Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vaa...Sagi!! (Writeup)

Advertisement

Charithraa.AR

Tamil Novel Writer
The Writers Crew
69வா..சகி!!
-------------
"கொஞ்சம் குஜால் டைப்புல கவர்ச்சியா காதல் கதை எழுதினீங்கனா, அதை புத்தகமாவே போட்டுரலாம். பொண்ணுங்க அதத்தான் விரும்பி படிப்பாங்க" - ஒரு பெண் பதிப்பாளரே (No name, Please.) இவ்வாறுரைக்கையில், காதல்/காமம்/பெண்ணியம் பற்றியோ, பெண்ணழகு பற்றியோ, ஏன்? அதன் சாயல் கூட இல்லாமல் எழுதப்படும் எந்தவொரு விஷயத்தையும் ஒரு பெண் ரசித்துப்படிப்பென்பது, எழுத்தாளனின் வெற்றியல்ல, அது.. "வரம்". ஏனெனில் அவ்வகை வாசிப்பு நல்லதொரு "Observatory sense" கிடைக்கப்பெற்ற பெண்களால் மட்டுமே சாத்தியம்.

Appreciation/Honest Review மட்டுமே ஒரு எழுத்தாளனை அடுத்த படைப்பை நோக்கி நகர வைக்குமெனில், அதை கொடுப்பதற்கு தேவை, ஆண்ட்ராய்டில் கண்டதை scroll செய்து scroll செய்து, சரி கழுத இதுக்குமொரு லைக்க போடுவோம் என்று தேய்ந்துபோன கழிசடை விரல்களல்ல. "உன்னதப்படுத்தப்பட்டதோர் வாசிப்பும்- கொஞ்சம் நேர்மையும் மென்மையானதோர் விரலும்"!!

அவ்வகை வாசகியர் அடியேனுக்குண்டா எனும் ஐயமெல்லாம் ஏற்படாதிருக்க காரணம்,

“நீரூற்றாய் நெளிந்திடும் நின் மொழிநடை..
அதன்மேல்-
நில்லாது நகர்கிறதென் விழிநடை!"

என்று அன்பு பாராட்டுவதும், "உன் புத்தகத்திற்காக காத்திருக்கிறேன் தம்பி" என்று ஆசிர்வதிப்பதும்…, Fashion Design, Business, வேலை, குடும்பம் என யாவும் மீறி தன் நாவல்களால் பெரும்புகழ் பெற்ற (நான் அண்ணாந்து பார்க்கும்) "எழுத்தாளினிகள்" கூட, "இவன் நமக்கு போட்டியா இருப்பான்" என்ற பயமின்றி தட்டிக்கொடுப்பதும், தன் முனைப்பால் தானே ஜெயித்திடுவோமென்ற பெரும் தன்னம்பிக்கை கொண்டவொரு பெண் You tuber, பெண்கள் தற்காப்பின் மேலுள்ள காதலால் என் "Bruce lee" கவிதை குறித்து சிலாகித்து பேசுவதும் மட்டுமல்ல...

அதிமூளையும் புத்திக்கூர்மையுங்கொண்ட பெண்டிரென்றால் கொஞ்சம் "Sapiosexual"-தனம் ஒட்டியிருக்குமென்ற Scientific பினாத்தல்களை எல்லாம் உடைத்தெறிந்து நிற்பதால் மட்டுமே!

" A well read woman is a dangerous creature" என்று Lesa Keyplas சொன்னதற்கேற்ப, Social மீடியாவை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்றறிந்த நிஜ "வாசகி"கள் மற்ற அதே வர்க்கத்து ஜந்துக்களை போல சோஷியல் மீடியாவில் மூளையை மழுங்கடுத்திக்கொண்டு விரவிக்கிடப்பதில்லை. உதடு குவித்த சுயமியிட்டு "நான் எப்படி இருக்கேன்" என்று ஊருக்கே தம்பட்டம் அடிப்பதில்லை. பதிவென்ற பெயரில் சுயவிபரத்தை எல்லாம் குமட்டிவிட்டு, "இந்த ஆம்பளைங்களே இப்படித்தான்பா..எப்படி அலையுறானுங்க" என்று Screenshot அலப்பறைகள் செய்வதில்லை. இவ்வகை ஜந்துக்களை மனுஷியாக அல்ல, கமலமாக கூட ("க"வை கழற்றி விட்டு படிக்கவும்) கருத தகுதியற்றதுகள் என்றவரேனும் சொன்னால், நிச்சயம் நான் ஆதரவு தருவேன்.

நான் சிறப்பறிந்து சொல்லுமிந்த “வாசகி” நல்ல எழுத்துக்களுக்கு தருவது போல.!!!
------------------------
#Charithraas
 
“ உன்னதப்படுத்தப்பட்டோர் வாசிப்பும் - கொஞ்சம் நேர்மையும்
மென்மையானதோர் விரலும்..!! “ கவிதையா இருக்கு...

உன்னதப்படுத்தப்பட்ம வாசிப்போட....
நடு நிலமையோடு கூடிய கடின விரல்களும்....
வா...சகியர் தானே....?

nice....
 
???
Social media வில் கரை கண்டிருக்கீங்க போல......
Reg novels, what you have said is right.....
எங்கோ எப்போதோ நடந்ததற்கு திரண்டுவரும் மகளிர் அணி novelல் வரும் போது அமோக ஆதரவு கொடுப்பது :unsure::unsure::unsure:

Imaginary world influences a lot......
FB slogan reg novels...... கதையை கதையா மட்டும் பார்க்கவும்......
நிழலும் நிதர்சனமும் not related?
 
உன்னதம் என்பது தனிப்பட்ட கருத்து
உன்னதம் என்பது இந்த உலகில் எதை வைத்து வரையறுக்கப்படுகிறது
அப்படி ஆராய போனால் குறைகளை காண்பதுமே உன்னத்தமில்லை
நாமும் அப்படியே
 
“ உன்னதப்படுத்தப்பட்டோர் வாசிப்பும் - கொஞ்சம் நேர்மையும்
மென்மையானதோர் விரலும்..!! “ கவிதையா இருக்கு...

உன்னதப்படுத்தப்பட்ம வாசிப்போட....
நடு நிலமையோடு கூடிய கடின விரல்களும்....
வா...சகியர் தானே....?

nice....
OFcourse Rani :)
 
உன்னதம் என்பது தனிப்பட்ட கருத்து
உன்னதம் என்பது இந்த உலகில் எதை வைத்து வரையறுக்கப்படுகிறது
அப்படி ஆராய போனால் குறைகளை காண்பதுமே உன்னத்தமில்லை
நாமும் அப்படியே

தனிப்பட்ட கருத்து என்று வரும்போது,...
பொது வரைமுறை என்ற அளவீடு சாத்யமா..?
 
Top