Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Un Arugil En Ithaiyam 9.1

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்---9

தன் மனதுக்குள் அட சாமியார் என்று நினைச்சிட்டு இருந்த நம்ம அண்ணவா…? என்று நினைக்கும் போதே மற்றொரு மனதோ அது தான் சாமியாரை நம்ப கூடாது என்று சொல்வது. இப்போது அவளுக்கு டோரா புஜ்ஜியோடு தன் அண்ணனின் டைரி படிப்பதில் ஆர்வம் ஏற்பட அந்த டைரியின் முதல் பக்கத்தை பார்த்தாள்.

அந்த டைரியில் போட்டு இருந்த வருடத்தை பார்த்து உடனுக்கு உடன் தன் இரண்டு கைய் விரல் உதவியுடன் எண்ணி பார்த்ததில் அந்த டைரி எட்டு வருடம் முன் உள்ளது என்றும் அப்போது தன் அன்ணன் காலேஜ் கடைசி வருடம் படித்துக் கொண்டு இருந்தார் என்றும் தெரியவந்தது.

சீ முதலில் இருந்து படித்தாலே நமக்கு புரிவது கஷ்டம் இதில் பாதியில் இருந்து படித்தால் எங்கு புரிய போகிறது என்று நினைத்து சித்தார்த்தின் காலேஜ் முதல் வருடம் படித்த ஆண்டின் டைரியை தேடி எடுத்தாள்.

அந்த டைரியில் முதல் ஆறு மாதம் எந்த வித தகவலும் இல்லை.அனைத்தும் ஒரே மாதிரியாக தான் இருந்தது.இன்று இது படித்தேன் இந்த மார்க் எடுத்தேன் என்று படிப்பு பற்றியும் இல்லை என்றால் தாத்தாவை பற்றியுமே இருந்தது.

சரி நமக்கு உபயோகமான தகவல் இதில் இல்லை என்று நினைத்து மூடும் தறுவாயில் தான் ஆருண்யா என்ற பெயர் ரோஸ் ஸ்கெச்சியில் எழுதி அதில் கீழ் ஒரு பூவையும் வரைந்து சித்தார்த் பரினிதாவை அந்த டைரியை மூட விடாமல் செய்தான்.

இன்று தான் முதன் முதலில் ஆருண்யாவின் மீது என் கவனம் சென்றது. இது வரை நான் அவளை கவனிக்காததுக்கு காரணம் அவள் இது வரை யாரிடமும் பேசினதே இல்லை என்று கூட சொல்லலாம் இன்னும் சொல்ல போனால் மேடம் கேட்கும் கேள்விக்கு கூட பதில் கூறும் போது அவள் உதடு மட்டுமே அசையும்.

அதனால் அவளுக்கு தெரியுமா தெரியாதா என்ற சந்தேகத்தில் அந்த மேடம் ஆருண்யாவை “தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்ல வேண்டியது தானே...என்னவோ பதில் சொல்வது போல் நடிப்பது.” என்ன திட்டி அமர சொல்லி விடுவார்.

அந்த செமஸ்ட்டர் முடிவில் நானும் அவளும் ஒரே மார்க் எடுத்து ஒரே ராங்கில் நிற்க்கும் போது தான் அவளின் படிப்பின் அளவு எனக்கு மட்டும் இல்லாமல் என் கிளாஸ் முழுவதுக்கும் தெரிய வந்தது.

ஏன் என்றால் இது வரை நான் படித்த பள்ளியில் நான் தான் முதல் மாணவனாக இருப்பேன். அது மட்டும் இல்லாமல் என் மார்க்குக்கும் அடுத்து எடுக்கும் பார்க்கும் நிறையே இடைவெளி இருக்கும். இது வரை என் மார்க் பக்கத்தில் யாரும் வந்தது கூட கிடையாது.

அதை நினைத்து எனக்கு கொஞ்சம் கர்வமாக கூட இருக்கும்.முதன் முதலில் அந்த கர்வத்தை உடைத்து எறிந்தவள் ஆருண்யா தான்.அதன் பின் என் கவனம் முழுவதும் அவள் மேல் இருந்ததால் அடுத்த செமஸ்டரில் அவள் முதலும் நான் அடுத்ததும் வந்தேன்.

அதை நினைத்து எனக்கு கவலை சிறிதும் இல்லாதது தான் ஆச்சரியம். பின் யோசித்ததில் தெரிய வந்தது என் மனது.என்னவள் முதல் எடுத்ததே அதற்க்கு காரணம் என்று. பின் அவளையே பின் தொடர்ந்ததில் தெரியவந்தது.

அவள் மதியம் சாப்பிட எதுவும் எடுத்து வராதது.அவளிடம் போதிய புக் கூட இல்லாது காலேஜ் லைப்ரெரியில் இருக்கும் புக்கை படித்தே இந்த மார்க் வாங்கி இருக்கிறாள் என்றால் கண்டிப்பாக பாராட்டா வேண்டும் என்று நினைத்து நானே அவளிடம் பேசினேன்.

முதலில் பேச தயங்கியவள் பின் மெல்ல மெல்ல என்னிடம் பழகினாள்.நான் என் காதலை சொல்லும் போது கொஞ்சம் நேரம் தாம் மெளனம் காத்தாள்.பின் அவள் கேட்டது இது தான் “ படிப்பு முடிந்ததும் சீக்கிரம் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா…?” என்பதே.

நான் அசந்தே விட்டேன் அவள் பேச்சில்.நட்பை ஏற்பதற்க்கே அப்படி தயங்கியவள் காதலை சட்டென்று ஏற்ற விதம் என்னை ஆச்சரியபட வைத்தது. பின் அவளே என்னை பார்த்து “நான் சட்டென்று இப்படி ஒத்துக் கொண்டது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது தானே..?” என்று அவளே கேள்வி எழுப்பி பின் அதற்க்கு அவளே பதிலும் தந்தாள்.

“தன் தந்தையின் தற்கொலையில் தொடங்கி தாங்கள் மாமாவின் வீட்டில் அடைக்கலம் ஆனாது வரை சொன்னவள் கடைசியாக இப்போது என் அம்மா என்னை பார்க்க நேரம் இல்லாமல் மாமாவின் வீட்டில் வேலை செய்வதற்க்கும் மாமாவின் பெண்களை பார்ப்பதற்க்குமே சரியாக இருக்கிறது.

ஆஷிக்கோ என் படிப்பு செலவுக்கும் அவன் படிப்பு செலவுக்கும் அவன் வேலை பார்த்து தான் ஆகவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அவன் காலேஜ் முடித்த பிறகு பார்ட் டைம் ஜாப்புக்கு சென்று விடுவதால் என்னோடு இருப்பதே கிடையாது.

எனக்கு பணம் இல்லாததை விட என் தனிமை தான் எனக்கு கொடுமையாக இருக்கிறது சித்தார்த்.இதில் என் அம்மாவையோ, ஆஷிக்கோயோ குறை சொல்லவே முடியாது.அவர்கள் சூழ்நிலை அப்படி.அதனால் தான் உன்னிடம் கேட்கிறேன் சித்தார்த் .நம் படிப்பு முடிந்ததும் என்னை திருமனம் செய்து கொள்கிறாயா...எனக்கே எனக்கான உறவுக்கு மனம் ஏங்குகிறது சித்தர்த்.”

என்ற அவள் பேச்சில் அவள் தனிமை உணர்வை புரிந்துக் கொண்ட நான் “கண்டிப்பாக நம் படிப்பு முடியும் தருவாயிலேயே என் தாத்தாவிடம் சொல்லி நான் உன்னை திருமணம் செய்துக் கொள்கிறேன்.” என்று கூறிய போது அவள் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.

எல்லாம் நல்ல படியாக தான் போய் கொண்டு இருந்தது.என் காலேஜின் இறுதி ஆண்டில் என் பெற்றோர், என் குருவுக்கும் மேலான என் தாத்தாவின் மறைவிக்கு பிறகு அனைத்தும் தலை கீழானாது.

அன்று என் பெற்றொரின் இறுதி சடங்கு முடிந்து வீடு திரும்பி இருக்கும் போது என் தங்கையின் அழுகுரலில் அவள் ரூமுக்கு போன நான் என் தங்கை பெரிய மனிஷியான விஷயம் தெரிந்து முதலில் என்ன செய்வது என்று புரியாது நானும் அழுதேன்.

என்னை பார்த்து என் தங்கை தன் வலியை மறைத்து எனக்கு ஆறுதல் சொன்னாளோ அப்போதே முடிவு செய்து விட்டேன். இனி என் தங்கைக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுத்த பிறகு தான் என் வாழ்க்கை பற்றி யோசிக்க வேண்டும் என்று.

அன்று என் வாழ்க்கையில் பெற்றோர் தாத்தாவை மட்டும் இழக்க வில்லை கூடவே என் காதலையும் சேர்த்து தான் இழந்தேன்.அன்று என் ரூமுக்கு வந்த நான் இது தான் யோசித்தேன். பரினிதா இப்போது தான் பன்னிரண்டு வயதாகும் சிறு பெண் அவள் படிப்பு முடியவே எப்படியோ ஒரு ஒன்பது வருடம் கடந்து விடும்.

பின் தான் நான் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய முடியும்.எப்படியோ அவள் திருமணம் முடிய பத்து வருடம் கடந்து விடும். நான் ஆண் பிள்ளை பத்து வருடம் கடந்து கூட திருமணம் செய்துக் கொள்ளலாம்.

ஆனால் ஆருண்யா நான் அவளிடம் என் காதலை சொன்ன போது அவள் கேட்டது இது தான் விரைவில் திருமணம் செய்து கொண்டு என் தனிமை போக்கு என்று.இப்போது உள்ள சூழ்நிலையில் பத்து வருடம் ஆகாமல் என்னால் திருமணம் செய்துக் கொள்ள முடியாது.

நான் என் நிலை சொன்னால் கண்டிப்பாக எனக்கா காத்திருப்பாள். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை.ஆனால் எனக்காக நீண்ட பத்து வருடம் அவள் காத்திருப்பதில் எனக்கு உடன் பாடு இல்லை.

நான் உண்மையை சொல்லாமல் வேறு காரணம் சொல்லி அவளை விட்டு பிரிந்தால் தான்.என்னை மறந்து அவள் ஒரு நல்ல வாழ்க்கையை தேர்ந்தெடுப்பாள் என்ற முடிவில் என் பெற்றோர்,தாத்தாவின் காரியம் முடிந்த மறு நாளே காலேஜ் சென்று

“நான் உன்னை திருமணம் செய்துக் கொள்ள முடியாது. ஏன் என்றால் நான் அடுத்து கலெக்டருக்கு படிக்க போகிறேன்.அதுவும் இல்லாமல் என் குடும்ப நிலைக்கும் உன் குடும்ப நிலைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஏதோ வயது கோளாரில் காதலித்து விட்டோம்.அதற்க்காக காலம் முழுவதும் கஷ்டப்பட நான் தாயராக இல்லை.” என்று கூறிவிட்டு அவள் முகம் பார்க்காமல் வந்து விட்டேன்.

ஆனால் அன்று தான் அவள் முகம் பார்க்க வில்லை.அதற்க்கு அடுத்த அடுத்த நாளில் மறைந்து இருந்து எப்படியாவது அவள் முகத்தை பார்த்து விடுவேன். ஏன் என்றால் இனி அந்த முகம் தான் என் வாழ் நாள் முழுவதும் என் மனதில் இருக்க போகிறது.

அவளிடம் என் காதல் முறிவை சொல்வதற்க்கு முன் நான் என் மனதில் ஏற்கனவே ஒரு முடிவு எடுத்து விட்டு தான் சென்றேன். அவள் பாட்டுக்கு இருந்தவளை நானே தான் வலிய சென்று பேசி காதல் சொல்லி அவள் மனதில் ஆசையை விதைத்து விட்டு. இப்போது நானே அதனை முறிப்பதற்க்கு காரணம் இருந்தாலும், என் தங்கைக்காக இருந்தாலும் அது சுயநலம் தானே…ஒரு பெண் மனதை காயம் படுத்தியதற்க்கு எனக்கு தண்டனை தேவை.

அதனால் நான் கடைசி வரை திருமணமே செய்துக் கொள்வதில்லை என்ற முடிவோடு தான் அவளிடம் சென்று கடைசியாக பேசினேன். பின் காலேஜ் முடிந்ததும் அவள் அவள் வழியில் செல்ல நான் என் வழியில் செல்ல ஆராம்பித்தேன்.

ஆனால் அவள் நினைவு மட்டும் என்னை விட்டு நீங்கவே இல்லை.நான் கடெக்டர் ஆனாதும் அவளை பற்றி விசாரிக்கலாமா...என்று.

பின் என் முடிவை நானே மாற்றி கொள்வேன். எனக்கு தெரியும் அவளுக்கு கண்டிப்பாக திருமணமாகி இருக்கும் என்று. ஆனால் அதை நேரில் பார்க்கும் மன தைரியம் எனக்கு இல்லை”.என்று அத்தோடு அந்த டைரி முடிந்து இருந்தது.

அதனை படிக்க படிக்க பரினிதா டைரியோடு ஒன்றி போனாள். கடைசி ஆண்டின் டைரி படித்து முடித்ததும் அவள் கண்களில் இருந்து கண்ணீர் விடாமல் வந்துக் கொண்டே இருந்தது.அதுவும் தன்னால் தான் தன் அண்ணன் தன் காதலை முறித்துக் கொண்டதும் அல்லாமல். இனி திருமணமே செய்துக் கொள்ள மாட்டார் என்று தெரிய வந்ததும் அவள் மனதில் குற்ற உணர்ச்சி அதிகரித்தது.
 
Top