Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennadi Maayaavi Nee

Ennadi Maayaavi Nee 15

மாயாவி 15 ::

 

உன் சிறகுகளை பறித்து… 

உன்னை சிறையில் அடைத்த போது… 



Advertisement

நான் உந்தன் சிறகாக மாறி…

உன்னை சிறையிலிருந்து… 

மீட்டெடுக்காமல் போனதற்கு… 

Advertisement

என்னையே எனக்கு தண்டனை…

Advertisement

கொடுக்க வைக்கிறாயே!

என்னடி மாயாவி நீ !  

 

Advertisement

 

 

நாட்கள் நகர நகர அவள் வாழ்க்கையின் நரகமும் ஆரம்பித்தது. அவனின் மனைவி என்று சொல்லப்படுகின்ற பெண்ணை சமாளிக்க இவர்கள் வந்த புதிதில் வீட்டு வேலைக்கு இருந்த நபரை நிறுத்தி இவளையே வீட்டு வேலை முழுவதும் செய்ய வைத்தான்.

 

அவன் தந்தை பணம் கொடுப்பதை தள்ளி போடும் போதும், அந்த பெண் என்றேனும் சண்டை பிடிக்கும் போதும் என அவனின் கோபங்களுக்கு வடிகாலாக அவளை அடித்து கொடுமை பண்ணினான்.

 

“கோடி கோடியா இருக்க சொத்துக்கு நான் ஒரே பையன் அப்படி இருக்கும் போது எனக்கு தராம அதை என்ன பெட்டியில வைச்சு பூட்ட போறீங்களா? நீங்க சொல்ற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டா நான் கேட்ட பணம் தரேன்னு சொன்னீங்க தானே அப்புறம் என்ன உங்களுக்கு?..” என்று தந்தையுடன் ஆவேசமாக வாக்குவாதம் செய்தவனை பார்த்து பயந்தாலும் எப்படியாவது அந்த போனை இன்றாவது கைப்பற்ற மாட்டோமா? என்றபடி போனையே பார்த்து கொண்டிருந்தாள்.

 

இன்று இந்த உலகமே கைக்குள்ள அடங்குவது போலிருக்கும் மொபைல் போன் அப்போது அவளிடம் இல்லையே… அவளுக்கு பெற்றவர்களும் வாங்கி கொடுத்து அனுப்பி வைக்கவில்லை… இங்கு வந்த புதிதில் ஒரு இரண்டு முறை அவள் பெற்றோரிடம் பேச வைத்திருந்தான்.

 

அதுவும் அவனாக போட்டு கொடுத்தால் மட்டுமே, எனக்கும் கத்து கொடுங்க என்று வந்த புதிதில் கேட்டதற்கு அதெல்லாம் உனக்கு எதுக்கு என்று அவன் முறைத்ததன் காரணம் இன்று உணர்ந்து கொண்டாள்.

 

அவனாக ஊருக்கு போன் போட்டு கொடுத்தும் மாதங்கள் ஆனது… அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் ஏதேனும் கேட்கலாம் என்று முயற்சிக்க, அவர்கள் பாஷை இவளுக்கு புரியவில்லை இவள் பேசுவது அவர்களுக்கு புரியவில்லை… அப்படியும் அதுவும் ஒரு நாள் அவன் கண்களுக்கு சிக்கிட அதற்கு அவள் தான் சின்னா பின்னமானாள்.

 

பதினேழு வயதே நிறைவடைந்து பக்குவமடையாத அவளை பகடை காயாக்கி ஆளுக்கு ஒரு புறம் உருட்டுவதை எதிர்க்க முடியாமல் நாளுக்கு நாள் சோர்ந்து போனாள்… 

படிப்பின் முதல் படியையே இப்போது தான் எடுத்து வைக்க ஆரம்பித்திருந்தவளுக்கு இந்த வாழ்க்கை காட்டிய பக்கங்கள் ரொம்ப கொடுரூமாக இருந்தது…

 

அந்த பெண்ணையும் அடிக்கடி வீட்டிற்கு கூட்டி வந்தவன் நாட்கள் செல்ல செல்ல, இது தான் அவள் வீடு என்று அங்கேயே தங்க வைத்து விட்டான். தாம்பத்தியம் என்றால் என்னவென்று அறியாத அவள் முன்னே அந்த பெண்ணை கட்டியணைப்பதும் முத்தமிடுவதும் அவளுக்கு அருவருப்பை கொடுக்க ஆரம்பித்தது…  

 

இதோ அவள் திருமணம் முடிந்து இங்கு வந்து சேர்ந்து ஐந்து மாதங்களுக்கு மேலாகிறது. ஏதோ திக்கு தெரியாத காட்டில் சிக்கி கொண்டு இருப்பதாய் உணர்ந்தவள் அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்க அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

 

தன் பெற்றோரிடம் சென்று சேர வழி கிட்டாததால் உடலும் மனமும் அந்த தோல்வியை ஏற்க முடியாமல் தளர, தன் வாழ்வினை முடித்து கொள்ளும் முடிவிற்கு வந்தவள் அதை செய்தும் விட்டாள்.

 

இதோ அவள் வீடு வந்து ஒரு வாரம் ஆகிறது… தன் இடம் தன் பெற்றோரிடம் வந்து சேர்ந்த நிம்மதி… வாழ்க்கையை முடித்து கொள்ள முடிவெடுத்ததும் அதை தள்ளி போடாமல் செய்தவளின் செயலை கண்டு அதிர்ந்தவன் பயந்து அவளை குணப்படுத்தி இங்கு அழைத்தும் வந்து விட்டான்.

 

நல்லபடியாக வாழ்வாள் என்று மகிழ்ச்சியாக அனுப்பி வைத்த மகள் இன்று இப்படி உயிருக்கு போராடிய நிலையில் வந்து சேரவும் பெற்றவர்கள் நிலைகுலைந்து போயினர்.

குழலியைப் பார்க்க வந்த அரவிந்தனின் பெற்றோரை வரவேற்காமல் அமைதியாக இருந்தவர்களை பார்த்து,

 

“எப்படிம்மா இருக்க?” என்ற அவனின் தாயாரிடம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

 

“உன் கஷ்டம் எனக்கு புரியுது… நடந்த எல்லாத்துக்கும் மன்னிப்பு கேட்கிறேன்ம்மா…” என்று விஜயன் குழலியிடம் மன்னிப்பு கேட்டவர் அவள் பெற்றோரை தனியாக அழைத்தார்.

 

“என்னை மன்னிச்சுக்கோங்க… பொண்ணை பெத்தவங்களா உங்க கஷ்டம் எனக்கு புரியுது… என் பையன் ஏற்கனவே கல்யாணம் பண்ணது தெரிஞ்சு உங்க பொண்ணை கட்டி வைச்சது தப்பு தான்… என்னங்க பண்றது கோடி கோடியா சொத்து இருக்கும் போது கூடவே கௌரவமும் இருக்கே… அவன் பண்ண விஷயம் வெளிய தெரிஞ்சா குடும்பம் கௌரவம் என்னத்துக்கு ஆகிறதுன்னு தான் அவனை அதட்டி உருட்டி கல்யாணம் பண்ணி வைச்சேன்…”

 

“ஆனா இப்ப விவாகரத்துக்கு போட போறீங்கன்னு கேள்விப்பட்டேன்… நம்ம பொண்ணும் சின்ன பொண்ணுல அதான் விவரம் தெரியாம இப்படி யோசிக்குது… நீங்க கொஞ்சம் எடுத்து சொல்லுங்க… விவாகரத்துன்னு கோர்ட் கேஸுன்னு போனா நம்ம இரண்டு குடும்பத்தோட மானமும் தான் கப்பலேறும்…”

 

“எனக்காவது பையன் ஆனால் உங்க பொண்ணு நிலைமையை கொஞ்சம் யோசிங்க… தேவை இல்லாம ஏன் ஊர் வாய்க்கு அரைப்படணும்…”

“இனி இது போல நடக்காதுன்னு நான் உறுதி தர்றேன்… பையனை மறுபடியும் அங்க போக விடல.. இங்க நம்ம கண்ணு எதிரே இருக்கும் போது நம்மை மீறி என்ன நடக்க போகுது… “ 

 

“எதுவும் யோசிக்காம காதோட காதா நமக்குள்ளே பேசி முடிச்சுக்குவோம்… வேணும்னா என் பையனுக்கு இருக்க சொத்துல உங்க பொண்ணுக்கும் பாதி எழுதி வைக்கிறேன்… உடம்பு சரியானதும் வீட்டுக்கு அனுப்பி வைங்க…” என்று அவர்களிடம் தன்மையாக என்பதை விட தந்திரமாக பேசியவர் கைதேர்ந்த வியாபாரி என்று நிரூபித்தார்.

 

முன்பு அவர் பையன் செய்த செயலையும் தன் மகள் நிலையையும் நினைத்து ஆவேசமாக இருந்தவர்கள் இப்போது அவர் வார்த்தைகளையே அமைதியாக யோசித்து கொண்டிருக்க,

 

“நான் எங்கையும் வரத் தயாரா இல்ல… இங்க எங்க வீட்டுக்கு வர்றதுக்கே நான் உயிரை விட வேண்டி இருந்தது… இனி எதையும்  என்னால தாங்கிக்க முடியாது… உங்க பையனை பத்தி தெரிஞ்சு எனக்கு கல்யாணம் பண்ணி வைச்சு என் வாழ்க்கையை கெடுக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தா?” என்று ஆவேசமாக பேசியவளை பார்த்த விஜயன்,

 

“உனக்கு ஒன்னும் தெரியாதும்மா… நீ சின்ன பொண்ணுல்ல… குடும்ப வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்… நாங்க பெரியவங்க பேசி ஒரு நல்ல முடிவுக்கு வர்றோம்… நீ போய் ரெஸ்ட் எடும்மா…” என்று சொன்னவரின் குரலில் இருந்த எரிச்சலை உணர்ந்த பானுமதி,

 

“காரும்மா! நீ போடா… நாங்க வர்றோம்…” என்று சொல்ல, அவருக்கு பதிலளிக்காமல், 

 

“நீங்க சொல்றது சரி தான்… நான் சின்ன பொண்ணு என்னால ஒன்னும் பண்ண முடியாதுன்னு தானே எனக்கு இப்படி ஒரு அநியாயம் பண்ணீங்க…. உங்க பையன் பண்ண தப்பை சரி பண்றதுக்கு முன்னாடி நீங்க ஒழுங்கான்னு பாருங்க… கண்டிப்பா நான் விவாகரத்து வாங்குவேன்…” என்றவளை பார்த்து முறைத்தவர்,

 

“உங்க பொண்ணு ஏதோ புரியாம பேசுது அவளுக்கு புரிய வைங்க…” என்றவாறு அவர் வெளியேறிவிட,

 

அவர் சொல்லுவது போல அவர் மகனை பெற்றவர், விவாகரத்து அது இது என்று சென்றால் மகளின் நிலையும் குடும்பத்தின் கௌரவமும் என்ன ஆவது என்று யோசித்தவர்கள் மகளை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்க குழலியோ அதிர்ந்து போனாள்.

 

“அப்பா ! என்னப்பா பேசறீங்க?” 

 

“இல்லம்மா… அவர் தான் மறுபடியும் எதுவும் பிரச்சனை நடக்காதுன்னு சொல்றாரே… நாங்களும் இனி பக்கத்துல இருக்க போறோம்… அப்பறம் என்ன?” என்றவரை பார்த்து,

 

“ஏன்ப்பா? உயிர் பிழைச்சு வந்திருக்கேன்… உங்களுக்கு என்னை விட உங்க கௌரவம் தான் முக்கியமா…” என்று வெறுமையோடு கேட்டாள்.    

 

“எல்லோரும் இதை கண்டபடி பேசுவாங்க காரும்மா… எப்படியும் நம்ம சாதி சனத்துல இரண்டாவது கல்யாணம் எல்லாம் சாத்தியமில்லை… பொண்ணா பிறந்த நம்ம தான் நிலைமையை புரிஞ்சு அனுசரிச்சு நடந்துக்கணும்…” என்று சொன்ன தாயாரை பார்த்தவள்,

 

“அவருக்கு கௌரவம்னா உங்களுக்கு மத்தவங்க விருப்பம் தான் முக்கியம்ல… நீங்க சொன்ன மாதிரி என்னை பேசறவங்க யாரும் எனக்கு முக்கியம் இல்லை… அது நீங்களா இருந்தாலும் சரி…” என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றவளை என்ன செய்து சமாதானம் செய்வது என்று புரியாமல் குழம்பி நின்றனர்.

 

மறுநாள் காலையிலேயே விஷயம் கேள்விப்பட்டு தவிப்போடு மாறன் ஓடி வர, அவரின் தோளில் சாய்ந்து நடந்த அனைத்தையும் கதறித் தீர்த்தவள், பெற்றோர்கள் முடிவு வரை அனைத்தையும் அவரிடம் கொட்டினாள்.

 

“நான் எந்த நம்பிக்கையில அங்க திரும்ப போவேன் மாமா ! அவன் என்னை எப்படி எல்லாம் அடிச்சான் தெரியுமா? இவங்க என்னை மறுபடியும் அங்க கூட்டிட்டு போய் விட்டுடுவாங்களோன்னு எனக்கு பயமா இருக்கு… நீங்களாவது எனக்காக பேசுங்களேன்…” என்று நேற்று வளர்ந்த பெண்ணாக எல்லோரையும் எதிர்த்து பேசியவள் இன்று குழந்தையாக அவரிடம் பேசி கொண்டிருக்க அவரோ கலங்கிப் போனார்.

 

“ஹே ! கருத்தம்மா ! மாமா இருக்கும் போது உனக்கு என்ன பயம்.. நான் பார்த்துக்கிறேன்… நீ அழாத… அவன் கிட்ட இருந்து உனக்கு விவாகரத்து நான் வாங்கி தரேன்…” என்று அவளுக்கு ஆறுதலித்தவர் அரவிந்த் வீடு சென்று அவனை அடிக்கவும் மறக்கவில்லை.

 

அதன்பின் எப்படியோ யார் யாரையோ பிடித்து அவளுக்கு விவாகரத்து வாங்கியதை அமுதனிடம் சொல்லி கொண்டிருந்தவர் நிகழ் காலத்திற்கு வந்தார்.

 

“காலம் எவ்வளவு தான் மாறினாலும் இரண்டு விஷயம் மட்டும் இன்னும் மாறவே இல்லை… ஒன்னு தனிமனிதனோட சுயநலம் இன்னொன்னு பெண்களுக்கு நடக்கற அநியாயம்…”

 

“நான் வீடு தேடி போய் பிரச்சனை பண்ணது , கருத்தம்மாவுக்கு ஆதரவா நின்னது எதுவும் உங்க மாமனுக்கு பிடிக்கலை… அவங்களும் நல்லவங்க தான் பொண்ணு நல்லா இருக்கணும்னு நினைச்சு தான் எல்லாம் பண்ணாங்க ஆனால் அதுக்கு அப்புறமும் அங்கேயே தள்ளி விட நினைச்சது தப்பு… இப்படி எல்லாரையும் எதிர்த்து அவளுக்கு விவாகரத்து வாங்கறதுக்குள்ள பாவம் கருத்தம்மா ஒரு வழி ஆகிடுச்சு…”

 

“ஏன்னா? இந்த உலகம் எது நடந்தாலும் முதல்ல பொண்ணை தானே குத்தம் சொல்லும்… அதே மாதிரி அவ முன்னாடி பின்னாடின்னு யார் யாரோ பேச ஆரம்பிச்சாங்க… அதுக்கு காரணம் அந்த விஜயன் தான்…”

 

“அவனை மீறி வலுக்கட்டாயமா நாங்க கோர்ட்க்கு போனோம்னு சொல்லி விவாகரத்து தர விடாம குழலி மேல என்னென்ன பழி போட முடியுமோ எல்லாமே போட்டு அவளை ரொம்ப அலைக்கழிச்சான்… ஏன்னா அவனுக்கு அவன் கௌரவம் முக்கியம்ல…”

 

“அதுக்கு அப்புறம் என்ன பண்றதுன்னு தெரியாம நாங்க முழிச்சப்ப தான், அவங்க பண பலத்தை வைச்சு பதினெட்டு வயசு முடியாததால கருத்தம்மாவுக்கு விசா வாங்கறதுல நிறைய தகிடு தத்தோம் பண்ணியிருக்காங்கன்னு தெரிய வந்துச்சு…”

 

“அதையே எங்களுக்கு சாதகமா வைச்சு கருத்தம்மாவுக்கு பதினெட்டு வயசு முடியாம கல்யாணம் பண்ணதா சொல்லி அந்த கல்யாணத்தையே செல்லாததா ஆக்கிட்டோம்…”

 

“அதுக்கு அப்புறம் தான் இந்த மனுஷங்க இன்னும் மோசமா பேச ஆரம்பிச்சாங்க… அவ பைத்தியம், அவளுக்கு குழந்தை பிறக்காது… அப்படி இப்படின்னு ஏதேதோ பேசினாங்க இதெல்லாம் அவளால தாங்கிக்க முடியாம தவிச்சு போயிட்டா…”

 

“ஒரு வழியா அவளை அதிலிருந்து மீட்டெடுத்து படிக்க வைக்கிறேன்னு சொன்னேன்… அவளை இந்த அளவுக்கு அலைக்கழிச்சு கஷ்டப்பட்டதுக்கு கோர்ட்டே அவளுக்கு நஷ்ட ஈடு கொடுக்க சொன்னாங்க….”

 

அதுல படிப்புக்கான காசை மட்டும் எடுத்துக்கிட்டு, “இதை சொல்லி ஏமாத்தி தானே கல்யாணம் பண்ணீங்க அதுக்கான நஷ்ட ஈடா இதை எடுத்துக்கறேன்னு சொல்லி மிச்சத்தை அவங்ககிட்டயே கொடுத்துட்டு படிக்க பெங்களூரு போயிட்டா…”

 

“பெத்தவங்க அவ பக்கம் இல்லையேன்னு அவளுக்கு கோபம் அதனால இங்க வர்றதில்லை… அதுக்காக அவங்கள முழுசா ஒதுக்கியும் வைக்கல… எப்பாவது வந்துட்டு போவும்…”

“அப்படியே அங்கேயே வேலைன்னு இருந்திடவும் பொண்ணு வாழ்க்கை இப்படி ஆகிடுச்சேன்னு இவங்க கவலைப்பட்டாலும் அவளுக்கு மறுகல்யாணம் பண்ணி வைக்க தயங்கினாங்க… ஏன்னா அவங்களுக்கு அப்பவும் அவங்க கௌரவமும் யாரும் எதுவும் சொல்லிடுவாங்களோன்னும் பயம்…”

 

“ஆனால் என்னால என் கருத்தம்மாவை அப்படி விட முடியாதே… நீ பொறுப்பில்லாம இருக்கறது கூட என்னைக்கு வேணுமானாலும் சரி ஆகிடும் ஆனா அது வாழ்க்கை சரியாகாதே…”

 

“இந்த குடும்பத்தையும் உன்னையும் அவ பார்த்துக்கணும்னு சொல்லி அவளை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணியிருந்தாலும் அவளை நீ பார்த்துப்பன்னு ஒரு நம்பிக்கையில தான் கட்டி வைச்சேன்… ஆனால் என் நம்பிக்கை இன்னைக்கு காணாம போச்சே…” என்று வருந்தியவர் எதுவும் சொல்லாமல் எழுந்து சென்ற மகனை பார்த்து பெருமூச்செறிந்தார்.  

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!