S2 - The Travel of காதல் கம்பார்ட்மெண்ட் by நிம்மி நாவல்ஸ்
கதை தலைப்பை பார்த்து மீண்டும் ஒரு இரயில் சிநேகமோ என ஆவலாக படிக்க வந்தவள் ( it's me
) தலை குப்புற விழுந்து எழுந்து அடி, மிதி வாங்கி இவர் தான் ஹீரோ என தெரியாமலே அவரை கலாய்த்து இறுதியில் எம் ராஜாவுக்கு தளபதியாக மாறிய வீர வரலாற்றை நினைக்கும் போது இப்போதும் மெய்சிலிர்க்கின்றது போங்கள்

ஓகே இப்ப கதைக்குள் போவோம்.
இராஜம்மா
சில பதிவுகளில் வந்தாலுமே நம் மனதில் நீங்கா இடம்பிடித்த வீரப்பெண்மணி. பால் மணம் மாறாத பேத்திக்கு காளியாய் நின்று அரண் காத்தவர்.
அகத்தியன் பிரபாகரன்
என்னை பொறுத்த வரை இவர் முழு ஸ்டிடி தெரியாத வரைக்கும் still Upper Birth Hero தான். பாதி கதை முழுசும் கம்பார்ட்மெண்ட் ல பயணிக்குது இல்லயா? அதுல விவரமறியாத சிட்டுப்பெண்ணுக்கு தூரத்திலிருந்து பாதுகாப்பு கொடுத்த அசகாய சூரர்..But a notable hero material.
வெற்றிச்செல்வன்
To me he is Bamboo hero..ஏன்னா சாரோட இன்ட்ரோ அப்படி
ஒரு backpack யோட மூங்கில் காடுகளே னு சுற்றி திரிவேன் னு என்னை அநியாயத்துக்கு நம்ப வச்ச அக்மார்க் டாணாக்கார். இவருடைய பின்புலம் பிரமிக்க வைக்கும் நீங்க படிக்கும் போது. விபத்து சமயத்தில் இரயில் சிநேகத்தில் அறிமுகமான பெண்ணுக்கு நடந்ததை கண்டு இதயம் வேதனையில் துடித்தும் சட்டென நிலைமையை கையிலெடுத்து கதையின் போக்கையே திசை திருப்புவது எதிர்பாராத ஒன்று. சாரின் அண்ணன் கேரக்டர் பாசமலர் சிவாஜிக்கே டஃப் கொடுக்கும் வகையில் பின்னி பெடல் எடுத்திருப்பார். நந்தனுக்கு மச்சானாய், விபத்தில் சிக்கிய மக்களை மீட்டு கரை சேர்க்கும் காவலனாய், மதுமிகாவின் நேசமிகு தோழனாய், அகத்தியனின் நண்பனாய், கிட்டியின் சகோதரனாய் வெற்றி பரிமளிக்கும் விதம் அருமை. Love u Tanakaar

யதுநந்தன்
One of sweetest yet lovable hero in ur history so far Darli. சிறுவயதில் பெற்றவர்களை இழந்தாலும் மனம் தளராது சுயம்புவாய் தன்னை தானே செதுக்கி கொண்டு நந்தன் மார்ட் என பல்பொருள் அங்காடித் உருவாக்கி பல கிளைகளுடன் உலா வரும் வெற்றி நாயகன். காலத்தின் வசத்தில் anonymous காலில் தன் காதலியை கண்டுபிடித்தவர்..(why respect means unknowingly am working as Thalapathi for my K7 Maharaj, so that மரியாதை) இளமையிலேயே தனிமையின் கொடுமையை அனுபவித்ததால் முகம் தெரியா பெண்ணாய் இருப்பினும் அவளுடன் தொடர்பு கொண்டு அவள் துயர் கலைத்து ஆன்லைனில் காபி வித் காதல் பயின்ற காதல் இளவரசன். தன் காதலியை சந்திக்கும் தருணத்தில் நடக்கும் விபத்தில் இவர் வாழ்க்கையும் சற்றே தடம் புரள, விதியின் ஆட்டமோ ரைட்டரின் மதியோ சில பல ஸ்பீட் ப்ரேக்கர்களை அனாயசாமாக தாண்டிய ராஜாவின் காதல் கம்பார்ட்மெண்ட் படுக்குழியில் விழ ஸ்தம்பித்து நின்றது சில தினங்களே. மீண்டும் தன்னை புதுப்பித்துக்கொண்டு தன் மனங்கவர்ந்தவளின் சிறிய சிறிய ஆசைகளையும் உற்றவனாய் நிறைவேற்றி இறுதியில் தன் இதய ராணியோடு கைக்கோர்த்து டிராக்குலாக்களின் தயவில் காதல் சாம்ராஜ்யத்தில் என்றும் முடி சூடா அரசன் அரசியாய் பவனி வருவது மிக அழகு.
மதுரயாழினி
'பால் போல பதினாறில் எனக்கொரு கேர்ள் பிரண்ட் வேணும் ' னு பாடுற பசங்களுக்கு ஏத்த பொண்ணு இந்த யாழி. என்ன 16 பதிலா 18 அவ்வளவுதான்
இராஜம்மாகிட்ட செல்லம் கொஞ்சும் பேத்தியாக, ஒரு நொடிப்பொழுதில் தனித்து விடப்பட்டு பயத்துடன் இரயிலேறும் சிறு பெண்ணாக, வலிய வந்து அவளை அரவணைத்துக்கொண்ட மதுமிகா, வெற்றி, அகத்தியனுக்கு பாசமிகு தங்கையாக, சொத்தோடு கன்னியையும் கட்டம் கட்டி தூக்கிய வில்லனை தவிடு பொடியாக்கும் வனபத்ரகாளியாக, தனக்கு பிடித்த கொண்டைக்கடலை படத்தை இரசிக்கும் சிறு பெண்ணாக, விட்டுச்சென்ற பந்தத்தை எப்படி காப்பாற்றுவது என தவித்து பின் மெல்ல புரிந்து தன் மனதில் தடம் பதித்த நந்துப்பாவின் யாழியாக இவளின் பல பரிமாணங்கள் பிரமிக்க வைக்கும். Such a sweetie pie she is
மதுமிகா
மறக்கவே முடியாத கதாபாத்திரம்..இப்ப நினைச்சாலும்
..நீங்க படிச்சு பாத்து தெரிஞ்சுகோங்க..one of unlucky but beautiful soul n pillar of this story. Love u loads Madhumika




நிம்மி
ஆரம்பமே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ல ஒரு காதல் கம்பார்ட்மெண்ட் னு அசத்தலா ஆரம்பிச்சு அதுல வரும் பயணிகளை நீங்க ஒரு புள்ளியில் கோர்த்த விதம் Awesome Darli. தடம் புரண்டு ஓடுன எக்ஸ்ப்ரஸ்ல நிலை குலைந்து போன பயணிகளை இப்ப நினைக்கும் போதும் 


வருது. மாமா மாமி கேரக்டர், வெற்றி, அகத்தியன், மது, யாழினி interaction செமயா இருந்தது. So far I read light feel stories from you. But in this I experienced bunch of emotions Darli. I cried, mourned, touched deep down, laughed n felt a complete pleasure at the end da. If I quote scenes for my feelings then new readers would know every bit. ஒரு இடத்தில் கூட சுவாரஸ்யம் குறையாமல் செம விறுவிறுப்போடஅடுத்து என்ன நடக்குமோ னு பக்கு பக்கு னு நெஞ்சை பிடிச்சி காத்திட்டிருந்தது லாம் ஒரு காலம். முதல் முறையா ஒரு ஹீரோக்கு தளபதியா சேர்ந்தது தான் சேர்ந்தேன்.. அவர் கூட போர் முனையில சண்டை போட்டத விட அவரு சட்டைக்கு பட்டன் தைச்ச நாட்கள் தான் அதிகம்
வழக்கமா தலைவன் தலைவிக்கான உங்க காதல் குறுந்தொகை பாடலுக்கு வெயிட் பண்ணிட்டிருந்தேன்..லாஸ்ட் எபியில அழகுத்தமிழ் ல உங்க ஸ்டைலில் மீண்டும் மீண்டும் ரசிச்சு படிச்சேன். கொல்கத்தாவில் தொடங்கிய இரயில் பயணம் இடையில் பல திடுக்கிடும் திருப்பங்களுடன் பயணித்து இறுதியில் சென்னையை வந்தடைந்த இந்த S2KC - The Travel of காதல் கம்பார்ட்மெண்ட் உங்கள் கதைப்பெட்டகத்தில் சேர்ந்த மற்றுமொரு வைரக்கல்
️
️
️
️என்னால் முடிந்தால் உங்களுக்கும் Madame Tussadues ல ஒரு குட்டி சிலை வைக்க ஆசை டார்லி. Love you for providing a wholesome feel while travelling in this compartment. Enjoyed to the core n happy you have completed Darli. Congratulations and Best wishes for the competition. Looking forward for the sequel of this story very soon...Cheers n once again Wishing u Good Luck Darli








கதை தலைப்பை பார்த்து மீண்டும் ஒரு இரயில் சிநேகமோ என ஆவலாக படிக்க வந்தவள் ( it's me
ஓகே இப்ப கதைக்குள் போவோம்.
இராஜம்மா
அகத்தியன் பிரபாகரன்
வெற்றிச்செல்வன்
யதுநந்தன்
மதுரயாழினி
மதுமிகா
நிம்மி