Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UAEI 13

Advertisement

Admin

Admin
Member


அத்தியாயம்---13

அவன் என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டே தன் கார் பார்க்கிங் ஏரியாவுக்கு வந்த போது அவள் தான் கேட்ட கேள்வியை மறந்து “என்னை எங்கள் வீட்டுல் விட்டு விடுகிறீர்களா..?” என்று வினாவினாள்.

“வரும் போது எப்படி வந்தாய்.”

“நான் டிடக்டிவ் ஏஜன்ஸி வரை என் வீட்டு காரில் தான் வந்தேன். பின் காரை திருப்பி அனுப்பி விட்டு தான் நான் அங்கு சென்று உங்களை பற்றி ரிப்போட்டை வாங்கிக் கொண்டு. அப்புறம் சம்மந்தம் பேச தேவையான பொருட்கள் வாங்கி உங்கள் ஆபிசுக்கு வந்து.. “அவள் சொல்ல சொல்ல ஆஷிக் தன் தலையை பிடித்துக் கொண்டான்.

நான் சொல்லும் போதே உங்களுக்கு தலையை சுற்றுகிறேதே...நான் ஒரே ஆளா இது எல்லாம் செய்து இருக்கிறேனே எனக்கு எப்படி இருக்கும்.”என்று கேட்டதற்க்கு .

“ஆமாம் கொஞ்சம் கஷ்டம் தான்.”

அதனால் தான் சொல்கிறேன் என்னை எங்கள் வீட்டில் விட்டு விட்டு நீங்கள் உங்கள் வீட்டுக்கு செல்லுங்கள்.” என்று சொல்லி விட்டு .காரில் அமர்ந்துக் கொண்டாள்.

அவனும் காரில் அமர்ந்து ஸ்டாட் செய்து மெயின் ரோடுக்கு வந்ததும் பரினிதா திரும்பவும் அவனிடம் பேச்சை கொடுத்தாள்.

“வீட்டுக்கு போனால் என்ன செய்வீர்கள்..?” என்று கேள்வியும் எழுப்பினாள்.

சிரித்துக் கொண்டே “எல்லாரும் செய்வது போல் தான் ப்ரேஷ்ஷாகி கொண்டு ஏதாவது சாப்பிட்டு விட்டு என் ஆபிஸ் வேலை கொஞ்சம் பாக்கி இருக்கிறது அதை கொஞ்சம் பார்ப்பேன்.” அவன் சொல்லிக் கொண்டு வரும் போதே இடையில் தடுத்த பரினிதா.

“அப்போ எங்க அன்ணாவை பற்றியும்,உங்கள் சகோதரியைய் பற்றியும் உங்க அம்மாவிடம் பேசவே மாட்டிங்களா…ஒரு சகோதரான பொருப்பாவே நடந்துக்க மாட்டீங்களா…? நான் எவ்வளவு சின்ன பொண்ணா இருந்தாலும் “ என்று அவள் சொல்லும் போதே கார் ஒட்டிக் கொண்டே பக்க வாட்டில் அவளை ஏற இறங்க பார்த்தான்.

“சரி சரி சின்ன பெண் எல்லாம் இல்லை. வயது பெண் என்றாவது வைத்துக் கொள்ளுங்கள்.”

அப்போதும் அவன் அவளை திரும்பி அதே பார்வை தான் பார்த்து வைத்தான்.

“இதோ பாருங்கள் இப்படி எதுக்கு எடுத்தாலும் ஒத்துக் கொள்ளாமல் இது மாதிரி பார்வை பார்த்தால் என்ன அர்த்தம். ஏதாவது ஒன்று வைத்துக் கொண்டு தானே ஆக வேண்டும்.” என்ற அவள் பேச்சில் முகம் மலர்ந்து

“ கண்டிப்பாக வைத்து கொள்கிறேன் .” என்று வெளியில் அவளிடம் பேசிய ஆஷிக் உள்ளுக்குள் என் இதய ராணியாக உன்னை எப்போதும் நான் வைத்துக் கொள்வேன் பேபிம்மா… என்று செல்லம் கொஞ்சிக் கொண்டான்.

திரும்பவும் அவன் எதுவும் பேசாமல் அமைதியாகி விட வெறுத்தே விட்ட பரினிதா “ஆமாம் அப்போ அப்போ நீங்க எங்க போயிடுறீங்க. எனக்கும், உங்களுக்கும் செட்டே ஆகாது.

நான் நேரிடையாக கல்யாணத்தை பற்றி உங்க அம்மாவிடமே பேச போகிறேன். உங்க பொறுப்பற்ற தனத்தை பார்த்தால் வேலைக்கு ஆகாது.”

“அம்மா தாயே நானே என் அம்மாவிடம் பேசுகிறேன். உன் அதிரடி நடவடிக்கைய் எங்க அம்மா தாங்க மாட்டாங்க. அதனால் இப்போது போன உடனே என் அம்மாவிடம் பேசி நாளையே நான் டெல்லி சென்று அங்கு என் சிஸ்டரிடமும் பேசி விட்டு அவளையும் கைய்யோடு அழைத்துக் கொண்டு வந்து விடுகிறேன்.” என்றதற்க்கு

“எல்லாம் சரி . ஆனால் உங்களுக்கு ஒரே வாரம் தான் டைம் அதற்க்குள் முடித்து விட வேண்டும்

” அது என்ன ஒரு வார கணக்கு “

“அடுத்த வாரம் அண்ணாவுக்கு பிறந்த நாள் வருகிறது.அன்று என் அண்ணாவுக்கு நான் கொடுக்க போகிற சர்பிரைசே ஆருண்யா அண்ணி தான்.”

“சரி கண்டிப்பாக நான் முயற்ச்சி செய்து பார்க்கிறேன்.”

“என்னது முயற்ச்சியா...கண்டிப்பாக முடித்து விட வேண்டும். “

“சரி முடித்து விடுகிறேன். ஆனால் ஒன்று பரினிதா என் பேச்சை தான் எல்லோரும் கேட்பாங்க. என்னிடம் பேச கூட மத்தவங்க பயப்படுவாங்க ஆனா நீ தான் எனக்கே ஆர்டர் போடுகிறாய்.”

“பின் என்ன செய்வது. நீங்க இவ்வளவு ஸ்லோவா இருக்கும் போது. “

என்று சொல்லி விட்டு அத்தோடு முடித்து இருந்தாலும் பரவாயில்லை.ஆனால் “என் சுரு சுருப்பை பாருங்க.நீங்க டெல்லி சென்று வருவதற்க்குள் நான் என் திருமணத்தை செய்தே முடித்து இருப்பேன் பாருங்க.”

அவள் பேச்சை கேட்ட ஆஷிக் அதிர்ந்து காரை நிறுத்தி விட்டான் .இவன் காரை நிறுத்திய உடன் பின் வந்த கார்காரன் சடென் ப்ரேக் பிடித்து நிறுத்தும் படியாகி விட்டது. பின் திட்டிக் கொண்டே அந்த கார்காரன் தன் காரை எடுத்தான்.

இதே வேறு சமயம் என்று இருந்தால் கண்டிப்பாக அவன் திட்டிய திட்டுக்கு அவனை ஒரு வழி பண்ணாமல் சும்மா விட்டு இருக்க மாட்டான்.இப்போதோ பரினிதா போட்ட வெடியில் அலண்டு அல்லவா போயிருந்தான்.

“ஏய் என்ன உளறுகிறாய்…?”

“நான் என்ன உளறிகிறேன்.நீங்கள் அந்த டைரியை சரியாக படித்தீர்களா…? இல்லையா..?”

எதற்க்கு கேட்கிறாள் என்று தெரியாமலேயே “படித்தேன். இப்போ அதற்க்கும் நீ கல்யாணம் செய்து கொள்வதற்க்கும் என்ன சம்மந்தம்.”

“என்ன படித்தீர்களோ… படித்திருந்தால் இப்போ நீ ஏன் அவசரமா திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று கேட்க மாட்டிங்க. அதில் என்ன எழுதி இருந்தது. உங்கள் சகோதரியை விட்டு பிரிவதற்க்கு காரணம் என்ன என்று எழுதி இருந்தது. எனக்காக தான் உங்கள் சாகோதரியை பிரிந்தார் என்று தானே எழுதியிருந்தது.

என் கல்யாணம் செய்த பிறகு தான் .நான் என் வாழ்க்கை பற்றி யோசிப்பேன் என்று எழுதி இருந்தது தானே… பின் அதற்க்கு எப்படியும் பத்து வருடம் ஆகும். அதனால் ஆருண்யாவை பிரிகிறேன் என்று தானே எழுதி இருந்தது.

இப்போதும் என் திருமணத்தை காட்டி உங்கள் தங்கையை திருமணம் செய்ய யோசிக்க கூடாது அல்லவா…?



அதனால் தான் நான் என் கல்யாணத்தை சீக்கிரம் முடித்து விட்டால். என் அன்ணன் உங்கள் தங்கை திருமணம் செய்து கொள்வதற்க்கு எந்த தடையும் சொல்ல முடியாது தானே...அதனால் தான் நீங்கள் உங்கள் தங்கையிடம் பேசி அவர்களை சென்னை அழைத்து வருவதற்க்குள் நான் திருமணம் செய்து கொண்டிருப்பேன்.” பேச பேச அவன் பி பி தான் எகிறயது.

ஒரு பதட்டத்துடன் “யாரை திருமணம் செய்துக் கொள்ள போகிறாய்.”

“அது தான் யோசனையா இருக்கு.”

“என்ன உளறுகிறாய்…? என்ன யோசனையாக இருக்கிறது.”

“அது தான் யாரை திருமணம் செய்து கொள்வது என்பதில் தான்.”

அவள் பேசியதில் அவன் முற்றிலுமாகவே குழம்பி விட்டான்.இவள் என்ன பேசுகிறாள். யாரை திருமணம் செய்துக் கொள்வது என்று தெரியாமலேயே திருமணம் செய்து கொள்வேன் என்று எப்படி சொல்ல முடியும்.

அதுவும் அவள் திருமணம் செய்து கொள்வதற்க்கு சொன்ன காரணம் அவனுக்கு மிக அபத்தமாகவே பட்டது. தன் அண்ணன் திருமணத்துக்காக இவள் சீக்கிரம் திருமணம் செய்து கொள்வளாமா… எதில் தான் விளையாடுவது என்று தெரியாதா இது இவள் வாழ்க்கை இதில் கூடவா இவள் விளையாட்டு தனமாக இருப்பாள்.

இவன் இவ்வாறு யோசித்துக் கொண்டு இருக்கும் போதே “சே எனக்கு முதலிலேயே தெரிந்திருந்தால் நான் ஸ்ரீதருக்கே ஒகே சொல்லி இருப்பேன்.”

“எந்த ஸ்ரீதர். எதற்க்கு ஒகே சொல்லியிருப்பே..” என்று என்று எரிந்து விழுந்தான்.

அவன் கோபத்தில் இவளும் கோபமுற்று. “ போங்க நான் உங்களிடம் நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்.எப்போ பார்த்தாலும், நீங்க என்னை திட்டிட்டே இருக்கீங்க.நானும் சரி நம்ம அண்ணியா வரபோறவர் ப்ரதர் என்று நானும் எதுவும் சொல்லாமல் இருக்கேன். என்னை என் பாட்டிம்மா மாதிரியே தான் நீங்களும் என்னை திட்டிட்டே இருக்கீங்க. என் விஷயத்தை நானே பார்த்துக் கொள்கிறேன். இப்போ என்னை என் வீட்டில் விட்டுட்டு நீங்க உங்க வேலையைய் பாருங்க நான் என் வேலையைய் பார்த்துக் கொள்கிறேன்.” என்று கூறுபவளை யோசனையுடன் பார்த்தான்.

பின் அவனே ஒரு முடிவுக்கு வந்தவனாக இவளிடம் கோபப்பட்டால் எல்லாம் வேலைக்கு ஆகாது. இவளை இவள் வழியில் போய் பேசி தான் விஷயத்தை வாங்க வேண்டும். இல்லை என்றால் கண்டிப்பாக ஏதாவது ஆபத்தில் மாட்டிக் கொள்வாள் என்று .

“சரி உன்னிடம் நான் கோபப்பட மாட்டேன். ஆமாம் யார் அது ஸ்ரீதர் .”

அவனின் சாந்தமான பேச்சில் உற்சாகம் பெற்றவளாக அனைத்தும் சொல்ல ஆராம்பித்தாள். அவள் எப்போதும் அப்படி தான் தன்னையும் மதித்து யாராவது தன்மையுடன் பேசினால் அனைத்தும் சொல்லி விடுவாள்.

ஏன் என்றால் அவள் வீட்டிலும் சரி. அவள் படித்த பள்ளி,கல்லூரியிலும், சரி அவளை சிறு பெண் போல் தான் அவளை நடத்துவர். அதனால் தன்னையும் யாராவது மதித்து இது மாதிரி பேசினால் மகிழ்ந்து போய் சொல்லி விடுவாள்.

அவளின் இந்த தன்மையை நேரம் சென்று தான் ஆஷிக்கால் புரிந்துக் கொள்ள முடிந்தது.பின் கட கட வென்று ஸ்ரீதர் பற்றி மட்டும் அல்லாமல் அனைத்தும் சொல்ல ஆராம்பித்தாள்.

“ஸ்ரீதர் என் கூட படிக்கும் என் கிளாஸ் மெட். போன மாதம் எங்கிட்ட வந்து ப்ரோபோஸ் செய்தான். நான் வேண்டாம் என்று சொல்லி விட்டேன். இப்போ அவன் அந்த நளினி கூட சுத்திட்டு இருக்கானே...இப்போ நான் போய் ஒகே சொன்னா . அவன் ஒத்துப்பானா..?” என்று இவனிடமே கேள்வியும் எழுப்பினான்.

அவள் பேச பேச இவன் கோபம் ஏறிக் கொண்டே சென்றது. இருந்தும் தம் கோபத்தை தன் முகத்தில் கூட காட்டாது மறைத்துக் கொண்டு அவளிடம் விஷயத்தை வாங்கும் பொருட்டு

“எதற்க்கு நீ அவனிடம் அவன் ப்ரோபோசை ஒத்துக் கொள்ள வேண்டும்.”

“வேறு எதற்க்கு கல்யாணம் செய்துக் கொள்வதற்க்கு தான். உண்மையை சொல்லணும் என்றால் அந்த ஸ்ரீதர் பார்க்க நல்லா கூட இருக்க மாட்டான்.அப்புறம் அவன் நிறைய பெண்கள் கூட சுத்தி நானே பார்த்து இருக்கிறேன். ஆனால் இப்போ எனக்கு வேறு வழியில்லையே அவனிடம் போய் பேசி தான் ஆக வேண்டும்.” என்று சொல்லி அவள் உதட்டை பிதிக்கி தன் பேச்சை முடிதாள்.

அவள் பேச பேச அவன் பயம் அதிகமானது. இவள் சொல்வதை பார்த்தாலே அந்த ஸ்ரீதர் அவ்வளவு நல்லவனாக தெரியவில்லைய்யே...இவளே சொல்கிறாள் அவன் நிறைய பெண்கள் கூட சுற்றுவான் என்று.

அதுவும் இல்லாமல் போன மாதம் இவளிடம் காதலை சொன்னவன். இவள் மறுத்ததும் அடுத்த மாதமே வேறு ஒரு பெண்ணிடம் பழகுகிறான் என்றால் இதில் இருந்தே தெரிகிறதே அவன் எப்படி பட்டவன் என்று.

இதனை சொன்னால் இவள் புரிந்துக் கொள்வாளா...முதலில் இவள் ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும் இவளை அவ்வளவு சீக்கிரம் தான் விட்டு விட போவது இல்லை.

இருந்தும் முதலிலேயே பிரச்சினையில் ஆராம்பிக்க வேண்டுமா என்பது தான் அவன் எண்ணமாக இருந்தது.முதலில் ஆருண்யாவின் திருமணம் முடித்து விட்டு பின் பரினிதா படிப்பு முடிந்ததும் சித்தார்த் ஒத்துக் கொண்டாலும் சரி ஒத்துக் கொள்ள வில்லை என்றாலும் சரி பரினிதாவை திருமணம் செய்து கொள்வதாக இருந்தது. ஆனால் இவள் பேச்சை பார்த்தால் நம்மை நல்லவனாக இருக்க விட மாட்டாள் போலவே…
 
Top