Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UAEI 14 2

Advertisement

Admin

Admin
Member
பரினிதா தன் கைய் தட்டியதில் கனவு உலகத்தில் இருந்து கலைந்தது போல் முழித்த ஆஷிக் தன்னை முறைத்துக் கொண்டு இருந்த பரினிதாவை பார்த்து “என்ன பரினிதா மாமாவை ஏன் இப்படி ஆசையாக பார்க்கிறாய்..?” என்று கேட்டதற்க்கு.

“ என்ன ஆசையாக பார்த்தேனா..அதுவும் மாமா என்று சொல்றீங்க.”

“ஆமாம் மாமா தானே...நீ தானேம்மா சொன்னாய். நான் உங்களை மாமா என்று கூப்பிடவா...இல்லை அத்தான் என்று கூப்பிடவா… ? என்று ஆபிசில் நீ தானேம்மா கேட்டாய். அதனால் இப்போது மாமா போதும். பிறகு அத்தான் என்று கூப்பிட சொல்லலாம் என்ற முடிவுக்கு வந்து இருக்கிறேன்.”

“அது என்ன பிறகு அத்தான்.”

“சொல்றேன் கண்டிப்பா சொல்றேன். ஆனால் அதற்க்கு நீ கொஞ்சம் வளரணும் பேபிம்மா…”

“என்ன எப்போ பார்த்தாலும் நீங்களும் என் அண்ணாவை மாதிரியே சின்ன பெண் போலவே நடத்துறீங்க. எனக்கு வயது இருபது ஆகுது தெரியும் தானே…?”

அவள் பேச பேசா ஒ அம்மணிக்கு சின்ன பெண் போல் நடத்தினால் பிடிக்காதோ என்று நினைத்துக் கொண்டே “நீ இப்படி ஒல்லியா இருந்தால் எல்லோரும் உன்னை அப்படி தான் நடத்துவாங்க. அதனால் நல்ல சாப்பிட்டு கொஞ்சம் சதை போட்டால் பார்ப்பதற்க்கு பெரிய பெண் போல் தெரிவாய். மத்தவங்களும் உன்னை பெரிய மனிஷியா நடத்துவாங்க.” என்றதற்க்கு அவள் சொன்னதில் திரும்பவும் காரை நிறுத்த நினைத்து நிறுத்தாமல் பின் பக்கம் பார்த்து கார் எதுவும் வர வில்லை என்று நினைத்து ஒரமாக காரை நிறுத்தி விட்டு.

“உன் மனதில் என்ன தான் நினைத்துக் கொண்டு இருக்கிறாய்.மனுஷனை நிம்மதியாகவே விடமாட்டாயா…?” என்று கோபத்துடன் கத்தியனை பார்த்து நான் இப்போ என்ன சொன்னோம் என்று இவர் இந்த கத்து கத்துகிறார்.

ஒரு சமயம் மாடலிங் செய்யும் வீட்டிலும் இவர் அம்மா பெண் கொடுக்க மாட்டாரோ என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

ஆம் அவள் அதை தான் அவனிடம் கேட்டு வைத்தாள். உடம்பு ஏற சொல்றீங்களே உடம்பு ஏறினால் மாடலிங் செய்ய முடியுமா என்று . குழந்தை என்று நினைத்துக் கொண்டு இருப்பவளை இப்படி கேட்டால் ஒருவனுக்கு டென்ஷன் ஏறுமா...ஏறதா…?

தான் கத்திய கத்தலுக்கு எந்த பதிலும் சொல்லாமல் தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பவளை பார்த்து அவன் கோபம் அதிகமானதே தவிர குறையவில்லை.

மேலும் அவன் ஏதோ பேச வரும் போதே பரினிதா “உங்களுக்கு சுத்தமா என்னை பிடிக்கவே இல்லை. அது தான் நான் என்ன சொன்னாலும் திட்டிட்டே இருக்கீங்க. “ என்று சொல்பவளை என்ன செய்வது என்று பார்த்திருந்தான்.

உன்னை எனக்கு பிடித்ததனால் தான் நான் இவளை திட்டுகிறேன் என்று சொன்னால் இவள் புரிந்துக் கொள்வளா…என்று மனதில் நினைத்துக் கொண்டே அவளிடம் பேச வாயைய் திறப்பதற்க்குள் அவன் வாய் மேல் தன் கைய் வைத்து

“இப்போ நீங்க என்னை திட்டினீங்கனா நான் காரை விட்டு இறங்கிடுவேன் என்ன சொல்றீங்க….?” என்ற கேள்விக்கு பதில் இல்லாமல் போக அவனை பார்த்து .

“சொல்லுங்க “ என்று சொல்லி விட்டு அப்போது தான் தன் கைய் அவன் உதட்டில் பட்டு இருப்பதை உணர்ந்த பரினிதா சட்டென்று தன் கையைய் எடுத்து விட்டு ஒரு வித சங்கடத்துடன் அவனை பார்த்தான்.

அவனும் அவளை குரு குரு என்று பார்த்து விட்டு பின் சிரித்துக் கொண்டே

“‘சரி திட்டவில்லை இப்போ எதற்க்கு நீ மாடலிங் செய்ய போவதாக சொன்னாய்.” அதற்க்கு அவள் சொன்ன பதில் தான் அவனால் நம்ப கூட முடியவில்லை.

“என் அண்ணன் தான் சொன்னார்.”

“என்ன சொன்னாய் உன் அண்ணா உன்னை மாடலிங் செய்ய சொன்னாரா…?”

“அப்படி வெளிபடையாக சொல்ல வில்லை.ஆனால் மறைமுகமாக சொன்னார்.” என்பதிலேயே சித்தார்த் ஏதோ சொல்லி இருப்பார். இந்த லூசு தான் அதை ஏடகூடமாக புரிந்து இருக்கும் என்று நினைத்துக் கொண்டே..

“என்ன சொன்னார் உன் அண்ணா மறை முகமாக”

“ஆ அப்படி கேளுங்க.அதை விட்டுட்டு சும்மா சும்மா திட்டிட்டே இருந்தா ஒரு சின்ன பெண் எவ்வளவு தான் தாங்குவாள்.” என்று சொல்லி விட்டு கண் சிமிட்டு விட்டு சிரிப்பவளை பார்த்ததும் அவளை அப்படியே அணைத்துக் கொள்ள வேண்டும் போல் எண்ணம் எழுவதை அவனால் கட்டு படுத்த முடியாமல் தன் கையை அவளை நோக்கி எழுந்தே விட்டது.

பின் என்ன நினைத்தானோ தலையை குலுக்கி தன்னை ஒரு நிலைக்கு கொண்டு வந்தவன் முதலில் இவளிடம் பேசி பத்திரமாக வீட்டுக்கு எவ்வளவு சீக்கிரம் கொண்டு போய் விடுகிறோமோ அவ்வளவு நல்லது. தனக்கு இல்லை அவளுக்கு என்று முடிவு எடுத்தவனாக அவளிடம்

“சொல் அது தான் கேட்டு விட்டேனே...உன் அண்ணன் என்ன சொன்னார்.

முதலில் இருந்து ஆஷிக் செயலையே… பார்த்துக் கொண்டு இருந்தவள். அவன் தன்னை நோக்கி கைய் எடுத்துக் கொண்டு வரவும் அவன் தன்னை அடிக்க தான் வருகிறான் என்று புரிந்துக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டாள்.

பின் சிறிது நேரம் சென்றும் தன் மேல் அடி விழாமல் இருக்க ஒரு கண்ணை திறந்து அவனை பார்த்தாள் அப்போது தான் அவன் தன் தலை உலுக்கி கொள்வதை பார்த்து இவன் என்ன செய்கிறான் .

நம்மை அடிக்க கையைய் எடுத்து கொண்டு வந்தான். பின் ஏன் அடிக்காமல் விட்டான் என்று யோசித்தவள். ஓ நாம் அண்ணாவிடம் சொன்னால் எங்கே ஆருண்யாவை திருமணம் செய்யமாட்டேன் என்று சொல்லிவிடுவாரோ என்று பயந்து தான் அடிக்க வில்லை என்று அவன் செயலுக்கு தன் அறிவு கொண்டு யோசித்து முடிவு எடுத்தவள்.

ம்..ம் அந்த பயம் இருக்கனும் மாப்பிள்ளை வீடுன்னா சும்மாவா...என்று ஒரு கெத்தாக அவனை ஒரு பார்வை பார்த்து அவன் சொல் என்று கேட்டதும் .

“ஒரு தடவை என் அண்ணா என்னை ஏஞ்சல் என்று சொன்னாரா. அதற்க்கு நான் ஒல்லியனா ஏஞ்சல் என்று சொன்னதற்க்கு மாடலிங் எல்லாம் உன் மாதிரி உடம்பு ஒல்லியாக இருக்க என்ன என்னவோ செய்கிறார்கள்.

ஆனால் உனக்கு தானாகவே வந்து இருக்கிறது என்று சொன்னாரா. அது போலவே மற்றொறு நாள் எனக்கு படிப்பு சரியாக வரவில்லை என்று சொன்னதற்க்கு கடவுள் ஒரு ஒருவருக்கு ஏதோ கொடுத்து இருப்பார் என்று சொன்னாரா ...நான் என் மூலையை உபயோகித்து என் அண்ணன் முதலில் சொன்னதும் அடுத்து சொன்னதையும் சேர்த்து வைத்து நானே கண்டு பிடித்தேன்.” அவள் சொல்ல சொல்ல கேட்டவன்.

“உன் மூளையை நல்லாவே உபயோகித்து இருக்கிறாய். இனி மேல் இது மாதிரி எல்லாம் பேசதே...இதை கேட்டால் உன் அண்ணனே கண்டிப்பாக திட்டுவார்.”

“ஏன் திட்ட போகிறார்.”

“மாடலிங் எல்லாம் அவ்வளவு ஈஸி கிடையாது பரினிதா. அதற்க்கு நிறைய அட்ஜஸ் செய்தாக வேண்டும்.அதுவும் இல்லாமம் உனக்கு அது செட்டாகது. இதை இத்தோடு விட்டு விடு.

“அது என்னால் முடியாது.நேற்று யாராவது சொல்லியிருந்தாலாவது நான் கேட்டு இருப்பேன். ஆனால் இன்று அதுவும் நீங்கள் சொல்லி நான் இந்த விஷயத்தில் கேட்க மேட்டேன்.” என்றதற்க்கு.

“அது என்ன நேற்று கேட்டு இருப்பேன். அதுவும் இன்று நான் சொல்லி கேட்க மாட்டேன் என்று சொல்கிறாய். அதற்க்கும் ஏதாவது காரணம் இருக்கா உன் மூளை தான் சும்மா இருக்காதே அது ஏதாவது சொல்லியிருக்கும் .அதை என்னிடம் சொல்கிறாயா…?” என்று கேட்டவனை சந்தேகத்துடன் பார்த்தாள்.

இவன் நம்மளை கிண்டல் செய்கிறானா… என்று அவன் முகம் பார்க்கும் போது அதில் எதையுமே அவளால் கண்டு பிடிக்க முடியவில்லை. சரி நாம் சொல்வது சொல்லுவோம் என்று நினைத்து .

“ஏன் என்றால் விளம்பரம் நிறுவனம் நடத்தும் நீங்கள் என்னை மாடலிங் செய்ய கூடாது என்று தடுப்பது சரியாகாது. அதுவும் இல்லாமல் நான் உங்கள் விளம்பர நிறுவனத்தில் தான் மாடலிங் செய்யலாம் என்று முடிவு செய்து உள்ளேன்.” அவள் பேச்சை கேட்ட அவன் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தான்.

 
Top