Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Un Arugil En Ithaiyam 9.2

Advertisement

Admin

Admin
Member




தன் தாய் ,தந்தை ,தாத்தாவின் மறைவிக்கு பின் அவளுக்கு தன் அண்ணன் மீதும் பாட்டி மீது சிறிது வருத்தம் இருந்தது என்று கூட சொல்லலாம்.தன் அண்ணன் பாட்டுக்கு தன் படிப்பு என்று சென்று விட்டார்.

பாட்டிம்மா தொழிலை பார்ப்பதற்க்காக தன்னை ஆஸ்ட்டலில் சேர்த்து விட்டார்கள். என்று அவர்கள் மீது கொஞ்சம் வருத்தத்தில் தான் இருந்தாள்.அதுவும் பரினிதா தன் பன்னிரண்டு வயது வரை தன் தாயின் பின்னயே அலைந்தவள்.

அப்படி இருக்கும் போது அவளின் இந்த ஆஸ்ட்டலின் தனிமை அவளை கொன்றது என்று கூட சொல்லலாம். பின் தன் தனிமையைய் போக்க அவள் கைய்யாண்ட முறை தான் இந்த குழந்தைகளின் சேர்க்கை.

அவள் ஆஸ்ட்டலில் மற்ற பிள்ளைகள் தன் அம்மா ,அப்பா, என்பதையே பேசிக் கொண்டு இருந்தவர்களிடம் அவளால் தன் பெற்றவர்களை பற்றி என்ன சொல்வது என்ற நினைப்பில் பள்ளி முடிந்ததும் பக்கத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் அமர்ந்துக் கொள்வாள்.

அந்த குழந்தைகளுடன் குழந்தையாக அவளும் சேர்ந்து விளையாடி விட்டு ஆஸ்ட்டல் வந்து சேர்வாள். பின் அந்த பழக்கமே அவளுக்கு பழகியும் விட்டது நன்றாகவும் இருந்தது.

இப்போது அதை நினைத்து வருந்தினாள். தன்னால் தான் தன் அண்ணனுக்கு திருமண வாழ்க்கையே இல்லை என்று நினைக்கையில் நாம் ஏதாவது அவருக்கு செய்ய வேண்டும். அவரை இப்படியே கடைசி வரை விட முடியாது என்று ஒரு முடிவோடு இருந்தவளுக்கு சட்டென்று மனதில் ஒரு மின்னல் தோன்றி மறைந்தது.

நாம் ஏன் முதலில் அந்த ஆருண்யாவை பற்றி விசாரிக்க கூடாது .ஒரு வேளை அவர்களும் திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் ...அந்த நினைவே அவளுக்குள் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.

இது வரை அவள் தன் மூளைக்கு வேலை கொடுக்காமல் வைத்திருந்ததால்.இப்போது அது அதிக வேகமுடன் செயல்பட்டது.அவளுக்கு தன்னுடன் படிக்கும் பெண்ணின் அண்ணன் டிடெக்டிவ் வைத்து நடத்துவது நியாபகத்துக்கு வந்ததும்.

அதி விரைவாக செயல்பட்டாள். அதுவும் அவள் போன் நம்பர் கூட தன்னிடம் இல்லை என்று யோசித்து இருந்தவள் சட்டென்று மற்றொரு தோழியின் போனில் பேசி அந்த பெண்ணின் போன் நம்பர் வாங்கி பின் அவளிடமும் பேசி அவள் அண்ணனின் போன் நம்பர் வாங்கி விட்டு தான் கொஞ்சம் யோசிக்க ஆராம்பித்தாள்.

இப்போது தான் அந்த டிடெக்டிவிடம் எப்படி பேசுவது என்று மனதில் ஒத்திகை பார்த்தாள் தன் கையில் போனை எடுத்து அந்த டிடெக்டிவ் ஏஜென்ஸியின் நம்பரை சுத்தினாள்.அந்த பக்கம் எடுத்தவுடன் உடனே வேலையாக வேண்டும் என்றால் தன் அண்ணன் பெயர் உபயோகித்தால் தான் முடியும் என்று முடிவு செய்துக் கொண்டு அதற்க்கு ஏற்ற மாதிரி பேசினாள்.

முதலில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள் . “அண்ணா நான் உங்கள் தங்கையுடன் படிக்கிறேன். சென்னை கலெக்டர் சித்தார்த்தின் தங்கை என்றதும்.” முதலில் சாதரணமாக பேசிக் கொண்டு இருந்தவன் இப்போது “சொல்லுங்க மேடம். என் உதவி ஏதாவது உங்களுக்கு தேவையா…?” என்று விசாரித்தான்.

பரினிதாவும் சுற்றி வளைக்காமல் உடனே விஷயத்திற்க்கு வந்தாள். “ஆம் அண்ணா நான் இப்போது உங்கள் செல்லுக்கு ஒரு போட்டோ அனுப்புகிறேன். அவர்கள் படித்த காலேஜ் மற்றும் எந்த வருடம் படித்தார்கள் என்ற தகவலையும் அனுப்புகிறேன். இப்போது நான் ஏற்காட்டில் இருக்கிறேன். நாளை காலை அங்கு வந்து விடுவேன். நீங்கள் நாளை மாலைக்குள் அவர்களை பற்றி விசாரித்து சொல்ல முடியுமா…?” என்ற கேள்விக்கு.

“கண்டிப்பாக நாளை மாலைக்குள் முடியும் என்று சொல்ல முடியாது மேடம்.அது அவர்களை பொறுத்தது. இதுவே மிக பிரபலமானவர்களோ…இல்லை பணக்காரர்களாகவோ இருந்தால் விரைவாக தகவல் கிடைத்து விடும். இருந்தும் உங்கள் வேலையை சீக்கிரம் முடிக்கிறேன் .” என்று கூறி அந்த டிடெக்டிவ் போனை அணைத்ததும்.

இந்த பக்கத்திலிருந்த பரினிதா யோசிக்க ஆராம்பித்தால் கண்டிப்பாக அந்த டைரியில் எழுதியிருப்பதை பார்த்தால் அவர்கள் குடும்பம் வசதி இல்லாதது போல் தான் இருக்கிறது.அப்போது சீக்கிரம் அவர்களை பற்றி தெரிந்துக் கொள்ள முடியதா…? சரி நாம் போட்டோவை அனுப்பி விட்டு எதற்க்கும் இன்னொறு தடவை சொல்லி விடுவோம் என்று நினைத்து ஆருண்யா தனியாக இருக்கும் போட்டோவையே அனுப்பினாள்.

தன் அண்ணனோடு இருக்கும் போட்டோவை அனுப்ப கூடாது என்று முதலிலேயே அவள் முடிவு செய்து இருந்தாள். அதற்க்கு காரணம் தன் அண்ணனின் பதவி என்றால் மற்றொன்று அவர்களுக்கு திருமணமாகி இருந்தால் இதனால் அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு விடுமோ என்று பயந்து தான் ஆருண்யாவின் தனி படத்தை அனுப்பி விட்டு திரும்பவும் சீக்கிரம் எனக்கு அவர்களை பற்றி தெரிய வேண்டும்.” என்று இன்னொறு தடவை சொல்லினாள்.

பின் அந்த டைரியையும், மற்றொறு போட்டோவையும் எடுத்துக் கொண்டு தன் ரூமுக்கு வருவதற்க்கும், சித்தார்த் குழந்தைகளுடன் வந்து சேருவதற்க்கும் சரியாக இருந்தது.குழந்தைகள் சத்தத்தை கேட்டும் ரூமை விட்டு வெளியே வராமல் இருக்கும் தங்கையை நினைத்து இன்னும் அவள் உடம்பு சரியாக வில்லையா…? என்று நினைத்துக் கொண்டே அவள் அறை நோக்கி சென்றான்.

தன் அண்ணன் வரும் ஒசைக் கேட்டதும் தன் கண்களை மூடிக் கொண்டாள். கண்டிப்பாக இப்போது நாம் நம் அண்ணனிடம் பேசினாள். நாம் அனைத்தையும் சொல்லி விடுவோம் என்று நினைத்தே தூங்குவது போல் கண் மூடிக் கொண்டாள்.

சித்தார்த் தன் தங்கையின் கழுத்தை தொட்டு பார்த்து விட்டு சுரம் இல்லை என்று தெரிந்ததும் தான் அவனுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.பின் அவள் முகத்தில் விழுந்த முடியை ஒதுக்கி விட்டு ஜன்னலின் திரையையும் மூடி விட்டு அவள் நெற்றியில் இதழ் பதித்து அவள் முகத்தையே சிறிது நேரம் பார்த்திருந்தான்.

பின் அந்த அறையை விட்டு சித்தார்த் வெளியேறியதும் தான் பரினிதாவுக்கு மூச்சே சரியாக விடமுடிந்தது.தன் அண்ணனின் ஒவ்வொறு செயலிலும் அவனுக்கு தன் மீது இருந்த பாசத்தின் அளவு அவளுக்கு விளங்கியது.

கண்டிப்பாக நான் என் அண்ணாவுக்கு ஏதாவது செய்தாக வேண்டும். கடவுளே அவர்களுக்கு திருமணமாகி இருக்க கூடாது. அப்படி மட்டும் இருந்தால் அவர்கள் எங்கு இருந்தாலும் அவர்கள் காலில் விழுந்தாவது என் அண்ணனோடு சேர்த்து வைத்து விடுவேன் என்று கடவுளிடம் மனு போட்டாள்.

பரினிதா மறுநாள் சென்னை வந்து சேரும் வரை இதே யோசனையாகவே இருந்தாள்.அவளின் அமைதியை பார்த்த சித்தார்த் “என்ன குட்டிம்மா ...ஒன்னும் பேச மாட்டேங்குறே...நீ இப்படி அமைதியா இருக்க மாட்டியே அதுவும் குழந்தைகள் இருக்கும் போது. என்னடா செல்லம் உடம்புக்கு முடியலையா ...எது இருந்தாலும் சொல்லுடா…” என்ற அண்ணனிடம் எதுவும் பேசாமல் அவள் தோள் மீது தலை சாய்த்தாள்.

சென்னை வந்தவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.அவள் சென்னை வந்த மதியமே அந்த டிடெக்டிவிடம் இருந்து கால் வந்தது.”மேடம் எல்லா தகலும் திரட்டி விட்டேன். நான் நேரில் வந்து தரட்டுமா… இல்லை உங்கள் இமெயில் சொன்னால் நான் அதில் அனுப்பி விடட்டுமா...என்று கேட்டதுக்கு.

“ இரண்டும் வேண்டாம். நானே நேரில் வந்து வாங்கிக் கொள்கிறேன். எனக்கு உடனே ஒரே ஒரு தகவல் மட்டும் போனிலேயே சொல்லுங்கள் .அவர்களுக்கு திருணமாகி விட்டதா…?” என்று கேட்டு விட்டு மூச்சு கூட விடாமல் அவர் சொல்லும் பதிலுக்கு காத்திருந்தாள்.

அந்த பக்கத்தில் “இல்லை” என்ற பதில் கேட்டது ஓ என்று கத்தியே விட்டாள்.

அந்த பக்கம் “என்ன மேடம் ஏதும் பிரச்சினை இல்லையே…” என்றதற்க்கு சந்தோஷத்துடன் “இனிமேல் பிரச்சினையே இல்லை.நான் இப்போதே அங்கு வருகிறேன்.” என்று கூறி போனை வைத்ததும் உடனே டிடெக்டிவ் ஏஜென்ஸிக்கு கிளம்பினாள்.

சித்தார்த் சென்னை வந்தவுடனே டெல்லி கிளம்பி விட்டான்.எப்போதும் சித்தார்த் எங்காவது வெளி ஊருக்கு சென்றால் மூஞ்சை தூக்கி தான் வைத்துக் கொள்வாள். இப்போது சித்தார்த் வெளி ஊருக்கு போனது அவளுக்கு வசதியாகி போய் விட்டது.

டிரைவரிடம் சொல்லி காரை எடுக்க சொல்லி விட்டு பணத்தையும் நிறையவே எடுத்துக் கொண்டாள். ஏன் என்றால் டிடெக்டிவுக்கு எவ்வளவு பணம் கொடுப்பது என்று அவளுக்கு தெரியவில்லை.

மேலும் அவர் எவ்வளவு கேட்டாலும் அதற்க்கு மேல் கொடுத்து விடவேண்டும் என்று முடிவு செய்திருந்ததால் அளவுக்கு அதிகமாகவே பணம் எடுத்துக் கொண்டாள்.அந்த டிடெக்டிவ் ஏஜென்ஸி வாசலில் நின்றதும் டிரைவரை அனுப்பி விட்டாள்.

உள்ளே ரிசப்ஷனில் விசாரித்து இருக்கும் போதே தன் தோழியின் அண்ணன் வந்து “வாங்க மேடம் உங்களுக்கு தான் காத்திருந்தேன். நான் அவசரமாக வெளியே செல்ல வேண்டும்.” என்று சொல்லிக் கொண்டே தன் அறைக்கு அழைத்து சென்றார்.

பரினிதா அமர்ந்ததும் “ஏதாவது குடிக்கிறீங்களா மேடம்” என்று கேட்டதற்க்கு “எனக்கு ஒன்றும் வேண்டாம் அண்ணா. அப்புறம் என்னை மேடம் எல்லாம் கூப்பிடாதீங்க நான் தான் சொன்னனே.. .உங்கள் தங்கை கூட தான் நான் படிக்கிறேன். அதனால் பெயர் சொல்லியே கூப்பிடுங்கள் அண்ணா.” என்றதற்க்கு

“சும்மவா சொன்னாங்க மேன்மக்கள் என்றும் மேன் மேக்களே...என்று “ என்று சொல்லி விட்டு ஒரு கவரை நீட்டினார்.

அதனை ஆவளுடன் பெற்றுக் கொண்ட பரினிதா அதனை அந்த இடத்திலேயே பிரித்துக் கொண்டே “இன்று முடியாது என்று சொன்னீர்கள். ஆனால் சீக்கிரம் முடித்து விட்டிர்களே…” என்று கேட்டுக் கொண்டே அந்த கவரை பிரித்து எடுத்தாள்.

“அது தான் சொன்னனே மேடம் என்று சொல்ல வந்தவன் பரினிதாவின் பார்வையில் சிரித்துக் கொண்டே பரினிதா குடும்பம் பிரபலமானதாக இருந்தால். சீக்கிரம் தகவல் கிடைத்து விடும் என்று.இந்த சென்னையில் ஆஷிக் குடும்பத்தை பற்றி தெரியாதவர்கள் யார்…?” என்று கேள்வியும் எழுப்பினார்.

பரினிதாவுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.அந்த கவரை பிரித்து பார்க்காமல் “நீங்கள் என்ன சொல்கிறீர்கள் அண்ணா...எனக்கு புரியவில்லையே…?”

“ஆமாம் பரினிதா. நீங்கள் கொடுத்த போட்டோவில் இருப்பது சொர்க்கபூமியின் முதலாளி ஆஷிக் சாரின் சகோதரி.” என்று கேட்டதும் சட்டென்று இருக்கையில் விட்டு எழுத்து கொண்டே தன்னிடம் இருந்த பணத்தில் எண்ணி பார்க்காமலேயே கத்தையாக கொடுத்து விட்டு மகிழ்ச்சியுடன் சென்றாள்.
 
Top