Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Rishiram's kaathal pookkum kaalam chapter nine

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 9

புத்தகத்தை வீசி விட்டு மயங்கிப் போன அம்மாவிடம் ஓடினாள் சம்பதா.
'அம்மா! அம்மா!'
பூரணி சம்யுக்தாவின் உதவியுடன் அம்மாவைத் தூக்கி பெட்டில் போட பாலு அங்கிள் ஒரு டம்பளரில் நீரோடு வந்தார். நீரை அம்மாவின் முகத்தில் தெளிக்க மெதுவாய் கண்களைத் திறந்தார் அம்மா.
திறந்து கொண்டு 'ம்..ம்..' என்று முனகினார்.
'அங்கிள்! எனக்கு பயமா இருக்கு. ஏதாவது ஹாஸ்பிடலுக்கு போலாம்.' சம்பதா நடுங்கிய குரலில் கேட்க அவளது கையைப் பிடித்தார் அம்மா.
'வேண்டாம்... எனக்கு ஒண்ணுமில்ல. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா சரி ஆயிரும்.'
பூரணி 'நான் வேணும்னா இன்னைக்கு தங்கவா?' என்று கேட்க, சரி என்பது போல் தலை ஆட்டினாள் அம்மா.
பூரணி உடனே பாலுவிடம் திரும்பி, 'என்னங்க! நீங்க வீட்டுக்குப் போயி யோகனுக்கு துணைக்கு இருங்க. அம்மா நாளைக்கு காலெல வருவான்னு சொல்லுங்க. ஃப்ரிட்ஜ்ல மாவு இருக்கு. ரெண்டு தோச சுட்டு பொடி வச்சு சாப்டுக்குங்க.' என்றாள்.
பாலு அங்கிள் தலை ஆட்டி விட்டு 'நான் வரென்.' என்று எல்லாரிடமும் விடை பெற்று சென்றார்.
அம்மா கண்களை மூடி சாய்ந்து இருக்க, அம்மாவையே பார்த்தனர் இரு சகோதரிகளும்.
அம்மா தன் பேரைப் பார்த்ததும் சந்தோஷம் தானே பட வேண்டும்?
பழைய புத்தகம் திரும்பி வந்ததும் ஆச்சர்யம் தானே பட வேண்டும்?
ஏன் தூக்கி வீசினாள்? ஏன் மயங்கி விழுந்தாள்? அதைப் பார்த்த உடன் ஏன் மயங்க வேண்டும்?
விடை தெரியா கேள்விகள் மனதைப் போட்டு பிராண்ட விடை சொல்ல வேண்டியவள் சோர்வாய் கண் மூடி படுத்திருப்பதைப் பார்த்ததும் கொஞ்ச நாள் கழித்து அம்மாவின் உடல் நிலை சரியானதும் இதைப் பற்றி கேட்கலாம் என்று இருவரும் முடிவெடுத்தார்கள். சம்பதா குப்புற கிடந்த அந்த புத்தகத்தை எடுத்து தன் அறைக்கு சென்று புத்தக அலமாரியில் உள்ள புத்தகங்களுக்கு மத்தியில் அதை வைத்தாள்.
அம்மாவும் அப்பாவும் காதல் திருமணம். இரு குழந்தைகள் பிறந்தபிறகு அப்பா அம்மாவை விட்டுச் சென்று வேறு ஒருத்தியை திருமணம் செய்து கொண்டார் என்று அம்மா பல தடவை சொல்லி இருக்கிறார். அதைக் குறித்து மேற்கொண்டு கேட்கக் கூடாது என்று ஆர்டர் வேறு.
எல்லாப் பெண் குழந்தைகளும் பள்ளியில் அப்பா பெருமை பேசும்போது, தோழிகளை அவர்களது அப்பாக்கள் கொஞ்சும் போது, அப்பாவுடன் பைக்கில், காரில் மற்ற மாணவிகள் செல்லும்போது இவர்களுக்கும் ஏக்கமாகத் தான் இருக்கும். ஆனால் மனதைத் தேற்றிக் கொள்வார்கள். அப்பா இல்லை என்கிற ஒரு குறை தவிர இவர்களை கண்ணும் கருத்துமாய் பார்த்துக் கொண்டாள் வசந்தி.
அப்பாவைப் பார்க்க வேண்டும். இந்த நல்ல அம்மாவை விட்டு விட்டு எப்படி இன்னொரு பெண்ணை கல்யாணம் பண்ணினீர்கள் என்று அப்பாவிடம் கேட்க வேண்டும் என்று இருவரும் துடிப்பர்.
ஆனால் ஒரு தடவை 'அப்பாவைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. இப்போது அவர் எங்கிருக்கிறார்?' என்று சம்பதா கேட்டதும் தான் தாமதம். அந்தக் கேள்விக்கு பதில் அளிக்காததோடு அன்று முழுவதும் அம்மா சாப்பிட வில்லை. சம்பதா ஆயிரம் சாரி சொன்னாலும் பிடிவாதமாய் இருவரிடமும் மௌன விரதம் கடைபிடித்தாள்.
வேறு வழியின்றி பாலு அங்கிளிடம் சொல்ல, அவர் வந்து சமாதானப்படுத்தியவுடன் தான் சிறிது இறங்கி வந்தாள் வசந்தி.
அழுது அழுது கண்ணீர் சிந்தும் முகத்தோடு அவரிடம் அவள் கேட்டது இன்றும் இவர்களுக்கு நினைவு இருக்கிறது.
'அவர் தான் வேண்டாம்னு போயிட்டாரே! இவங்களுக்காக நான் எவ்ளோ செஞ்சாலும் அப்பாவைத் தான் தேடறாங்க பாத்தீங்களா? எல்லாம் நான் வாங்கி வந்த வரம். அழுது அழுது சாவணும்னு என் ஜென்மம் படைக்கப்பட்டிருக்கு போல.'
'சரி. அவ தான் ஒன்ன ஏன் கைவிட்டார்னு கேட்கத்தான் அப்படி கேட்டேன்னு சொல்றாளே?'
'அந்தாள் சவகாசமே வேண்டாம்னு நான் இருக்க இவ போயி அவரப் பார்த்து கேள்வி கேட்கப் போறாளாமா? ஒங்களுக்கே தெரியுமில்ல. உருகி உருகி காதலிச்ச என்ன விட்ட அவன் பொண்ண பாத்த ஒடனே அவ கேக்கற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிறப் போறானாக்கும்?'
'சரி.சரி. சின்னப் புள்ள. ஏதோ கேட்டுருச்சி. விட்று. பெருசானா புரிஞ்சுக்கும்.'
சம்பதா வந்து மடியில் விழுந்து அழ, மனம் மாறினாள் வசந்தி. அன்றோடு முடிந்தது. இப்போது வரைக்கும் எத்தனயோ சந்தர்ப்பங்கள் வந்தாலும் அக்காவும் தங்கச்சியும் அந்த டாபிக் மட்டும் போகாமல் இருந்தனர். டிவியில் அஜித் பாசமாய் மகளைப் பார்க்கும் 'கண்ணான கண்ணே..' பாடல் வந்தால் கூட இருவரும் ரிமோட்டில் வேறு சானல் மாற்றி விடுவார்கள்.
ஆனாலும் அந்த வயதுக்குரிய தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை அவர்களையும் அரித்தது.
அப்படி என்ன தான் நடந்தது அம்மாவுக்கும் அப்பாவுக்கும்?
உருகி உருகி காதலித்தவர்கள் பிரிந்தது எப்படி?
இப்போது இந்த புத்தகத்தை பார்த்து மயங்கி விழுந்ததற்கும் அப்பாவிற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?
கேள்விகள் சரமாரியாய் வந்தபடி இருக்க, விடை தெரியாமல் தூங்கிப் போயினர் அந்தக் கல்லூரி குமரிகள்.
மறு நாள் அவர்கள் எழும்போது முதல் அத்தியாயத்தில் பார்த்தது போலவே சுறு சுறு அம்மா. பம்பரமாய் சுழல மனம் அம்மாடி (அப்பாடி கூட இவர்கள் சொல்வதில்லை.) என்றது. பூரணியை அவர்களது வீட்டில் ட்ராப் பண்ண சம்பதா போக சம்யுக்தா பஸ் நிறுத்தம் நோக்கி நடந்தாள். பஸ் நிறுத்தத்தில் நாலைந்து ஸ்கூல் பையன்கள் செல்ஃபோனில் எதையோ பார்த்து சிரித்தபடி இருக்க, இரு மத்திய வயதுப் பெண்கள் தங்கள் நாத்தனார்களின் தலையை உருட்டிக் கொண்டிருந்தார்கள். ஒரு வயசானவர் 'என்ன நாடு இது? டயத்துக்கு பஸ் வர மாட்டேங்குது. யார் இத கேக்கறா? லோகம் கெட்டுடுத்து.' என்று டென்ஷன் ஆனார்.
வயிறு நிறைய கூட்டத்துடன் ஒரு டவுண் பஸ் வர, ஓடிச் சென்று பஸ் அருகில் சென்றாள் சம்யுக்தா. பஸ்ஸில் இருந்து ஒவ்வொருவராய் இறங்க, 'ஹாய் சம்யு.' என்ற குரல் கேட்டு திரும்பினாள். பைக்கில் டென்சிலும் காப்ரியேலும். 'கம்மான் யா. ட்ரிபிள்ஸ் போலாம்' என டென்சில் சொல்ல 'நோ. ட் ராஃபிக் ரூல்ஸ் ஃபாலோ பண்ணனும்' என்றாள். 'பைக் எங்கே?' என்றதற்கு 'தங்கச்சி எடுத்திட்டு போயிருக்கிறா.' என்று பதில் அளித்தாள். 'சரி வரென். நீங்க முன்னால போங்க' என்று பஸ்ஸில் ஏறி இரண்டு சீட் தள்ளி இருவர் சீட் காலியாய் இருக்க அங்கு போய் ஜன்னல் ஓரம் இருந்தாள்.
கண்டக்டர் விசில் அடிக்க, பின்னால் ஏறிய காப்ரியேல் சட் என்று வந்து சம்யுக்தாவின் அருகில் அமர்ந்தான். 'ஹாய்' என அவன் சொல்ல திகைத்தாள் சம்யுக்தா. பஸ் முழுவதும் அவர்கள் இருவரையும் பார்ப்பது போல் அவளுக்குத் தோன்றியது.

(தொடரும்)
 
  • Like
Reactions: Ums
Top