Ennaval 37 1
என்னவள்_37
எல்லாமே வேகமாக நடந்து முடிந்திருந்தது…பார்த்து விட்டு வந்தவனுக்கு கடைசியாக புன்னகைத்தபடி நகர்ந்து சென்ற சக்தியின் முகமே கண்களில் நின்றது.
Advertisement
உன்னை கண்டுகொண்டேன் என்பது போல… அங்கிருந்து வந்ததும் மனதிற்குள் சொல்லி கொண்டது…’புத்திசாலி பொண்ணு’ என்பது மட்டும் தான்.
மாயாவின் தந்தை தான் மறுபடியும் இவனிடம் பேசினார்.” கல்யாணத்திற்கு
Advertisement
சம்மதம் சொல்லு கார்த்திக்.சிவா உன்னோட ஃப்ரெண்ட் தானே ஏதாவது கேட்கணும்னா கேட்டுட்டு பதில் சொல்லு…என்றபடி…கார்த்திக் மாயா முடிஞ்சது போன அத்தியாயம் இனி அவளை பற்றி யோசிக்காதே…குழந்தை முகத்தை பாரு…”
Advertisement
“எப்படி அங்கிள் வர்ற பொண்ணு வேந்தனை பார்ப்பான்னு எப்படி யோசிக்கறிங்க…பெற்ற பையன் அசிங்கம் பண்ணினான்னு தூக்க யோசிச்சா மாயா நான் பார்த்து இருக்கிறேன் அப்படி இருக்கும் போது வர்ற பொண்ணு பார்த்துப்பான்னு சொல்லாதிங்க…சிரிச்சிடுவேன்.”
Advertisement
“கார்த்திக் நான் பையனை பார்த்துக்க பொண்ணு தேடலை பையனோட அப்பாவை பார்த்துக்கதான் தேடறேன்.”
“அங்கிள்…என்றபடி சிரித்தவன் நல்லா பேச கத்துக்கிட்டிங்க அங்கிள்.”
“ஒகே சொல்லு கார்த்திக் ஊர் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை. என்னோட தப்பை நான் சரிபண்ணிடறேன்.
உன்னோட ஃப்ரெண்டு தானே நானே பொண்ணு வீடு வரைக்கும் போய் பேசப்போறேன். ”
“எனக்கு இன்னும் கொஞ்சம் டைம் தாங்க அங்கிள் என்னால யோசிக்க முடியவில்லை. இன்னமும் நடந்த தாக்கத்தில் இருந்து வெளியே வரமுடியவில்லை கார்த்திக்கினால்…கடைசியாக மாயா தூக்கில் தொங்கிய தோற்றமே கண்களில் நிழலாடியது.”
[the_ad id=”6605″]
“இன்னும் எத்தனை நாள் கார்த்திக் இதையே சொல்லுவ… இப்பவே கிட்டத்தட்ட ஆறு மாதம் ஆகப்போகுது. என்னோட பொண்ணு தானே…நானே அதில் இருந்து வெளியே வரணும்ன்னு யோசிச்சிட்டு இருக்கிறேன். ப்ளீஸ் டா..”
“என்ன அங்கிள்… அப்பா அம்மா ரெண்டு பேரும் பொறுப்பை உங்கள் கிட்ட தள்ளிட்டாங்களா என்ன” ?
“கார்த்திக்…”
“அந்த பொண்ணு சம்மதிக்க மாட்டா…அங்கிள்…சோ…இதை விட்டுடுங்க…”
“எப்படி சொல்லற கார்த்திக்…”
“தெரியும் அங்கிள் அந்த பொண்ணோட கண்ணு சொல்லிச்சு…இது நடக்காது அப்படின்னு…”
“அதை நீ சொல்லக்கூடாது கார்த்திக் நான் தான் அந்த பொண்ணு வீட்டுக்கு போகப்போறேன் சம்மதிச்சா உனக்கு ஆட்சேயனை இல்லை தானே…”
“லேசாக சிரித்தபடி…இப்பவும் யோசிக்கணும் அங்கிள்..அந்த பொண்ணு புத்திசாலி அவ்வளவு சீக்கிரம் சம்மதிக்க மாட்டா…”
“மாற்றி மாற்றி இதையே பேசறோம் கார்த்திக் ரொம்ப நேரமா…நான் இன்றைக்கு அந்த பொண்ணு வீட்டுக்கு தான் போகப்போறேன் வந்ததும் உன்னை வந்து பார்க்கறேன் என்றபடி புறப்பட்டார்.”
“அங்கே சக்தியின் வீட்டில் சிவா திவ்யாவோடு வந்து இருந்தான். கார்ந்திக்கை பார்த்து விட்டு வந்து நாட்கள் நகர்ந்து கொண்டு இருந்தது. எந்த பதிலும் இருவர் பக்கத்தில் இருந்தும் கிடைக்கவில்லை.”
“சக்தி அன்றைக்கு பார்த்துவிட்டு வந்தோமே என்ன முடிவு செய்து இருக்கற…நான் மேற்கொண்டு பேசவா என கேட்டு வந்திருந்தான் சிவா…”
“எனக்கு சொல்ல தெரியலை அந்த குழந்தையை பார்க்கும் போது பாவமா இருக்கு ஆனால் அதுமட்டும் போதாது இல்லையா…உங்கள் ஃப்ரெண்டு அப்படிங்கறதால உடனே சரி சொல்லனுமா என்ன என்று துடுக்காக கேட்டு இருந்தாள் சக்தி. ”
“நியாயமான கேள்வி தான். எனக்கு உன்னோட முடிவு தெரிஞ்சா அங்கே போய் பேசலாம். ஒரு வேளை ஏற்கனவே கல்யாணம் முடிந்து குழந்தையும் இருக்கிறது உனக்கு உருத்தலாக இருக்கா…பேசும் போது குழந்தையால் எப்போதும் பிரச்சினை உனக்கு இருக்காதுன்னு சொல்லி இருக்கறாங்க…”
“ஏன் அத்தான் குழந்தை என்ன செய்ய போகுது இப்படி எல்லாம் கேட்கறதே என்ன பொருத்தவரைக்கும் தப்பு..உங்கள் ஃப்ரெண்டு கிட்டேயே கேளுங்கள் அவங்க பக்கம் சம்மதம்னா எனக்கு ஆட்சேபனை இல்லை. நீங்கள் சொன்னாதால அப்பா அம்மா ரெண்டு பேரும் சம்மதம் சொல்லியாச்சு…சக்திக்கு பிடிச்சா போதும்ன்னு எனக்கு தான் தெளிவாக சொல்ல தெரியவில்லை. நம்ம பக்கமும் குறை இருக்கே…என்னதான் நம்ம மேலே தப்பு இல்லைன்னு சொன்னாலும் நானும் விவாகரத்து ஆன பொண்ணு தானே…”
“சக்தி இப்படி எல்லாம் பேசாதே…”என்றபடி திவ்யா அபியோடு அருகே வந்தாள்.
“இல்லை கா…சொன்னாலும் சொல்லாட்டியும் உண்மை அதுதானே…
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே மாயாவின் தந்தை இவர்கள் வீட்டிற்கு வந்து இருந்தார்.அவரை பார்க்கவும் வரவேற்று அமர்ந்து வைத்தவள் தந்தையை அழைத்து வர நகர்ந்து சென்றாள் சக்தி.”
“அடடே நீங்களும் இங்கே தான் இருக்கறிங்களா நல்லதா போச்சு…அன்றைக்கு பார்த்து பேசினோம் இன்னும் எந்த பதிலும் தெரியவில்லை அது தான் தெரிஞ்சிட்டு போக வந்து இருக்கிறேன். குடும்பம் மொத்தமும் அமர்ந்து அரைமணி நேரம் வரைக்கும் பேசிவிட்டு புறப்பட்டு சென்றார் மாயாவின் தந்தை. ”
[the_ad id=”6605″]
“ஏற்கனவே கொஞ்சம் குழப்பத்தோடு இருந்தது சக்தியின் தந்தைக்கு இவர் வந்து பேசியது இருந்த சின்ன மனகுழப்பமும் முடிவுக்கு வந்து இருந்தது. அப்போதே தனதுமுழு சம்மதத்தை சொல்லி அனுப்பி இருந்தார்.”
அன்றைய நாளுக்கு பிறகு வேகமாக தான் எல்லாமே நடந்ததாக பட்டது…அன்றிலிருந்து சரியாக இருபதாவது நாளில் இருவருக்கும் திருமணம் முடிக்க நாளை தேர்வு செய்து இருந்தனர்.ஆடம்பரம் எதுவும் இல்லாமல் சட்டப்படி பதிவு திருமணம் செய்ய என்று…
இரண்டு வீட்டாரின் முன்னிலையில் இருவரின் திருமணம் ரெஜிஸ்டர் ஆபீஸில் இனிதே நடந்து முடிந்தது. முதலாவதாக கார்த்திக் கையெழுத்து போட்டு முடிக்க அடுத்ததாக அருகில் இருந்த சக்தி கையெழுத்திட்டாள். இங்கே முடிக்கவும் நேரடியாக அடுத்து கோவிலுக்கு சென்று தாலிகட்டுவதாக ஏற்பாடு செய்து இருந்தனர்.
சக்திக்கு அதிக அலங்காரம் எதுவும் இல்லை…லைட்வெயிட் பட்டுசேலை கழுத்தில் சிறுசிறு நகைகள். கையில் வளையல் நீளமான பின்னலுக்கு மல்லிகை சரம் மட்டும் சற்று அதிகமாக கல்யாண பெண் எனும் அடையாளத்தில் அவளை தேவதையாக காட்டியது. அருகில் கார்த்திக் பட்டு வேஷ்டி சட்டை வழக்கம்போல அதே சிறு தாடியோடு வந்து இருந்தான். இரண்டு பேருமே அங்கேயே மாலை மாற்றிக்கொட்டனர். மாலை மாற்றியபோது சக்தியை நிமிர்ந்து பார்த்ததோடு சரி…இந்த நிமிடம் வரைக்கும் அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசி இருக்கவில்லை. இவளுக்கும் பேச எதுவும் இருப்பதாக தோணவில்லை…
அங்கிருந்து நேரடியாக கோவிலுக்கு சென்று ஏற்கனவே ஏற்பாடு செய்தது போல அங்கே முறைபடி தாலியை அணிவித்து திருமணம் எளிமையாக முடிந்து இருந்தது. கையெழுத்து இட்ட போதும் சரி இதோ தாலியை கழுத்தில் வாங்கியபோதும் சரி…முகம் முழுக்க வேர்த்து இருந்தது சக்திக்கு…ஏற்கனவே முதல் திருமணம் தோல்வியில் முடிந்து இருக்க…இரண்டாவதும் ஏதோ ஒரு காரணம் சொல்லி தவறி இருக்க… இப்போது என்ன மாதிரி உணர்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை. கடவுளின் சன்னதியில் அவளது வேண்டுதல் ஒன்று மட்டுமே…நிச்சயமாக நிம்மதியான வாழ்க்கை கொடு…இனியும் சோதிக்காதே என்பது தான்.
திருமணம் முடியவும் இவளின் வேண்டுதல் மட்டும் அல்ல…கூடி இருந்தவர்கள் அனைவரது வேண்டுதலும் ஒன்று மட்டும் தான் இனி இவர்களது வாழ்க்கை செழிக்கட்டும் என்று மட்டுமே இருந்தது. இருவரின் தாய்தந்தையிடம் ஆசிர்வாதம் வாங்கியவர்கள் அருகில் இருந்த உணவகத்திற்கு உணவு உண்ண அழைத்து சென்றனர் அனைவரையும்…
“சிவா தான் கார்த்திக்கிடம் சக்தி ரொம்ப நல்ல பொண்ணு இனி ரெண்டு பேரும் நல்லா இருப்பிங்க என்றவன் எப்போது அங்கே ஊட்டிக்கு வர்ற கார்த்திக்….அங்கே நீ கட்டி தந்த சுற்றுலா விடுதியில் உனக்காக ஹப்பில்ஸ் ரூம் காலியாக இருக்கு…ஃபுக் பண்ணிடவா ஒரு வாரத்திற்கு என்று கேட்க….”
“அவனின் முதுகில் தட்டியபடி இப்போதைக்கு அவசியப்படாதுடா தேவைப்பட்டால் சொல்லறேன் என்று கொஞ்சமும் யோசிக்காமல் சொல்லி இருந்தான்.”
“யாருக்கு தெரியும் கார்த்திக் இப்படி சொல்லறவன் பின்னாடி கேட்க கூட செய்யலாம்” என்று முடித்து கொண்டான் சிவா….உணவு உண்டு முடிக்கவும் நேராக கார்த்திக் வீட்டிற்கு அழைத்து வந்தனர். ஆரத்தி கரைத்து வரவேற்றனர் இருவரையும் பூஜை அறையில் விளக்கு ஏற்றியபிறகு மாடியில் இருந்த கார்த்திக்கின் ரூம்பிற்கு பிருந்தாவோடு அனுப்பி வைத்தனர் சக்தியை முகம் கழுகிக்கு கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்கறதுன்னா எடுத்துவிட்டுவாம்மா என்று… கார்த்திக் அனைவரோடும் ஹாலில் பேசிக்கொண்டு இருந்தான்.
பிருந்தா பழையது போல பேச்சு எல்லாம் இல்லை மிகவும் அமைதியாக இருந்தாள்.. அவளுக்கு முன்பு போல பேச நிறைய தயக்கம் இருந்தது. மாயாவிடம் கிடைத்த அனுபவம் அப்படி…கூடவே வந்தவளிடம் சக்தி..”.பிருந்தா தானே உங்கள் பேரு என்று கேட்க…”
[the_ad id=”6605″]
“ஐயோ…மரியாதை எல்லாம் வேண்டாம்…அண்ணி…பிருந்தான்னே கூப்பிடுங்கள்…”
“பிருந்தா நீ அதிகமாக பேசமாட்டியா என்ன? ”
“அப்படி எதுவும் இல்லை அண்ணி…பேசுவேனே உங்களுக்கு பிடிக்குமோ என்னவோன்னு”.
“ஏன் பிடிக்காமல் போக போகுது…என்ன படிக்கற…”
“பிளஸ்டூ அண்ணி ..இந்த வருடத்தோட முடிஞ்சிது அண்ணி…அடுத்த வருஷம் காலேஜ்…”
“என்ன குரூப் எடுத்து இருக்கற… என்ன ஆரம்பித்து இயல்பாக பேசிக்கொண்டு இருந்தாள் . சற்று நேரம் முடியவும் கீழே போகலாம் பிருந்தா ஏன் தயங்கிட்டே நிற்கறே… இது உங்கள் அண்ணா ரூம் தானே…”
“நீ தயங்கறதை பார்க்கும்போது எனக்கு இங்கே இருக்க ஒரு மாதிரி இருக்கு. உங்கள் அண்ணா ரூம்புக்கு வந்தா திட்டுவாங்களா…”
“அண்ணி அப்படி எல்லாம் இல்லை. இங்கே வந்து ரொம்ப நாள் ஆச்சு அதுதான் வாங்க கீழே போகலாம். ”
கீழே வரும் போது இருவருமே பேசியபடி சிரித்து கொண்டு வந்து இருந்தனர். கார்த்திக் பார்த்தது முதலில் இருவரின் சிரித்து முகத்தை தான். கீழே வந்தவள் குடும்பத்தாரோடு ஐக்கியம் ஆகி இருந்தாள். அன்றே பெண் வீட்டுக்கு செல்வதாக எதுவும் முடிவாகவில்லை. ஒரு வாரம் முடிந்தபிறகு வருவதாக முதலிலேயே பேசி இருந்தனர். சற்று நேரம் பேசிவிட்டு மாலை சக்தியின் குடும்பத்தினர் அவர்களது வீட்டிற்கு செல்வதாக முடிவு செய்து இருந்தனர்.
