Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thogaikku Thoothuvan Yaaro - 2

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
தோகை 2:

அந்தி சாயும் நேரம்....காற்று வந்து முகத்தில் மோத...காரின் கதவுகளை திறந்து விட்டு....அந்த ஊரின் இயற்கையை ரசித்தபடி வந்து கொண்டிருந்தான் அஜய்.

மாலை கிளம்ப வேண்டிய பயணத்தை ...கலையிலே தொடங்கியதாலோ என்னவோ...இருளிற்கு முன் நன்னியூரை நெருங்கிக் கொண்டிருந்தான்.

ஊரின் பசுமை...அவனின் மன அழுத்தத்தை குறைக்க..மனநிலையில் முற்றிலும் மாறிப்போனான் அஜய்.

கண்ணனுக்கோ ஒன்றுமே புரியவில்லை.திடுதிப்பென்று உடனே கிளம்பலாம் என்று அஜய் சொன்னவுடன் அவனுக்கு தலையும் புரியவில்லை...வாழும் புரியவில்லை.

“சார் இப்பவேவா..?” என்று அவன் கேட்க...

“உடனே..” என்று அழுத்தி சொன்னான்.

“சார்...கேரவன் எல்லாம் நாளைக்கு தான் வரும்...அதுமட்டுமில்லாம..அங்க ஏற்பாடு எல்லாம் எப்படி பண்ணியிருக்காங்கன்னு தெரியலை...நாம எப்படி..?” என்று இழுக்க...

“டிரைவர் வேண்டாம் காரை நீங்க எடுங்க....இன்னைக்கு மட்டும் பக்கத்துல எங்கையாவது ஹோட்டல்ல தங்கிக்கலாம்...” என்றான்.

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்துக் கொண்டிருந்த அஜயைக் கண்டவனுக்கு வியக்காமல் இருக்க முடியவில்லை.இருந்தாலும் அவன் சொல்லைத் தட்டவும் முடியவில்லை.

“ஹோட்டலில் தங்கிக் கொள்ளலாம் என்று சொன்னவன்...இடையில் வரும் போதே..அந்த முடிவையும் மாற்றிக் கொண்டான்.காரை நேரா அந்த ஊருக்கே விடுங்க...” என்று சொல்லவும்..கண்ணனும் அப்படியே ஓட்டிக் கொண்டிருந்தான்.

இருபுறமும் தெரிந்த பசுமையை கண்ணனும் ரசிக்கவே செய்தான்.

“இப்படி பசுமையை எல்லாம் சிட்டியில் எங்கே பார்க்க முடிகிறது..?” என்ற ஏக்க பெருமூச்சு அவனிடம் இருந்து வெளிப்பட...

“என்ன கண்ணன்..மூச்செல்லாம் பலமா இருக்கு..?” என்று கேட்டான் அஜய்.

“அது ஒண்ணுமில்லை சார்...இப்படி வாய்க்கால்,வரப்புன்னு பார்த்தே எவ்வளவு வருஷம் ஆச்சு...சின்ன வயசுல..பாட்டி,தாத்தா ஊருக்கு போனப்ப பார்த்தது..இப்பவெல்லாம் எல்லாமே மாறிட்டது தானே சார்...அதைத்தான் நினைச்சுகிட்டே வந்தேன் சார்...” என்றான்.

“உண்மைதான் கண்ணன்..” என்றான் அஜய்யும்.

அஜயை ஆச்சர்யமாய் பார்த்தான் கண்ணன்.எவ்வளவு பெரிய ஹீரோ...இவனுடைய கால்ஷீட்டுக்காக பலர் தவமாய் தவமிருக்க...இங்கே இவரென்றால்....சின்னப்பிள்ளை போல்...வேடிக்கை பார்த்துட்டு வராரே....என்று எண்ணிக் கொண்டான்.

கண்ணனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் அவர்களுக்கும் இயல்பான ஆசைகள்,விருப்பு,வெறுப்புகள் இருக்கும் என்று.

தன்னைப் பற்றி யாரும் கணித்து விடாதபடி ஒரு முக மூடியையே அஜய் போட்டுக் கொண்டிருந்தான்.

“சார்...இப்ப நாம ஊருக்குள்ள போனா...எங்க தங்குறது...கேரவன்...ஆட்கள் எல்லாம் இப்பதான் விழுப்புரம் கிட்ட வந்துட்டு இருக்காங்கலாம்...” என்று கண்ணன் சொல்ல...

“ஒன்னும் பிரச்சனையில்லை..அது வரைக்கும் கார்க்குள்ளேயே இருப்போம்..” என்றான் அசால்ட்டாய்.

“சரித்தான்..” என்று மனசுக்குள் எண்ணியவன்...”ஓகே சார்..” என்று முடித்துக் கொண்டான்.

கண்ணனுக்கு என்ன தெரியும் அவன் மன நிலையைப் பற்றி.

இவ்வளவு தூரம் நான் வரவேண்டிய அவசியம் என்ன..?” என்ற கேள்வியை நூறாவது முறையாக தனக்குத் தானே கேட்டுக் கொண்டான் அஜய்.

“வேற எதுக்கு...ஷூட்டிங்குக்கு தான்...” என்று தனக்குத் தானே சப்பக் கட்டும் கட்டிக் கொண்டான்.

நேரம் மாலை 5க் காட்ட...காற்று இப்போது பலமாக வீசத் தொடங்கியது.மேகமும் கருத்திருக்க...மழை வருவதற்கான அறிகுறிகள் தெரிந்தது.

“மழை வரும் போல சார்...” என்றான் கண்ணன்.

“வரட்டும் ....வரட்டும்..” என்பதோடு முடித்துக் கொண்டான்.

சற்று தள்ளி ஒரு வயதான பாட்டி..புல்லுக் கட்டைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு நடந்து கொண்டிருக்க...தாவணியை தலைக்குப் போர்த்தியவாறு ஓடி வந்தாள் சக்தி.

“பாட்டி...எதுக்கு இப்படி தள்ளாடி நடந்துட்டு இருக்கீங்க...? மழை வரப் போகுது...நடங்க சீக்கரம்..” என்றாள்.

“நான் கொஞ்சும் குமரியா தங்கம்....நீ வயசு புள்ளை,,,போக வேண்டியது தான்..உன் வேகத்துக்கு நான் ஈடு கொடுக்க முடியுமா..?” என்று அந்த பாட்டி கேட்க...

“சரி..புல்லுக் கட்டைக் குடுங்க..நான் தூக்கிட்டு வரேன்..” என்று அவள் வாங்க போக...

“சிஸ்டர்....” என்ற சொல்லில் திரும்பினாள்.

அங்கே ஒரு புதிய மனிதனைக் காணவும்....”சொல்லுங்க..!” என்றாள்.

“நாங்க இந்த ஊருக்கு சினிமா ஷூட்டிங்க்காக வந்திருக்கோம்...கேரவன் எல்லாம் பின்னாடி வருது...மழை வரும் போல இருக்கு...இந்த ஊர்ல தங்க ஏதாவது இடம் கிடைக்குமா..?” என்றான் கண்ணன்.

அவனை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்தவள்....”இங்க நீங்க தங்குற அளவுக்கு இடம் எல்லாம் இல்லையே...!” என்றாள்.

“ஹோ..ஓகே சிஸ்டர்...எனக்கும் புரிந்தது...இருந்தாலும் ஏதாவது ஒரு ஆப்சன் இருக்குமான்னுதான் கேட்டு பார்த்தேன்...கார் இருக்கு சிஸ்டர்..நாங்க அதுக்குள்ளயே இருந்துக்குறோம்..” என்றான்.

“சரிங்க..அது உங்க விருப்பம்..” என்றவள், அந்த பாட்டியிடம் இருந்த புல்லுக் கட்டை வாங்கிக் கொண்டு நடப்பதற்கும்...மழை லேசாக தூருவதற்கும் சரியாக இருந்தது.

கருமேகம் திரண்டிருக்க....வான மகள்...குளிர்வுடன் பூமியை நோக்கி தன் சாரல் துளிகளை அனுப்ப...தூறல் பட்ட இடமெல்லாம்....மண்மகள் சிவந்து....உயிர்வரை ஊடுருவும் ஒரு மண் வாசனையைக் கொடுக்க...சாலையின் இரும்புறமும் இருந்த..நெற்பயிர்களும்... சோளப்பயிர்களும்...ஆனந்த தாண்டவமாட...புல்லுக் கட்டைத் தூக்கி நடந்து கொண்டிருந்த சக்தியை உள்ளிருந்து ரசித்துக் கொண்டிருந்தான் அஜய்.ஆனால் அவன் மனதைக் கேட்டால்...

“சும்மாதான் பார்த்துக் கொண்டிருந்தேன்....இதில் என்ன இருக்கு..?” என்று சொல்லும்.

அஜய் காரில் அமர்ந்திருந்ததை சக்தி கவனிக்கவில்லை.பார்த்திருந்தாலும் அவளுக்கு ஒன்றுமில்லை.ஏன் என்றால் அவனை யாரென்றே அவளுக்கு தெரியாது.

இதை அஜய் அறிந்தால் அவன் நிலை...ஒரு மாநிலத்தின் முன்னணிக் கதாநாயகனை..தெரியாது என்று சொல்வது அவனுக்கு இழுக்கு அல்லவா..?

ஆனால் உண்மை அதுதான்.சக்திக்கு எப்பொழுதும் அதில் ஆர்வம் இருந்ததில்லை.எப்பொழுதாவது...தன் பாட்டியுடன் அமர்ந்து அந்த கால நடிகர்களின் படத்தைப் பார்ப்பாள்.அதிலும் பாதியில் போக வர..என்று அரைகுறையாக தான் பார்ப்பாள்.

நடிகர்களின் பெயரையும்,அவர்களையும் உயிர்மூச்சாகக் கொண்டு.... அவர்கள் பின்னாடியே பயணிக்கும் சராசரி பெண்ணில்லை அவள்.

வயலும்,வாழ்வும் சக்தியாகவே அவள் இருந்தாள்.இருக்க ஆசைப் பட்டாள்.நடப்பிலும் இருந்தாள்.குடும்பத்தைத் தாண்டி வேறு உலகம் தெரியாத பெண்கள் அபூர்வம்...அவள் அந்த வகையைச் சேர்ந்தவள்.இந்த காலத்தில் இதெல்லாம் ஓவரா இல்லை...என்று லாஜிக் பேசும் பெண்களுக்கு அப்பாற்பட்டவள்.

அவள் முடிக்கற்றைகள் லேசான குளிர்ந்த காற்றில் பறக்க...சாரலில் நனைந்த அவள் முகத்தில்...துளிநீர்...நெற்றியில் இருந்து வடிந்து அவள் இதழ்வழி....தொண்டைக் குழியை தாண்டி சென்று கொண்டிருக்க...அதற்கு மேல் எண்ணிய அஜய்....தன்னைத் தானே மீட்டுக் கொண்டான்.

“அங்க தெரியற ஆலமரத்துக்கு கீழ நிறுத்திடுங்க கண்ணன்...கேரவன் வாரட்டும்..” என்றான் அஜய்.

“ஓகே சார்..!” என்றவன் சக்தியையும்,அந்த பாட்டியையும் ஓவர்டேக் செய்து...சிறிது தூரத்தில் இருந்த ஆலமரத்தின் அடியில் காரை.. நிறுத்தினான்”.

மழை தீவிரமாய் வலுக்க துவங்க...”பாட்டி பெரிய மழையா வருது..இப்ப என்ன பண்றது....?” என்றாள்.

“தங்கம் நம்ம ஆலமரத்துக்கு அடியில நின்னுட்டு...அப்பறம் போகலாம்..” என்றார் பட்டி.

“சரி பாட்டி..” என்று அவர்களும் அம்மரத்தை நோக்கி நகர்ந்தனர்.

“அந்த ஆலமரம் தான் அவர்கள் ஊரின் பஸ்டாப்...ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வரும் டவுன் பஸ்சுக்காக...பல மணி நேரம் காத்திருப்பார்கள்.ஊரை ஒட்டியே அமைந்திருந்தது.

அங்கே சென்றவுடன்..அங்கிருந்த திட்டின் மேல் புல்லுக் கட்டை வைத்தாள் சக்தி.

தன் தாவணி முந்தானையால்...தன் முகத்தில் வழிந்த நீரைத் துடைக்க...
 
“அடியாத்தி....எம்புட்டு பெரிய காரு...” என்றார் பாட்டி.

“பாட்டி...நாம வரும் போது கேட்டாங்களே..அவங்க காருதான்..அங்கேயே பார்த்தோம்ல...பேசாம இரு..” என்று கிழவியை அடக்கினாள்.

“அட ஆமாமில்லை...” என்ற கிழவி...

“எத்தாம் பெரிய காரா இருந்தாலும்...என் ராசன் ஓட்டுன கட்டவண்டிக்கு ஈடாகுமா..?” என்று கிழவி சலித்துக் கொள்ள...

“அது யாரு ராசன்...? எனக்குத் தெரியாம...? ஏய் கிழவி...தாத்தா செத்ததுக்கு அப்பறம்...இந்த வேலையெல்லாம் பண்ணி வச்சிருக்கயா..?” என்று சக்தி போலியாய் மிரட்ட...

“அடிப் போடி....நான் அவுகளத்தான் சொன்னேன்....” என்றார் பாட்டி.

“அதானே பார்த்தேன்..!” என்று சக்தி சொல்ல...

“வீட்ல போய் உங்க அப்பத்தாகிட்ட கேட்டு பாருடி..” என்று சொல்ல...

“ம்க்கும்...உங்க காதல் காவியத்தை.....திருப்பி எங்க வீட்டுக் கிழவி வாயால கேட்கணுமா...? அட போ பாட்டி..” என்று சலித்துக் கொண்டாள்.

இரண்டு கிழவிகளும்..அந்த காலத்தில் இருந்து நெருங்கிய தோழிகள் என்று சக்திக்கு தெரியும்.அவர்கள் கதையை சொல்கிறேன் பேர்வழி என்று இதுவரை பல பேரை கொலைவெறிக்கு ஆளாக்கியிருக்கிறார்கள்.அதில் சக்தியே முக்கிய பங்கு வகிப்பாள்.

“ஏ தாங்கம்..நீயும் கால காலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணிக்கிட்டன்னா ..உங்க அப்பனுக்கு ஒரு பாரம் குறஞ்சுடும்ல...!” என்றார் பட்டி.

“நான் பாரமா உங்களுக்கு..?” என்று முறைக்க..

“அடிபோடி...உன் வயசு புள்ளைங்க எல்லாம்..கையில ஒன்னும்,வயித்துல ஒண்ணுமா திரியுதுக...நீ மட்டும் தான் வாய்க்கா,வரப்புன்னு சுத்திட்டு இருக்குறவ...?” என்று பாட்டி சலிக்க...

“இரு கிழவி..உனக்கு சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுறேன்..வீட்ல அப்பாகிட்ட காலையிலேயே சரின்னு சொல்லிட்டேன்..” என்றாள் சிரித்துக் கொண்டே.

“என் ராசாத்தி..” என்று திருஷ்டி கழித்த பாட்டி...”உன் அழகுக்கும், குணத்துக்கும்,,,அந்த மகராசனே புருஷனா வாய்ப்பான் பாரு...!” என்றார்.

“மகராசன் எல்லாம் வேண்டாம் பாட்டி..நல்ல மனுஷனா இருந்தா போதும்...” என்றாள் தீர்க்கமாய்.

அதற்குள் குப்பாயி...குடையுடன் அங்கே வந்தாள்.

“என்ன தாயி இங்க நிக்குறிங்க...? உங்களைக் காணோம்ன்னு தான் வந்தேன்..” என்றாள்.

“இல்லக்கா..பாட்டி இருக்கவும்..பேசிட்டே மழைக்கு ஒதுங்கிட்டோம்... எப்படியும் நனஞ்சுட்டோம்....இனி எதுக்கு குடை...நீங்க இந்த புல்லுக் கட்டை பாட்டி வீட்ல போட்டு வந்துடுங்க...பாட்டி இந்தா குடைய பிடுச்சுகிட்டு போ...வயசான காலத்துல...இப்படி மழையில் நனையாத ...” என்றவள்...

“நான் வீட்டுக்கு போறேன் குப்பாயக்கா...நீங்க வந்துடுங்க...வந்து எனக்கு சூட கருவாட்டுக் குழம்பு வச்சுக் குடுங்க...!” என்றாள்.

“எல்லாம் செஞ்சு வச்சுட்டு தான் வந்தேன் தாயி...எனக்கு தெரியாத மழை வந்தா நீங்க என்ன கேட்பிங்கன்னு...நீங்க முன்ன போங்க..நான் பின்னாடியே வந்துடுறேன்...” என்றவள்..பாட்டியுடன் செல்ல...

இரண்டு கைகளையும் விரித்தவள்...ஒரு வித துள்ளலுடன்...மழையில் நனைந்து கொண்டே சென்றாள்.

ஆனால் அங்கு நடந்த எல்லாவற்றையும் ஒருவன்..ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்ததை அவள் அறியவில்லை.

அவர்களுக்கு கார் நின்றிருந்தது மட்டும் தான் தெரியும்.மற்றபடி உள்ளிருந்தவர்களை கவனிக்கவில்லை.

கண்ணன்..டிரைவர் சீட்டிலேயே அமர்ந்தபடி தூங்கிக் கொண்டிருக்க... அஜயோ..பின்சீட்டில் அமர்ந்து..அங்கு நடந்த சம்பாஷனைகளையேக் கேட்டுக் கொண்டிருந்தான்.

மழையில் எழிலோவியமாய் சென்றவளை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு.

“டேய் முட்டாள்...நீ எங்கே..அவள் எங்கே...நீ ஒரு ஸ்டார்..அனால் அவள் ஒரு சாதாரண கிராமத்து பெண்...அவளுடன் நீ போட்டி போடுவது..உன் தன்மானத்திற்கு நீயே ஏற்படுத்திக் கொள்ளும் பங்கம்..” என்று மனசாட்சி இடித்துரைத்தது.

ஆனால் தன்னை ஒருவன் போட்டியாக நினைக்கிறான் என்ற எண்ணம் துளி கூட இல்லாமல்..அதை அறியாமல்....அங்கே ஒரு பேதைப் பெண்...சுடசுட சாதமும்...கருவாட்டுக் குழம்பையும் ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தாள்.

“மழையில இப்படி நனைஞ்சு வந்தா....உடம்பு என்னத்துக்கு ஆகும்..வயசுப் புள்ளைக்குத் தெரியவேண்டாம்..” என்று பாப்பம்மாள் திட்டிக் கொண்டிருந்தார்.

“சும்மா சும்மா திட்டாதிங்க பாட்டி...உன் பிரண்டை டிராப் பண்ணிட்டு வர தான் லேட் ஆகிடுச்சு...” என்றாள் பாவமாய்...

“அந்த கூறு கெட்டவள பத்தி பேசாத...”என்று பாப்பாம்மாள் முறுக்கிக் கொள்ள...

“அடராம..இந்த கிழவிங்க தொல்லைத் தாங்க முடியலை...இதுகளும்...இதுக சண்டையும்...” என்று தலையில் அடித்துக் கொண்டவள்....

“சரி பாட்டி...எனக்கு தூக்கம் வருது...” என்றபடி தன்னுடைய அறைக்கு சென்றாள்.

அவர்கள் வீட்டில் மேலே ஒரு அறைதான்..அதைத் தான் சக்தி உபயோகித்தாள்..அந்த கால வீடு.

அறைக்கு வந்தவள்...ஜன்னல் கதவு திறந்திருப்பதைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டாள்.மழைவரும் போது திறந்திருந்தால்...ஜன்னலின் வழியே வரும் சாரல்...பாதி அறையையே நனைத்து விடும்...என்பதால் வேகமாக அதை சாத்த போனாள்.

அப்பொழுது தான் அந்த கார் அவளின் கண்களில் பட்டது.அது அந்த ஆலமரத்தின் அடியிலேயே நிற்க...

“பாவம் ரொம்ப நேரமா அங்கேயே நிக்குறாங்க போலவே...சாப்பாட்டுக்கு எல்லாம் என்ன பண்ணுவாக....எத்தனை பேர் இருக்காங்கன்னு தெரியலை..!” என்று எண்ணியவள்...

“சினிமாக்காரங்கன்னு சொன்னாங்க...அதெல்லாம் சாப்பிட தயாரா வச்சிருப்பாங்க...!” என்று எண்ணியவள்..கதவை சாத்த போக...ஏதோ ஒரு உணர்வு..அவளை அப்படி செய்ய விடவில்லை.

அவளின் உள் உணர்வு அவளுக்கு எதையோ உணர்ந்த விரும்பியது. வெகுநேரம் யாரோ தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உறுத்தல்.ஆனால் பார்த்தால் யாருமில்லை.

ஆனால் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அஜய்யின் கண்களில் சிறு ஒலி.உதட்டில் மென்னகைப் பூக்க...ஜன்னல் நீலா ஒன்று காட்சியளிப்பதைப் போன்று இருந்தது அவள் முகம்.

சக்தியும் என்ன நினைத்தாளோ...ஜன்னல் கதவுகளை மூடாமலேயே சென்றாள்.

திருப்தியான மூச்சினை வெளியற்றியவன்....அப்படியே சாய்ந்து கண்ணை சொருக ஆரம்பித்தான்.

விருப்புக்கும் வெறுப்புக்கும் உள்ள நூலளவு வித்யாசம் தெரிந்தாலும்.. தெரியாததைப் போல் காட்டிக் கொண்டான் அஜய்.

அதற்குள் அவன் நடிக்கும் படத்திற்கான ஷூட்டிங்...அந்த ஏரியவில் நடைபெறுகிறது என்ற தகவல்..காட்டுத் தீயாய் பரவ...சுற்றியுள்ள ஊர்கள்,டவுன் மக்கள் என அனைவரும் அவனைக் கான வேண்டும் என பேராவல் கொண்டனர்.

சினிமா நாயகர்களுக்கு இருக்கும் மவுசும்,கெத்தும் எந்த காலத்திலும்...எவ்வளவு பெரிய புத்தனே வந்து சொன்னாலும் மாறப் போவதில்லை.

அவர்களை வாழ்வின் ஒரு அங்கமாய் எண்ணிக் கொண்டு..அவர்களுக்காக எதையும் செய்யும் தீவிர ரசிகர்கள் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நேரம் நடு நிசியைத் தொட...அப்பொழுது தான் அந்த சத்தம் கேட்டது சக்திக்கு.

ஒரே பேச்சு சத்தமும்,ஆட்கள் நடமாட்டமும் தெரிய...தன் அறையில் விளக்கைப் போட்டவள்...அரைகுறைத் தூக்கத்துடன் எழுந்து சென்று ஜன்னல் வழியேப் பார்த்தாள்.

மழை விட்டிருந்தது..ஆனால் குளிர் காற்று உடலை ஊடுருவ....காரின் அருகில் இன்ன பிற வண்டிகளும் நின்றிருந்தது.அதிலும் பஸ் போன்று இல்லாமலும் வேன் போன்று இல்லாமலும்...ஒரு வண்டி நிற்க...அதன் வெளிப் புறத் தோற்றம் சற்று வித்யாசமாய் அவளுக்கு பட்டது.

“சார்..நீங்க கேரவன்ல தங்கலாம்..எல்லாம் ரெடி..” என்று கண்ணன் குனிந்து சொல்ல...

தன் மேல் கோட்டை கழட்டி தோளில் தொங்கவிட்டவனாய்..ஒரு கையை பேண்ட் பாக்கெட்டிலும் விட்டுக் கொண்டு இறங்கினான் அஜய்.

இறங்கியவனின் நெடுநெடுவென்ற உயரம் மட்டுமே அவளுக்குத் தெரிந்தது.அவனின் முகம் அவளுக்குத் தெரியவில்லை.

கொட்டாவி விட்டபடியே அவள் செல்ல முற்படுகையில்...சட்டென்று அவளைப் பார்த்து திரும்பினான் அஜய்.

ஆனால் அவளோ..அவனைக் கண்டு கொள்ளாமல் செல்ல...தன்னைக் கண்டு விட்டும் ஒரு பெண்..இப்படி காணாதது போல் செல்வதைக் கண்டு அவனுள் நெருப்புக் கனல் மூன்றது.

அவள் தூக்க கலக்கத்தில் இருந்ததை அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதே போல்..தன் மேல் ஒருவன் காரணமில்லாமல் வன்மம் வளர்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை அவளும் அறியவில்லை.

“சார்..” என்று கண்ணன் இழுக்க..பட்டென்று கேரவனுக்குள் புகுந்தான் அஜய்.

அவனைப் பின்தொடர்ந்து அந்த இயக்குனரும் செல்ல...அவனோ அவரை கேள்வியாய் பார்த்தான்.

“சார்..எப்படியும் இங்க ஷூட்டிங் முடிய பதினைந்து நாட்கள் ஆகிடும்..” என்று தயங்கியவாறு சொல்ல...

ஒருவாரம் என்று சொல்லிவிட்டு இப்போது இப்படி சொன்னால் எப்படி என்று கண்ணனும் கடுப்புடன் பார்த்துக் கொண்டிருக்க...

“பார்த்துக்கலாம் சார்..” என்று சொல்லி இயக்குனரின் வயிற்றில் பாலை வார்த்தான் அஜய்.

இன்னும் என்ன என்ன செய்ய காத்திருக்கிறானோ..? என்று அவனின் மனம் யோசித்துக் கொண்டிருந்தது.

மனதினை அடக்கத் தெரிந்தவனும்..அதை ஆழத் தெரிந்தவனும் மனிதன் ஆகிறான்.இங்கே அஜய் என்னவாகப் போகிறான் என்று அவனுக்கேத் தெரியவில்லை.
 
Top