Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thogaikku Thoothuvan Yaro - 12

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
தோகை 12:

ஒருவாரம்.... யாரிடமும் சொல்லாமல் சென்று விட....

ஏனோ விடிந்ததில் இருந்தே மனது பாரமாக இருந்தது சக்திக்கு. நிம்மதியாக இருப்பதைப் போன்று வெளியில் காட்டிக் கொண்டாலும்.. உள்ளே ஒரு வெற்றிடத்தை உணர்ந்தாள் அவள். அதற்கான காரணம் மட்டும் அவளுக்கு தெரியவில்லை. அவளைச் சுற்றி உள்ள அனைத்தும் அவளுக்கு அந்நியமாகவே பட்டது.

அவளின் நினைப்பில் அங்கே ஒருவன் எந்த வேலையும் ஓடாமல் இருக்க...

“எதுக்குதான் இவளைப் பார்த்தேனோ..? எல்லாம் என் நேரம்..!” என்று புலம்பிக் கொண்டிருந்தான் அஜய்.
கண்ணன்...சென்னை திரும்பி ஐந்து நாட்கள் ஆகியிருந்தது.அஜய் தான் கிளம்பி வர சொல்லிவிட்டான்.அங்கே என்ன நடக்கிறது என்று தெரியாமல்..இப்போது முழித்துக் கொண்டிருக்கிறான்.

“சார்..நான் ஒன்னு சொல்வேன்...நீங்க தப்பா எடுத்துக்க கூடாது..!” என்றான் கண்ணன் பீடிகையுடன்.

“சொல்றதை பொறுத்தது..!” என்றான் பட்டும் படாமல்.

“எனக்கு என்னமோ...அவங்க உங்களைத் தேடி வருவாங்கன்னு தோணலை சார்...இதை ஏன் சொல்றேன்னா...? அங்க இருந்து அவங்களை நோட்டம் விட்டதுல தெரிஞ்ச ஒரே விஷயம்.... உங்களுக்காக அவங்க கவலைப் பட்டதாகவே தெரியலை.. எப்பவும் போல..சாதரணமா அவங்க வேலையை பார்த்துட்டு இருக்காங்க...! ஆனா நீங்க தான்..ஷூட்டிங் போகாம..இப்படி வீட்லயே..”
என்று திக்க...

“ம்ம் மேல சொல்லு..! வீட்லயே வெட்டியா இருக்கேன் இல்லையா.?” என்றான் நக்கலாய்.

“ஐயோ சார்..! நான் அந்த அர்த்ததுல சொல்ல வரலை..!” என்றான்.

“நீ வேற எந்த அர்த்ததுல சொல்றதா இருந்தாலும் சரி..! எனக்கு அட்வைஸ் பண்ற வேலையெல்லாம் உனக்குத் தேவையில்லாதது...” என்றான் கோபமாய்.

“சாரி சார்..!” என்றான் கண்ணன்.

“உங்க லிமிட்டுகுள்ள நீங்க இருங்க..!” என்றான்.

“ஓகே சார்...!” என்று கண்ணன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே...அஜய்யின் போன் விடாமல் அடித்துக் கொண்டிருந்தது.

“ஹலோ..!”

“சார்...நாங்க மதி ஒளி சேனல்ல இருந்து பேசுறோம்...நீங்க இந்த வீடியோவைப் பத்தி என்ன நினைக்கிறிங்க...? “ என்றார்கள் மொட்டையாய்.

ஒரு நிமிடம் குழம்பினான் அஜய்.அது என்ன வீடியோ...? என்று யோசித்தவன்...

“நீங்க என்ன லூசா..? இப்படி போன் பண்ணி..வீடியோ அப்படி இப்படின்னா..? என்ன தெரியும்..? எதையும் முழுசா சொல்ல மாட்டிங்களா..?” என்றான் அறியாதவனாய்.

“சார்..ஏன் சார் இப்படி நடிக்கிறிங்க...பிளீஸ் சார்..எங்க சேனலுக்கு பர்ஸ்ட் பேட்டி குடுங்க..!” என்றார்கள் அந்த பக்கத்தில் இருந்து.

“டேமிட்..உங்களுக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா..?” என்றபடி போனை எறிந்தான் அஜய்.

“சார்..” என்று கண்ணன் அதிர...

“என்ன வீடியோ...டிவி சேனல்ல இருந்து கால் பண்ணி கேட்குற அளவுக்கு..?” என்றான் கண்ணனிடம்.

“சார்...தெரியலை சார்..!” என்றான்.

“நல்ல பதில்....இதுக்கு தான் உங்களை வச்சிருக்கேனா..?” என்று அவனிடம் எரிந்து விழுந்தவன்....டிவியைப் போடுங்க என்றான்.
அவன் அறையில் இருந்த...அந்த உயர் ரக டிவியில்.....அவனைப் பற்றிய செய்திகள் தான்..அனைத்து சேனலிலும் ஓடிக் கொண்டிருந்தது.

அதில் தெரிந்த வீடியோவைப் பார்த்தவன் அதிர்ந்துவிட்டான்.”ஒ மை காட்..!” என்றபடி அவன் தலையில் கை வைத்து அமர....
அதைப் பார்த்த கண்ணனுக்குமே ஏகப்பட்ட அதிர்ச்சி....

இது எப்படி நடந்தது..? யாரால் நடந்தது...? என்று அதிர்ந்து நோக்கிக் கொண்டிருந்தான் அஜய்.

வீட்டின் முன் சத்தம் கேட்க....

ஜன்னலின் திரைச்சீலையை விலக்கிப் பார்த்தான்.....ஒட்டு மொத்த சேனலைச் சேர்ந்த செய்தியாளர்கள்...கேமராமேன்கள்...அனைவரும் அவன் வீட்டின் வாசலில் தவம் இருந்தனர்.

“இது எப்படி நடந்தது....?” என்று யோசிக்க...அவன் தாமதித்த ஒவ்வொரு வினாடியும்...விஷயம் தீயாய் பரவிக் கொண்டிருந்தது.
அவனுடைய ரசிகர்கள் ஒரு பக்கம் ஆர்பாட்டம்..அது இதுவென்று இறங்கியிருந்தனர்.

இதையெல்லாம் அறியாமல்....வீட்டினுள் இருந்த தன் முட்டாள் தனத்தை எண்ணி..நொந்து கொண்டான் அஜய்.
வீடியோ இதுதான்...

நன்னியூரில்...அவன் சக்தியை காரில் தூக்கிப் போட்டது முதல்....தாலி கட்டியது..அவள் கழட்டி எறிந்தது... எல்லாம் தெளிவான வீடியோவாக ஓடிக் கொண்டிருந்தது.

“சூப்பர் ஹீரோ அஜய்..ரகசிய திருமணம்....பெண்ணைக் கடத்தி திருமணம்...தாலியை கழட்டி எரிந்து விட்டு சென்ற பெண்...!” என்ற தலைப்பில்...அனைத்து செய்தித் தாள்களிலும் செய்தி வெளியாகி இருக்க...நிலைமை கைமீறி சென்று விட்டதை உணர்ந்தான் அஜய்.

“இது எப்படி நடந்தது...இதை வீடியோ எடுத்தது யாரு..பிரஸ் கைக்கு இது எப்படி போனது...?இதெல்லாம் எனக்கு உடனே தெரியனும்..!” என்று கண்ணனைப் பார்த்துக் கத்திக் கொண்டிருந்தான் அஜய்.

“ஓகே சார்..!” என்று அவன் போனை எடுத்து யாரையோ அழைக்க...

அவனின் அறைக்குள் வந்த சாந்தா..அன்றைய செய்தித் தாளை..அவன் முகத்தில் எறிந்தார்.
“என்னது இது..?” என்றார் ஆங்காரமாய்.

அஜய்யோ ஒன்றும் சொல்லாமல் உறுத்து விழிக்க....

“ஊரே சிரிக்குது...! இதை பண்ணிட்டு தான் ஒரு வாரம் வீட்டுக்குள்ளயே இருந்தியா..?” என்றார்.

“வார்த்தையை அளந்து பேசுங்க...!” என்றான்.

“என்ன அளந்து பேசுங்க..? போயும் போயும்..ஒரு பட்டிக்காட்டுக் காரிதான் கிடைச்சால உனக்கு..நம்ம அந்தஸ்து என்ன..? கவுரவம் என்ன..? ஆனா நீ...இப்படி அவளைத் தூக்கிட்டு போயி தாலி கட்டுற அளவுக்கு..என்ன இருக்கு அவகிட்ட...அவளும் அவ மூஞ்சியும்..” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே..

அங்கிருந்த பூ ஜாடியை எடுத்து பட்டென்று எறிந்தான் அஜய்.அது அவரின் காலின் அருகில் சென்று உடைய..ஒரு நிமிடம் பயந்து விட்டார் சாந்தா.

“இவ்வளவுதான் உங்களுக்கு மரியாதை..இன்னொரு தடவை அவளைப் பத்தி ஏதாவது பேசுனிங்க...பெத்த தாயின்னு கூட பார்க்க மாட்டேன்... ஜாக்கிரதை..கெட் லாஸ்ட்..” என்று அவன் கத்திய கத்தலில் வீடே அதிர்ந்தது.

பிரச்சனை இங்கே இப்படிப் போயிக் கொண்டிருக்க, அங்கே சக்தியின் ஊரிலோ...ஒரு கலவரமே வெடித்துக் கொண்டிருந்தது.
என்னதான் கிராமமாக இருந்தாலும்...அதிகாலையிலே செய்தி அந்த ஊரை வந்தடைந்திருந்தது.

“ஏய் சக்தி..! எழுந்திருடி..!” என்று வேகமாய் வந்து உலுக்கினாள் மருதாணி.

“ஏய்..! விடுடி....எனக்கு முடியலை..!” என்று சக்தி மறுபடியும் படுத்துக் கொள்ள...அப்பொழுது தான் அவளைத் தொட்டுப் பார்த்தாள் மருதாணி. காய்ச்சல் நெருப்பாய் கொதித்துக் கொண்டிருந்தது அவளுக்கு.

“அடக்கடவுளே..! காய்ச்சல் வேற அடிக்குதா..? இவளுக்கு விஷயம் தெரியுமா..? தெரியாதா..? இப்படித் தூங்கிட்டு இருக்கா..?” என்று யோசிக்க....

“அறிவுக் கொழுந்தே..! தெரிஞ்சு இருந்தா இப்படியா தூங்கிட்டு இருப்பா..?” என்று மூளை அவளுக்கு எச்சரிக்கை விடுக்க...

“சக்தி...கொஞ்சம் எழுந்திரு..முக்கியமான விஷயம்..!” என்று மருதாணி கெஞ்ச...எழுந்திருக்க முடியாமல் தட்டுத் தடுமாறி எழுந்தாள் சக்தி.

“என்ன மருதாணி..?” என்றாள் சோர்வாய்.

“என்ன இப்படி காய்ச்சல் அடிக்குது..நீ இப்படி தூங்கிட்டு இருக்க..? எந்திரி ஆஸ்பத்திரிக்கு போகலாம்..” என்றாள்.

“இல்லடி...நான் நைட்டே மாத்திரை போட்டுட்டு தான் படுத்தேன்..அதுவே சரி ஆகிடும்..” என்றாள்.

மருதாணி அமைதியாய் அவள் முகம் பார்க்க..

“அதுசரி..நீ என்ன இவ்வளவு காலையில இங்க வந்திருக்க..?” என்றாள்.

“அது வந்து..!” என்று மருதாணி இழுக்க...

“எது வந்து..” என்றாள்.....சக்தி.

“சக்தி..நீ கொஞ்சம் டிவியை போட்டு பாரேன்..!” என்றாள்.

“ஏய்...நானே முடியாம படுத்திருக்கேன்...இப்ப டிவி பார்க்குறது ரொம்ப முக்கியமா..?” என்றாள் கடுப்புடன்.

“இல்லை..சக்தி..நீ பாரேன்...அதுல..அஜய் சார்..உனக்கு தாலி கட்டினது...நீ அதை அவர் முகத்துல எறிஞ்சது எல்லாம் வீடியோவா
போயிட்டு இருக்குடி...எல்லா டிவிலயும் அஜய் சார பத்தி தான் பேச்சு...நான் காலையில சாமி பாட்டு பார்க்க டிவியை போட்டேனா..அப்பதாண்டி பார்த்தேன்..!” என்றாள்.

“நீ என்ன சொல்ற..? எதையாவது பார்த்துட்டு வந்து உளறாத..?” என்றாள்.

“இல்லடி..சாமி சத்தியமா நான் பார்த்தேண்டி..!” என்றாள்.

சக்தி தட்டுத் தடுமாறி எழுந்து வீட்டின் முற்றத்துக்கு வந்தாள். அங்கிருந்த டிவியைப் போட....

மருதாணி சொன்னதை விட...நூறு பங்கு தெளிவாய் ஓடிக் கொண்டிருந்தது அந்த வீடியோ.சேனல்கள் தங்கள் டிஆர்பியை ஏற்றிக்கொள்ள ...கிடைத்த வாய்ப்பை விடாமல் பற்றிக் கொண்டிருந்தனர்.

சக்தி உள்ளுக்குள் எவ்வளவு அதிர்ந்திருக்கிறாள் என்பதை அவள் கண்கள் காட்டிக் கொடுக்க...

“சக்தி..!” என்று அவளின் கையைப் ஆதரவாகப் பிடித்தாள் மருதாணி.

“கடைசில அவன் சினிமா புத்தியைக் காட்டிடான் பார்த்தியாடி..ஐயோ இதை அப்பா மட்டும் பார்த்தா..ஏற்கனவே அவருக்கு உடம்பு சரியில்லை..” என்று கண்கள் கண்ணீரை உற்பத்தி செய்ய..

எதற்கும் கலங்காத அவள் முகம் கலங்கியதை கண்டு..மருதாணிக்கே... ஒரு மாதிரியாக இருந்தது.
நகரங்கள் மாதிரி...பத்தோடு பதினொன்று என்று தட்டி விட்டு செல்லும் ஊர் இல்லை அது.மானம்,மரியாதையை... உயிருக்கு சமமாக மதிக்கும் ஊர். பொருளாதாரத்தில் பின் தங்கி இருந்தாலும்.. நாகரிகத்தை வளர்த்துக் கொள்ளாவிட்டாலும்...மானம் என்பது அவர்களின் உயிமூச்சு.

நகரத்தில் கோடிக் கணக்கில் கடன் வாங்கியவன் நிம்மதியாக இருப்பான்.ஆனால் கிராமத்தில் ஆயிரணக் கணக்கில் கடன் இருந்தாலும்...அதை அடைக்க முடியாவிட்டால்...மனதிற்குள் மருகுவதும்....அதற்கு பயந்து தூக்கில் தொங்குவதும் தான் அவர்களின் மானத்திற்கு எடுத்துக்காட்டு.

அப்படியொரு நிலையில் தான் இருந்தால் சக்தி. நாலுபேருக்கு தெரியாமல் நடந்த விஷயம்..அப்போது பெரியதாக தெரியாமல் இருக்க...ஆனால் இப்போது பூதாகரமாகத் தெரிந்தது.

அதற்குள் ஊருக்குள்ளும்..அரசல்...புரசலாக செய்தி பரவ.....

அந்த காலை நேரத்திலேயே சக்தியின் வீட்டின் முன் கூடி விட்டனர்..சொந்த பந்தங்கள்..ஊர்காரர்கள்.

“இப்ப என்ன பண்றது மருதாணி..?” என்று அவள் கேட்க..

“அதை அப்ப யோசிச்சு இருக்கணும்...!” என்ற மகா லிங்கத்தின் குரலில் திரும்பினர் இருவரும்.

“அப்பா..!” என்று சக்தி அதிர...

“கடைசில..இப்படி சந்தி சிரிச்சுடுச்சேமா...?” என்றார் இயலாமையில்.

அதற்கு மேல் அவருக்கு அங்கே நிற்க முடியாமல் வெளியே வர...

“என்னங்கய்யா இது...! நம்ம பாப்பாவை ஒருத்தன் தூக்கிட்டு போய் தாலியை கட்டியிருக்கான்...அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்..!” என்று ஆதங்கத்தில் பொங்கும் குரல்கள் சில.

“அவருக்கென்ன..பெரிய ஹீரோ....சக்திக்குத்தான் குடுத்து வச்சிருக்கணும்..” என்றும் ஆதங்கப்படும் இளைய தலைமுறை சிலர்...
“நடந்தது நடந்துருச்சு....ஆனா தாலியை கழட்டி எறிஞ்சது பெரிய தப்பு சக்தி...” என்று அறிவுரை சொல்லும் சிலர்..

“ஊசி இடம் கொடுக்காமையா நூலு நுழைஞ்சிருக்கும்...” என்று வயிறு காந்தி...பொறாமையில் காய்ந்த சிலர்...

“தாலி மட்டும்தானா..இல்லை இன்னும் வேற ஏதுமா..?” என்று எறிந்த தீயில் எண்ணெய்யை ஊற்றிய சிலர்...

“விடு சக்தி...இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை...உனக்கு பிடிக்கலை...நீ செஞ்சது தான் சரி..” என்று ஆதரவாக,அணைப்பான சில குரல்...

அனைத்தும் சக்தியின் காதில் மாறி மாறி விழுந்து கொண்டிருந்தது. அவளுக்கு இப்படியே போய் எங்காவது செத்துவிட மாட்டோமா என்று இருந்தது.

மகாலிங்கமோ..ஒன்றும் பேசாமல் நிற்க...பாப்பம்மாள் சக்தியை முறைத்துக் கொண்டிருந்தார்.

ஒரு பொட்டப்புள்ளைக்கு தாலியை எறியற அளவுக்கு அப்படி என்ன அகங்காரம்..? நான் அப்பவே சொன்னேன்..அவ மூஞ்சியே சரியில்லை.. என்னன்னு கேளுன்னு...என் பேச்சை எங்க கேட்டான்...இப்ப ஊரே சிரிக்குதே..!” என்று அவர் கால் நீட்டி ஒப்பாரியே வைக்கத் தொடங்கி விட்டார்.

இது ஏற்கனவே தன் மகனுக்கு தெரியும் என்றோ...அதனால் தான் அவருக்கு உடம்பு சரியில்லாமல் போனது என்றோ அவருக்கு தெரிந்திருக்கவில்லை.

தெரிந்திருந்தால்...அந்த வீட்டையே இரண்டாக்கியிருப்பார் பாப்பம்மாள். சம்பிரதாயங்களில் ஊறிப் போனவருக்கு..சக்தியின் இந்த செயல் அபசகுணமாகவே பட்டது.

“சக்தி...இப்ப என்ன பன்றது..?” என்று மருதாணி கேட்க...

“கடைசில...அவன் புத்தியை காட்டிட்டான்.இப்படி செஞ்சு..என் மானத்தை வாங்கனும்ன்னு எத்தனை நாள் கனவு கண்டானோ...?” என்று கோபத்தில் பல்லைக் கடிக்க....

சரியான சமயம்..அவனைப் பற்றி தப்பாக நினைத்தாள் சக்தி.

அதற்குள் அந்த ஊர் வரைக்கும் வந்து விட்டனர் மீடியாவை சேர்ந்தவர்கள்.இவர்கள் கண்ணுக்கு மட்டும் எப்படித்தான் இப்படி சிக்குமோ தெரியவில்லை.

“இருந்த கூட்டம் போதாதென்று இவர்களும் சேந்து கொள்ள..சக்தியின் வீட்டு வாசல் முன் ஆட்களின் தலையாகவே தெரிந்தது...!”

“என்ன சக்தி..டிவி காரங்க எல்லாம் வந்துட்டாங்க..!” என்ற மருதானியின் உடல் வெளியில் நடுங்க...

“உள்ளே தனக்குள் இருந்த நடுக்கத்தை மறைத்துக் கொண்டிருந்தாள் சக்தி...”

“ஐயா..ஏதாவது பண்ணுங்கய்யா..?” என்று குப்பாயி சொல்ல.... மகாலிங்கத்திற்குமே என்ன செய்வதென்று தெரியவில்லை.
தன் தந்தையின் பரிதவிப்பு சக்திக்கு நன்றாகப் புரிந்தது.அவர் கேள்வியாய் சக்தியைப் பார்க்க..அவளுக்குமே என்ன செய்வதென்று தெரியவில்லை.

பதட்டத்திலும்,கோபத்திலும் எடுக்கும் முடிவு சரியானதாக இருக்காது என்பதை சக்தி நன்கு அறிவாள்.

அப்படி இருக்கும் போது...இப்படி ஒரு சூழ்நிலை தனக்கு வரும் என்று அவள் கனவிலும் கண்டாள் இல்லை.

அவன் சென்றவுடன்....முடிந்தது பிரச்சனை என்று இருக்க... இப்பொழுதான் ஆரம்பித்து இருந்தது பிரச்சனை.கண்களை மூடி...தனக்குத் தானே ஆழ்ந்த மூச்சை வெளியிட்டவள்....ஒரு முடிவு எடுத்ததைப் போன்று வெளியே சென்றாள்.

“சக்தி..அங்க போய் என்ன சொல்ல போற..?” என்றாள் மருதாணி.

“உண்மையை சொல்ல போறேன்..!” என்றாள்.

“வேண்டாம் சக்தி..அஜய் சாரை கொஞ்சம் நினச்சு பாரு...இது அவரோட சினிமா வாழ்க்கையையே பாதிக்கும்..!” என்று மருதாணி மன்றாட...

“அப்போ..என் வாழ்க்கை பாதிக்கப்பட்டா உனக்கு கவலை இல்லையா..?” என்று அவள் கேட்க...
அமைதியாகிவிட்டாள் மருதாணி.அவளுக்கு சக்திதானே முக்கியம். அஜய் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்.அவளின் அமைதியை சாதகமாக்கிக் கொண்டு வெளியே சென்றாள் சக்தி.

அங்கே அஜய்யின் வீட்டில்...

“சார்...பிரஸ்காரங்க....ரொம்ப அழுத்தம் குடுக்குறாங்க..! இப்ப நீங்க போய் ஏதாவது சொன்னாதான் இங்க இருந்து போவாங்க..!” என்றான் கண்ணன்.

அஜய்யின் மனமோ அங்கு சக்தியை எண்ணிக் கவலை கொண்டிருந்தது.இந்நேரம் என்ன செய்து கொண்டிருப்பாள்...என்று எண்ணிக் கொண்டிருந்தவன் கண்ணனின் பேச்சில் நிமிர்ந்தான்.

“அந்த வீடியோவை எடுத்தது யாருன்னு தெரிஞ்சதா..?” என்றான்.

“சார்..! அது வந்து...துப்னா...இதுல சம்பந்த பட்டிருக்கலாம்ன்னு தோணுது சார்..!” என்றான்.

“தோணுதா..? இல்லை உண்மையும் அதுதானா..?” என்றான் அஜய்.

“சார்..தெளிவா தெரியலை சார்..ஆனா துப்னா இதுல கண்டிப்பா இருக்காங்க சார்..!உங்களுக்கு தனிப்பட்ட எதிரிங்க யாருமில்லை..அதுமட்டுமில்லாம...அங்க நடந்தது வேற யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை..” என்று கண்ணன் இழுக்க...

“இதுல மகேஷ் சம்பந்தபட்டிருக்க வாய்ப்பு இருக்கு...அதனால விசாரிங்க..! அப்படியே அந்த படத்தோட டைரக்டரை....நான் சொல்றப்போ..நான் சொல்ற மாதிரி பேட்டி குடுக்க சொல்லுங்க..!” என்று அவனிடம் விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தான் அஜய்.

அஜய்யின் வீட்டு வாசலில் அவனும்....சக்தியின் வீட்டு வாசலில்.. அவளும்...மீடியாவின் முன்பு பதில் அளிக்க தயாராக நின்றிருந்தனர்.

இருவரும் ஒருவராகி...ஒரே பதிலை சொல்வார்களா..?
 
Se

Super ud mam
 
Top