Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennaval

Ennaval 11

என்னவள்_11

 

தன் அறைக்குள் வந்தவன் அடுத்த நாள் செய்யவேண்டிய வேலையை தனியாக பட்டியல் இட ஆரம்பித்தான் கார்த்திக் அடுத்ததாக அடுத்த நாள் அழைத்து பேச வேண்டிய ஃபோன் நம்பரை முதலில் பேசுவதற்கு குறித்து வைத்தவன் நேரம் பார்க்க பதினோருமணியை தாண்டி இருந்தது. காலை முதல் தொடர்ந்து வேலை செய்ததால் உடல் முழுக்க களைப்பு மட்டுமே ஆட்சி செய்தது.

 



Advertisement

உடல் அசதி அதிகமாக இருக்க,கவனம் முழுக்க அடுத்த நாளில் செய்ய வேண்டிய வேலையில் இருக்க இரண்டு முறை செல்பேசியை ஆன் செய்த போதும் அங்கே முதலாவதாக இருந்த இரண்டு பேரின் புகைப்படம் அவனது கண்களுக்கு பெரிதாக தெரியவில்லை…லேசான குளியல் போட்டு வந்தவன் தனது அறைக்குள் வந்து படுத்து இருந்தான்.

 

இதமான ஏசி குளிரோடு சுகமாக கண்கள் சொக்க…படுத்தவுடன் தூங்கி  இருந்தான் கார்த்திக் வந்து படுத்த சில நிமிடத்திலேயே ஆழ்ந்த நித்திரைக்கு சென்று இருந்தான்.நேரம் இரண்டு மணியை தாண்டிய போது அவனது செல்பேசிக்கு அழைப்பு வந்தது. 

Advertisement

 

Advertisement

 மாயாவின் தந்தை நாதன் அழைத்து இருந்தார். சத்தம் கூட எங்கோ தூரமாக, லேசாக கேட்டது போல் இருந்தது.  எழுந்து எடுக்க சோம்பளாக இருக்க மறுபுறம் திரும்பி படுக்க…தொடர்ந்து ஃபோன் பெல் அடித்தது.

 

கண்களை திறந்து பார்க்காமலேயே ஃபோனை  எடுத்து காதிற்கு கொடுத்தவன் தூக்க கலங்கத்திலேயே “ஹலோ யார் பேசறது என்ன வேணும் “என சோம்பலாக கேட்டான்.

Advertisement

 

“ஹலோ நான் தான் நாதன் பேசறேன் “என எதிர் முனை கூறவும் அழைத்தது யார் என்று புரிய வேகமாக எழுந்து அமர்ந்தவன் நேரத்தை பார்த்தபடி “ஹலோ அங்கிள் என்ன இந்த நேரத்தில் அழைத்து இருக்கறிங்க… ஏதாவது பிரச்சினையா..என வேகமாக சொற்கள் வந்து விழுந்தன..”

 

“ஸாரி கார்த்திக் தூங்கற உன்னை எழுப்பிட்டேன் பயப்படறமாதிரி எதுவும் இல்லை நாங்க நல்லா தான் இருக்கிறோம். பெருசா எதுவுமே இல்லை…வந்து  நீ…நீ… மாயாகிட்ட ஃபோனில் நைட் பேசறேன்னு சொன்னியா…”

 

“ஒ…ஸாரி அங்கிள் மறந்துவிட்டேன் சுத்தமா ஞாபகம் இல்லை…காலையில் எழுந்ததும் முதலில் அவகிட்ட ஃபோன் பண்ணி பேசிடறேன்.”

 

“இல்லை கார்த்திக் இப்பவே பேசிடேன் அவ நீ ஃபோன் பண்ணுவேன்னு மொபைலை கையில் வச்சிட்டு ஹாலில் உட்கார்ந்து இருக்கறா இன்னமுமே…நாதன் தயங்கியபடி சொன்னார்.”

 

“வாட்…என்னது நேரம் இரண்டு மணியை தாண்டியாச்சு இன்னுமா உட்கார்ந்து இருக்கறா…”

 

“ம்…நான் தான் சொன்னேனே கொஞ்சம் பிடிவாதம் ஜாஸ்தின்னு…தூங்குமா காலையில் பேசிக்கலாம்ன்னு சொன்னேன் அவதான் பிடிவாதமா  பேசிட்டு தான் தூங்குவேன்னு உட்கார்ந்து இருக்கறா ரெண்டு நிமிடம் டைம் ஒதுக்கி அவகிட்ட பேசிட்டு தூங்கறையா ப்ளீஸ்..இதை கேட்க கஷ்டமாகத்தான் இருக்கு வேற வழி எனக்கு தெரியலை”. 

 

“அங்கிள் அத்தை என்ன பண்ணறாங்க மாயாகிட்ட எதுவும் சொல்லறது இல்லையா…”

 

“அவதூங்கறப்பா…இவள்கிட்ட சொன்னாலும் இவள் கேட்கற ரகம் எல்லாம் கிடையாது.  இவளுக்கு என்ன தோனுதோ அதைதான் செய்வா…”

 

“சரி அங்கிள் நீங்க போய் தூங்குங்க நான் அவளுக்கு ஃபோன் பண்ணறேன். இனிமேல் இதை மாதிரி பண்ணதேன்னு சொல்லறேன். “

 

[the_ad id=”6605″]

 

 

“சரிபா” என கட் செய்தவர் மகளை பார்த்தபடி தனது அறைக்குள் தூங்க சொன்றார்.

 

அடுத்த நொடி அவளது செல்பேசிக்கு

அழைப்பு விடுத்தவன் ஹலோ மாயா என்று  அழைக்க ஃபோனை அட்டென் செய்தவள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை  அமைதியாக இருந்தாள்.

 

“மாயா பேசு லைன்ல இருக்கறேன்னு எனக்கு தெரியும் ஸாரி மறந்திடுச்சு இப்பதான் ஞாபகம் வந்தது அதுதான் கூப்பிட்டேன்.” 

 

“அதுவும் அப்பா ஃபோன் பண்ணி சொன்னதால் அப்படிதானே…மாயா கொஞ்சம் கோபத்தோடு பேசினாள்.எப்படி கார்த்திக்என்கிட்ட பேச உங்களுக்கு இன்னொருத்தர் ஞாபகப்படுத்தனுமா எனக்கு,எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு”.

 

“ஹேய் கூல் என்ன இவ்வளவு கோபம் வருது வந்ததே லேட் படுக்கும் போதும் பதினோரு  மணியை தாண்டிடுச்சு எனக்கு எப்படி தெரியும் இந்த மாயா பொண்ணு நைட் வாட்ச்மேன் வேலை பார்க்கும்ன்னு…”

 

“ஹலோ என்ன ஒவரா பேசறிங்க வாட்ச்மேன் வேலை பார்க்க வேற ஆள் இருக்கறாங்க ஏதோ கல்யாணம் பண்ணிக்க போறவர்கிட்ட ஏதோ ரெண்டு வார்த்தை பேசலாம்ன்னு நினைச்சா ஒவரா பேசறிங்க… எங்கிட்ட பேசறதுக்கு எப்படி மறக்கலாம் அதுக்கு முதலில் பதில் சொல்லுங்க..”

 

“அதுதான் மறந்துவிட்டேன் விடேன்.இந்த ஒரு தடவை மட்டும் இனி மறக்கலை சரியா”.

 

“அப்படிஎல்லாம் விடமுடியாது காலையில் தானே ஸ்கீரீன்சேவர் மாற்றி விட்டேன் எப்படியும் மொபைல் ஃபோனை பார்க்காமலா இருந்து இருப்பிங்க அப்புறம் எப்படி மறக்கலாம்…”

 

“உன்கிட்ட ஏதாவது சொல்லிட்டு தப்பிக்க முடியாது போல இருக்கே…கல்யாணத்துக்கு அப்புறம் எப்படி உன்னை சமாளிக்கப்போறேன்னு தெரியவில்லை…”

 

“ரொம்ப பயப்பட எல்லாம் வேண்டாம் நானும் கொஞ்சம் நல்ல பொண்ணு தான் சரியா..ஒரு சில விஷயத்தில் நானும் விட்டு தருவேன் அதுவும் எனக்கு பிடிச்சு போச்சுன்னா அவங்களுக்குக்காக உயிரையே தருவேன் எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு அதுதான் உரிமையோட சண்டை போடறேன் இப்படி சட்டென சொல்லவும் கார்த்திக்கிற்கு என்னவோ போல் இருந்தது.  அமைதியாகி இருந்தான் அதிகமாக இவனை இந்த பெண் விரும்ப,நேசிக்க ஆரம்பித்து விட்டாலோ தனக்கு தான் எதுவும் தோன்றாமல் இயல்பாக இருக்கிறோமோ…கொஞ்சம் குற்ற உணர்ச்சி தோன்ற எதிர் முனையில் சத்தமாக மாயா கூப்பிடுவது கேட்டது..”

 

“கார்த்திக் லைன்ல தானே இருக்கறிங்க பேசறது கேட்கிறதா.”..என்றாள்.…

 

“ம் இருக்கிறேன் ஸாரி உன்னை அவாய்ட் பண்ணலை அத புரிஞ்சிக்கோ..என்று மட்டும் கூற…”

 

“நான் அப்படி சொல்லலையே கார்த்திக். அப்பாகிட்ட உங்களை பற்றி நிறைய கேட்டு தெரிஞ்சுகிட்டேன். கேட்க கேட்க உங்கள் மேல் செமையா லவ் வருது…நான் என்ன செய்யறது கார்த்திக்…உங்க கிட்ட மனதில் தோணறதை பேசலாம்தானே இல்லை தப்பா எதுவும் நினைச்சுப்பிங்களா இந்த பொண்ணு வழவழன்னு…நிறையா பேசறான்னு …”

 

“அப்படி எல்லாம் எதுவும் இல்லை மாயா என்கிட்ட தானே பேசறே… என்ன வேணும்னாலும் பேசலாம் ..”

 

“தேங்க்ஸ்.கார்த்திக் உங்ககிட்ட வெளிபடையா பேச எந்த கூச்சமும் எனக்கு இல்லை…ம்  எனக்கு  தூக்கம் தான் இன்னும் வரலை… இப்போ என்ன  செய்ய…”

 

“என்ன செய்யறதா…என்ன விடிய விடிய முழிச்சி இருக்க ப்ளான் பண்ணறையா…

எனக்கு காலையில் நிறைய வேலை இருக்குமா நான் தூங்கனும் ஏன் தூக்கம் வரலை அதை சொல்லு..”

 

“அது சொன்னா சிரிக்க கூடாது லேசாக பசிக்கறமாதிரி இருக்கு கார்த்திக் இதை சொல்லவும் எதிர் முனையில் நன்றாக சிரிக்க ஆரம்பித்தான் கார்த்திக்.”

 

“சிரிக்க கூடாதுன்னு சொன்னேன்ல்ல..”இவள் சொல்லவும் நைட் என்ன சாப்பிட்ட…

 

“ம்…ஒரு தோசை ஒரு டம்ளர் பால்…”

 

“சரிதான் இப்ப நேரம் என்ன மூன்று மணியை தொடப்போகுது நீ சாப்பிட்டது ஒரு மணிநேரம் கூட பசி தாங்காது போ எழுந்து போய் எதாவது சாப்பிட இருக்கான்னு பாரு…சமையல் அறை உன் வீட்டில் எந்த பக்கத்தில் இருக்கிறதுன்னு உனக்கு தெரியுமா…”

 

“ஒவரா ஓட்டாதிங்க கார்த்திக் எனக்கு நல்லாவே சமைக்க தெரியும் நான் படிச்சது,இருந்தது எல்லாமே ஹாஸ்டல் அதுவும் லாஸ்ட் வருஷம் யுஎஸ்ல படிக்கும் போது தங்கினது ஆறு பேர் கூட சோ…தினமும் ஆளுக்கு ஒரு நாள் ச மைக்கணும்… இங்கே வந்து பிறகும் நிறைய நேரம் எனக்கு பிடிச்சதை நானே சமைத்து சாப்பிட்டுக்குவேன். இப்ப நேரா சமையல்கட்டுக்கு தான் போகபோறேன். ஏதாவது சாப்பிடாட்டி அவ்வளவு தான்.”

 

“அப்போ எனக்கு விதவிதமா சமைச்சு தருவே அப்படிதானே…”கார்த்திக் விளையாட்டு போல கேட்டு வைக்க…

 

“ஹலோ அப்படின்னு எப்போது சொன்னேன் அப்படி எல்லாம் கனவு காணாதிங்க…சரியா…எனக்கு சமைக்க தெரியும் தான் ஆனால் எனக்கு பிடிக்காத வேலையே சமையல் செய்யறதுதான் அதையும் தெரிஞ்சுக்கோங்க…”

 

“போகட்டும் பரவாயில்லை விடு இங்கே சமைக்க  அம்மாவுக்கு துணையாக  ஆள் இருக்கறாங்க நீ இங்கே வந்து சமைக்க தேவை இல்லை இப்ப எங்கே இருக்கறே உன்னோட ரூம்ல தானே..”

 

[the_ad id=”6605″]

 

 

 

“ஆமாம் ஏன் கேட்கறிங்க…”

 

“முதல்ல  எழுந்து நேரா சமையற்கட்டுக்கு போ…அங்கே என்ன இருக்குண்ணு பார்த்து ஏதாவது சாப்பிடு பசியோடு இருக்காதே…”

 

“ஏன் இன்னும் பேசிட்டே இருக்கற..ஃபோனை கட் பண்ணுன்னு ஜாடையா சொல்லறிங்கலாக்கும்…”

 

“மாயா உண்மையை சொல்லவா தூக்கம் நல்லா கலைஞ்சு போச்சு..நீயே தூக்கம் வருதுன்னாலும் உன்னை விடப்போகிறது இல்லை. அந்த அளவுக்கு பேசிட்டு இருக்க போறேன்”.

 

“ஜ…சூப்பர் ஒன்னு பண்ணவா…சமைக்கறதை வேடிக்கை பார்க்கறிங்களா லைவ் டெலிகாஸ்…”

 

“செய்…பார்க்கிறேன். என்ன செய்ய போற…”

 

“இருங்கள் ஒரு நிமிடம் என்றவள் கட் செய்து விடியோ காலில் இவனை அழைக்க…அமர்ந்த வாக்கில் தலையணையை எடுத்து மடியில் வைத்தபடி அட்டென் செய்தான்.”

 

ஹாய் கார்த்திக் என்ற மாயா வெள்ளை நிற இரவு பேண்ட் கூடவே வெள்ளை நிறத்தில் காலர் வைத்த சட்டையோடு முகத்தில் எந்த விதமான மேக்கபும் இல்லாமல் பால் நிறத்தில் இருந்தாள்…வாங்க கார்த்திக் எங்க சமையல் அறைக்குள் அழைச்சிட்டு போறேன்..என்றபடி இவனிடம் பேச… இவனுக்கும் அவ்வளவு சிரிப்பு அவளது செய்கை மொழியை பார்த்து…கட்னியூ பண்ணு என்பது போல தலையசைக்க…

 

“யூ நோ கார்த்திக் எனக்கு ஏழு விதமான தோசை சுடத்தெரியும் உங்களுக்கு தெரியுமா…”

 

“பக்கத்தில் இல்லையிங்கற தைரியமா மாயா  அடிச்சு விடு காசா பணமா… சுடற தோசையை யாரு சாப்பிடறதாம்..”.கார்த்திக் இந்த பக்கத்தில் இருந்தபடி சொல்ல…

 

“நீ நம்பலை எனக்கு தெரியுது வேணும்னா ரெசிபி சொல்லவா…”

 

“சொல்லு,சொல்லு எப்படியும் இனி தூங்கப்போறது இல்லையின்னு தெரிஞ்சு போச்சு கேட்கறேன்.”

 

“குட் இது நல்ல பையனுக்கு அடையாளம்.  ஆனியன் கட்பண்ணி போட்டு ஆனியல் தோசை செய்யலாம்.  அப்புறம் இட்லி போடி போட்டு பொடி தோசை செய்யலாம். அப்புறம் பிட்ரூட் கட் பண்ணி…என ஆரம்பிக்க…எதிர் முனையில் கார்த்திக் இரு இரு நான்  சொல்லறேன்…”

 

[the_ad id=”6605″]

 

 

“கொஞ்சம் மஞ்சள் தூள் தோசை மேல தூவினா அது மஞ்சள் தோசை,தனி மிளகாய் தூள் மேல தூவினா அது சிவப்பு தோசை எப்படி.. நானும் தேறிட்டேன்ல்ல..”

 

“போ கார்த்திக் என்ன கிண்டல் பண்ணறே போ உனக்கு நோ டெலிகாஸ் …நானே தனியா சாப்பிடப்போறேன்…”

 

“ஏய்…எனக்கு கிடையாதா…”

 

“ஏன் கார்த்திக் நேரம் தான் ஆச்சே  உனக்கும் தானே பசிக்கும் நான் மட்டும் எப்படி சாப்பிட எனக்கு வேண்டாம் நான் மறுபடியும் ரூம்பிற்கே வரேன் என திரும்பப் போக…”

 

“மாயா சாப்பிடற பொருளை வேஸ்ட் பண்ணக்கூடாது தட்டில் எடுத்து வச்சி ரூம்பிற்கு எடுத்துட்டு வா இப்ப என்ன நானும் சாப்பிடும் அவ்வளவுதானே இரு இங்கே எதாவதுஇருக்கும் எடுத்துவிட்டு வரைன் என்றபடி எழுந்து சென்றான். “

 

மறுபடியும் வரும் போது தட்டில் இரண்டு துண்டு கேக் இருந்தது.  “பாரு மாயா நானும் சாப்பிடப்போறேன். இதோ..என்றபடி பேசிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தனர் .”

 

சற்று நேரத்தில் அலாரம் அடிக்க…கார்த்திக் திரும்பி பார்த்தான் நேரம் ஐந்தரை  ஆகி இருந்தது. ” சுத்தம் மாயா நேரம் விடிஞ்சாச்சு…”

 

“யா…கார்த்திக் எனக்கு தூக்கம் வருது குட் நைட்..”

 

“என்னது தூக்கம் வருதா நேரம் பாரு விடிஞ்சாச்சு…இனிமேல் தான் தூங்குவியா”

 

“ஆமாம் கார்த்திக் ரொம்ப நேரம் பேசி இருக்கறோம்ல்ல..நேரம் போனதே தெரியவில்லை எனக்கு இந்த நாள் மறக்கவே முடியாது கார்த்திக் இது மாதிரி இன்னொரு நாள் இப்படி பேசுவோமான்னு தெரியாது.ஆனாலும் நைட் உங்கள் மேல நிறைய கோபம் இருந்தது ஆனால் இப்போது துளி கூட இல்லை மனசு முழுக்க பயங்கர ஹேப்பி எங்கேயோ வானத்தில் பறக்கறமாதிரி இருக்கு”.பாருங்க பயங்கரமான கண்ணு எரியுது படுத்தால் மதியம் தான் எழுந்திருப்பேன்னு நினைக்கிறேன். 

 

[the_ad id=”6605″]

 

 

” எனக்கும் ஹேப்பி மாயா நான் அதிகமா யார் கிட்டேயும் இவ்வளவு பேசினசு இல்லை…என்னை தினைச்சா எனக்கே ஆச்சர்யமாக இருக்கு…நீ எனக்கு சொந்தமானவள் அப்படிங்கற எண்ணம் என்னோட மனதில் வந்திடுச்சு போல இருக்கு அது தான் நேரம் போனது கூட தெரியாமல் பேசி இருக்கறேன் போல இருக்கு…ஹேய் கடைசியாக  ஒரு விஷயம் சொல்லிடறேன் கேட்டுட்டு கட் பண்ணு …”

 

“என்ன கார்த்திக்…”சொல்லுங்க என்றபடி அருகில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்தாள் மாயா அடுத்து அவன் சொன்னணை கேட்டு குடித்த நீர் புறையேறியது அதிர்ச்சியோடு கண்ணாடியில் தன்னை பார்த்தாள் மாயா..அவன் சொன்னது இதுதான்…

“தூங்கி எழுந்து வெளியே போகும் போது ஸர்ட் பட்டனை போட்டுவிட்டு போ …ரெண்டு பட்டன் கலண்டு இருக்கு…என்று சொன்னபடி கட் செய்து இருந்தான் கார்த்திக் .”

 

சொன்னதுமே  தன்னை குனிந்து பார்த்தவளுக்கு ஒன்று  புரிந்தது..பெரிதாக எதுவும் தெரியாவிட்டாலும்…’மை காட் இத்தனை நேரம் இப்படியா பேசினேன்.

சரியான தயிர் சாதம் நினைச்சா..நீ கொஞ்சம் டேன்ஜர் தான் ஆனாலும் நீ கொஞ்சம் நல்லவன் தான்  கடைசி வரைக்கும் முகத்தில் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் பேசி இருக்கறே… எங்கே முதலில் சொல்லி இருந்தா அப்பவே பேசினதை கட் பண்ணி இருப்பேன்னா…அப்படின்னா உனக்கும் என்கிட்ட பேச பிடிக்குது அப்படிதானே   அர்த்தம் ஆகுது..என மனதிற்குள் நினைத்தவள்.

 

ஏற்கெனவே சிவக்க துவங்கி இருந்த  முகத்தை கண்ணாடியில் பார்த்தபடி சுகமாக பெட்டில் படுத்தவள் தூங்கி இருந்தாள். 

சிறிது நேரத்தில் கனவிற்குள் நுழைந்து இருந்தாள் கார்த்திக்கோடு  டூயட் பாட…

 

தொடரும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!