Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennaval

Ennaval 2

என்னவள்-2

 

சக்தி வேலைக்கு புறப்படையா நேரம் ஆகிடுச்சு சீக்கிரம் சாப்பிட வா டேபிள் மேல பூ இருக்கிறது பாரு தலையில் வச்சிட்டு சீக்கிரம் வா.டிபன் ஃபேக்ல எடுத்து வச்சிட்டேன் வேற ஏதாவது வேணுமா..”

 



Advertisement

இதோ வந்துவிட்டேன் மா என்றபடி வேகமாக பாத்ரூமில் இருந்து வந்தாள் சக்தி“. ஒரு நிமிடம் நின்று நேரம் பார்த்தவள் வேகவேகமாக  புறப்பட்டாள். லேசாக பவுடர்  பூசி தலைவாறியவள் கடைசியாக ஒரு முறை கண்ணாடி பார்த்தாள்.எல்லாம் சரியாக இருக்கிறதா என்ற கண்ணோட்டத்தோடு..

 

கண்கள் முதலில் கண்ணாடியில் நன்றாக பதிந்தது நெற்றியில் தெரிந்த தழும்பை தான். தழும்பு தெரியவும் கைகள் தன்னை அறியாமல் தடவ..பழைய நினைவில் ஒரு நிமிடம் உடல் நடுங்க வேகமாக  அந்த இடத்தில் இருந்து நகர்ந்தாள்

Advertisement

 

Advertisement

வாசல் வரைக்கும் போனவள் அதே வேகத்தில் திரும்பி வந்து அங்கே டேபிளில் வைத்திருந்த நெருங்கி கட்டி இருந்த மல்லிகை சரத்தை எடுத்து தலையில் சூட்டியவள் நேராக பூஜை அறைக்குள் சென்று மனதிற்குள் வழக்கமாக சொல்லும்  ஸ்லோகம் ஒன்றை சொன்னவள்  அங்கிருந்த.சந்தனம்,குங்குமம் எடுத்து நெற்றியில் வைத்து கொண்டவள் அதே வேகத்தில் தனது தாயாரை தேடி சமையல் அறைக்குள் நுழைந்தாள்.

 

அம்மா சீக்கிரம் தாங்க நேரம் ஆச்சு.”.என சொன்ன சக்திக்கு  இருபத்தி மூன்று வயது தற்போது நடந்து கொண்டு இருந்ததுகடந்த ஆறு மாதங்களாக வேலைக்கு சென்று கொண்டு இருந்தாள். நல்ல அழகி  திருத்தமான முகம் செதுக்கி வைத்தது போன்ற உடல் வாகு… 

Advertisement

 

எந்த உடை போட்டாலும் அழகாக தோன்ற கூடிய உடல்வாகு இது இயற்கையாகவே இவளுக்கு அமைந்து இருந்தது . நல்ல நிறம் சற்றே வெயில் பட்டாலோ,கொஞ்சம் சிரித்தாலோ ரத்தநிறம் பூசிக்கொள்ளும் அளவிற்கு கொஞ்சம் மஞ்சலும் பிங்க்கும் கலந்த நிறம் அவளுடையது. நீளமான தலைமுடி..வீட்டிற்கு இரண்டாவது மகள் இவள்.

 

முதல் மகளுக்கு திருமணம் முடிந்து இருக்க அவர்கள் வசிப்பது ஊட்டியில்..மாப்பிள்ளை  சிவாவிற்கு ஊட்டியில் டீ எஸ்டேட், இருந்ததுபரம்பரை பரம்பரையாக அங்கேயே வசிப்பவர்கள் நல்ல வசதியும் கூட..அக்கா  திவ்யா இவளை விடவும்  நான்கு வயது பெரியவள்.

 

 

[the_ad id=”6605″]

 

 

திருமணத்திற்கு பிறகு வசிப்பது ஊட்டியில் இது வரை அவர்களது வாழ்க்கையில் எந்த பிரச்சினையும்  வந்தது இல்லை இன்னும் சொல்ல போனால் அவர்களை பார்ப்பவர்களுக்கு அதே போல் அழகான வாழ்க்கை வாழ ஆசை வரும் அந்த அளவிற்கு  பொருத்தமான தம்பதி இருவரும். அவர்கள் பெற்றெடுத்த ஏஞ்சல் அபிநயா..துருதுரு என இருக்கும் அழகு புயல். தற்போது  மூன்று வயதை நெருங்கி கொண்டு இருக்கும் அழகு தேவதை

 

என்ன சக்தி லேட் ஆச்சுன்னா வேலைக்கு போகாதே..நாளைக்கு போயிக்கோ..”

 

அம்மா வேலைக்கு போகிற இடத்தில் அப்படி எல்லாம் இஷ்டத்துக்கு லீவ் போட முடியாது மா போய் தான் ஆகணும். அப்பா எங்கே மா.”

 

இன்றைக்கு காட்டுல  தேங்காய் பறிக்கறாங்க காலையிலேயே காட்டுக்கு போயாச்சு இனி நீ புறப்படவும் சாப்பிட எடுத்துவிட்டு நானும் போகணும். “

 

சரி மாஎன்றவள் வேகமாக இரண்டு இட்லியை எடுத்து சாம்பார் ஊற்றி வேகமாக சாப்பிட்டாள். “இட்லிக்கு சாம்பார் சூப்பராக இருக்குமா என்ற கமெண்ட்டோடு..”

 

அப்படின்னா இன்னும் ரெண்டு இட்லி சேர்த்து சாப்பிடுஎன பதில் தந்தபடி எடுத்து வைக்க போக ,”அம்மா போதும்மா..ஏற்கனவே வயிறு ஃபுல் ஆகிடுச்சு நான் எப்போது ரெண்டு இட்லிக்கு மேல சாப்பிட்டு இருக்கிறேன். இதுவே அதிகம் என்றபடி எழுந்தாள். “

 

டைம் ஆச்சு மா வண்டியை எடுக்கிறேன் இப்போது போனால் தான் சரியாக இருக்கும்“,  என தனது அக்டிவாவை எடுத்து புறப்பட்டாள். இவர்களது வீடு மேட்டுப்பாளையம் பகுதியில் சற்று உள்ளே நகர்ந்து இருந்தது.  

 

விவசாயம் தான் இவர்களது தொழில். வீட்டுக்கு பின்புறம் கிட்டத்தட்ட பத்து ஏக்கர் இடம் விவசாயத்திற்கு ஒதுக்கி இருந்தனர். இவர்கள் இடம் முடியவும் சில கிலோமீட்டர் தாண்டவுமே மலைத்தொடர் துவங்கி விடும் இயற்கை சூழ்ந்த பகுதி இவர்களுடையது. கொஞ்சம் பாரம்பர்யமான குடும்பம் . அனைவராலும் அவ்வளவு எளிதாக இவர்களது வீட்டிற்குள் நுழைந்து விட முடியாது

 

அந்த அளவுக்கு கட்டுப்பாடான குடும்பம் வீடு கூட பழைய காலத்தில் கட்டிய வீடு தான்  கல்லுவீடு என சொல்வார்களே அது போல..செங்கற்களால் கட்டிய வீடு இவர்களது கிடையாதுபெரிய பெரிய கருங்கற்கலை கொண்டு கட்டியது வீட்டுக்கு உள்ளேயே பெரியபரண்..அதை தாண்டி நல்ல உயரத்தில் பழைய காலத்து ஓடுகள் வேய்ந்த வீடு. ..வீட்டில் எப்போதும் இருக்கும் அந்த குளுமை அது பின்புறத்தில் இருக்கும் தோட்டத்தாலா இல்லை வீட்டின் அமைப்பாலா என  தெரியாத அளவிற்கு அழகாக அமைந்து இருக்கும்

 

இவள் வேலை செய்வது துடியலூர் பகுதியில் இருக்கும் பைக் ஷோரூம் ஒன்றில் இவளுக்கு வேலைபெரிய ஷோரூம் அது ஆட்கள் மட்டுமே நூற்றுக்கு மேல் வேலை செய்து கொண்டு இருந்தனர்.

 

பைக் வாங்க முன்புறம் அழகாக  வடிவமைத்து இருக்க  சர்வீஸ் செய்ய பின்புறத்தில் இடம் ஒதுக்கி இருந்தனர். இவளுக்கு வேலை முதல் மாடியில் ஸ்பேர்பாட்ஸ் மட்டும் இவர்கள் இருக்கும் பகுதியில் இருந்ததுசிறு நட்டு முதல் ஷீட்கவர் ஹெல்மெட், விற்கும் வண்டி கலரிற்கு ஏற்றாற்போல் ஜெர்கின் முதற்கொண்டு இங்கே அதே கலரில் மேட்சிங்காக கிடைக்கும். இவளது வீட்டில் இருந்து இங்கே வர நாற்பது நிமிடம் நேரம் பிடிக்கும்

 

சக்திக்கு இந்த வேலை பிடித்தே இருந்ததுசில வேண்டாத நினைவுகளை துரத்த  இந்த வேலை, இந்த தூரம் தேவை இருந்ததுஇவள் வேலைக்கு போகாமல் இருந்தாலும் யாரும் கேட்க போவது இல்லை.. ஏன் வேலைக்கு போகவில்லை என..வாசலுக்கு வந்து வண்டியை ஆன் பண்ணவும் ஃபோன் வரவும் சரியாக இருந்தது. ஃபோனை பார்க்க அழைத்து கொண்டு இருந்தது இவளது தமக்கை திவ்யா

 

[the_ad id=”6605″]

 

 

 

மறுபடியும் ஒரு முறை கையில் கட்டிய வாட்சில் நேரம் பார்த்தவள்அக்கா சொல்லு இந்நேரம் கூப்பிட்டு இருக்கற..”

 

நான் எங்க கூப்பிட இந்த வாண்டு உன்கிட்ட பேசணுமாம் பேசு இந்தா..வேலைக்குநேரம் ஆச்சா சக்தி ..”

 

ஆமாம் கா கொடு பேசிட்டு புறப்படறேன்“. ஃபோன் கை மாறிவும் அபிநயாவின் மழலை குரல் இவளது காதல் வந்து மோதியது. “சித்தி எப்ப வீட்டுக்கு வருவீங்க இந்த அம்மா எபபபாரு திட்டறா என்றபடி புகார் வாசித்தது.”

 

செல்ல குட்டி வரேன்டா சீக்கிரமே  அது வரைக்கும் அம்மா பேச்சை கேட்டு சமத்தா இருப்பிங்களாம்.சரியா குழந்தைக்கு நிகராக இவளது குரலும் கொஞ்சியபடி கூற“..

 

சித்தி எப்ப பாரு இப்படி தான் பொய் சொல்லற வர்றதே இல்லை. ” 

 

தங்கம்ல்ல இன்னும் ஒரு நாளுநாள் வெயிட் பண்ணுவிங்களாம் சித்திக்கு ஆபீஸ்ல லீவ் தந்திடுவாங்க நான் அங்கே வந்திடுவேனாம். “

 

போ சித்தி பொய் சொல்லற வரவே இல்லைநான் உனக்கு ஒன்னு காட்டணும் சீக்கிரம் வா“..இவள் சொல்லும் போதேபோதும் அபி ஃபோனை கொடு சித்தியை இந்த வாரம் வரச்சொல்லலாம் சரியா..சித்தி வராட்டி நீயும் நானும், அப்பா எல்லோரும் போய் சித்தியை பார்த்துவிட்டு வரலாம் சரியா“…கூறியது கேட்கவும் ஜாலி ஜாலி என்ற சத்தத்தோடு அபி ஓடி இருந்தாள். இப்போது திவ்யா கைக்கு  ஃபோன் வந்து இருந்தது.

 

சக்தி இவளுக்கு நிறைய செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்கற..சொன்ன பேச்சை  கேட்கறதே இல்லை  என்னால கண்ட்ரோல் பண்ண முடியலை. நீதான் இங்கே வந்து நாள் ஆச்சுதே.. உன்னோட ஞாபகம் வந்திடுச்சு போல இருக்கு. நைட் ரெண்டு மணிக்கு உன்கிட்ட பேசுவேன்னு ஒரே அடம். ஒரு வழியா சமாதானம்பண்ணி தூங்க வச்சேன்“.

 

ஏன்  கா  ஃபோன் பண்ணி  இருக்கலாமே..தூக்கம் எல்லாம் இல்லைமுழிச்சு தான் இருந்தேன். சரிக்கா குட்டியை ரொம்ப மிரட்டாதே எனக்கு நேரம் ஆச்சு புறப்படறேன்“, என இவள் கட் செய்ய அங்கே எதிர் முனையில் இருந்தவளுக்கு கண்கள் குலம்  கட்டி கண்ணீர் வடிய தயாராக இருந்தது

 

தூங்கலை முழிச்சிதான் இருக்கிறேன்னா என்ன அர்த்தம்  அவள் எதையுமே மறைக்கலையா..நடந்த எதையும் மறக்க முடியாதுதான். கொஞ்சமாக மாறி வருகிறாள் என நினைத்து இருக்கஅறியாமல் சொன்னது கூட இங்கே இவளை பாதித்தது. திகைத்து போய் நிற்பதை பார்த்து வந்த சிவா..

 

ஏய் திவ்யா என்ன யோசனை அப்படியே நிற்கற.. எஸ்டேட் கிளம்பணும். ஃபோனை கையில் வச்சிட்டு கனவு கானறையா.”.

 

சக்தி எதையும் மறக்கலைங்கஎதார்த்தமாக சொன்னேன் நைட் அடம் பண்ணி அழுதான்னு சொன்னா கூப்பிட்டு இருக்கலாமேக்கா முழிச்சு தான் இருந்தேங்கறா.”.

 

நடந்தது சின்ன விஷயம் இல்லை  கொஞ்ச நாள் ஆகும் திவ்யாஇப்பதானே ஆறு மாதமா வேலைக்கு போறா நேற்று உன்னோட அம்மா கிட்ட பேசின தானே அம்மா என்ன சொன்னாங்க வழக்கம் போல பேசறா சிரிக்காட்டி கூட கொடுக்கிறத சாப்பிடறா முதல்ல மாதிரி  ரொம்ப பயப்படலைன்னு சொன்னாங்கதானே..சரியாகிவிடும்  உள்ளே வா..”

 

ம்..ம்அமைதியாக வர..”திவ்யா வேண்ம்னா இந்த வாரம் போயிட்டு வரலாமா” .

 

நானும் அது தான்  யோசிச்சேன். அவளால் வர முடியாட்டி நாம போயிட்டு வரலாம். இவள் அவளை தேட ஆரம்பிச்சுடா பார்க்கற வரைக்கும் டெய்லி அழுவா. “

 

ஆமாம் ஆமாம் பிடிவாதத்தில் அப்படியே நீதான்ஒன்று முடிவு பண்ணிட்டா அதிலேயே நின்று அடம்பிடித்து சரிபண்ணறதில்..”.

 

அப்படியாஸார் அப்படி எத்தனை விஷயம் அடம்பிடிச்சு ஒகே வாங்கினேனாம் மொதல்ல அந்த லிஸ்ட் சொல்லுங்க.”.

 

ஏய் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் வா வா நேரம் ஆச்சு சீக்கிரம் போகணும் இன்றைக்கு நிறைய வேலை இருக்கு என்றபடி இவளை முன்புறமாக தள்ளியபடி வீட்டிற்குள் நகர்ந்தான்.” 

 

தள்ளாம வாங்கவிழுந்திட போறேன் என பேச்சு கொடுத்தபடி உள் நுழைய..

 

 

[the_ad id=”6605″]

 

 

விழுந்தால் அப்படியே விட்டுடவேனா என்ன தூங்கிட மாட்டேன் என இவனும் பதில்  சொன்னபடி டைனிங் ஹாலில் அமர்ந்தான்.”

 

எப்படியாம் நீங்களே தள்ளி விட்டுட்டு நீங்களே தூக்குவீங்களா நல்லா இருக்கே ஞாயம் என்றபடி சமையல் அறைபக்கம் நகர…”

 

ஆத்தி இன்றைக்கு ஒரு மார்க்கமாதான் இருக்கறபோல என்ன சொன்னாலும் குறை சொல்லறா என்றபடி  அபி குட்டி சாப்பிட வாங்க என சத்தமிட்டான் சிவா..”

 

டூர்,டூர்என்றபடி பெட்ரூம்பில் இருந்து தனது சிறிய காரில் அமர்ந்தபடி இவனுக்கு அருகில் வர.. அங்கே சமையல் அறைக்குள் நுழைந்த திவ்யா மனதில் எழுந்தது ஒன்று மட்டும் தான்  இவள் என்ன அதிகமாகவா ஆசை பட்டாள் இது போல

 

இயல்பான எளிய வாழ்க்கைக்கு தானே அது கூட ஏன் அவளுக்கு மறுக்கப்பட்டது என நினைத்தவளுக்கு கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது.

 

சற்று நேரம் இருந்தவன் இவளை தேடி வர இவன் பார்த்தது கண்களை துடைத்தபடி நின்ற திவ்யாவை தான்

 

தெரியும் இங்கே வந்து இதைத்தான் செய்வேன்னு..திவ்யா எல்லாமே சரியாகிடும்..யாரும் எதிர் பாராதது தப்பு நம்ம பக்கத்தில் தான் நிறைய இருக்கு. சில நேரம் நமக்கே தெரியாம இதுமாதிரி நடந்திடுது. விடு அழறதால எதுவும் மாறிடாது. காலம் எல்லாத்தையும் மாற்றும். நீ இப்ப என்ன பண்ணறேன்னா என் கூடவே சாப்பிட்டு அப்படியே அபிகுட்டியை ரெடி பண்ணுவியாம் நான் அப்படியே அம்மா வீட்டில்  இறக்கி விட்டுட்டு எஸ்டேட் போவேனாம்.” அந்த மனநிலையை மாற்று பேச்சு கொடுத்தான்.

 

இல்லை  இங்கே வேலை இருக்குங்க.”.

 

நீ என்ன வேலை செய்வேன்னு எனக்கு தெரியும் தேவை இல்லாமல் எதையாவது யோசிச்சுட்டு சாப்பிடாமல் அழுதுட்டு இருப்பேஅதுக்கு நான் விடமாட்டேன்  கிளம்பு“, என்றபடி அவள் எடுத்து வைத்ததை கையில் வாங்கியபடி டைனிங்ஹாலை நோக்கி நகர்ந்தான்.

 

போகும் போதேஅபிக்குட்டி சீக்கிரம் சாப்பிட்டால் தாத்தா பாட்டி வீட்டுக்கு போகலாம்அங்கே ஃபார்க் போய் தாத்தா கூட விளையாடலாம்“,  என்றபடி மகளுக்கு ஊட்டி விட ஆரம்பித்தான்.

 

நீயும் எடுத்து வச்சி சாப்பிடு திவ்யா இப்ப சக்தி நிறைய மாறி இருக்கறா பழைய மாதிரி இல்லை என்னை கேட்டால் நீ.. நீதான் தான்  மாறனும். “

 

உணவு உண்டு முடிக்கவும் இருவரையும் அழைத்து கொண்டு தனது காரில் புறப்பட்டான். “சாயங்காலம் ஐந்து மணி வரைக்கும் 

 

அங்கே இருங்கள்பக்கத்தில் ஃபார்க்கிற்கு அழைச்சிட்டு போ..நான் வந்ததும் ஹால் பண்ணறேன் அப்போது வீட்டுக்கு வந்தா போதும் என்றபடி இவனது தாயார் வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான்“.

 

அவன் சொனது எதுவுமே காதில் விழவில்லை ஏன் வளைந்து வளைந்து சென்ற சாலையோ, இயற்கை காட்சியோ, மலர்களோ எதுவுமே கண்களுக்கு தெரியவில்லைதெரிந்தது எல்லாம் சக்தியின் முகம் மட்டுமேஅதே நேரம் நினைவுகளுக்கு சொந்தக்காரியோ தனது அக்டிவாவை  எடுத்து கொண்டு வீட்டை விட்டு வேலைக்கு செல்ல சாலையை நோக்கி வண்டியை திருப்பி இருந்தாள்.

 

தொடரும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!