எல்லாம் நானே நெட்ல தேடி எடுப்பேன்...


இதெல்லாம் எனக்கு கஷ்டமே இல்லை, கதைக்கரு கூட கஷ்டம் இல்லை, எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டமானது கதையோட கிளைமாக்ஸ் எழுதுறது தான், ஏற்கனவே அதைப்பத்தி ஒரு ஐடியா இருந்தாலும், பினிஷிங் திருப்தி இல்லாம நிறைய டைம் மாத்தியிருக்கேன்... அதே போல கிளைமாக்ஸ் எழுத எப்பவும் ஒரு வாரம் பத்து நாள் கூட எடுத்து இருக்கேன்...

ஓ..ஓ....

20.இதை செஞ்சா உங்களை impress செய்யலாம்...என்ன விஷயம் அது?

அது ரொம்ப சூப்பர் கதைப்பா என்னம்மா எழுதியிருக்காங்கன்னு யாராச்சும் கதை பத்தி பேசினா நான் ரொம்பவே இம்ப்ரெஸ் ஆகிடுவேன்... எனக்கு படிக்கிறது தான் ரொம்பவே பிடிக்கும் சின்ன வயசுல இருந்து...

21.என்ன படிச்சி இருக்கீங்கா கா...என்ன பண்றீங்க?

M.Com., M.B.A., ஒருபிரைவேட் கம்பெனில operation manager ஆ இருக்கேன்...

டபிள்..பிஜி.அருமை....மேனேஜரே:love::love:


21.இது உங்க fellow writers உங்களுக்கு சொன்ன message.guesswho ?answer them


இது கொஞ்சம் கஷ்டம் தான் ஆனா முடிஞ்ச வரை கண்டுப்பிடிச்சு இருக்கேன்னு நினைக்கிறேன்...



"ஹாய் சவீ!


How are you?

உங்க வாசகர்கள் உங்களை ரொம்ப மிஸ் பண்றாஙக.எப்ப எழுத வரதா ப்ளான்?

பாப்பா வளரனும்..இது தவிர வேற காரணம் இருக்கா?"



ரொம்ப நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க... ஒரு குட் நியூஸ் சொல்றேன், நான் ஆல்ரெடி ஒரு முழுக்கதை எழுதி முடிச்சிட்டேன், அது நேரடி புத்தகமா வரும்... எப்போ வருதுன்னு தெரிஞ்சதும் உங்களுக்கு எல்லாம் சொல்றேன்... இப்போ நான் பாதியில விட்ட கதைக்கு வருவோம்... பாதியில விட்டதுல சிறு பூக்களின் தீயே முதல்ல முடிக்கறேன் பிறகுஆசைய காத்துல தூதுவிட்டு தொடரும்... உண்மையாவே எனக்கு பாப்பா வளர்ற வரை கொஞ்சம் எழுதுறது முன்னபின்ன தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன்... ஆனா முடிஞ்ச வரை இவ்வளவு தாமதம் நிச்சயம் இருக்காது, இனி தொடர்ந்து பதிவுகள் வரும்...

யாருன்னு சொல்லவே இல்லையேக்கா..? @saveethamurugesan :rolleyes:

23."ஹைய் சவீ,


சக எழுத்தாளர் என்பதோடு நீங்க ஒரு நல்ல தோழியிம் கூட

உங்க நேரம் தவறாமை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

உங்களுக்கு எந்த மாதிரி கதைகள் படிக்க பிடிக்கும்?"


இது மல்லின்னு நினைக்கிறேன்... ஆஹா நேரம் தவறாமைன்னு சொல்லிட்டாங்களே நான் என்ன செய்வேன்... ஒரு வருஷமா ஆளே காணாம போயிட்டேன், ஒழுங்கா திரும்பி வந்து அதே நேரம் தவறாமையை கடைப்பிடிக்க பாக்குறேன் இனி...


எனக்கு இந்த கதை தான் பிடிக்கும் இந்த மாதிரி கதைகள் தான் படிப்பேன்னு ஒரு எல்லை கிடையாது, பேய் கதை, கிரைம் நாவல், ஆன்மீகம், சரித்திரம், சயின்ஸ் பிக்ஷன், குடும்ப நாவல்ன்னு எதையுமே நான் விடுறதில்லை எல்லாமும் படிக்க பிடிக்கும்... அத்தனையும் தமிழ் தான் படிக்க பிடிக்கும்...


இதுவும் தப்பு...ஆனா ஒரு clue..she is also in teaching line..மல்லிமா அல்லா...
savee sis neenga Chennai nu theriyum,,,.. ungala parka aavala iruken...
 
சூப்பர் பவி
சூப்பர் பதில்கள் சவீ..
எனக்கும் வீரா ரொம்ப பிடிக்கும்.
பீரோ சம்பவம் படிச்சு
பயந்துட்டேன்..
ama manimaa..evalo kusumbu parunga appavee...திகிலா தான் இருந்துசு..நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்..
 
Top