Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennaval

Ennaval 37 2

ஆறுமணியை நெருங்கிய போது சக்தியின் குடும்பத்தினர் புறப்பட்டு இருந்தனர். சக்தியின் கண்களில் கண்ணீர் திரைகட்டி இருக்க…திவ்யா தான் அவளுக்கு ஆறுதல் கூறினாள். புறப்படும் போது அழகூடாது சக்தி. இனி உன் கண்ணீர் கண்ணீர் வரக்கூடாது சக்தி நாங்க புறப்படறோம் காலையில் ஃபோன் பண்ணறேன் என்றபடி புறப்பட்டு சென்றனர்.

 

இரவு உணவு  முடியவும் கார்த்திக் சக்தி இருவரையுமே ஏற்கனவே மாயா தனிக்குடித்தனம் இருந்த வீட்டுற்கு அனுப்பி வைத்தனர்.  கார்த்திக்கை மறுபடியும் இங்கே தங்களோடு கூட்டுக்குடும்பமாக வைத்து கொள்ள தற்சமயம் நிறைய தயக்கம் இருந்தது. முக்கியமாக இந்த காலத்து பெண்களின் மனநிலை நிச்சயமாக லட்சுமிக்கு  தெரியவில்லை. இவர்கள் எதை விரும்புகிறார்கள் எதை வெறுக்கிறார்கள் என்று…தனிக்குடித்தனமே இருக்கட்டும். கார்த்திக் நிம்மதியாக வாழ்ந்தால் போதும் என்பது மட்டுமே இப்போதைக்கு அவருடைய தேவையாக இருந்தது. வீட்டை பற்றிய நினைவு இல்லாமல் சுற்றி கொண்டு இருந்தது கார்த்திக்கை மாற்றவே முதலில் இந்த சம்பந்தம் பேச உடனே சரி என்று முடிவு செய்தார்.

 



Advertisement

இருவரையுமே ஏழு மணி போல அனுப்பி வைத்தனர். அமைதியாக அவனோடு சென்றவள்…நிறைய பயம் இருந்தது.  எப்படி பேச வேண்டும் இவனிடம் கொஞ்சம் பயமும் நிறைய இருந்தது. தன்னை அறியாமல் பயத்தில் நெற்றியை கூட இரண்டு முறை தன்னை அறியாமல் தொட்டு பார்த்திருந்தாள்.

 

கார்த்திக் வேறு ஒரு மனநிலையில் இருந்தான் அமைதியாக கூடவே வந்தாலும் ஏனோ சம்பந்தம் இல்லாமல் மாயாவின் நினைவு இடையில் வந்து தொந்தரவு செய்தது. அவளை போலவே இவளும் இருந்தால் நினைத்தாலே சற்று பயமாக இருந்தது.

Advertisement

 

Advertisement

அமைதியாக வீட்டின் உள்ளே செல்ல எந்த பேச்சும் சக்தி இடத்தில் இல்லை.  வீட்டில் திருமணத்துக்கு பேசியபோது கூட அவ்வளவு பயமாக தெரியவில்லை தாயாரின் வருத்தமான முகம் தான் முதலில் கண்களுக்கு முன்னால் நின்றது. ஆனால் இப்போது பயம் அதிகமாக இருந்தது கார்த்திக்கின் மேல்…பிடிவாதமாக அழுத குழந்தையை அழைத்து வந்தது ஞாபகம் தேவை  இல்லாமல் அந்த நேரத்தில் வர…திவ்யா, சிவா சொன்னபோது தலையாட்டியவளுக்கு இப்போது இருந்தது பயம் மட்டுமே..அதுவும் இங்கே தினமே அழைத்து வரவும்…மனம் முழுக்க நடுக்கத்தோடு உள் நுழைந்தவள் அமைதியாக அமர்ந்து இருக்க….கார்த்திக் சென்று குளித்து உடைமாற்றி வந்த போது…முகம் முழுக்க வியர்த்தபடி  தலைகுனிந்து அமர்ந்து இருந்தாள் சக்தி.

 

 

Advertisement

[the_ad id=”6605″]

 

 

 

இவனுக்கும்  நிறைய தயக்கம் இருந்தது இவளிடம் பேச…எப்படி பேச ஆரம்பிப்பது என்பதும் தெரியாத நிலை..ஆரம்பத்தில் மாயாவிடம் என்ன சொன்னாலும் சரி என்று தலையாட்டியது போல் இவளிடம் சரி என கூறக்கூடாது என மனதிற்குள் நூறு முறை சொல்லி கொண்டான் கார்த்திக்.

 

ஹாலிற்கு மறுபடியும் வரும் போது அப்போதும் அதே இடத்தில் அப்படியே தான் அமர்ந்து இருந்தாள் சக்தி.

 

“சக்தி உள்ள பாத்ரூம்  இருக்கு. டிரஸ் சேன்ஜ் பண்ணறதுன்னா பண்ணிக்கோ” என்று சொல்லவும் வேகமாக எழுந்து உள்ளே சென்றாள். அவள் செல்லவும் அவள் அமர்ந்து இடத்தில் அப்படியே அமர்ந்து இருந்தான் எத்தனை நேரம் ஆனது என்பது அவனுக்கே தெரியாது.

 

நேரம் பத்து மணியை நெருங்கிய போது எழுந்து உள்ளே சென்று பார்க்க… சக்தி அங்கே கட்டிலில் சுருண்டு தூங்கி கொண்டு இருந்தாள்.

 

அமைதியாக இவனும் சென்று படுத்துக்கொண்டான். காலையில் இவன் எழுந்த போது சக்தி யாருடனோ பேசிக்கொண்டு இருந்தாள்.

 

“இல்லை நான் புறப்பட்டுட்டேன். அவங்க தூங்களாங்க எழுந்ததும் புறப்பட்டு வருகிறோம் என்று பதில் சொல்லி கொண்டு இருந்தாள்.இவன் அசைவதை பார்த்தபடி அங்கே வீட்டில் கூப்பிடறாங்க…போகணும்…”

 

“எந்த வீட்டுக்கு “என்று கேட்க ..அதுவும் கோபமாக கேட்டது போல இருந்தது சக்திக்கு…

 

“அத்தை அவங்க தான் ஃபோன் பண்ணினாங்க …பயந்தது போலேயே பேசினாள்.”

 

“புறப்படலாம் இரு” என்றபடி புறப்பட்டான். அங்கே வீட்டிற்கு செல்லும் வரைக்கும் பயந்தது போல இருக்க அங்கே செல்லவும் மொத்தமாக மாறி இருந்தாள். முதலில் சென்றவள் பிருந்தாவோடும் வேந்தனோடும் ஐக்கியம் ஆகி இருந்தாள்.மாலை மறுபடியும் இங்கே இவர்களது வீட்டிற்கு வர…பேச்சு எதுவுமே இருவருக்கு நடுவிலும் கிடையவே கிடையாது. முதல் நாளைப்போலவே சற்று நேரம் அமர்ந்து இருப்பவள் வேகமாக சென்று தூங்கி இருந்தாள்.

 

இதே போல் கிட்டத்தட்ட ஒரு மாதம் வரைக்குமே தொடர்ந்து கொண்டு இருந்தது.  காலையில் இங்கே புறப்பட்டு வந்து விட்டால் இரவு வந்துஅழைத்து சென்று கொண்டு இருந்தான். ஒரு வாரம் முடியவும் ஒரு முறை சக்தியின் தாயாரின்வீட்டுக்கு அழைத்து சென்று வந்திருந்தான். மாலை வரைக்கும் இருக்க இருவரையும் பார்க்க வந்தவர்களிடம்  மட்டுமே மாலை வரைக்கும் பேசிக்கொண்டு இருந்தான்.

 

நாட்கள் வேகமாக நகர்ந்து கொண்டு இருந்தது.அதற்குள் ஒரு மாதம்  முடிந்து இருந்தது திருமணம் ஆகி… வழக்கம்போல வேலைக்கு செல்ல ஆரம்பித்து இருந்தான் கார்த்திக். சின்ன மாற்றம் இருவருக்கும் இடையே நடந்து கொண்டு இருந்தது.  இவனால் பயம் எதுவும் இல்லை என்ற நம்பிக்கை சக்தியின் மனதில் தோன்றி இருக்க…அதே போல கார்த்திக்கிற்கும் சக்தியின் மேல் அது போல ஒரு நல்ல எண்ணம் மனதில் தோன்றி இருந்தது. அதனால் பேச இப்போது தடை எதுவும் இல்லை இருவருக்கும்…அன்றும் வழக்கம்போல அழைத்து செல்ல… இருவருக்கும் இடையே சின்ன சின்ன பேச்சுக்கள் சகஜமாக வர ஆரம்பித்து இருந்தது. அன்றும் இருவரும் வீட்டிற்கு செல்ல முதலில் கேட்டது இந்த கேள்வியை தான்.

 

“ஏன் நாம இங்கே தினமும்  வரணும் அங்கேயே அத்தை வீட்டில் இருக்கலாம் தானே..எனக்கு இங்கே வர்றது பிடிக்கலை…என்றவள் .”

“அப்புறம் நான் எப்படி கூப்படணும் உங்களை.. ரொம்ப நாளா கேட்க நினைத்த கேள்வி. . இத்தனை நாள் இல்லாமல் ரொம்ப பேசறதா நினைக்க வேண்டாம் .எப்படியும் இனி ரெண்டு பேரும் சேர்ந்து தான் இருந்தாகணும்… எத்தனை நாள் இப்படியே பேசாமல் இருக்கறது அங்கே பிருந்தா கூட பையன் கூட நேரம் நல்லா போகுது இங்கே வந்தால் நேரமே போகாத மாதிரி தோணுது அதனால தான் …”

 

“புரியுது…சக்தி…கார்த்திக்ன்னே கூப்பிட்டுக்கலாம் …ஆனால் இப்போதைக்கு ஒன்று சொல்லவா…இப்போதைக்கு இந்த வாழ்க்கையை இப்படியே  தொடரலாம் அப்படிங்கற ஐடியா தான். கொஞ்ச நாளைக்கு….எனக்கு டைம் வேணும் சக்தி..பிடிவாதமா பேசி கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க…எனக்கு திறைய குழப்பம் இருக்கு…தடுமாற்றம் இருக்கு சமயத்தில் உன்கிட்ட எப்படி பேசணும் அப்படிங்கறதே தெரியலை…புரியுது தானே சக்தி…”

 

இவன் சொல்லவும் சிரிக்க ஆரம்பித்து இருந்தாள் சக்தி…

 

“சக்தி ஏன் சிரிக்கற..என்ன யோசித்து சிரிக்கற சொல்லு என்று கார்த்திக் கேட்க…”

 

“ஸாரி  இப்போதைக்கு சொல்ல முடியாது சொன்னா நல்லாவும் இருக்காது என்னை தப்பா நினைப்பிங்க…  ”

 

“அப்புறம் எப்ப சொல்லுவ…”

 

“சொல்லறேன் ஆனால் இப்ப இல்லை.”  என்றவள் அருகில் இருந்த ஜன்னலை திறந்தவள்..

 

[the_ad id=”6605″]

 

 

ஜன்னலின்  வழியே எட்டி பார்த்தபடி.. எப்படி இங்கே இருக்கறிங்க…எவ்வளவு சத்தமாக இருக்கு…டூ பேட்…என்றபடி ஃபிரிஜை ஒபன் செய்து பார்த்தவள்…ஃகாபி வைக்க போகிறேன் வேணுமா என்றபடி அடுப்பை பற்றவைத்தாள்.ஒரு மாதம் முடிந்து இருக்க இப்போது இன்று தான் முதல் முதலாக இங்கே அடுப்பை பற்ற வைத்தாள். பெரும்பாலும் காலையில் வேலைக்கார பெண்மணி வந்து விடுவார். காலையில் சமைக்கும் வேலை எதுவும் கிடையாது. எழுந்ததுமே தாயாரிடம் அழைத்து சென்று விடுவான்.இன்று பேச ஆரம்பித்ததாலோ என்னவோ காபி போட என சமையல் அறை பக்கம் வந்திருந்தாள்.பால் பொங்கி வரவும்…செண்டிமெண்டா பால் காய்சியாச்சு முதல் முறையாக இன்றைக்கு  என்றாள் சக்தி ..”

 

“எப்படி ஒரு மாதம் கழிச்சா.. இப்ப பயம் இல்லையா…பேச தயக்கம் எதுவும்  இல்லாமல் பேசற எப்படி சக்தி… என்று கேட்டபடியே ஃகாபியை வாங்கிக்கொள்ள…”

 

“அது…உண்மையான பதில் வேண்டுமா இல்லை எதாவது சொல்லலாமா…”

 

“உண்மையை சொன்னா சந்தோஷப்படுவேன்.”

 

“ஒரு மாதமா பார்க்கறேனே அதனால பயம் யோயிடுச்சோ…அப்புறம் முக்கிய காரணம் சிவா அத்தானோட ஃப்ரெண்டு அப்படிங்கற காரணமா இருக்கலாம்.  ஏண்ணா கல்யாணத்துக்குமுன்னாடி நிறைய உங்களை பற்றி சொன்னாங்க… ஆனாலும் கொஞ்சம் பயமாதான் இருந்தது…கேட்கும் போது தயங்கினாலும்  சரின்னு சொன்னேன்…ஆனாலும் பயம் இருந்தது  இப்போதைக்கு இல்லைன்னு தான் சொல்லணும்..தினமும் பார்க்கறேனே அது கூட  காரணம்ன்னு நினைக்கிறேன்.  உங்களுக்கு என்ன பற்றி தெரிஞ்சக்கணும்னா ஏதாவது கேளுங்கள் சொல்லறேன்.”

 

[the_ad id=”6605″]

 

 

 

“சிலது தெரியும் மற்றபடி ஸாரி எனக்கு உன்னை பற்றி எதுவும் தெரியாது சக்தி..கேட்டு தெரிக்க வேண்டாம்  உன்னை பற்றி… பழகி புரிஞ்சுக்கறேன்.இன்னும் நிறைய நாட்கள் இருக்கே…தேங்க்ஸ் சக்தி வீட்டில் அம்மா முகத்தில் நிறைய நிம்மதி தெரியுது. வீடு ரொம்ப அமைதியா இருக்கு…இப்ப எல்லாம் பிருந்தாவோட சிரிப்பு சத்தம் வீட்டில் அடிக்கடி கேட்கிறது…எனக்கும் கூட ரொம்ப நாள் கழித்து பேச நல்ல ஃப்ரெண்டு கிடைச்சது போல இருக்கு”.

 

“இதெல்லாம் நீங்க சொல்லும் போது கேட்க இதுவும் நல்லா தான் இருக்கு ரொம்ப நேரம் பேசியாச்சு.. எனக்கு கூட இன்றைக்கு நல்லா இருக்கு..உங்ககிட்ட பேசிட்டு இருந்த இந்த ஃபில்…யாருக்கு தெரியும் நல்லதா கனவு கூட வரலாம். . டைம் ஆச்சு நான்  தூக்கப்போறேன். நீங்களும் வந்து தூக்கலாம். இல்லைன்னா தூக்கம் வரும் போது தூங்குங்க குட் நைட் என்றபடி படுத்துக்கொண்டாள் .”

 

நீண்ட நேரம் வரைக்கும் யோசித்தபடி இருந்தவன் வந்து படுத்தபோது  ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள் சக்தி.

 

சற்று நேரம் பார்த்தவன் தனது இடத்தில் படுத்தபடி இவளை பார்த்தான் இனி வரும் நாட்களில் இவனிடம் அவளுக்கு இருக்கும் உறவு  சுவாரஸ்யமாக ,கலகலப்பாக இருக்கும் என்றே அந்த நிமிடம் கார்த்திக்கின் உள்ளுணர்வு அவனுக்கு சொல்லியது.

 

தொடரும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!