Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

STRAWBERRY KANNE EPISODE- 2

Advertisement

Gayathri Ragavendra

Member
Member
என் முதல் பதிவினை ஆதரித்த அனைவருக்கும் , என் மனமார்ந்த நன்றிகள்:).இதோ என் அடுத்த பதிவுடன் வந்துவிட்டேன் தோழிகளே !!!!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே

கண் விழித்து பார்க்கையில், மருத்துவமனையில் இருந்தாள் அபி. நம்ம எப்படி இங்கே வந்தோம், என்று யோசித்து கொண்டிருந்தாள்.

ஜன்னல் வழியாக அவள் அறையை கடக்கும் செவிலியரை அழைக்க எத்தணிக்கும் பொழுது ,வேகமாக திறக்கப்பட்டது அறைக்கதவு உள்ளே வந்தது மலர் .

அபி என்னாச்சு டா ? மலர் பதற்றத்தோடு கேட்க.

ஒன்னு இல்ல டா இப்போ நல்லா இருக்கேன் .

நீ தான் என்ன இங்கே அட்மிட் பண்ணியா மலர் ?

என்ன அபி சொல்றே ,நீ அனுப்பிய மெசேஜ் பாத்துட்டு தான் நானே வரேன் .

ஹே… விளையாடாத மலர் ,என் போன் எங்கனே எனக்கு தெரியல என்று சுற்றி பார்க்கும் பொழுது ,பக்கவாட்டில் ஒரு பூங்கொத்து இருந்தது .

அதற்க்கு கீழே இருந்த போன் ஐ எடுத்தவள், மலருக்கு தான் அனுப்பியதாக சொன்ன மெசேஜ் ஐ பார்த்தாள்.

எனக்கு நீ தான அனுப்பினே ? என்பதுபோல் பார்த்தாள் மலர் .

உண்மையாகவே அவள் அனுப்பவில்லை என்றாலும் ,மலரிடம் ஆமாம் என்பதுபோல் தலையாட்டினாள். மனதில் (ஒரு வேளை அரைமயக்கத்தில நம்ம கூட அனுப்பியிருக்கலாம் )என்று அவளே ,அவளுக்கொரு சமாதானம் கூறிக்கொண்டாள் .

ஆனாலும் மலர் சென்ற உடன் இதை பற்றிக்கண்டிப்பாக தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாள் அபி.

பிரிண்சிபால் ரூம் ல இருந்து வெளிய வரும்போதே ,தள்ள ஆரம்பிச்சிட்டு டா.
கண்ட்ரோல் பண்ணிட்டு, லான் ல நடந்து வரும்போது கீழ விழறேன்னு தெறிது ,ஆனா பேலன்ஸ் பண்ண முடியல டா என்று மலரிடம் கூற ,

அப்போ யாரோ நம்ம டீச்சர்ஸ் தான் உன்ன இங்க அட்மிட் பண்ணியிருப்பாங்க .

ஆமாம் என்று ஆமோதித்தாள். சரி அபி , அதைவிடு நீ நல்ல ரெஸ்ட் எடு .

எப்போ வீட்டுக்கு போலாம்னு நா சிஸ்டர் ட கேட்டுட்டு வரேன் என்று வெளியே சென்றாள் மலர்.

மலர் சென்றதும் அபிக்கு அதே யோசனை தான் மலர் எப்படி வந்தாள் ? யார் அவளுக்கு கூறியது ?என்னோட போன் ல தான் பாஸ்வோர்ட் இருக்கே? என்று .

அதற்குள் மலர் உள்ளே நுழைய , என்ன சொன்னாங்க ?என்ற அபியிடம்.

ஒன்னு இல்ல அபி , வீட்டுக்கு போலாம் னு சொல்லிட்டாங்க . நாளைக்கு வந்து பிளட் ரிப்போர்ட் மட்டும் வாங்கிட்டு , டாக்டர்அ பார்க்க சொன்னாங்க .

அப்போ வா ,நான் உன்ன வீட்டுல விட்டுட்டு போறேன் என்றாள்.

வீட்டிற்கு வந்து ,அபிக்கு தேவையானவற்றை செய்துவிட்டே மலர் கிளம்பினாள்.

மதியம் சாப்பிட்டுவிட்டு உறங்கியவள் , மாலை ஆறு மணிக்கு தான் எழுந்தாள்.

சோபாவில் அமர்ந்து, வானொலியை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கும் பொழுது அருகில் இருந்த பூங்கொத்தை பார்த்தாள் . அதில் ஒரு கவர் இருந்தது .

மலர் ,மெசேஜ் லா வச்சிட்டு போயிருக்கா என்று நினைத்துக்கொண்டே அதை எடுத்து பார்த்தாள் .அதை பார்த்துவிட்டு மலருக்கு அழைக்க , அவள் எடுக்கவில்லை வேலையா இருப்பா என்று நினைத்துக்கொண்டு ,டிவி பார்த்துக்கொண்டே உறங்கிப்போனாள் அபி .

மணி பத்தாகியது, மலர் அபிக்கு அழைக்க ,அந்த அரவம் கேட்டு விழித்தவள் ,மலரோடு ஒரு அரைமணிநேரம் பேசிவிட்டு படுக்கையறைக்கு சென்று கட்டிலில் புரண்டுக்கொண்டிருந்தாள் .

பகலில் உறங்கியதால், உறக்கம் வராமல் சுவரில் இருந்த அந்தப்புகைப்படத்தை பார்த்துக்கொண்டே நினைவுகளை அசைபோட்டுக்கொண்டிருந்தாள் அபி.

ஒரு அரை மணி நேரத்தில் , உறங்கியும் போனாள் . எப்பொழுதும் உறக்கம் வாரா இரவுகளில் அபியை தூங்க வைப்பது அந்த புகைப்படமே .

அன்று திங்கட்கிழமை,காலையில் எழுந்து குளித்து தயாராகிவிட்டு மருத்துவமனைக்கு கிளம்பினாள். மணி பத்திற்கு அப்பொய்ன்ட்மென்ட் இருந்தது .அன்று அரைநாள் பர்மிஷன் போட்டிருந்தாள் . ரிப்போர்ட் ஐ வாங்கிவிட்டு மருத்துவரை பார்த்தபோது,

இப்போ எப்படி பீல் பண்றீங்க அபி ?

இப்போ ஓகே டாக்டர், கொஞ்சம் உடம்பு வழி மட்டும் தான் இருக்கு .
அதற்க்கு அவர், வைரல்பிவர் இருக்குமோனு தா செக் பண்ண சொன்னே மா , ஆனா இல்லை, ரொம்ப அனிமிக் ஆ இருக்கீங்க இந்த டேப்லட்ஸ் மட்டும் எடுத்துகோங்க .

நல்ல சாப்பிடணும் மா, என்றவரிடம் .

டாக்டர் என்ன இங்க அட்மிட் பண்ணது யாருனு தெரியுமா ??

உங்களுக்கே தெரிலயா ??

ஆமா டாக்டர் என்று நடந்ததை கூற .

அப்படினா ஒன்னு பண்ணுங்க , முன்னாடி கௌன்டர்ல ஒரு ரெஜிஸ்டரேஷன் புக் இருக்கும், அதுல கண்டிப்பா அவங்க டீடெயில்ஸ் தந்திருப்பாங்க .அங்க போய் கேட்டுப்பாருங்க மா என்றார் .

ஓகே டாக்டர் , தேங்க யூ சோ மச் என்றுவிட்டு, கவுண்டரில் இருந்தவரிடம் கேட்க ,அவர் விவரங்களை ஒரு சீட்டில் எழுதிக்கொடுத்தார்.

அதில் அவள் பள்ளியின் பெயரும் ,உடன் ஒரு அலைபேசி என்னும் இருந்தது.

அவளுடன் பணிபுரியும் ,சக ஆசிரியர்களுள் யாரேனும் தான் ,தன்னை இங்கு சேர்த்திருப்பர் என்று தீர்மானித்தாள் அபி. நேரில் சென்று பேசிக்கொள்ளலாம், என்று பள்ளிக்கூடம் செல்ல ஆட்டோவில் ஏறினாள் .

அப்பொழுது அழைத்த மலர், எங்க இருக்க அபி ? என்று நலம் விசாரித்த பிறகு , இன்னிக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடுடா என்று கூற ,

சும்மா வீட்ல இருந்தா போர் தான் அடிக்கும் ,அதுபோக ஐம் ஓகே பேபி என்று கொஞ்சலும் கெஞ்சலுமாக கேட்க ,

சரி உன் இஷ்டம். நீ ஒரு விஷயம் முடிவு, பண்ணிட்டா மாத்திக்கவேமாட்டே அபி. எனக்கும் நீ இல்லாம போர் அடிக்குது பத்திரமா வந்து சேறு .

ஆமா டா, சொல்ல மறந்துட்டே அந்த பொக்கே சூப்பர் ஆ இருந்துது .

எந்த பொக்கே ??? அபி

நேத்து , என்ன பார்க்க வரப்போ வாங்கிட்டுவந்த இல்ல ,அதான் மலர் .

அபி நான் எதுவும் வாங்கிட்டு வரலன்னு கலாய்க்கிறியா ???

மலர் பொய்கூறவில்லை என்பது, அவள் பேசுவதில் தெரிந்தது .அப்போ அதை அங்கு வைத்து யார் என்ற கேள்வி மனதில் உதிக்க

அதில் எழுதியிருந்ததை, ஞாபக படுத்தியவள் கண்கள் விரிய .மலரிடம் நான் அப்புறம் கூப்பிடுறேன் என்று அழைப்பை துண்டித்து விட்டு ,ஓட்டுனரிடம் அவள் வீட்டிற்கு செல்ல வழி கூறினாள் .

வீட்டிற்கு வந்ததும், வேகமாக கதவை திறந்து , சோபாவிலிருந்த பூங்கொத்தை எடுத்து பார்க்க அதில் ‘கெட் வெல் வர்ஷி ‘ என்றிருந்தது.

உடனே அந்த சீட்டிலிருந்த எண்ணிற்கு அழைத்த, அபி.

நீண்ட நேர , அழைப்பு மணிக்கு பின் அழைப்பேசி எடுக்கப்பட்டது.

ஹலோ , அஜய் ஹியர் என்றது அக்குரல் .

அப்படியே உறைந்துப்போனாள் அபி .

தொடரும் …..
:):):):):)
 
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி ராகவேந்திரா டியர்
 
Last edited:
Top