Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Rishiram's kaathal pookkum kaalam chapter eleven

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 11

பக்கத்தில் உட்கார்ந்த கேப்ரியேலைப் பார்த்தாள் சம்யுக்தா.
'பைக்கில் போகலயா?'
'இல்ல. ஒன் கூட வரணும்னு தோணுச்சி.'
'ஓ. புக்ஸ் ஏதாவது படிச்சியா?'
'சும்மா பொரட்டிப் பார்த்தேன்.'
கண்டக்டர் 'டிக்கெட்' என அருகில் வர, கேப்ரியல் காலேஜ் பேரைச் சொல்லி 'டூ' என்று நூறு ரூபாய் நோட்டை நீட்டினான்.
கண்டக்டர் அவனை ஒரு முறை முறைத்து 'எங்கருந்து தான் வருதுகளோ? ரெண்டு டிக்கெட் 12 ரூபா. இதுக்கு நூறு ரூபா நீட்டினா நான் என்ன பண்ணுவேன்? சில்லறை எடுத்துட்டு வர மாட்டாங்க. ஆனா கண்டக்டர் ஒரு ரூபா தரல ரெண்டு ரூபா தரலன்னு புறணி மட்டும் பேசுவாங்க. இத வச்சிட்டு நாங்க என்ன கோட்டயா கட்டப் போறோம்? நம்மூர்ப் பயலுக தான் அப்படின்னா இப்ப வெளி நாட்டுல இருந்து வந்து உசிர வாங்கறாங்க.'
சம்யுக்தா கோபப்படாமல் சொன்னாள்.
'கண்டக்டர் சார். சில்லறை வேணும்னா சில்லறை தாங்கன்னு கேளுங்க. அத விட்டுட்டு என்னென்னமோ பேசாதீங்க. இந்தாங்க 12 ரூபா.'
அவள் தன் அழகான பேக்கைத் திறந்து மணி பர்சை எடுத்து ஒரு பத்து ரூபாய்த் தாளும் ஒரு ரெண்டு ரூபாய் நாணயமும் நீட்டினாள்.
கண்டக்டர் கேப்ரியேலிடம் நூறு ரூபாய்த் தாளைத் தந்து விட்டு அவளின் 12 ரூபாயை வாங்கிக் கொண்டு டிக்கட் தந்தார். பின்பு கூட்டத்தில் காணாமல் போனார்.
கேப்ரியேல் சம்யுக்தாவிடம் திரும்பினான்.
'ஏன் கண்டக்டர் இப்படி டென்ஷனாய் இருக்கிறார்?'
'அவர் வேல அப்படி. ஆமாம். டென்சில் உங்க ஊர்க்காரரா?'
'இல்ல. பக்கத்து நாட்டுக்காரர்.'
ஆ என்றாள் சம்யுக்தா.
'இங்க வந்து தான் பழக்கம்.'
'சரி. ஒன்னப் பத்தி சொல்லு.'
'ம்... என்ன சொல்ல. எங்க அம்மா மலையோர கிராமத்த சேர்ந்தவங்க. என் கூட பொறந்தவங்க ஆறு பேரு. அப்பா நான் சின்ன வயசா இருக்கறப்ப வேற ஒருத்தர சேத்துகிட்டு அங்க போயிட்டாரு. நான் தான் எங்க குடும்பத்திலேயே படிக்கப் போனேன். ஹயர் ஸ்டடீஸ் இங்க கொஞ்சம் சீப்பா இருக்கறதுனால நாட்டோட ஸ்காலர்ஷிப்பில படிச்சிரலாம். அதான் இங்க வந்தேன். அதுவும் இந்தியால கலாச்சாரம், பண்பாடு, மக்கள் எல்லாம் வேற வேற இருந்தாலும் ஒண்ணா இருக்கறது ஆச்சரியமா இருக்கு. அதப் பாக்கணும்னு ஆச ஒரு பக்கம்.'
சம்யுக்தா வியந்தாள்.
உலகத்தில் கலாச்சாரம், பண்பாடை இன்னும் தக்க வைத்துக் கொள்ளும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று பெருமிதம் கொண்டாள்.
என்ன தான் சுகமோ நெஞ்சிலே என்று பஸ்ஸில் ஒலிபரப்பான பாடல் நெஞ்சை வருடியது.
அடுத்த பஸ் ஸ்டாப்பில் மக்கள் கூட்டமாக ஏறினார்கள். பஸ் மூச்சு வாங்கத் தொடங்கியது. மெதுவாக நகர்ந்தது. பெண்கள் கூட்டம் காப்ரியேல் இருக்கும் சீட் வரை வந்து பிதுங்கியது. பஸ்ஸின் மேல் கைப்பிடியைப் பிடித்திருந்த பெண் காப்ரியேலைப் பார்த்ததும் திரும்ப ஒரு பார்வை பார்த்து விட்டு சேலைத் தலைப்பை நன்கு இழுத்து தெரிந்த வயிறை சற்றே மறைத்துக் கொண்டாள். காப்ரியேல் அவள் மேல் இடிக்காதவாறு சம்யுக்தாவின் பக்கம் நகர்ந்தான்.
கண்டக்டர் மேலும் கத்திக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர, பஸ்ஸில் கலவையான குரல்கள்.
'கொஞ்சம் தள்ளி தான் நில்லுங்களேன்.'
'இடம் இல்லெல்ல.'
'எதயாவது சாக்கு சொல்லி பொண்ணுங்கள இடிக்கறதுக்குன்னே வர்ரது.'
'ஆமாம். எல்லாம் நயந்தாரா, சமந்தா. இடிக்க வராங்களாம்.'
'ஏய்.. நீ வாய் குடுக்காம வாடி.'
'பின்ன என்னடி. கால் வலிக்குது. எரும மாடு மாதிரி மிதிக்கிறான்.'
'பேசாம வாடி. பொறுக்கிப் பசங்க மாதிரி தெரியுது. ஏன் வம்பு?'
கூட வந்த பெண் கீச்சுக் குரலில் அதட்ட, மிதிபட்ட பெண் முனகலோடு நிறுத்திக் கொண்டாள்.
காப்ரியேல் சம்யுக்தாவிடம் கேட்டான்.
'ஏன் இவ்ளவு கூட்டம்?'
'இன்னைக்கு முகூர்த்த நாள். அதனால?'
'ஒங்க ஊர்ல முகூர்த்த நாள்ல தான் கல்யாணம் வைப்பீங்களா?'
'ஆமாம். எங்க ஊரு கல்யாண விசேசங்கள பத்தி பேசணும்னா வாரக் கணக்கில ஆகும்.'
'ஓ. பெண்கள் இவ்ளோ நக போட்டுருக்காங்க.'
'ஆமாம். அது ஒருத்தரோட கௌரவத்தயும் அந்தஸ்தையும் காட்றது.'
'ஆனாலும் இவ்ளோ நக தேவயா?'
'அதுல நெறய விஷயம் இருக்கு. கணவனுக்கு உதவி தேவைப்படறப்ப மனைவி அந்த நகையை பயன்படுத்திப்பா. கணவனால கைவிடப்பட்டாலோ இல்ல இன்ன பிற காரணங்களினாலெயோ ஏதாவது பண முடை ஏற்பட்டா இந்த நகைங்க உதவும்.'
'சரி. அத வீட்ல வச்சுக்க வேண்டியது தான. ஏன் இந்த ஃபங்க்ஷன் அப்போ நக ஸ்டாண்ட் மாதிரி வரணும்.'
'அதுலயும் நெறய விஷயம் இருக்கு. சொந்தக்காரங்க கிட்ட தன் வீட்டுக்காரர் தன்ன நல்லா வச்சிருக்கிறார்னு காட்டிக்க. கல்யாணத்துக்கு அப்பா அம்மா வந்தா நீங்க போட்ட நகையை பத்திரமா வச்சிருக்கேன். வேற நகையும் என் வீட்டுக்காரர் வாங்கிப் போட்டுருக்கார்னு காட்டிக்க. அப்புறம் ரொம்ப டீப்பா போனா இதப் போடறதுனால மருத்துவ குணம்லாம் இருக்காம்.'
'அப்படியா?' என்ற காப்ரியேல் பக்கத்தில் , தூரத்தில் நின்று கழுத்து நிறைய நகைகளை மாட்டிக் கொண்டு தலை நிறைய பூ வைத்துக் கொண்டு பட்டு சாரி சர சரக்க சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டு இருந்த பெண்களை ஆச்சர்யத்தோடு பார்த்தான்.
திடீரென்று அவன் முகம் மாறியது.
சட் என்று எழுந்தான்.
சம்யுக்தா இன்னும் ஸ்டாப் வரல இவன் ஏன் எழுந்துட்டான் என்று பார்த்தவள் அவன் அடுத்து செய்த விஷயத்தைப் பார்த்து அதிர்ந்தாள்.

(தொடரும்)

 
Interesting. Waiting eagerly for next twist. Jewels la ivalavu irrukka? Interesting. Tq author ji for informations .
I never thought in this view,always think unnecessary, and indecent people.
 
Top