Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennaval

Ennaval 6

என்னவள்-6

 

“ஏய் என்ன பேச போற,எப்படி தேங்க்ஸ் சொல்லுவ ,சொல்லேன் தெரிஞ்சுக்கறேன்.. சொல்லு சக்தி

ரேஷ்மா கிண்டலாக கேட்டாள்”.



Advertisement

 

“இரு போகும் போது அழைச்சிட்டு போறேன் கூடவே வா சரியா..”பேசப்போறதை பார்ப்பியாம் .

 

Advertisement

“யார் நீயா… போய் பேசிடப்போற என்ன சிரிக்க வைக்காதே  ஆமாம் …இத்தனை நாள் பார்க்கற எனக்கு தெரியாதா.. இங்கே என் கூட பேசவே ஆறுமாதம் தேவைப்பட்டு இருக்கு எனக்கு தெரிஞ்சு இப்போ கொஞ்ச நாளாகத்தான் நல்லா பேசற மாதிரி தோணுது. ஆரம்பத்தில் எவ்வளவு கஷ்டமா இருக்கும் தெரியுமா இந்த ஃப்ளோர்ல இருக்கறதே ரெண்டு பேரு தான்… அதுவும் நீ வாயே திறக்காமல்… பேசாமல் இருந்தா..ஷப்பா எப்படியோ எல்லாம் சரி ஆகிடுச்சு இப்போ நல்லா பேசறே.  சரி அதை விடு எத்தந்த பாட்ஸ்,எந்த மெட்டிரியல்  எல்லாம் சேல்ஸ் ஆகி இருக்கு லிஸ்ட் எடுக்கணும் ஹெல்ப் பண்ணு சக்தி. மதியத்துக்குள்ள அனுப்பி வைக்கனும்.”

Advertisement

 

“வரேன் வரேன் வேலையை தொடங்க மதியம் வரையிலும் சரியாக இருந்தது இடையிடையே ஸ்பேர்பாட்ஸ் கேட்டு வருபவர்களுக்கு எடுத்து தர என மதியம் நெருங்கிய போது சக்தி இதை ஸார் கிட்ட கொடுத்துவிட்டு வந்திடறையா என ரேஷ்மா கேட்க…கொடு என்ற படி வாங்கி கொண்டு கிளம்பினாள் சக்தி.” 

 

Advertisement

“சக்தி அப்படியே தேங்க்ஸ் சொல்லப்போறேன்னு சொன்னயே….அதையும் சொல்லிடு.”

 

“ஹலோ நான் ஏன் சொல்லனும் இதுவும் அவரோட வேலைதான் வேணும்னா இங்கே வந்து சரியா வேலை செய்ய தெரியாதான்னு கேட்கச்சொல்லு..”

 

“அடிப்பாவி இப்படியா ஒரே நிமிஷத்தில் மாறுவ…அங்கே கீழே போய் பாரு.அவ அவ எப்படி  வந்து ஸார் பேசுவாங்கன்னு  காத்து இருக்கறாங்க…”

 

“ரேஷ்மா முதலில் உங்கள் ஸாருக்கு உள்ளே வேலையே இல்லை  அவர் கவனிக்கவேண்டியது சர்வீஸ் பண்ணற இடத்தில் தான் அது உனக்கு தெரியுமா…”

 

“சரி சக்தி உன்னோட பேச்சுக்கே நானும் வரேன், அப்புறம் ஏன் இங்கே தனியா அவருக்கு ஆபீஸ்  ரூம் தந்து இருக்கறாங்க உட்கார்ந்து இங்கே வேலைபார்த்தா போதும் இவரு தான் எப்பவுமே அங்கே சர்வீஸ் பண்ணற இடத்தில் இருக்கறாரு அது தெரியுமா வேற யாராவது அந்த இடத்தில் இருந்தா என்ன பண்ணுவாங்க தெரியுமா ஆபீஸ்ல மட்டும் உட்கார்ந்து சம்பளத்தை வாங்கிட்டு போகலாம் ஆனால் பிரபு ஸார் வேற தான்.  அவர் செய்யற வேலை அவருக்கு மரியாதையை தேடித்தருது யார் கிட்டேயாவது கோபமாக பேசி பார்த்து இருக்கறையா..எல்லோர்கிட்டையும் ஃப்ரெண்டிலாதான் பேசறாரு. என்ன கேட்டா இவரை கட்டிக்கப்போற பொண்ணு கொடுத்துவச்சவ..”

 

“அப்படியா..”கேட்டபடி சக்தி நகர்ந்தாள்..

 

“வோய் என்ன கிண்டலா…சீரியஸ்ஸாகத்தான் சொல்லறேன். “

 

“எதுக்கு கஷ்டம் நீயே முயற்சி பண்ணேன் . “

 

“ஏற்கனவே காத்து இருக்கறவனை என்ன பண்ணறது சக்தி. “

 

“ரேஷ்மா இது என்ன புது கதை சொல்லு எனக்கு தெரியாது.”

 

“புதுக்கதை எதுவும் இல்லை ரொம்ப பழைய கதை தான் என்னோட மாமா அவரை தான் பேசி இருக்கு. எங்க… வெளியூரல வேலைக்கு போனவரை தான் இன்னும் ஆளை காணோம் வந்தா கல்யாணம் தான்.” 

 

“பேரு என்ன ரேஷ்மா எனக்கு சொல்லவே இல்லை. “

 

[the_ad id=”6605″]

 

 

 

“சக்தி இங்கே வேலைக்கு சேர்ந்து முழுசா ஆறு மாதம் ஆகுது எனக்கு தெரிஞ்சு இந்த ரெண்டு மாதமாத்தான் 

கொஞ்சம் இயல்பாக பேசற மாதிரி எனக்கு தோனுது அப்புறம் எப்படி சொல்லறதாம் .”

 

“பரவாயில்லை விடு நான் கேட்கலை”.

 

“ஆனால் நான் சொல்லுவேனே இங்கே பாரு ஃபோட்டோ..இதுதான் எங்க மாமா நான் கட்டிக்கப்போறவரு..பேரு கனேஷ் ஃபோன்ல  தினமும் பேசுவோம் ஒகே தானே பொருத்தமாக இருக்கறாங்களா..”

 

“அதுசரி இங்கே பிரபு ஸாரை பார்க்கிறது எந்த லிஸ்ட்…எனக்கு புரியலை அதையும் புரியற மாதிரி  கொஞ்சம் சொல்லிடேன்.”

 

“சக்தி…இப்போ அழகா இருக்கற பூவை பார்க்கிறோம் அழகான இருக்குன்னு ரெண்டு நிமிடம் பார்க்கிறது இல்லையா அது மாதிரி தான் இங்கே பார்க்கிறது.  அந்த பூ நமக்கே வேணும்ன்னு நினைக்கறது தான் தப்பு .”

 

“செம ரேஷ்மா உன்கிட்ட பேசினா டைம்

போறதே தெரியவில்லை. இதை கொண்டு போய்  கொடுத்துவிட்டு வந்திடறேன்.”

 

“ம்…ம்…நானும் உன்கிட்ட கேட்கனும்… உன்னை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.  உன் வீட்டில் யாரெல்லாம் இருக்கறிங்க  எனக்கு சொல்லேன் உன்னை பற்றியும் தெரிஞ்சுக்கறேன்.முக்கியமான கேள்வி நெற்றியில் அந்த காயம் எப்படி ஆச்சு முகத்தை பார்க்கும் போது எல்லாம் முதலில் கேட்க தோணற கேள்வி சக்தி”, அவள் சொல்லவும் நெற்றியில் கைவைத்து பார்த்தவளுக்கு முகம் சற்று பழைய நினைவில் சுருங்கியது..

 

“ரேஷ்மா வாழ்க்கையில் நான் மறக்க நினைக்கற அக்ஸிடெண்ட்…ஆனால் மறக்க முடியாதது அது மட்டும் தான்  இந்த நிமிடம் வரைக்கும் மறக்க முடியலை. “

 

“விடு சக்தி சிலநேரம் அப்படிதான் அக்ஸிடெண்ட் அப்படிங்கறதே எதிர் பாராமல் நடக்கறது தானே நடந்து முடிஞ்சதை பற்றி எப்பவும் திரும்ப திரும்ப  நினைக்க கூடாது இது எங்க அம்மா எனக்கு அடிக்கடி சொல்லறது”.

 

“சரி…நான் இதை கொடுத்துவிட்டு வந்திடறேன் வந்து அரட்டை அடிக்கலாம் இன்றைக்குஎல்லாம் மதியத்திற்கு மேல்தான் ஏதாவது வாங்க நம்ம ப்ளோருக்கு வருவாங்க போல இருக்கு  இது வரைக்கும் ஒருத்தரும் வரலை…வர்றவங்க எல்லோரும் பார்த்துவிட்டு மட்டுமே போறாங்க…”

 

“ஆமாம் வண்டியே ஒன்றரை லட்சம் சொன்னா அதுக்கு போடற பாட்ஸ் தனியாக ஐம்பதாயிரம் பில் போடறாங்க ஆனாலும் இந்த வண்டிக்கு மக்கள் மத்தியில் தனி கிரேஸே இருக்கு…ஒவ்வொருத்தரோட கனவும் இந்த வண்டியை வாங்கறதாதான் இருக்கு. நேற்று தெரியுமா எங்க ஏரியாவில் ஒரு பையன் பன்னிரெண்டு வயதுதான் இருக்கும்  இந்த வண்டியை பற்றி ஏ டூ செட்  விவரம் சொல்லறான் கூடவே அந்த வண்டி வச்சிருந்தாலே தனி கெத்துக்கா நானும்கொஞ்சம் பெரியவனாக ஆனேன்னா அந்த வண்டியை வாங்குவேன் அப்படிங்கறான். எதிர் வீட்டில் இருக்கற பொண்ணு அந்த வண்டியை தான் ஒட்டி பழகனுமாம் நமக்கு தான் இதை பற்றி எதுவுமே தோணமாட்டேங்குது.ஒருவேளை இங்கே வேலைக்கு செய்யறதாலேயோ என்னவோ..”

 

[the_ad id=”6605″]

 

 

 

“ரேஷ்மா பேச ஆரம்பித்தா நிம்பாட்டறதே இல்லை நீ… உனக்கு தெரியுதா.. “

 

“சக்தி  சேல்ஸ்ல நின்னுட்டு இது கூட பேசாட்டி எப்படி வந்தவன் ஆயிரம் ரூபாய்க்கு பொருள் வாங்க வந்தா நாம ஆயிரம் ரூபாய்க்கு தான் வாங்க விடறோமா எப்படியும் ஐந்தாயிரம் வரைக்கும் பில் போட வைக்கிறோம் அதோட பாதிப்பு தான் இந்த பேச்சு.”

 

“தெய்வமே நகர விடக்கூடாதுன்னு முடிவே செஞ்சிட்ட போல இருக்கு வரேன் இனி இங்கே நின்றாள் வேலைக்கு ஆகாது. கையில் இருக்கற லிஸ்ட்ட கொடு…வரும் போது ஃகாபி எடுத்துவிட்டு வரணுமா உனக்கு. “

 

“ம் எடுத்துவிட்டு வந்துவிடு நேரம் தான் பதினோரு மணியை  தாண்டிடுச்சே…நாம தான் இன்றைக்கு ஃகாபி குடிகுகறது லேட் போல…”என்றபடி தனது இருக்கையில் அமர்ந்தாள் ரேஷ்மா. படிக்கட்டு வழியே கீழே இறங்க அங்கே வரவேற்பில் இருந்த ரிஷப்ஷன் பெண்மணி இவளை பார்த்து அறிமுக புன்னகை சிந்தினாள். 

 

“பிரபு ஸார் எங்க இருக்கறாங்க அவரோ ரூம்லயா இல்லை பின்னாடி சர்வீஸ் ஏரியாவிலேயா…இதை கொடுக்கணும்.”

 

“ஸார் இப்போது தான் ஒரு கஸ்டமர்கிட்ட பேசிக்கொண்டு இருக்கறாங்க அவரோட ரூம்ல்ல..ரெண்டு நிமிடம் வெயிட் பண்ணு சக்தி பேசிட்டு இருக்கிறவர் வரவும் நீங்கள் போங்க சக்தி…”

 

“என்ன காலையில் செம வேடிக்கை போல இருக்கு”, வேடிக்கையாக பேச ஆரம்பிக்க…”நீ வேற சக்தி மனுசனுக்கு பதில் சொல்ல முடியலை  வர்றவங்ககிட்ட முதல்ல சிக்கறது நானாதான் இருக்கிறேன் என்ன செய்ய சிலர் புரிஞ்சிக்கறாங்க நிறைய பேர்கிட்ட அது இருக்கிறது இல்லை.  எங்க காசு மறுபடியும்  கேட்டுடுவாங்கன்னு அத்தனை கத்துக் கத்தறாங்க..என்னால முடியலை சமயத்தில் ஏண்டா இங்கே வந்து நிற்கறோம்ன்னு இருக்கு.”

 

“ஏய் சுமித்ரா என்ன இது இப்படி எல்லாம் பேசற..காலையில் உன்னை முதல்ல பார்த்தா எவ்வளவு எனர்ஜி கிடைக்கும் தெரியுமா எப்பவுமே பளிர்ன்னு சிரிச்ச முகமா உனக்கு நான் பயங்கர ரசிகையாக்கும். எப்பவுமே ரேஷ்மா கிட்ட சொல்லுவேன். உன்னோட முகத்தை பார்த்தாலே பிரச்சினை பாதி குறைஞ்சமாதிரி தெரியும்ன்னு…”

 

“சக்தி என்னை வெட்கப்படவைக்கற… இரு ஸார் கிட்ட கேட்கறேன் ஒகேன்னா ரெண்டு நிமிடம் தானே கொடுத்துவிட்டு புறப்பட்டுக்கோ..”

 

“வேலை எதுவும் பெருசா இல்லை ஸ்டாக் லிஸ்டும் நேற்றே எடுத்தாச்சு இனி இன்றைக்கு ஸ்டாக் வந்தா தான் அரேன்ஜ் பண்ணனும். சரி கேட்டுச் சொல்லு…”

 

அருகில் இருந்த லேன்ட்லைன் ஃபோனில் அழைப்பு விடுத்தாள் சுமித்ரா “ஹலோ ஸார் சக்தி ஸ்டாக் ரிப்போர்ட் எடுத்துவிட்டு வந்து இருக்கறாங்க ரூம்ப்பிற்கு அனுப்பட்டுமா ஸார். “

 

“ஒகே அனுப்பி வைங்க” என்று சொல்லவும்…”ஸார் வரச்சொல்லறாங்க சக்தி போய் கொடுத்துவிட்டு நீங்கள் போய்க்கோங்க…சிரித்தபடி அனுப்பி வைத்தாள். “

 

நீளமான ஹால் அங்கும் சில பெண்கள் கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டு இருந்தனர். இவளை நிமிர்ந்து பார்த்தவர்கள் புன்னகையோடு தலையசைக்க இவளும் புன்னகையோடு பிரபுவின் அறையை நோக்கி நகர்ந்தாள். 

 

கண்ணாடியால் சுற்றிலும் மறைக்கப்பட்ட அறையில் பிரபு அவனது இருக்கையில் அமர்ந்து இருக்க…அவனது எதிரில்  இருந்த இருக்கையில் இருந்தவனின் பேச்சு சத்தம் லேசாக திறந்து இருந்த கதவின் வழியே இவளது காதிற்குள் வந்து விழுந்தது.கதவை திறக்க கையில் வைத்தவள் பேசிய சத்தம் கேட்கவும் அப்படியே திகைத்தபடி நின்று விட்பாள்.

 

“மிஸ்டர் மோகன் எந்த மாதிரி வண்டியை ஃபுக் பண்ணி இருக்கறிங்க உங்களுக்கு எந்த மாடல் வண்டி வேணும். “

 

“ஸார் ஏற்கனவே ஆன்லைனில் வண்டி வாங்க  ஃபுக் பண்ணி இருக்கிறேன்  டெலிவரி எடுக்கத்தான் வந்து இருக்கிறேன்.  இப்போது எந்த மாடல் வண்டி நல்லா மூவ் ஆகிட்டு இருக்கு. ஏன்னா வண்டியை இன்னும் சூஸ் பண்ணலை இங்கே பார்த்தபிறகு தான் எடுக்கனும் அட்வான்ஸ் மட்டும் தான் கட்டி இருக்கு. “

 

“உங்களுக்கு எத்தனை சிசியில் வண்டி வேணும் நார்மல் போதுமா இல்லை நல்ல வேகமாக போறது போல வேண்டுமா…சில மாடல் இருக்கு என்று கூட வாங்க காட்டறேன். இப்போதைக்கு ஐநூறு சிசி வண்டியை நல்லா போகுது ஆயிரம் சிசி வண்டி இந்த மாதம் புதுசா வந்து இருக்கு கலர், நான்கு கலரில் கிடைக்கும்.  ஏதாவது ஆல்டரேஷன் வேணுன்னாலும் இங்கேயே பண்ணி தந்திடுவோம். ஷிட்கவர் ,ஹெல்மெட் எல்லாமே வண்டியோட கலருக்கு பேட்சா இங்கேயே கிடைக்கும்.”

 

“தேங்க்ஸ் ஸார்.பணத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை சிங்கிள் பேமண்டா தந்திடறேன் என்னோட மனைவியோட ஆசை இந்த வண்டி வாங்கனும்ங்கறது அவளோட ஆசைக்காகவே இவ்வளவு தூரம் வாங்க வந்து இருக்கறேன்.. உங்க பேர் என்னன்னு  சொன்னிங்க..ம்..பிரபு…பிரபு ஸார் வாங்க போகலாம் குரல் கேட்டதுமே திகைத்து போய் நின்றவளுக்கு கைகள் தானாக நடுங்க ஆரம்பித்து இருந்தது. “

 

கிட்டத்தட்ட ஒன்றரை வருடபாக மறக்க நினைத்து கொண்டிருந்த அதே குரல் அதை கேட்டதுமே முதலில் அவளுக்கு வந்தது பயம் மட்டுமே  மறுபடியும் யாரை பார்க்க கூடாது என வாழ்க்கையில் நினைத்து இருந்தாலோ அதே குரல் சட்டென கதவை கைவைத்தவள் அதே வேகத்தோடு அங்கிருந்து வேகமாக நகர்ந்து தனது இருப்பிடம் நோக்கி யாரோ தன்னை துரத்துவது போல வேகமாக மாடியை நோக்கி கிட்டத்தட்ட ஒடினாள் எனலாம்.

 

முகம் முழுக்க வேர்த்தபடி வேகமாக ஒடி வந்தவளை பார்த்து  “ஹாய் சக்தி … ஏன் இவ்வளவு வேகமாக வர்ற எங்க ஃகாபி… “கேட்க எதற்கும் பதில் சொல்லாமல் அவளுடைய இடத்தில் அமர்ந்தவள் நடுங்கிய தனது கையை இருக்கி பிடித்தபடி கண்கள் மூடி அமர்ந்தாள். 

 

[the_ad id=”6605″]

 

 

 

“ஏய் என்ன ஆச்சு…ஏதாவது பண்ணுதா 

ஏன் இப்படி நடுங்கிட்டு இருக்கற..என்ன இது இந்த பேப்ரை தரலையா..என கேட்கும் போதே..”

 

“ப்ளீஸ் ரேஷ்மா எங்கிட்ட எதுவும் கேட்காதே நான் வீட்டுக்கு போறேன்…நான் இப்பவே வீட்டுக்கு போறேன்.

என்று சொன்னபடியே மயங்கி சரிந்திருந்தாள். “

 

“சக்தி..சக்தி”  இவள் சத்தமிட்டபடி அவளை உளுக்கியது ,சரிந்து விழுந்துவிடாமல் கையால் தாங்கியபடி அதே சேரில் சாய்ந்தபடி படுக்க வைத்தது எல்லாமே எங்கோ,கனவில் நடப்பது போல மெல்லிய புகை போல தெளிவில்லாமல் தெரிந்தது.

 

தொடரும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!