Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennaval

Ennaval 41

என்னவள்_41

 

ஏதோ ஒரு சுகமான  படபடப்பு…கண்களை திறக்க முடியாத மயக்கம் ஒருவரின் இதய சத்தம் அடுத்தவருக்கு  இசையாய் ஒலிக்க…சக்தியின் கண்களுக்குள் நூறு கனவுகள் இமை பிரியாமல் இருக்க ஆயிரம் பட்டாம்பூச்சி கண்களுக்குள் சிறகடித்தது.கண்களின் மேல் அடுத்த முத்தம் இதமாய் பதிக்க மறுக்கும் எண்ணம் எதுவும் இல்லை சக்திக்கு…கண்களில் தொடங்கி நெற்றி கன்னம் என கார்த்திக்கின் உதடு ஊர்வலம் நடத்தியவன்

இன்னும் சுகமாக அவளை தன்னோடு  இருக்கி அணைத்துக் கொண்டான் கார்த்திக்…  இருவருக்கும் இடையே காற்றிற்கு கூட இடம் தரமாட்டோம் என்பது போல…இவளும் கண்களை மூடியபடி …சுகமாக அந்த தருணத்தை மகிழ்ச்சியோடு அனுபவித்தாள் சக்தி. 



Advertisement

 

உதடுகள் ஊர்வலம் முகத்தில் மெதுவாய் நகர ஆரம்பித்தது…கார்த்திக் கை சக்தியின் வெற்றிடையில் மெதுவாக கோலம் போட

சக்தியின் மனதில்

Advertisement

அடுத்து என்ன என்று கேள்வி கூட மனதில் எங்கோ தோன்றி ஓடி ஓழிந்து இருக்க… மனதில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு…இனம் புரியாத படபடப்பு…கார்த்திக் சக்தியின் காதோடு “லவ் யூ சக்தி” கூறியபடி காதில் ஆரம்பித்து  கன்னத்தில் முத்திரை பதிக்க…”ம் “என்று பதில் மட்டுமே சக்தியிடம் இருந்து வந்தது.சக்தியிடம் பதில் எதுவும் இல்லை பிதற்றல் எல்லாம் கார்த்திக்கிடம் இடமே இருந்து வந்து கொண்டு இருந்தது.  முகம் முழுவதும் சிவந்து இருக்க வார்த்தைகள் அற்ற மெளனத்தில் மயங்கி கிடந்தாள்.

Advertisement

 

எல்லாமே சில நிமிடம் தான்…  கனவு கலைந்தது போல வேந்தனின் அழுகை சத்தம் இவர்களின் காதில் விழ சட்டென அவனிடம் இருந்து தன்னை பிரித்து கொண்ட சக்த…ஒரு நிமிடம் தயங்கி நின்றவள் …வேகமாக தன்னை திருத்திக்கொண்டு ரூம்பை விட்டு வெளியேறினாள்.

 

Advertisement

அடுத்து எழுந்தவனுக்கும் ஏதோ தவறுசெய்துவிட்ட குற்ற உணர்வு தான்  எழுந்து கண்ணாடியை பார்க்க அவனுடைய சட்டையில் சக்தியின் நெற்றி வகிட்டு  குங்குமம் அழகாக பதிந்து இருந்தது அவனது மார்பிற்கு அருகே…அவனது முகம் கூட லேசாக சிவந்து இருப்பதாக தோன்ற இன்னமும் அவனுக்குள்ளும் படபடப்பு  அடங்கவில்லை.  சட்டையை கழட்டி வேகமாக தனது பிரோவில் அடியில் பத்திரமாக எடுத்து வைத்தவன்  வேகமாக வேறு சட்டையை அணிந்தபடி கீழே இறங்கினான்.

 

அங்கே வேந்தனை சக்தி சமாதானம் செய்தபடி “என்ன ஆச்சுங்க அத்தை… ஏன் இப்படி அழறான் கீழே விழுந்திட்டானா  போகும் போது நல்லாத்தானே இருந்தான்..என்று கேட்க…”

 

“தெரியவில்லை அண்ணி போகும் போது நல்லாத்தான் இருந்தான். அங்கே போன கொஞ்ச நேரத்தில் அழ ஆரம்மிச்சிட்டான் எவ்வளவு சமாதானம் செய்தாலும் அவனோட அழுகையை நிறுத்த முடியலை .என்ன செய்யறதுன்னு தெரியாமல்  நாங்க வீட்டுக்கு புறப்பட்டு வந்திட்டோம்.”

 

“வேகமாக போட்டு இருந்த உடையை தளர்த்தியவள் டையபரை கலட்டி விட்டபடி…கொஞ்சம் தண்ணீர் கொடுத்து பார்க்கலாம் எடுத்துவிட்டு வா பிருந்தா என்றபடி தோளில் போட்டு தட்டிக்கொடுத்தாள். எதற்கும் சமாதானம் ஆகவில்லை  அழுகை இன்னும் அதிகபானதே தவிர குறையவில்லை. “

 

“தண்ணீர் எடுத்து வர கொடுத்து பார்த்தாள் சக்தி தண்ணீரை அருந்தியபடியே இன்னும் அழ… இல்லைடா…ஒன்றும் இல்லைடா…சரியாகிவிடும் என்ற சமாதான பேச்சு எதுவும் அவனுக்கு கேட்கவில்லை. “

 

“கார்த்தி என்னன்னு தெரியவில்லை ஹாஸ்ப்பிடலுக்கு கூப்பிட்டுட்டு போய் வந்திடலாமா இத்தனை நாளில் இப்படி ஒரு நாளும் அழுதது இல்லை கொஞ்சம் பயமாக இருக்கிறது டா..வேற ஏதாவதுவதா இருக்க போகிறது…என்று லட்சுமி சொன்னார். “

 

“ஆமாம் கார்த்திக்  வண்டியை எடுக்கறேன் போயிட்டு வந்திடறோம் என்றபடி கார்த்திக்கின் தகப்பனார் எழுந்து கொள்ள…”

 

“இல்லை பா நீங்க வீட்டில் இருங்க நான் அழைச்சிட்டு போகிறேன்  இப்பத்தான் போயிட்டு வந்து இருக்கறிங்க” என்று சொல்ல …”சக்தியும் ஆமாம் மாமா நாங்கள் ரெண்டு பேரும் போயிட்டு வந்திடறோம்  அத்தை நீங்களும் வீட்டிலேயே இருங்க  ஹாஸ்ப்பிடலுக்கு

எல்லோரும் வேண்டாமே…குட்டியை நான் பார்த்துக்கறேன். நீங்க இருங்க…”என்றபடி குழந்தையை எடுத்து கொண்டு கார்த்திக்கோடு வெளியேறினாள்.

 

“அப்பா ஃபோன் பண்ணிநம்ம  டாக்டர் கிட்ட சொல்லிடுங்க நாங்கள் வந்துவிட்டு இருக்கிறதா என்று மட்டும் சொல்லி விட்டு புறப்பட்டு இருந்தான் கார்த்திக். “

 

“சக்தி தோளில் போட்டு தட்டியபடி அமர்ந்து இருக்க சமாதானம் ஆகாமல் அழுதுகொண்டே வந்திருந்தான் வேந்தன். இவர்கள் போகவும் அங்கே இவர்களே காத்திருக்கவெல்லாம் வைக்கவில்லை.  உடனே சென்று டாக்டரின் முன்பு  அமர்ந்து இருந்தனர் செக் செய்து பார்த்தவர் வயிற்றை தொட   இன்னும்  கத்தினான் வேந்தன்.”

 

“வயிறு வலி இருக்கும் போல இருக்கு ஏதாவது வித்தியாசமா சாப்பிட்டானா..இது நார்மல் தான் கார்த்திக் பயப்பட எதுவும் இல்லை மருந்து எழுதி தர்றேன் வாங்கி கொடுங்க…மாத்திரை வேண்டாம்.. டானிக் தான். வாங்கிட்டு வந்து  இங்கேயே ஐந்து எம்எல்  கொடுங்கள்…வலி குறைஞ்சிடும் அப்புறம் புறப்பட்டுக்கலாம் என சொல்லியவர்  வீட்டில் உள்ள குடும்பத்தினர் அனைவரையும் விசாரித்தபிறகு அனுப்பி வைத்தார். “

 

“ரிஷப்ஷனில் பத்து நிமிடம் வெயிட் பண்ணுங்கள் கார்த்திக் அழுகை சரியானதும் புறபபடலாம்…”என்றவர் நர்சிடம் மருந்து சீட்டை கொடுத்து அனுப்பினார்.

 

நகரில் பெரிய மருத்துவ மனை அது அனைத்து பிரிவுக்கும் மருத்துவம் பார்க்கக்கூடிய கோவையில் முக்கிய மருத்துவ மனையில் இதுவும் ஒன்று.எந்த நோயாக இருந்தாலும் இங்கே வந்து விட்டால் பிழைக்க வைத்து விடுவார்கள் என்ற நல்ல பெயரை வாங்கி இருந்தது இந்த மருத்துவ மனை…அதுவும் சமீபத்தில் தான் எலும்பு முறிவுக்கு ,ஆக்ஸிடெண்ட்டிற்கு புதிய பகுதியை துவங்கி இருந்தனர்…மற்ற ஹாஸ்ப்பிட்டலை விடவும் இங்கே பணம் கம்மி என்ற பெயரும் இருந்தது. 

 

வேந்தனுக்கு டானிக் கொடுக்கவும் கொஞ்சம் அழுகை மட்டுப்பட்டு இருந்தது. மடியில் படுக்கவைத்தபடி ரிஷப்ஷன் ஹாலில் அமர்ந்து இருந்தாள் சக்தி அவளுக்கு அடுத்த இருக்கையில் கார்த்திக் அமர்ந்து இருக்க…பிருந்தா ஃபோனில் அழைத்து இருந்தாள்.

 

“அண்ணா குட்டி என்ன பண்ணறான் இன்னும் அழறானா என்று கேட்க…”

 

“இப்ப அழலை பிருந்தா டாக்டர் வெயிட் பண்ண சொல்லி இருக்கறாங்க…பிரச்சினை எதுவும் இல்லை வயிற்று வலி போல இருக்கு. பயப்பட தேவை இல்லைன்னு சொல்லிட்டாங்க… இன்னும் கொஞ்சம் நேரத்தில் அங்கே வந்திடுவோம் என்று அவளுக்கு பதிலுரைத்தான் கார்த்திக்.” 

 

“சக்தி சுற்றிலும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளது மடியில் இப்போது வேந்தன் தூங்க ஆரம்பித்து இருந்தான். அதிக நேரம் அழுததாலேயோ இல்லை கொடுத்த மருத்தின் உதவியாலோ தெரியாது  இவர்கள் அமர்ந்து இருந்த இடத்திற்கு நேர் எதிர் புறத்தில் அவசர சீகிட்சை பிரிவு இருந்தது.  இவளது பார்வை அங்கே செல்ல முதலில் நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருத்தி முத்தானையால் கண்களை துடைத்தபடி வெளியே வந்தாள். “

 

“அவளை தொடர்ந்து வெளியே வந்தது மோகனின் தந்தை தியாகு துண்டில் கண்ணை துடைத்தபடி அடுத்ததாக வர…சக்தியின் கண்கள் அவரைத்தான் வெறித்து பார்த்தது.”

 

அங்கே பிருந்தாவிற்கு பதில் சொல்லியவன் இவளை திரும்பி பார்க்க இவளது பார்வை சென்ற திக்கை பார்த்தவன் .

“யார்சக்தி அவங்க உனக்கு தெரிஞ்சவங்களா…ஏன் அப்படி பார்க்கற என்று கேட்க…”

 

தன்னை அறியாமல் நெற்றியை தொட்டவள் “அது…அவங்க மோகனோட அப்பா…இதை மட்டும் தான் சொல்ல முடிந்தது. ஏற்கனவே ஓரளவிற்கு சிவா சொல்லி இருந்தான் பழைய வாழ்க்கையை பற்றி…அவரை பார்க்கவுமே இவனுக்கு கோபம் தான் வந்தது. இத்தனை நாளில் குறையாய் எதையும் சொல்ல முடியாத ஒரு பெண்ணிடம் அவர்கள் நடந்து கொண்டது அதிகம் தானே…முகம் இருகியபடி அமர்ந்து இருக்க…”

 

“சக்தி கார்த்திக்கிடம் திரும்பியவள்… அவங்களுக்கு இந்த பக்கம் புதுசு ஏன் வந்து இருக்கறாங்கன்னு தெரியவில்லை பாவம் கார்த்திக் ஏதாவது உதவி தேவைபட்டா…இதற்கு மேல் பேச அவளால் முடியவில்லை.  கார்த்திக் அவளை பார்த்து முறைத்து கொண்டுஇருந்தான். “

 

“முறைக்காதிங்க கார்த்திக் போய் கேட்டுட்டு வாங்க… இல்லைன்னா நான் போய் கேட்டுட்டு வருவேன்.”

 

“என்ன பொண்ணு நீ…சிவா சொல்லும் போது எனக்கே கோபம் அப்படி வந்தது.நீ என்ன போய் கேட்க சொல்லற…முடியாது சக்தி…புறப்படு நாம வீட்டுக்கு போகலாம் வேந்தன் தூங்கறான் தானே…இனி அழமாட்டான் என்று  சொல்ல…”

 

“கார்த்திக் ஒருத்தர் நமக்கு கெடுதல் அதையே திரும்ப நாம செய்யடும்ன்னு அவசியம் இல்லை…எனக்கும் அவங்க மேல கோபம் இருக்கு கார்த்திக் ஆனால் அவங்க முகத்தை பாருங்கள் எல்லாமே முடிஞ்சு போன மாதிரி இருக்கறாங்க…ப்ளீஸ் கார்த்திக் என்று சொல்ல எழுந்து அவர்களுக்கு அருகில் சென்றான்.”

 

“என்ன பிரச்சினை ஏன் பதட்டமாக இருக்கறிங்க ஏதாவது உதவி வேண்டுமா என்றபடி மோகனின் தந்தையிடம் விசாரிக்க…”

 

“அவரோ பையனுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சு தம்பி கொஞ்சம் பெரிய அடி ப்ளட் நிறைய போயிடுச்சுன்னு சொல்லறாங்க இப்பதான் தகவல் வந்தது. இந்த ஹாஸ்ப்பிடலில் அட்மிட் செய்து இருக்கறதா…எங்களுக்கு பொள்ளாச்சி பக்கம்…இந்த பக்கம் அதிகம் வந்தது இல்லை…மகனுக்கு இப்படிங்கவும் வேகமாக இங்கே வந்தோம்…அங்கே ஐசியூ வில் சுத்தமாக நினைவு இழந்து இருக்கிறான். ப்ளட் நிறைய தேவைபடும் ரெடி பண்ணுங்கன்னு  சொன்னாங்க…அவங்க கேட்கிற ரத்தம் இங்கே இவங்களோட ப்ளட்பேங்க்ல ஸ்டாக் இல்லையின்னு சொல்லறாங்க அதுதான் என்ன பண்ணறதுன்னு தெரியாமல் நிற்கிறோம் என்று  கூறினார்…”

 

“எப்படி அடி பட்டுச்சு  என்று மட்டுமே கார்த்திக்கால்  கேட்க முடிந்தது..”

 

“புதுசா ரேஸ் பைக் ஒன்று வாங்கினான் தம்பி அவனுக்கு வேகமாக வண்டி ஒட்ட பிடிக்கும்  அடிக்கடி லாங்டிரிப்ன்னு அடிக்கடி வெளியே தனியா வண்டியில் சுற்றுவான்…இந்த முறை இந்த பக்கம் வந்து இருக்கறான் இப்படி ஆகிடுச்சு…கண்ணீரை துடைத்தபடி இவனிடம் கூற…”

 

“ஃப்ளட் என்ன குரூப் அதை சொல்லுங்க இந்த பக்கத்தில் எங்க கிடைக்கும்ன்னு விசாரித்து சொல்லறேன். “

 

“ஓ நெகடிவ்…இதுதான் அவனோட குரூப் தம்பி.”

 

“ம்…கொஞ்சம் ரேர் தான்  என்றவன் இரண்டு மூன்று பேரும் அழைத்து பேசியவன் வரவேண்டிய ஹாஸ்ப்பிடலின் முகவரியை சொல்லி விட்டு…இன்னும் பத்து நிமிடத்தில் மூன்று பேர் வர்வாங்க..ப்ளட் டோனர் அவங்க நீங்க சொன்ன ப்ளட் க்ரூப்தான் அவங்க உதவுவாங்க..என்றபடி கார்த்திக் புறப்பட்டான்…”

 

“தம்பி ரொம்ப நன்றி தம்பி கடவுளாக பார்த்துதான் உங்களை அனுப்பி வச்சி இருக்கறாங்க என்றபடி கூடவே வந்தவர் சக்தியை பார்த்தபடி நிற்க…”

 

“உங்களுக்கு  உதவ சொன்னது இந்த பொண்ணு தான் என்னோட மனைவி சக்தி… உங்களுக்கு ஞாபகம் இருக்கா…உங்களோட நன்றியோ வாழ்த்தோ இந்த பொண்ணுக்கு எப்பவும் தேவை இல்லை.  அவளோட நல்ல மனசே அவளை வாழவைக்கும் புறப்படலாம் சக்தி என்றபடி இவளை அழைத்து கொண்டு புறப்பட்டான்.”

 

சக்தியை பார்க்கவும் கண்கள் கண்ணீரை வடித்து இருந்தது மோகனின் தந்தைக்கு…”உனக்கு பண்ணின பாவம் தான் அவனை இப்படி படுக்க வச்சி இருக்கு அவனை மன்னிச்சிடுமா இன்னும் ஒரு மாதத்தில் குழந்தை பிறக்க டைம் தந்து இருக்கற இந்த நேரத்தில் இப்படி ஆகிடுச்சு.. இவள்தான்மா அவன் கல்யாணம் பண்ணின பெண் இவளையும் மன்னித்து விடு.எங்களுக்கும் இந்த தண்டனை தேவை தான். எந்த காலால் உன்னை தள்ளினானோ அந்த காலோட எலும்பு நோறுங்கி இருக்காம்…அவனை மன்னிச்சிமா  என்று கைகளை கூப்பி மன்னிப்பு கேட்டார்.”

 

“பேச எல்லாம் தோணவில்லை சக்திக்கு…வேந்தனுக்கும் பிரச்சினை எதுவும் இல்லை புறப்படலாம் என்று சொல்லி இருக்க…அவருக்கு பதில் எதுவும் சொல்லாமல்  கார்த்திக்கை பார்த்தவள் புறப்படலாங்க நமக்கு இனி இங்கே வேலை இல்லை. என்றபடி வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். செல்லும் அவளையே கண்களில் நீர் வழிய பார்த்துக்கொண்டு இருந்தார்.”

 

சக்தி அமைதியாக வண்டியில் ஏறி அமர எதுவும் பேசமல்  வீட்டிற்கு வண்டியை செலுத்தினான் கார்த்திக்…மனம் முழுக்க சக்தி மட்டுமே அந்த நிமிடத்தில் ஆக்கிரமித்து இருந்தாள். நாளுக்கு நாள் அவளின் பிம்பம் அவனின் மனதில் அழிக்க முடியாத ஓவியமாக..பதிந்து கொண்டு இருந்தாள்.மனம் முழுக்க அந்த நிமிடம் இருந்தது ஆச்சரியம் மட்டுமே… இப்படி கூட பெண்கள் இருக்கிறார்களா?

 

அன்று மாலையில் இருந்த மகிழ்ச்சியான மனநிலை இரவில்   எங்கோ ஓடி ஓழிந்திருக்க தற்சமயம் வரைக்கும் நடந்ததை அசை போட்டவள் அதே நினைவில் தூங்கி இருந்தாள். கார்த்திக் கீழே தாய்தந்தையோடு பேசிவிட்டு வந்து பார்த்தபோது ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்று இருந்தாள் சக்தி சற்று நேரம்  அவளை நின்றபடி பார்த்தவன் அவளது  முகத்தில் விழுந்த தலைமுடியை ஒதுக்கி விட்டு விட்டு நெற்றியில் லேசாக உதடு பதித்தவன் அவள் முகத்தை பார்த்தபடியே அவளுக்கு  அருகில் கண் மூடினான். 

 

தொடரும்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!