இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும் 6
உங்கள்ல பாதிப்பேர் யூகிச்ச மாதிரி…
பூம்புகாருக்கு அவளோட ஆராய்ச்சி நிமித்தமா தான் போறாங்க….!!
கண்டுபிடிச்சவங்க காலரை தூக்கி விட்டுக்கோங்க….!!!!!
அவங்க தனியா இல்ல… கொஞ்சம் பயிற்சி பெற்ற ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மற்றும் மீனவர்கள்,மருத்துவர்கள், ஒரு சில வரலாற்று அறிஞர்கள், சில ஆய்வாளர்கள் எல்லாரும் சேர்ந்து பூம்புகார் கடல் பகுதியை ஆய்வு செய்ய போறாங்க… அவங்களோட நாமும் போறோம்….
Advertisement
சென்னையில் இருக்கும் ஒரு தனியார் கடல்சார் ஆய்வு மையம் மூலமா கடலாய்வு செய்யற குழுவோட இவங்களும் சேர்ந்துக்க அனுமதி வாங்கினான்….
ஆனா… நமக்கு அப்படியேதும் தேவையில்ல…
வாங்க அவங்களோட போலாம்……..
Advertisement
அங்க போய் இறங்கியதும்… ஆதர்ஷ் அனுவிடம் “மதுரையிலிருந்து பூம்புகார் போக சாதாரணமா ஆறு மணிநேரம் போதும்… ஆனா நாம பொறுமையா எட்டு மணிநேரம் வந்துருக்கோம்… காவிரியாறு அப்புறம் அதன் கிளை நதிகள் கூடவே பயணம் செஞ்சு சோழன் வாழ்ந்த இந்த சொர்க்க பூமிய மிதிச்சாச்சு… வாங்க மகாராணி..!!” என்று சொல்லிக்கொண்டே கார் கதவை திறந்து வைத்தான்.
Advertisement
“இது மித்ரன். இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓஷனோகிராபில ரிசர்ச் ஸ்காலரா இருக்கான். இவன் மூலமா தான் தெரிஞ்சுகிட்டேன் இந்த ப்ராஜெக்ட் பத்தி…” உயிர் நண்பனை தன் உயிருக்கு அறிமுகம் செய்துவைத்தான்.
“வணக்கம்…உங்கள பாத்ததுல ரொம்ப மகிழ்ச்சி…” என்று அனன்யா சொல்லி புன்னகைக்க மித்ரனும் தலையசைத்து புன்னகைத்தான்.
“உங்கள பத்தி மட்டும் தாங்க இவன் பல நாளா பேசிட்டு இருப்பான். அப்புறம் நான் தான் பொண்ணு பாக்க வந்தப்போ போன் பண்ண ஆளு… இந்த கேடி என்கிட்ட நீங்க தான் பொண்ணுன்னு சொல்லவேயில்ல கடைசிவரை…!!!!” என்று சொல்லி சிரித்து ஆதர்ஷ் தோளில் இடித்துவிட்டு…
Advertisement
“உங்களுக்கு கடல் பயணம் ஒத்துக்குமில்ல…!!!” என்று கேட்டான்.
அதைகேட்டவுடனேயே அவள் விழிகள் ஆர்வத்தில் விரிந்தன…. இதெல்லாம் எல்லாருக்கும் கிடைக்குமா…
“எனக்குலாம் ஒன்னும் ஆகாது… எப்போ கெளம்புவோம்ன்னு ஒரே பரபரன்னு இருக்கு…” அவள் வார்த்தைகளைப் போலவே உடலும் மனமும் துள்ளத் தொடங்கின.
மித்ரன் அங்கே தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய கப்பலைக் காண்பித்து விளக்கத்தொடங்கினான்.
“ இது கடல்சார்ந்த ஆராய்ச்சிகளுக்காகவே தனியா வடிவமைக்கப்பட்ட கப்பல். ஒலி, ஒளி பயன்படுத்தி கடலின் தரை தளத்தை கண்டுபிடிக்க உதவும் தொழில்நுட்பம் இதுல இருக்கு. அதோட ஆழ்கடல் நிகழ்வுகளை படம் அல்லது காணொளியா பதிவு பண்ணிக்கவும் முடியும்” விலாவாரியாக சொல்லிக்கொண்டிருந்தான்.
அனு அவன் சொன்னதையெல்லாம் குறிப்பு எடுத்துக்கொண்டாள்….
“இங்க இருந்து நாம படகு மூலமா கப்பலுக்கு போவோம்… இந்த இடம் ஆழம் குறைவா இருக்கதுனால கரைக்கு கொண்டு வர முடியாது… ஆனா முன்னொரு காலத்துல, உலகிலேயே பெரிய துறைமுக நகரமாக இருந்த இடம் இது… இப்போ இருக்க நிலைமையை பாத்தா, யாருமே நம்பமாட்டாங்க….” என்று சொல்லி முடித்தான் மித்ரன். அவன் பேச்சில் தெரிந்த ஆதங்கம் அனன்யாவுக்கு முன்பிருந்தே இருப்பது தானே… அவளும் அதை உணர்ந்தாள்.
“மச்சா… மூச்சு விட்றா… நாங்க பொறுமையா தெரிஞ்சுக்கறோம்…!!” என்று ஆதர்ஷ் சொல்ல…
அனைத்தையும் அனு ஆர்வம் நிரம்பி வழியும் கண்களுடன் கேட்டுக்கொண்டிருந்தாள்….
இன்னும் என்ன இருக்கு என்பதுபோல் பார்க்க…
“இனி பாடம் எடுத்தேன்னா இவன் அடிக்க வந்துடுவான் போல… நீங்க கொஞ்ச நேரம் பேசிட்டு இருங்க… நான் போய் மத்தவங்கள பாத்துட்டு வரேன்…!!!” என்று சொல்லிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
◆◆◆
கடற்காற்று சில்லென்று வீசியது… கைகள் கோர்த்து அந்த கடற்கரையில் நடக்க வேண்டுமென்பதுபோல் அவளை நெருங்கினான்…
அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு… “இங்கே பத்து நாள் தங்கப்போறோம்… தனித்தனி அறைகள் குடுத்துடுவாங்க… நிச்சயமா நமக்கு மறக்கமுடியாத அனுபவமா இருக்கும்…. அனு உனக்கு பிடிச்சுருக்கா…???” என்றான் அவள் விழிகளை நேரே பார்த்து…
“மம்ம்ம்ம்….” என்று சொல்லிவிட்டு வேறுபுறம் திரும்பினாள்…
“என்ன ம்ம்ம் மட்டும் தானா…???” கொஞ்சம் துனுக்குற்ற குரலில் கேட்டான்.
“எனக்காக இவ்ளோ செய்றீங்க… நான் பதிலுக்கு என்ன செய்யப்போறேன்… !!!!” கண்களில் உணர்வு மேலிட அவனைப்பார்த்தாள்.
சட்டென்று மனம் லேசாகிவிட “ஐ லவ் யூ சொல்லு….!!!” குறும்பு கொப்பளிக்க பதில் சொன்னான் ஆதர்ஷ்.
“ஐ லவ் யூ பேபி…!!!!” தரையில் தீவிரமாய் ஏதோ பார்ப்பதுபோல் முகம் வைத்துக்கொண்டு சொன்னாள்.
“ என்ன சொன்ன… கேக்கல…” அவன் வியப்பில் கேட்டான்…. இந்நேரத்தில் அவள் சட்டென்று சொல்வாள் என்று எதிர்பார்க்கவில்லை பையன்…
“ஒன்னுமில்ல… போங்க… எனக்கு பசிக்குது… சாப்பிட ஏதாச்சும் வேணும்….” நான் மறுபடி சொல்ல மாட்டேன் என்பதுபோல் பழிப்பு காண்பித்தாள் முகத்தில்…..
“ஹேய்… திருடி… சொல்லு மறுபடி….” அவள் அருகில் அவன் நெருங்க… அவள் ஓடிப்போய் காருக்குள் அமர்ந்துகொண்டாள்.
செவ்வானம் போல சிவந்துபோனது அவள் முகம்….
கொஞ்சம் கொஞ்சமாக மூச்சிழுத்து தன்னைச் சமநிலைப்படுத்திக்கொண்டு வெளியில் வந்தாள்…..
நல்லவேளை அவன் பின்தொடரவில்லை….
அவள் உணர்வுக்கு மதிப்புக்கொடுத்து தூர நின்று,
புன்னகைபூக்க இரவையும் விண்மீன்களையும் ரசித்துக்கொண்டிருந்தான்……
இவர்கள் நினைப்பது போல அவ்வளவு இனிமையாகுமா இப்பயணம்…………….. !!!!!!!!!!!!!
◆◆◆
இரவு எட்டு மணி…. அக்கப்பலில் ஏறத்தாழ பதினைந்து பேர் இருந்தனர். அவர்களில் மைக்கேல் என்னும் வெளிநாட்டு அறிஞரும் ஒருவர்.
அந்த பதினஞ்சு பேர்ல இரண்டு வெளிநாட்டினர், இரண்டு மீனவர்கள், நான்கு ஆழ்கடல் நீச்சல் வீரர்கள், இரண்டு மருத்துவர்கள், கோவாவில் இருந்து மித்ரனுடன் வந்த இரண்டு ஆராய்ச்சி மாணவிகள் அப்புறம் நம்ம நண்பர்கள் மூணு பேர்.
அங்கே அனன்யாவுக்கு இரண்டு தோழிகள் கிடைச்சாங்க… அவங்க பேரு கோதை மற்றும் இனியா.… இரண்டு பேரும் அனன்யாவைப் போலவே வரலாற்றின் பேரில் மிகுந்த ஆர்வம்…
“இன்டர்ன்ஷிப்பில் உருப்படியா ஏதாச்சும் பண்ணனும்னு நெனச்சு இந்த ரிசர்ச் ஷிப் ல வந்து நிக்கிறோம்…!!!” தங்களைப் பற்றி அறிமுகம் செய்துகொண்டபோது கோதை சொன்னாள்.
“நல்லாவே பேசுறீங்க…”சொல்லிவிட்டு சிரித்தாள் அனன்யா. பார்த்த மாத்திரமே நட்பு மலர்ந்துவிட்டது.
ஆதர்ஷ் அவளுக்கு நல்ல துணை கிடைத்துவிட்டதென்று கொஞ்சம் மகிழ்ந்தாலும், தனிமையில் பேசும் வாய்ப்பு பறிபோனதை எண்ணி கொஞ்சம் நொந்துகொண்டான்.
அவளுக்கு தன்னோட கொஞ்சம் பெண்கள் இருந்தா ஒரு சகஜ உணர்வு இருக்கும்.
இவன் கூட இருக்கும்போது அவ வேற மாதிரி இருக்கா…
அமைதியா…
சின்ன புன்னகையோடு…
அந்த தோழிகள் கூட்டத்தில் கலந்தால் தான் கலாட்டா எல்லாம் வெளில வருது…
இதுவும் நல்லா தான் இருக்கு… கூடவே இருந்தும் தூரமா நின்னு, அப்பப்போ பாத்துகிறது…. என்று எண்ணிக்கொண்டான்.
அவளுக்கும் அந்த எண்ணம் இல்லாமலில்லை….
“இன்னைக்கு முழுசும் இவன் கூடவே போயிடுச்சு…இப்போ விட்டுபோக மனசு என்னவோ போல இருக்கே…”
இரவு பதினோரு மணி வரை அவனுடன் இருந்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றதும், தோழிகளோடு அறைக்குப் போக நடந்தபோது பலவித கலவையான உணர்ச்சிகள் வந்து அவளைச் சூழ்த்துகொண்டன.
நன்றாக ஒருமுறை ஆதி அறியாத வண்ணம் எட்டி அவனைப் பார்த்துக்கொண்டாள்….
“அவருக்கு தன் நண்பனை பாத்த மகிழ்ச்சி… நம்மை எங்க கண்டுக்க போறார்…!!!!” என்று சொல்லியவண்ணம் உள்ளே சென்றுவிட்டாள்.
இவற்றை எதிரில் இருந்த கண்ணாடி பிம்பத்தில் பார்த்து ஆதி… (அட… ஆதர்ஷ் தான்… அனுவும் செல்லமா கூப்பிட ஆரமிச்சுட்டா….) திரும்புவதற்குள் உள்ளே சென்றுவிட்டாள்.
அவளின் இந்த சிறு சிறு மாற்றங்கள் அவனுக்கு மகிழ்ச்சி தந்தன.
“நான் உங்கள பாத்தேன்…” தன் கைபேசியெடுத்து குறுஞ்செய்தி அனுப்பினாள்.
“நானும் பாத்தேன்…” அவனிடமிருந்து வந்த செய்தி ஒளிர்ந்தது.
அப்புறம் தான் அங்கிருந்த கண்ணாடிகள் நினைவு வந்தது….
“என்ன நெனச்சுருப்பார் என்ன பத்தி…!!” அவள் தலையில் கைவைத்துக்கொண்டாள்.
“என்ன பதிலே காணும்… ஒரு நிமிஷம் வெளில வரியா…” ஆதி அடுத்த குறுஞ்செய்தி அனுப்பினான்.
உள்மனம் படபடவென்று அடித்துக்கொள்ள “இல்ல… வேணாமே… எனக்கு இருட்டுன்னா பயம்…” என ஏதோவொரு காரணம் சொன்னாள்.
உண்மை என்னவெனில் அந்நேரம் அவள் அசடுவழிவதை அவன் பார்க்க வேண்டாம் என்பதாலேயே…
மறுபடி ஆதியிடமிருந்து வாய்ஸ் மெஸேஜ் ஒன்று வந்து அவள் தொலைபேசி மின்னியது…. அதை திறந்ததும் “பொய் சொல்லக் கூடாது காதலி…(ரன் படத்து பாடல் மெட்டில்) நான் ஷிப் டெக்கில் வெய்ட் பண்றேன்… ஒழுங்கா வா…” அவன் கறாராகப் பேசினான்.
மெதுவாக கப்பல் அசைந்தாடிச்சென்றது. இவள் ஆதி சொன்ன இடத்திற்குச் சென்றபோது அங்கு யாருமின்றி திடுக்கிட்டாள்..
சட்டென்று ஒரு மின்னல் வெட்ட, அவள் பின்னோக்கி நகரும்போது யார்மீதோ இடித்துக்கொண்டாள்.
“ஆதி… இது என்ன விளையாட்டு…!!!” என்று திரும்பியபோது அங்கு நின்றது மித்ரன்.
“நீங்… நீங்க என்ன இங்க…!!!!! ஆதி இங்க எனக்காக காத்திருக்கதா சொன்னாரே…. எங்க போயிட்டாரு…???” என்றாள் படபடப்பாக…
அப்போது மித்ரன் பின்னே ஏதோ விளக்கு வெளிச்சம் போல் தெரிய அந்த திசை நோக்கினாள்.
அங்கே… ஆதி… கைகளில் ஏதோ சிறிய பொருள்….
கோதையும் இனியாவும் கைபேசி விளக்கின் ஒளியை அவன் மீது பாய்ச்ச… அவன் மண்டியிட்டு மூடியிருந்த கைகளைத் திறந்தான்….
அங்கே ஒளிவீசும் ஒரு பொருள்…அவள் சில வருடங்களுக்கு முன்பு அவன் மீது வீசிய அதே கல்…
ஆச்சர்யத்தில் வாய் திறந்தவள் பேச்சு வராமல் திணறினாள். காரணம் அந்த இரவிலும் கூட அலைகடல்போல் நீலமும், விண்மீன் போன்ற ஒளியும் பொருந்திய கல்…..
“என்ன மோதிரம் குடுத்து வாழ்நாள் பூரா துணையிருப்பியான்னு கேட்பாங்க… நீங்க வாழ்நாள் பூரா என்கிட்ட அடிவாங்க தயார்ன்னு சொல்றீங்களா…???” அவள் சிரித்தாள்…
“அது தெரிஞ்சுதானே வந்து மாட்டிக்கிட்டேன்…
இது அமெதிஸ்ட்… தமிழில் இந்திரநீலக்கல்….
ஏன்சியன்ட் க்ரீக் இதை கடல் பயணங்கள்ல ரொம்ப ராசியானதுன்னு வச்சுப்பாங்க… சைலர்ஸ்க்கு லக்கி ஸ்டோன் இது…!!!!
உனக்கு இந்த நாட்கள் வெற்றியோடு மட்டுமில்லாம மறக்க முடியாததாவும் இருக்கணும்…. அதுக்கு தான் இந்த பரிசு…!!!
வாழ்நாள் முழுதும் என்ன கண்கலங்காம பாத்துப்பியா அனு…!!???” கண்ணில் குறும்புடன் கேட்டான்.
“லவ் யூயூயூ….” கீழே அவளும் அமர்ந்து அவன் கைகளைப் பற்றிக்கொண்டாள்.
முதலில் அவனுக்கே கேட்காமல் சொன்னவள், இப்போது நண்பர்களுக்கு நடுவில் வைத்து இவ்வாறு நடந்துகொண்டது அவனுக்கு வியப்பை தந்தது.
அதுவரை மேகத்திற்குள் ஒளிந்திருந்த நிலா அப்போது கொஞ்சம் எட்டிப்பார்த்தது.
தூரத்தில் ஒரு மின்னல் மின்ன… அவனிடமிருந்து அக்கல்லை அனு வாங்கிக்கொள்ளும்போது இருவர் கைகளுக்கும் நடுவில் அது மிக ரம்மியமாய் ஒளிர்ந்தது…..
கடலில் சட்டென்று ஒரு மாற்றம்… கடுமையான சுழல் ஒன்று தோன்றி இவர்கள் கப்பலை விரைவாய் நெருங்கத் தொடங்கியது….
