Skip to content
Post Views: 4,956
ஆனால் அவளோ அவன் கோபத்தை சற்றும் கண்டு கொள்ளாமல், அவன் அருகே அமர்ந்து, “ரஞ்சு… இங்க பாருங்க நேத்துலயிருந்து இந்த நிரு பையனால பயங்கர டென்ஷன்!” என்று நடந்ததைக் கூறி அவனைச் சமாதனப் படுத்தினாள்.
“நீ எப்படி நிலா இப்படி இருக்க?!” என்றான் அவளை ஆச்சர்யமாகப் பார்த்து.
“எப்படி?!” என்று அவள் கண்சிமிட்டிக் கேட்க,
“எல்லோர் மேலயும் ரொம்ப அன்பா, அக்கறையா?!” என்றான்.
Advertisement
“நீ மட்டும் என்ன?!” என்று அவள் கேட்க, அவன் வியப்புடன் பார்த்தான்.
“ரஞ்சு… நீயும் இயற்கையிலேயே ரொம்ப அன்பானவன் தான் டா… அப்படி இல்லைன்னா தாத்தா கட்டாயப்படுத்தினாரு ங்கிறதுக்காக என்னைக் கல்யாணம் செய்திருக்கவும் மாட்ட, கல்யாணத்துக்குப் பிறகு நான் உன்னை தாத்தா பேரைச் சொல்லி மிரட்டின போது நீ பணிஞ்சிருக்கவும் மாட்ட..! உனக்கும் எல்லோர் மேலயும் அன்பிருக்கு ஆனா அதை சரியா வெளிக் காட்டத் தெரியலை!” என்றாள் அவன் மனம் புரிந்து.
அவளையே சில நொடிகள் அமைதியாகப் பார்த்தவன், “நீ என் வாழ்க்கையில வருவேன்னு நான் நினைச்சு கூட பார்த்ததில்லை நிலா…! யூ மேட் மை லைப் ஸோ பியூட்டிஃபுள்!” என்றான் உணர்ந்து.
Advertisement
“நான் மட்டுமென்ன?! நினைச்சா பார்த்தேன்! இந்த GEM ம்மோட தான் நான் வாழணும்னு என் தலையில எழுதியிருக்கு!” என்றாள் பொய்யாகச் சலித்து.
Advertisement
“அடிப்பாவி.. உருகி உருகி லவ்வை சொல்லிட்டு இப்போ தலையெழுத்துன்னா சொல்ற?!” என்று அவன், அடிக்க வருவது போல் அவள் கன்னத்தில், நச்சென்று ஓர் இச் வைக்க, அவள் நாணத்தில் சிவந்தாள்.
“ச்சோ விடு ரஞ்சு…!” என்று அவள் ஓடப் பார்க்க, அவளை விடாமல் பிடித்து, “நிலா சீக்கிரம் கிளம்பு! நாம ரெண்டு பெரும் வெளில போறோம்!” என்றான்.
‘எங்க?!’ என்பது போல் அவள் பார்க்க, சொல்றேன் கிளம்பு!’ என்றான்.
Advertisement
“கிளம்பு கிளம்புன்னு சொல்லி விடாம பிடிச்சிட்டு இருந்தா எப்படிக் கிளம்பறதாம்?!” என்று அவள் செல்லமாக முறைக்க, அவன் சிரித்தபடி அவளை விடுவித்தான்.
இருவரும் கிளம்பி முதலில் சென்றது அவளும், நிருவும் அடிக்கடி செல்லும் அந்த அம்மன் கோவிலுக்கு.
நிலா அவனை ஆச்சர்யதுடன் பார்த்தாள். “நீயும், நிருவும் அடிக்கடி இந்த கோவிலுக்கு தானே வருவீங்க? (stellardental.my) ! சில முறை பார்த்திருக்கேன்!” என்றான்.
“எனக்கு பெரிசா கடவுள் பக்தியெல்லாம் கிடையாது, உனக்கு பிடிச்ச இடமாச்சேன்னு கூட்டிட்டு வந்தேன்! போ போய் சாமி கும்பிட்டு வா!” என்றான்.
“அதென்ன?! அதான் இவ்ளோ தூரம் வந்தாச்சு இல்ல… நீயும் கூட வா!” என்றாள் அவன் கைபிடித்து அழைத்து.
“ப்ச் நீ போயிட்டு வா!” என்று அவன் சொல்ல,
“ஊர்ல குலதெய்வம் கோவிலுக்கு மட்டும் வந்த இல்லை…?!” என்று அவள் கேள்வி கேட்க,
“போயிட்டு வான்னு சொல்றேன்ல…!” என்றான் முறைப்புடன்.
“ரொம்பதான் ஓவரா பண்றான்!” என்று முணுமுணுத்தபடியே, அவள் மட்டும் கோவிலுக்கு சென்று மனதார அம்மனை தரிசித்து, தங்கள் வாழ்வில் இன்பத்தை மலர வைத்ததற்கு நன்றியும் மொழிந்துவிட்டு வந்தாள்.
பிறகு அவள் கேட்கக் கேட்க எங்கு போகிறோம் என்று சொல்லாமல், எங்கோ அழைத்துச் சென்றான்.
அவன் காரைச் சென்று நிறுத்தியது, அவன் புதிய கிளை துவங்குவதற்காக பேசி முடித்த இடத்திற்கு அருகில்!
“இதுதான் நாம புதிய கிளை துவங்குவதற்காக பேசி முடிச்சிருக்க இடம்! முதன் முதல்ல உன்னைத்தான் அழைச்சிட்டு வந்து காட்டணும்னு தோணுச்சு!” என்றான்.
அவளுக்குமிகவும் பிரமிப்பாகவும், அதே சமயம் மிக சந்தோஷமாகவும் இருந்தது! ஒரே நாளில் எல்லாம் மாறிடுச்சே?! நேற்று இந்நேரம் நானும் ரஞ்சுவும் இப்படி மனமொத்த தம்பதியராக இருப்போம்ன்னு நினைச்சிருப்போமா?! இந்த அளவுக்கு ரஞ்சு எனக்கு முக்கியத்துவம் கொடுப்பான்னு நான் நினைக்கவே இல்லை! நன்றி கடவுளே!” என்று காதலோடு அவன் கைபிடித்து இறங்கி நடந்தாள்.
அந்நிலத்தில் கால் எடுத்து வைக்குமுன் அதனை தொட்டு வணங்கியவள், கண்மூடி இறைவனைப் பிரார்த்தித்தாள்.
அவள் செயலைக் கண்டு அவன் சிரிக்க, “என்ன?!” என்று முறைத்தாள்.
“லூசு!” என்று அவன் சொல்ல,
“உனக்கு நம்பிக்கை இல்லன்னா விடு… என்னை ஏன் கேலி பண்ற?!” என்றவள்,
“ரஞ்சு இந்தக் கடையைக் கட்டி முடிக்க எவ்ளோ நாள் ஆகும்?!” என்றாள்.
“பணம் எல்லாம் ரெடியா இருந்தா குறைந்த பட்சம் ஆறு மாதத்துல முடிச்சிடலாம்!” என்றவன் தொடர்ந்து,
“பேங்கில் லோன் ஷாங்க்ஷனாகிடுச்சு! இன்னும் பத்து நாள்ல கைக்குக் கிடைச்சிடும்னு நினைக்கறேன்!” என்றான்.
“ஓ!” என்று அவள் ஆச்சர்யத்துடன் பார்க்க,
“என்னடா இவன் ஏன் பேங்கில் கடன் வாங்குறான்னு பார்க்கறியா?!” என்றான்.
“ம்!” என்று அவள் மெல்ல தலையசைக்க,
“நான் என்னோட தனிப்பட்ட முயற்சில, இந்தப் புது கடையைத் துவங்கணும்னு ஆசைப்படறேன் நிலா…! என்னால தனியா நின்னு சாதிக்க முடியும்னு சிலருக்கு புரிய வைக்கணும்!” என்றான் உணர்வுகள் கொந்ததளிக்க.
அவன் அவ்வளவு உணர்ச்சி வயப்பட்டதைப் பார்த்துக் கவலையுடன், “ரஞ்சு… என்னாச்சு…!?” என்று கேட்க,
“ஒண்ணுமில்ல… வா போவோம்!” என்று உடனடியாக தன் முகபாவங்களை மாற்றிக் கொண்டவன்,
“ஏதாவது சினிமாவுக்குப் போகலாமா?!” என்றான்.
“ம்!” என்று அவள் தலையசைக்க, சென்னையிலேயே மிகப் பிரபலமான ஒரு சினிமா தியேட்டரை நோக்கி காரைச் செலுத்தினான்.
அவ்வளவு இருட்டில், அவனுடன் நெருக்கமாக அமர்ந்து படம் பார்ப்பது அவளுக்கு இனிய அவஸ்தையாக இருந்தது.
இதில் அவன் வேறு, அவள் தோளைச் சுற்றிவளைத்து கைபோட்டு படத்தைப் பார்க்காமல் அவ்வப்போது அவள் நிலா முகத்தையே ரசித்திருந்தான்.
“ச்சோ! என்ன ரஞ்சு நீ?! படத்தை பார்க்காமா அப்பப்போ என்னையே பார்த்துகிட்டு இருக்க?!” என்று அவள் சிணுங்க,
“இல்ல… கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் சுமாரான பிகரா தெரிஞ்ச நீ, எப்படி என் கண்ணுக்கு சூப்பர் பிகரா ஆனான்னு பார்த்துகிட்டு இருக்கேன்!” என்று சீரியஸாகச் சொல்ல,
அவள் நறுக்கென்று அவன் கையைக் கிள்ளி, “எருமை எருமை! பொண்டாட்டியைப் போய் பிகரு, அதுஇதுன்னுக்கிட்டு!” என்று முறைத்தாள்.
“ஏய் எனக்குதான்டி உன்னை பிகருன்னு சொல்ல முழு ரைட்ஸ் இருக்கு!” என்றவன், அவள் இடை வளைவில் கைபோட, அவள் சேலையில் வந்திருந்ததால் அவளின் வழுவழுப்பான இடை அவன் கையில் சிக்கியது.
“ச்சோ! விடு ரஞ்சு.. என்ன பண்ற நீ?! யாராச்சும் பார்க்கப் போறாங்க!” என்று இருட்டிலும் அவள் முகம், சிவந்து ஜொலிக்க,
“போடி.. நானே லேட் பிக் அப்னு கவலைப் பட்டுக்கிட்டு இருக்கேன்!” என்று அவன், அவள் இடுப்பைக் குறுகுறுக்கச் செய்ய,
“படம் பார்க்க விடறியா ரஞ்சு… இதுக்கு வீட்லயே இருந்திருக்கலாம்ல?!” என்று அவள் சிணுங்க,
“வீட்ல இருந்திருந்தா இந்நேரம் என்னென்னமோ நடந்திருக்கும்!” என்றான் அவள் காதருகே வந்து.
“ஆமாம் வெறும் பேச்சுதான்! எத்தனை மாசமாச்சு கல்யாணம் ஆகி?!” என்று அவள் மெல்ல முணுமுணுத்தும், எப்படியோ அவன் காதில் விழுந்துவிட்டது.
“அடிப்பாவி இவ்ளோ ஆசையை வைச்சிக்கிட்டு என்னமோ ஒண்ணுமே இல்லாத மாதிரி சீன் போடுற?! வீட்டுக்கு வாடி பேச்சே இல்லை!” என்று உறுதியளிக்க,
“அய்யோ!? கேட்டுடுச்சா?!” என்று கண்மூடி முகம் சிவந்தாள் நங்கை.
வாக்கு கொடுத்ததைப் போலவே ரஞ்சன் வீட்டிற்கு வந்து அவர்கள் அறைக்குள் நுழைந்ததும், அவளை அப்படியே தூக்கிப் படுக்கையில் போட்டான்.
“அச்சோ! இன்னும் வீட்ல யாரும் தூங்கியிருக்க மாட்டாங்க ரஞ்சு…!” என்று அவள் சொல்லச் சொல்ல அவள் இதழ்களை அமைதிகொள்ளச் செய்து, முன்னேறத் துவங்கினான்.
கத்தியின்றி ரத்தமின்றி, காதலோடும், மோகத்தோடும் பள்ளியறை யுத்தம் அரங்கேறத் துவங்கின.
நாயகனும், நாயகியும் தீராக் காதலோடு திருமணத்தின் அடுத்த கட்டதிற்குச் சென்றனர்.
மறுநாள் காலை உறக்கம் களைந்தேழுந்த நிலா, அருகே படுத்திருந்த தலைவனின் முகம் பார்த்து நாணித் தலைகுனிய, அவளின் அசைவைக் கண்டு கண்விழித்த ரஞ்சன் அவளை மறுபடியும் இழுத்துக் அவன் அருகில் கிடத்தினான்.
“சோ விடுங்க ரஞ்சு!” என்றவள், அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு ஒரே ஓட்டமாக ஓடிக் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
அவன் மென்சிரிப்புடன் மீண்டும் கண்மூடி துயில் கொண்டான்.
குளித்துவிட்டு வந்தவள், அவன் இன்னும் உறக்கத்தில் இருப்பதைக் கண்டு, “ரஞ்சு சீக்கிரம் கிளம்புங்க!” நேத்தே சொன்னேன்ல… பத்து மணிக்குள்ள நாம அங்க இருக்கணும்! நான் ஸ்கூலுக்கு ஹாஃப்டேதான் லீவ் சொல்லியிருக்கேன்!” என்று குரல் கொடுத்துவிட்டு வேகமாகக் கிளம்பினாள்.
அவனுக்கும் சட்டேன்று, நேற்று அவள் சொன்னது ஞாபகம் வர உடனடியாக எழுந்து குளிக்கச் சென்றான்.
இருவரும் தாம்பத்தியத்தின் அர்த்தம் புரிந்து இனிமையான வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்தனர்.
ஆனால் அங்கு யாஷினியும், நிரஞ்சனும், தங்களுக்குள் இருக்கும் மனத் துயரங்களைத் தீர்க்க வழியின்றி, விதியோடு போராடிக் கொண்டிருந்தனர்.
ஒருநாள் மாலை யாஷினி தனது அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க, பஞ்சாட்சரம் ஓர் அழகிய வேலைப்பாடுடைய திருமணப் பத்திரிக்கையுடன் அவள் அறைக்குள் நுழைந்தார்.
error: Content is protected !!