Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennadi Maayaavi Nee

Ennadi Maayaavi Nee 30

மாயாவி 30:::

 

வெற்றி என்பதின் அரிச்சுவடி 

அறியாத எனக்கு  



Advertisement

உன் நம்பிக்கையை கொடுத்து 

என் காதலை எடுத்து கொண்டு 

இந்த வாழ்வில் என்னை 

Advertisement

வெற்றி அடைய வைத்தாயே!… 

Advertisement

என்னடி மாயாவி நீ!

 

“மாயமா? அப்படி என்ன மாயம் செஞ்சு உங்களை எனக்கு அடிமையாக்கிட்டேனாம்… இவரு எனக்கு அடிமையா இருக்காராம்…. நம்பற மாதிரி சொல்லுங்க…” என்று நொடித்துக் கொண்டவளைப் பார்த்து சிரித்த அமுதன், 

Advertisement

 

“பின்ன உன்னை பார்த்துக்கணும்னு வந்தவனை எல்லாத்துக்கும் உன் பின்னாடி சுத்த வைச்சா… அப்ப நீ ஏதோ மாயம் பண்ணிட்ட தானே…” என்றவனை அவள் முறைத்தாள்.

 

“உண்மையா குழல்… உனக்கே தெரியும் நான் அப்பா கூட இங்க வந்த அப்ப இருந்ததுக்கும் இப்ப இருக்கறதுக்கும் இடையே இருக்க வித்யாசம்… உன்னை பார்த்துக்கணும் வேலைக்கு போகணும் இது மட்டும் தான் மனசுல இருந்தது…”

“ஆனால்…” என்று நிறுத்தியவனை கேள்வியாக அவள் ஏறிட்டாள்.

 

“நான் சொல்றதை நீ எப்படி எடுத்துப்பேன்னு தெரியல….” என்று தயங்கியவனைப் பார்த்து,

 

“அதெல்லாம் ஒன்னும் பெருசா இருக்காது… ரொம்ப பில்ட் அப் பண்ணாம என்னன்னு சொல்லுங்க…” என்றாள்.

 

“உன்கூட பேசணும் உன் கூட இருக்கணும் உன்னை நெருங்கணும் இது போல எண்ணம் எனக்கு இங்க திரும்ப பெங்களூர் வந்த அப்ப இல்லை…” என்றவனை அவள் புரியாமல் பார்க்க,

 

“உனக்காகன்னு வந்துட்டேன்… அவ்வளவு தான்… ஆனால் ஒரு புருஷனா உன்மேல எனக்கு எந்த விதமான பீலிங்க்ஸும் இல்லை… உன்மேல அப்ப எனக்கு விருப்பமும் கூட இல்லை…” என்று சொல்லியவாறே அவளைப் பார்க்க, 

 

அவள் முகமோ எந்த உணர்வுகளையும் பிரதிபலிக்காமல் நிர்மலமாக இருக்க அவனுக்கு பயமானது.

 

“குழல் ! நான் சொல்றதை சரியான விதத்தில புரிஞ்சிக்கோ… உன்னோட அழகு உன்னோட குணம்னு எதையுமே அன்னைக்கு இருந்த  நிலையில நான் உணர்ந்தது இல்லை…”

 

“நீன்னு இல்லை இதுவரைக்கும் எந்த பொண்ணையும் நான் ஆர்வமா கூட பார்த்தது இல்லை… ஆனால் அந்த ஆர்வத்தையும் எனக்குள்ள முதல்ல விதைச்சது நீ தான்…”  என்றவனின் குரல் பதட்டமாக ஆரம்பித்து ரசனையாக முடிய அவள் குழப்பமாக ஏறிட்டாள்.

 

“உன்கூட இருக்கும் போது தான் உன்னை பத்தி கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன்… அது தற்செயலாக நடக்க, போக போக நானே உன்னை பத்தி தெரிஞ்சுக்க இறங்கிட்டேன்…”

 

“நீ கவி சரஸ் கூட இயல்பா பேசறது சிரிக்கறது ஆனால் மத்தவங்க கிட்ட ஒரு மாதிரி இறுக்கமா இருக்கறது… வேலை விஷயத்துல உன்னோட நடவடிக்கை… வேலை செய்யற இடம், வெளி இடம்னு ஒவ்வொரு இடத்திலேயும் எல்லாரையும் நீ கையாளற விதம்…”

 

“இது எல்லாத்தையும் விட சூழ்நிலைக்கும் இடத்துக்கும் எதிரே இருக்கவங்களுக்கும் ஏத்த மாதிரி உன்னோட உணர்வை காட்றது… ப்ப்பா… உண்மையாவே நீ சூப்பர்ன்னு நான் பீல் பண்ண தருணங்கள் நிறைய…”

 

“உனக்கு திமிர் அதிகம், அதிகாரம் பண்றன்னு சொன்ன நானே அதை ரசிக்க ஆரம்பிச்சேன்… கவி சரஸ்கிட்ட நீ இயல்பா பேசற மாதிரி என்கிட்டேயும் பேசணும்…”

 

“அவங்களை விட நான் உனக்கு நெருக்கமா இருக்கணும்னு நான் உணர ஆரம்பிச்ச தருணங்கள் நிறைய… அதுக்காக தான் உன்கிட்ட வேலை கத்துக்கணும்னு வந்து நின்னேன்…” என்று ஒவ்வொன்றையும் சொன்னவனின் குரலிலும் விழியிலும் அத்தனை வர்ணஜாலங்கள்….

“எழில்! போதும் நீ சொல்றதை கேட்க கேட்க என்னவோ மாதிரி இருக்கு… ப்ளீஸ் போதும்…”  என்றவளின் குரலில் கெஞ்சலை விட கொஞ்சலையே உணர்ந்தவன் சத்தமாக சிரித்தான்.

 

“ஹா ஹா ! இதுக்கே இப்படியா…” என்று சிரித்தவனின் வாயை பொத்தியவள், 

 

“ஐயோ! இந்த இடத்துல இருக்க அமைதிக்கு ஏதோ பேய் சிரிக்குதுன்னு நினைச்சு யாராவது பயந்துட போறாங்க…” என்று சுற்றும் முற்றும் பார்க்க, அவளின் கையை விலக்கியவன்,

 

“ஆறு மணிக்கே இந்த ரோட்ல யாரும் வர மாட்டாங்க… மணி ஒன்பதுக்கு மேல ஆகுது… இதுக்கு மேல சுத்தமா யாரும் வர மாட்டாங்க…” என்றவனின் குரலில் இன்னும் சிரிப்பு மிச்சமிருக்க, அதை கலைப்பது போல அவன் போன் ஒலித்தது. 

 

“சொல்லு கண்ணா!” 

 

“ஹான் ! இங்க தான் இருக்கோம்…” என்று பேசியவாறே எழுந்து சென்றவன் அவளுக்கு சற்று தள்ளி நின்று பேசி விட்டு அருகே வந்தான்.

 

“இன்னும் வீட்டுக்கு வரலைன்னு கேட்க கண்ணா தான் போன் பண்ணான்…. கொஞ்ச நேரத்துல வரேன்னு சொல்லி இருக்கேன்…” என்று அவள் கேட்கும் முன் பதில் சொன்னான்.

 

“ம்ம்ம்ம்! ஆனா நீங்க இதெல்லாம் ஒரு முறை கூட வெளிய காட்டிக்கிட்டது இல்லையே…” என்றவளிடம்,

 

“எப்படி காட்ட சொல்ற? எப்படியாவது உன்கிட்ட இருந்து நல்ல பேரு வாங்கிடணும்னு வேலை செஞ்சேன்… ஆனா நீ நம்பல…”

 

“உன்கூட இருந்து உன்னோட ஒவ்வொரு அசைவையும் பார்த்து கொஞ்சம் கொஞ்சமா உன்மேல இருக்க பிடித்தத்தை நான் உணர ஆரம்பிக்கவும் கூடவே நான் உனக்கு பொருத்தம் இல்லையோன்னு எனக்கு தோன்ற ஆரம்பிச்சது…” 

 

“நீ சொன்ன மாதிரி உனக்காகன்னு நான் ஒரு துரும்பும் அசைக்காத போது நீ உன் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்க சொல்லி கேட்டியே அப்ப மொத்தமா சிதைஞ்சு போயிட்டேன்…”

 

“நீ அப்படி கேட்கற அளவுக்கு எனக்கு என்ன தகுதி இருக்குன்னு தோணுச்சு… அப்படி இருக்கும் போது எப்படி நான் காட்டிக்க முடியும்… முன்னாடியே சொன்ன மாதிரி நீயா கேட்டு நம்ம வாழ்க்கை ஆரம்பிச்சதா இருக்க கூடாதுன்னு உறுதியா நினைச்சேன்…”

 

“உடம்பு சரியில்லாதப்ப நீ உன்னோட விருப்பத்தை சொன்னது உன் நினைவுக்கு வர்றதுக்கு முன்னாடி என்னோட விருப்பத்தை சொல்லணும்னு நினைச்சேன்… அதுக்கு அந்த ட்ரிப்பை செலக்ட் பண்ணேன்….”

 

“நம்ம இரண்டு பேரும் மனசு விட்டு பேசணும்னு முதல்ல உன்னை பேச வைச்சேன்… நீ பேசப் பேச நான் உன்னை ரொம்ப நெருங்கினா மாதிரி இருந்துச்சு… அதுலயும் சிணுங்கிக்கிட்டே ஐஸ்கிரீம் கேட்டியே…. ப்பா…மொத்தமா பிளாட் ஆகிட்டேன்…”

 

“அதுவரைக்கும் உன்னை பிடிக்கும் உன்னை ரசிச்சேன்ற நிலை மாறி நீ எனக்கானவ… உன்னோட இந்த சிரிப்பும் சிணுங்கலும் எனக்கானது… இனி உன்னை விட முடியாது… எனக்கு நீ வேணும்னு தோணுச்சு… அப்ப…..” என்றவனை மறுபடியும் போன் அழைப்பு கலைத்தது.

 

கண்ணன் தூர நின்றிருக்க அவனிடம் சென்று எதையோ வாங்கியவன்  அவனை அனுப்பிவிட்டு, அவளிடம் வந்து அதை கொடுத்ததும் அவள் ஆர்வமாக அதை பிரித்து பார்க்க, உள்ளே ஐஸ்கிரீம் இருந்தது.

 

அதை பார்த்தவளின் முகம் அதற்கான ஆச்சர்யத்தையும் மகிழ்வையும் ஒருங்கே காட்டியது.

 

“இந்த மாதிரி இடத்துல கூட நீ சாப்பிட விரும்பவன்னு தோணுச்சு… அன்னைக்கு உண்மையாவே உனக்கு ஒத்துக்கமா போயிட போகுதுன்னு தான் வாங்கி தரல…” என்று மென்மையாக சொன்னவனைப் பார்த்து,

 

“இப்ப மட்டும் ஒன்னும் ஆகாதா?” என்று அவள் கேலியாக கேட்டவாறே அதை பிரித்து சாப்பிட ஆரம்பிக்க,

 

“இங்க குளிர் அந்த அளவுக்கு இல்லை… மழையும் இல்லை.. அதனால சாப்பிடலாம் சாப்பிடு…” என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.     

“உங்களுக்கு?”

 

“இல்ல எனக்கு வேணாம்… நான் இதெல்லாம் ரொம்ப சாப்பிட மாட்டேன்… நீ சாப்பிடு…” என்றான்.

 

“பரவால்ல இனி எனக்காக அடிக்கடி வாங்கி தர வேண்டி இருக்கும் அப்ப எல்லாம் உங்களை பார்க்க வைச்சு சாப்பிட முடியாதுல்ல… அதனாலே இப்ப இருந்தே சாப்பிட பழகிக்கோங்க…” என்றவள் அவனிடம் நீட்டினாள்.

 

“நான் ஒன்னு தான் வாங்கிட்டு வர சொன்னேன்… அடுத்த முறை சேர்ந்து சாப்பிடலாம்… இப்ப நீ சாப்பிடு…” என்றவனை முறைத்து,

 

“ஏன் என்னோடதுலயே சேர்ந்து சாப்பிட மாட்டிங்களா…” என்று அவள் கேட்டதும்,

 

“நான் உன்னோடதை சாப்பிடற முறை வேற மாதிரி இருக்கும் பரவால்லயா…” என்றவன் அவள் என்னவென்று யோசிக்கும் முன்னே அவள் இதழ்களை சிறை செய்திருந்தான்.

 

தான் சாப்பிட்டதில் பாதியை அவனுக்கு நீட்டிக் கொண்டிருந்ததால் கைகளில் வழிந்ததை தன் உதட்டைக் கொண்டு துடைத்து கொண்டிருந்தவளின் இதழை திடீரென அவன் சிறை செய்ய முதலில் திகைத்தவள், அதன் பின் அவன் தந்த முத்தத்தில் அந்த ஐஸ் கிரீம்க்கு  இணையாக உருகிப் போனாள்.

 

நிதானமாக அவளை தன்னில் இருந்து பிரித்தவன், “அன்னைக்கு என்கிட்ட உரிமையா சிணுங்கிட்டே நீ ஐஸ்கிரீம் கேட்கும் போது எனக்கு உன்னை இப்படி தான் கொஞ்ச தோணுச்சு…” என்றவனின் குரல் ஏகத்திற்கும் குழைந்து இருந்தது.

 

“முதல் முறையா உன்னை நெருங்கணும்னு தோணினது அப்ப தான்… எனக்குள்ள இருந்த அந்த உணர்வுகளை வெளிய கொண்டு வந்தது நீ தான்… மறுநாள் கிளைமேட் எப்படி இருக்குன்னு பார்த்து உனக்கு வாங்கி தரணும்னு நினைச்சேன்…”

 

“என்னோட மனசை சொல்லி ட்ரிப் முடிஞ்சு வந்ததும் இனி உன்கூடவே இருக்கணும்னு நினைச்சேன்… ஆனால் இது எல்லாம் நினைப்பா தான் இருந்துச்சு… அதுக்குள்ள நீ என்னை நம்பாம விட்டுட்டு வந்துட்ட….”

 

“கண்டிப்பா எனக்குள்ள அந்த பரிதாப எண்ணம் இல்லை… அதே சமயம் நீ சொல்லி உன்கூட வாழணும்னு நினைக்கல… அதுக்கு முன்னாடியே என் மனசுல நீ வந்தாச்சு…”

 

“உண்மையை சொல்லணும்னா என்னோட குறைகளை அப்படியே ஏத்துக்கிட்டு என்கூட வாழ நினைச்ச நீ தான் எனக்கு வாழ்க்கை கொடுத்திருக்க…” என்றவனை இறுக்கி அணைத்துக் கொண்டு அவன் இதழை சிறை செய்வது இப்போது அவள் முறையாயிற்று.

 

“யாரும் யாருக்கும் வாழ்க்கை தரல… நான் ஏதோ புத்தி கெட்டு போய் அங்க இருந்து கிளம்பிட்டேன்… பழசை எல்லாம் விட்ருவோம் இனி நமக்குள்ள இருக்க இந்த நேசம் போதும்…” என்றவளை ஆதரவாக அணைத்தவன்,

 

“வீட்டுக்கு கிளம்பலாமா? கவி வந்து இருக்கான்…” என்றதும் பதறி விலகியவள்,

 

“ஐயோ! அவன் வேற என்மேல பயங்கர கோபத்துல இருப்பான் போலவே… இப்ப என்ன பண்றது மாமா…” என்றவளைப் பார்த்து அதிர்ந்தான்.

 

“ஹே ! குழல் ! அது என்ன புதுசா மாமா…” என்று அவன் கேட்டதும் சொன்னதை உணர்ந்தவள், 

 

“அத்தை தான் உரிமையா மாமான்னு கூப்பிட்டு பழகுன்னு சொன்னாங்களா அது மனசுக்குள்ள அப்படியே ஓடிட்டு இருந்துச்சு… இப்ப ஒரு பதட்டத்துல சொல்லிட்டேன்…” என்றாள்.

 

“ஹான்! நல்லா தான் இருக்கு… ஏற்கனவே அப்பான்னு நினைச்சு போன்ல ஒருதடவை நீ கூப்பிட்டு இருக்க… அப்ப சரியா கவனிக்கல அதனால இப்ப இன்னொரு முறை கூப்பிடேன்…” என்றவனை முறைத்தவள்,

 

“இப்ப ரொம்ப முக்கியம்… வாங்க வீட்டுக்கு போகலாம்… அவனை வேற போய் சமாதானம் பண்ணனும்….” என்றவள் வண்டியை நோக்கி நடந்தாள்.

 

“வர வர புருஷன்னு கொஞ்சம் கூட மரியாதையை இல்லாம போச்சு…” என்று முணுமுணுத்தவாறே அவள் பின்னே சென்றவன் திடீரென அவள் நிற்கவும் அவள் மேலே மோதினான்.

 

அவன் மேலே மோதியதால் விழத் தடுமாறியவள் அவனின் சட்டையை பிடித்துக் கொண்டு நிற்க, அவளை விழாமல் தாங்கியவனின் கையோ அவளின் வெற்றிடையில் இருந்தது.

 

இருவரும் சுற்றம் மறக்க அதற்கு அங்கு இருந்த ஏகாந்த சூழலும் உதவ, அவளின் இடையை பிடித்து இன்னும் தன்னருகே நெருக்கியவனின் பிடி இன்னும் இறுகியது.

 

வேறு எதுவும் பேச்சில்லை செயலில்லை ஒருவரை ஒருவர் பார்த்தபடி அத்தனை நெருக்கமாக நின்றிருப்பதே இதமாக இருந்தது. போகப் போக இடையில் அவன் கொடுத்த அழுத்தம் அவளுக்கு வலியை கொடுத்தாலும் சற்றே நெளிந்தாலே தவிர அவனிடம் இருந்து விலகவில்லை.  

 

அவளின் அசைவை உணர்ந்து விலகியவன், “சாரி! குழல் ! சாரி !” என்றவனை முறைத்தவள்,

 

“அது என்ன அப்பப்ப கட்டி பிடிச்சுட்டு முத்தம் கொடுத்துட்டு சாரி கேட்கறது… சாரி கேட்கற அளவுக்கு விருப்பம் இல்லாம எதுக்கு இப்படி பண்ணனும்… இன்னொரு முறை பக்கத்துல வந்தீங்க கொன்னுடுவேன்…” என்று மிரட்டியவளைப் பார்த்து சத்தமாக சிரித்தவன்,

 

“அடியேய்! உன்னை கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்தது ஒன்னும் எனக்கு பிடிக்காம செய்யல அதே சமயம் அதுக்காக ஒன்னும் நான் சாரி கேட்கல…”

 

“பின்ன வேற எதுக்கு சாரி கேட்டிங்களாம்…” என்று இடைவெட்டியவள் ஓரடி தள்ளி நின்றிருக்க, அவளை எட்டி பிடித்து இழுத்து தன்னருகே நிறுத்தி அவளின் இடையை வருடியபடி,

 

“இதுக்கு தான்… ஏன்னா நேத்தும் இப்பவும் கொஞ்சம் ஹார்ஷா கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்துட்டேனோன்னு தான் சாரி கேட்டேன்…” என்றவனின் குரலில் இருந்த மயக்கமும் அவனின் வருடலும் அவளை உறைய செய்தது நிமிடமே இருக்கும். 

 

அதற்குள் இருவரையும் கலைப்பது போல போன் ஒலிக்க கவியை எதிர்கொள்ள இருவரும் வீட்டிற்கு சென்றனர்.    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!