Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennavalin Innisai

Ennavalin Innisai 14 2

எப்போதும் அவளைக் கண்டதும் மலர்ந்த முகத்துடன் அவளிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு செல்வான். இப்போது அவளை கண்டு கொள்ளாமல் சென்று விட்டான். அதில் முகம் வாடிப் போய் நின்றாள் தேன்மொழி. 

இப்போதே இப்படி முகத்தை திருப்பிக் கொண்டு செல்பவன் ராகவன் பேசின பிறகு என்ன செய்வானோ என்று பயமாக இருந்தது அவளுக்கு.



Advertisement

அலுவலகம் வந்த ராகவனுக்கோ நவீனுடன் பேச வேண்டும் என்பது எல்லாம் நினைவே இல்லை. அவன் நினைவு முழுக்க ஸ்ருதியைப் பற்றி மட்டுமே. 

Advertisement

ஆனால் அவனுக்கு முன்பே அலுவலகம் வந்த ஸ்ருதி அவளது இருக்கையில் அமர்ந்திருந்தாள். கூடவே அவளைச் சுற்றி வைஷ்ணவி, சேகர், ரவி என அனைவரும் நின்றிருந்தார்கள்.

Advertisement

அவனைக் கண்டதும் அவள் பார்வை தன்னாலே தாழ்ந்தது. “இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. இங்க என்னை பருகு பருகுன்னு பருக வேண்டியது. வீட்ல இன்னொருத்தன் முன்னாடி போய் அலங்காரம் பண்ணிட்டு நிக்க வேண்டியது”, என்று எரிச்சலுடன் எண்ணிக் கொண்டவன் அதே எரிச்சலுடன் “என்ன இங்க கூட்டம்?”, என்று கேட்டான்.

Advertisement

“நேத்து நம்ம ஸ்ருதியை பொண்ணு பாக்க வறேன்னு சொல்லி இருந்தாங்களாம். அதான் லீவ் போட்டா போல சார்? அதை தான் கேட்டுட்டு இருந்தோம்”, என்று வைஷ்ணவி சொல்ல “அதை ஆபீஸ் நேரத்துல தான் கேப்பீங்களா? லஞ்ச் டைம் எதுக்கு இருக்கு? போய் வேலையைப் பாருங்க”, என்று சொல்ல அனைவரும் தெறித்து ஓடினார்கள். 

அவனது கோபம் ஸ்ருதியை அதிகம் பாதித்தது. ஆனாலும் அவன் தன்னை ஒரு வார்த்தை கூட கேட்காதது, தன்னை ஒரு முறை கூட திரும்பி பார்க்காதது அவளுக்கு கஷ்டமாக இருந்தக்து.

அவன் அவனுடைய இருக்கைக்கு சென்ற பிறகும் ஸ்ருதியால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. அப்போது ‘கம் டு மை கேபின்’ என்று அவனிடம் இருந்து அழைப்பு வர அவசரமாக அங்கே சென்றாள். 

அறைக்குள் சென்றதும் படபடப்பாக அவனைப் பார்க்க “என்னைக்கு கல்யாணம்?”, என்று நிதானமாக கேட்டான் ராகவன்.

எச்சில் விழுங்கிக் கொண்டு அவள் பேசாமல் இருக்க “எல்லாம் ஓகே ஆச்சு தானே?”, என்று கேட்டான்.

….

“மாப்பிள்ளை எப்படி இருந்தார்?”, என்று அவன் கேட்க “தெரியாது”, என்றாள் ஸ்ருதி. 

“என்ன தெரியாதா? நீ அவரைப் பாக்கலையா?”

“வந்தா தானே பாக்குறதுக்கு?”

“வாட்? என்ன சொல்ற நீ? உனக்கு பிடிச்சிருக்குன்னு தேனு சொன்னாளே?”

“அவ ஏன் அப்படிச் சொன்னான்னு தெரியாது. ஆனா என்னை பொண்ணு பாக்க யாரும் வரலை”

“அப்புறம் ஏன் லீவ்?”

“வரதா தான் இருந்தாங்க. திடீர்னு அப்படிச் சொன்னதும் மயங்கி விழுந்துட்டேன். அதனால தள்ளி வச்சிட்டாங்க”, என்று அவள் சொன்னதும் அவன் மனம் முழுக்க ஒரு நிம்மதி அலை பரவியது. 

“தள்ளி வச்சிட்டாங்கன்னா என்ன அர்த்தம்? மறுபடியும் பாக்க வருவாங்களா?”

“ம்ம்”

“அப்ப என்ன பண்ணுவ?”

“யாரலயும் எழுப்ப முடியாத மயக்கத்துக்கு போயிருவேன்”, என்று சொன்னாள் ஸ்ருதி.

அதன் அர்த்தம் உணர்ந்தவன் அதிர்ந்து போய் அவளைப் பார்த்தான். அவளோ அழுத்தமான பார்வையோடு நிற்க “ஓகே உங்க வேலையைப் பாருங்க”, என்று அனுப்பினான். 

“இதை விசாரிக்க தான் கூப்பிட்டானா?”, என்று எண்ணி சோர்ந்து போய் அங்கிருந்து சென்றாள். அவள் சென்றதும் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான் ராகவன். அவனால் அவளுடைய பதிலை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அதே நேரம் சட்டென்று அவளுடைய காதலையும் அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

ஆனாலும் அவள் பதில் அவன் மனதை கொஞ்சம் அமைதியடையச் செய்தது மட்டும் உண்மை. மதியம் தான் தேன்மொழி நினைவு வர ஆபீஸ் எண்ணில் இருந்து நவீனுக்கு அழைத்தான்.

புது எண்ணில் இருந்து அழைப்பு வரவும் குழப்பத்துடன் எடுத்து “ஹலோ யாருங்க?”, என்று கேட்டான்.

“ஹலோ நவீன், நான் ராகவன் பேசுறேன். தேன்மொழி அண்ணன்”

“ஓ, சொல்லுங்க ராகவன்”, என்று சொன்ன நவீனுக்கு அவன் என்ன சொல்லப் போகிறானோ என்று படபடப்பாக இருந்தது. 

“உங்க வீட்ல கல்யாணம் விஷயம் பேசுனீங்களா? அம்மா அப்பா என்ன சொன்னாங்க? எப்ப முறையா எங்க வீட்டுக்கு பேச வரீங்க? இல்லை நாங்க வரணும்னா சொல்லுங்க”

“அது… அது வந்து….”

“என்ன நவீன் வீட்ல இன்னும் பேசலையா?”

“ஆமா….”

“வீட்ல ஒத்துக்குவாங்களா?”

“ம்ம்”

“அப்புறம் என்ன? பேசுங்க. பேசிட்டு நல்ல முடிவா சொல்லுங்க”, என்று சொல்லி போனை வைத்தான். 

இப்போது தலையை பிடிப்பது நவீனின் முறையானது. அவசரமாக தேன்மொழியை தேடிச் சென்றான். மதிய உணவு இடைவேளை நேரம் என்பதால் பேசன்ட் யாரும் இல்லாமல் தனியாக இருந்தாள் தேன்மொழி.

“உன் மனசுல நீ என்ன தான் டி நினைச்சிட்டு இருக்க?”, என்று கத்திய படியே அறைக்குள் நுழைந்தான் நவீன்.

அவனது கோபமும் டி என்ற அழைப்பையும் கேட்டு திகைத்து போய் எழுந்து நின்றவள் “நவீன்”, என்று அதிர்வாக அழைக்க “என்னைப் பாத்தா உனக்கு கேனையன் மாதிரி இருக்கா? உன்னோட பிரச்சனையை நீ தான் சரி செய்யனும். இதுல என்னை எதுக்கு இழுத்து விட்டுட்டு இருக்க? ராகவன் போன் பண்ணி எங்க வீட்ல பேச சொல்றான். உங்க வீட்டுக்கும் வந்து பேசச் சொல்றான்? நான் உன் கிட்ட உண்மையான பிரண்டா தானே பழகுறேன். எதுக்கு இப்படி என்னை டார்ச்சல் பண்ணுற?”, என்று கேட்டான். அவன் பேச்சு அவளுக்கு கஷ்டமாக இருக்க அவனைய் பார்த்த படி நின்றாள்.

“உன்னை தான் டி கேக்குறேன். என்ன கம்முன்னு இருக்க? இப்பவே உன் அண்ணனுக்கு கால் பண்ணி என்னை விரும்பலைங்குறதைச் சொல்லிரு”

“நவீன்”

“சொல்லு டி, கால் பண்ணு”

….

“தேன்மொழி உன்னைத் தான் சொல்றேன்”

“கொஞ்சம் அமைதியா இருங்க நவீன்”

“நீ பண்ணின வேலைக்கு எப்படி அமைதியா இருக்குறது? இப்பவே சொல்லிரு. இந்த பிரச்சனை இப்பவே முடியணும்”, என்று அவன் எகிற “இனி இப்படி நடக்காது விடுங்க”, என்றாள்.

“என்ன நடக்காது? அன்னைக்கும் இப்படி தான் சொன்ன?“

“அதான் நடக்காதுன்னு சொல்றேன்ல? உங்களை நான் இதுல இழுத்து விட்டது எல்லாம் தப்பு தான். நான் இன்னைக்கே எங்க வீட்ல நான் லவ் பண்ணுறது நவீனை இல்லை. டாக்டர் ஜோசப்பைன்னு சொல்லிறேன். போதுமா? இனி என்னால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது. இப்ப கிளம்புங்க”, என்று எரிச்சலுடன் சொன்னாள்.

ஜோசப் என்ற பெயரைக் கேட்டதும் அதிர்ந்து போனவன் “என்னது ஜோசப்பா? நீ தான் அவனை லவ் பண்ணவே இல்லையே?”, என்று கேட்டான்.

“நான் பண்ணலை தான். ஆனா அவர் என்னை லவ் பண்ணுறார்ல? அவரையே எங்க வீட்ல கை காட்டிக்குறேன்”

“உனக்கு என்ன பைத்தியமா? அவன் எல்லாம் ஒரு ஆளுன்னு. அவன் எப்படி உனக்கு செட் ஆவான்?”

“இதுல செட் ஆக என்ன இருக்கு? அவரும் டாக்டர். எங்க வீட்ல பேசிக்குவேன். எனக்கு பாரின் போக வேண்டாம். அதுக்கு நான் யாரையும் கட்டிக்குவேன்”

“பைத்தியம் மாதிரி உளறாத தேன்மொழி. அவன் எல்லாம் உனக்கு பொருத்தமே இல்லை”

“பொருத்தம் பாத்துட்டு இருந்தா என்னோட நிம்மதி போயிரும். உங்களால முடியாதுன்னு சொல்லிட்டீங்கல்ல? நீங்க போய்கிட்டே இருங்க. என் பிரச்சனையை நான் சரி பண்ணிக்கிறேன். இனி நமக்குள்ள எதுவும் இல்லை. இந்த பொண்டாட்டியை கூப்பிடுற மாதிரி டி போடுறது எல்லாம் வேண்டாம். எதிர்ல ஜோசப்பை பார்த்தா என்னை பாக்க வரச் சொல்லுங்க. அவர் நம்பர் வேற என் கிட்ட இல்லை”

“அவன் உனக்கு வேண்டாம் தேன்மொழி”

“சாரி சீனியர். நான் முடிவு எடுத்துட்டேன்”

“அவன் நல்லவன் இல்லை”

“பரவால்ல என் தலையெழுத்து படி நடக்கட்டும்”

“அவனை நீ கல்யாணம் பண்ணக் கூடாது”

“அப்படின்னா நீங்க கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?”

“தேன்மொழி”

“உங்களால முடியாது தானே? அப்படின்னா பேசாம போங்க”

“ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிற? பாரின் போனா என்ன?”

“என்னால எவனையும் கல்யாணம் பண்ணிட்டு அங்க போய் உக்கார முடியாது. எனக்குன்னு இங்க சில கடமைகள் இருக்கு. அதெல்லாம் உங்களுக்கு புரியாது. முடிஞ்சா உங்க வீட்ல பேசி என்னைக் கல்யாணம் பண்ணுங்க. இல்லையா பேசாம போய்கிட்டே இருங்க. நான் என்ன பண்ணணும்னு பாத்துக்குறேன்’

“நான் உன்னை கல்யாணம் பண்ணலைன்னா அவனைத் தான் கட்டிக்குவியா?”

“ஆமா”, என்று அவள் உறுதியாக சொல்ல கோபத்துடன் அங்கிருந்து சென்று விட்டான். 

எரிச்சலுடன் அவன் நடந்து செல்ல அவன் எதிரே வந்த ஜோசப் “டாக்டர் நவீன், தேன்மொழி பிரியா இருக்காங்களா?”, என்று கேட்டான்.

“ஏற்கனவே கடுப்புல இருக்கேன். இவன் வேற?”, என்று எண்ணிக் கொண்டு “அவங்களுக்கு நிறைய பேசன்ட் இருக்காங்களாம் டாக்டர். இன்னைக்கு முழுக்க பிரி இல்லையாம்”, என்றான் நவீன்.

“போச்சா, இன்னைக்கும் பேச முடியலையா? என் காதலைச் சொல்லிட்டே இருக்கேன். மசியவே மாட்டிக்கா. சரி நான் கேண்டீன் போறேன். வறீங்களா?”

“நோ டாக்டர், எனக்கு வேலை இருக்கு”, என்று சொல்லி விட்டுச் சென்றான்.

நவீன் பேசிச் சென்றதும் தலை வலி உயிர் போக ஒரு டீ குடிக்க கேண்டீன் வந்தாள் தேன்மொழி. அவளைக் கண்ட ஜோசப் அவள் அருகில் வந்தான்.

“இவனா?”, என்று அவள் திகைக்க “நீங்க என்ன இங்க இருக்கீங்க தேன்மொழி?”, என்று கேட்டான்.

“ஏன் டாக்டர் நான் டீ குடிக்க வரக் கூடாதா?”

“இல்லை, இப்ப தான் டாக்டர் நவீன் கிட்ட நீங்க பிரியா இருக்கீங்களானு கேட்டேன். ஆனா அவர் நீங்க ரொம்ப பிசின்னு சொல்லிட்டு போனார். 

நிறைய பேசண்ட் இருக்கங்கான்னு சொன்னார். சரி நீங்க தலை வலில இருக்கீங்க. நான் அப்புறம் பேசுறேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றான்.

இசை தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!