Skip to content
Post Views: 4,573
அத்தியாயம் 15
உந்தன் சிரிப்பில் சிதறித்
தெரிக்கிறது வானவில்லின்
வண்ணங்கள்!!!
Advertisement
அழகான புன்னகை தேன்மொழியின் இதழ்களில் உதயமானது. கண்டிப்பாக நவீன் தன்னை விட்டுவிட மாட்டான் என்று நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டாள்.
Advertisement
அவள் எண்ணியது போலவே தன்னுடைய அறைக்குச் சென்ற நவீன் ராகவனை அழைத்தான்.
Advertisement
“சொல்லுங்க நவீன்”
Advertisement
“வீட்ல பேசினேன். ஓகே சொல்லிட்டாங்க. ஆனா எனக்கு ஒரு தங்கை இருக்கா. அவளுக்கு மாப்பிள்ளை அமையுற மாதிரி இருக்கு. அவளுக்கு முடிச்ச பிறகு எனக்கு பேசலாம்னு சொல்றாங்க”
“அவங்க சொல்றது நியாயம் தானே? எனக்கு இதுக்கு சம்மதம். உங்க தங்கைக்கு முடிஞ்ச அப்புறம் உங்க கல்யாணம் பத்தி பேசலாம்”, என்று சொல்லி போனை வைத்தான் ராகவன்.
நவீன் ஒரு முடிவு சொன்னதும் சந்தோஷமாக தன்னுடைய வேலையைப் பார்த்தான் ராகவன். அப்போது மாலை நான்கு மணி போல் சேகர் அவனை அழைத்தார்.
“ஹலோ சார், சொல்லுங்க”
“வேலைல இருக்கியா ராகவா?”
“ஆமா சார், ஆனா பரவால்ல. சொல்லுங்க”
“எனக்கு ஒரு உதவி செய்யனுமே?”
“என்னன்னு சொல்லுங்க சார். உதவின்னு எல்லாம் கேக்க வேண்டாம்”
“ஒரு பாட்டு பாடனும். கடைசி நிமிசத்துல சொல்லிட்டாங்க. படத்துல ஏதோ மாத்தமாம். நான் பாட்டு எழுதிட்டேன். ஆனா அந்த பாட்டுக்கு உன் வாய்ஸ் சரியா இருக்கும்னு தோணுச்சு. வந்து பாடிக் கொடுக்க முடியுமா?”
“கண்டிப்பா சார். இப்பவே பெர்மிசன் கேட்டுட்டு வரேன்”
“ரொம்ப நல்லது பா. அப்புறம் உனக்கு யாராவது பீமேல் சிங்கர் தெரியுமா?”
“ஏன் சார்?”
“எப்பவும் பாடுற பொண்ணு இப்ப அவைலபுல் இல்லை. அதான்”
“என்னோட ஃபிரண்ட் ஒருத்தங்க இருக்காங்க சார்”
“அப்படின்னா அவங்களையும் அழைச்சிட்டு வரியா? வாய்ஸ் டெஸ்ட் வச்சிறலாம்”
“கண்டிப்பா சார்”, என்று சொல்லி போனை வைத்தவன் மேனேஜர்க்கு அழைத்து பெர்மிசன் கேட்டான். அவன் எப்போதும் கேட்பது தான் என்பதால் அவர் வேறு ஒன்றும் சொல்ல வில்லை.
ஆனால் அவன் ஸ்ருதிக்கும் பெர்மிசன் கேட்க திகைத்து போனாலும் அவன் மேல் உள்ள நம்பிக்கையால் சரி என்று சொன்னார்.
“தேங்க் யு சார்”, என்று சொல்லி போனை வைத்தவன் ஸ்ருதியை அழைத்தான்.
“இப்ப என்னவோ?”, என்று எண்ணி அவள் அவனைக் காண வர “என் கூட ஒரு இடத்துக்கு வரணும். கிளம்பு”, என்றான். அவன் அப்படிச் சொன்னதும் அவள் நே என்று விழிக்க “சொன்னது புரியலையா? உன் திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு கிளம்பு. நீ அப்படியே வீட்டுக்கு போற மாதிரி இருக்கும்”, என்றான்.
“சார் எங்க?”, என்று அவள் குழப்பமாக கேட்க “எங்கன்னு சொன்னா தான் மேடம் வருவீங்களோ?”, என்று கேட்டான்.
“அப்படி எல்லாம் இல்லை சார். நான் வரேன்”, என்று சொன்னவள் அலுவலகத்தில் பெர்மிசன் கேட்க வேண்டும் என்பதைக் கூட மறந்து அவனுடன் சென்றாள். அதை எண்ணி அவனுக்கு சிரிப்பு கூட வந்தது.
நண்பனுடைய கார் சாவியை வாங்கியவன் அவளை அழைத்துக் கொண்டு கார் பார்க்கிங் சென்றான். காரின் முன் பக்கம் சங்கடத்துடன் அவள் அமர டிரைவர் சீட்டில் அமர்ந்து அவன் காரைக் கிளப்பினான்.
அவ்வப்போது அவள் அவனை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே வர அவனோ வந்த சிரிப்பை அவளிடம் காட்டாமல் மறைத்தான். அவளுக்கோ எங்கே போகிறோம் என்று அவனிடம் கேட்க வேண்டும் போல இருந்தது. ஆனால் அதற்கு தைரியம் இல்லாததால் அமைதியாக வந்தாள்.
கார் ஒரு ஸ்டூடியோ முன்னாடி நிற்க இங்கே ஏன் என்னும் விதமாய் அவனைப் பார்த்தாள்.
“ஸ்ருதி”
“ம்ம்”
“இப்ப உள்ள போய் நாம பாட்டு பாடப் போறோம்?”
“என்னது? சார் என்ன விளையாடுறீங்களா?”
“ஸ்ருதி”, என்று அவன் கண்டிப்புடன் அழைக்க அவனை பாவமாக பார்த்தாள்.
“நான் சொன்னா கேப்ப தானே?”
“ம்ம்”
“அப்படின்னா என் கூட வா”, என்று சொல்லி அவளை அழைத்துச் செல்ல நடுக்கத்துடன் அவனுடன் சென்றாள்.
அவர்களை சேகர் அன்புடன் வரவேற்க ஸ்ருதி தவிப்புடனே நின்றிருந்தாள்.
“முதல்ல ஸ்ருதியோட வாய்ஸ் டெஸ்ட் பண்ணிறலாம்”, என்று சொன்ன சேகர் ஓர் பாட்டைக் கொடுத்து அவளைப் பாடச் சொல்ல அவனை பார்த்தாள். அவன் கண்களால் தைரியம் கொடுக்க அவளும் பாடினாள்.
சேகருக்கு அவள் குரல் பிடித்துப் போக அவளையே அந்த பாட்டைப் பாட வைத்தார். அவள் பாடி முடிக்க மணி இரவு ஏழு ஆகி விட்டது. வீட்டுக்கு செல்ல நேரம் ஆகி விட்டதே என்று தவிப்புடன் நின்றிருந்தாள் ஸ்ருதி. அவளுடைய பகுதி மட்டும் தான் பாடி இருக்கிறாள். ராகவன் இன்னும் பாட வில்லை. இவள் அளவுக்கு அவனுக்கு நேரம் ஆகாது என்றாலும் வீட்டுக்கு செல்ல நேரம் ஆகி விடும் என்று புரிந்தது.
“இப்ப உன்னோட டிராக் பாடிறலாமா ராகவா?”, என்று கேட்டார் சேகர்.
“சார் நான் ஸ்ருதியை வீட்ல விட்டுட்டு வந்து பாடி கொடுக்கவா? அவளுக்கு நேரம் ஆச்சு?”
“சரிப்பா, நீ போயிட்டு வா”, என்று சொல்ல “வா”, என்று சொல்லி அவளை அழைத்துக் கொண்டு காருக்கு வந்தான்.
அவளும் காரில் ஏறி அமர்ந்தாள். ஆனால் அவன் காரைக் கிளப்பாமல் அமைதியாக இருந்தான். நடந்து முடிந்ததை எண்ணி அவள் அமைதியாக இருக்க சட்டென்று அவளை இறுக அனைத்துக் கொண்டான் ராகவன்.
அவன் அணைப்பில் காமம் இல்லை, கோபம் இல்லை. ஒரு வித ஆறுதல் மட்டுமே இருந்தது. சற்று நேரத்தில் அவளை விட்டவன் “சூப்பரா பாடினல்ல. அதான்”, என்று சொல்லி காரைக் கிளப்பினான். நெகிழ்ந்த மனதை அடக்கிய படி அமைதியாக இருந்தாள். எப்போதும் போல வீட்டின் தெரு ஓரத்தில் அவளை இறக்கி விட்டுவிட்டுச் சென்று விட்டான்.
தயக்கத்துடன் வீட்டுக்குச் சென்றாள். “இன்னைக்கு ஏன் டி லேட்?”, என்று கேட்டாள் வேணி.
“அது வந்து மா”, என்று பதில் சொல்ல தடுமாறினாள்.
அவளது தடுமாற்றம் வேணிக்கு வித்தியாசமாக தெரியவில்லை. அவள் எப்போதும் இப்படி தான் இருக்கிறாள் என்பதால் அதை பெரிதாக எடுக்க வில்லை.
“வொர்க் இருந்துச்சா?”, என்று வேணியே கேட்க ஆம் என்னும் விதமாய் தலையசைத்தாள். “சரி போ முகம் கழுவிட்டு வா”, என்று சொல்ல உள்ளே சென்று விட்டாள். அதன் பிறகு அந்த பாட்டுப் பாடியதையே ஸ்ருதி மறந்து விட்டாள். அதை யாரிடமும் அவள் சொல்ல வில்லை. அதை அவள் தேன்மொழியிடம் கூட சொல்லாதது அவளுக்கே வியப்பு தான்.
அதற்கு அடுத்து வந்த நாட்களில் புராஜெக்ட் வேலை சூடு பிடித்தது. ஸ்ருதி கூட வேலையில் கவனம் செலுத்தினாள். ராகவனிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதால் அதிக சிரமம் எடுத்து வேலையைப் பார்த்தாள்.
அடுத்த பத்து நாட்களில் புராஜெக்ட் வேலை நல்ல படியாக முடிந்து அதை கிளைண்ட்டிடம் ஒப்படைத்தார்கள். டீம்லீடர் என்ற முறையில் ராகவனுக்கு பாராட்டு கிடைத்தது. புராஜெக்ட்டில் எந்த கம்ப்லைண்டும் இல்லாமல் இருந்ததால் உடனே பணமும் அனுப்பி விட்டார்கள். அந்த சந்தோசத்தைக் கொண்டாடும் விதமாக கம்பெனியில் இருந்தே ஒரு டூர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
டீம் அவுட்டிங்க் போக அனைவரும் தயாரானார்கள். ஸ்ருதியை விடுவதற்கு வீட்டில் இருப்பவர்கள் தயங்க அவளோ ராகவனுடன் இருக்கும் நாளுக்காக ஆசைப் பட்டு வீட்டில் அனுமதி வாங்கினாள்.
அவர்கள் கிளம்பும் நாளும் வந்தது. வைஷ்ணவி வராததால் வேனில் ஸ்ருதி தனியே அமர்ந்திருந்தாள். மற்ற அனைவரும் வேறு ஆட்களுடன் பேசிக் கொண்டிருக்க ஸ்ருதி மட்டும் அமைதியாக இருந்தாள். ராகவன் இருந்தால் அவள் யாரிடமும் பேச மாட்டாள் என்று தெரியுமாதலால் அவளை யாரும் தொந்தரவு செய்ய வில்லை. ஆனால் அவள் தனியைமையை உணர்ந்து வெகு இயல்பாக அவள் அருகே வந்து அமர்ந்தான் ராகவன். அவன் பிரகாஷிடம் எதையோ கேட்டுக் கொண்டே அவள் அருகே அமர்ந்ததால் யாரும் அவனை சந்தேகக் கண் கொண்டு பார்க்க வில்லை.,
ஏதோ புதையல் கிடைத்தது போல சந்தோஷப் பட்டாள் ஸ்ருதி. வெகு நாட்களுக்கு பிறகு இப்போது தான் அவனது அருகாமை அவளுக்கு கிடைத்திருக்கிறது. அதனால் அவள் முகம் மலர்ந்தே இருந்தது.
அதற்கு பிறகு அவர்கள் இறங்க வேண்டிய இடம் வர சுற்றிப் பார்க்கச் சென்றார்கள். மதிய உணவை ஹோட்டலில் முடித்து விட்டு அனைவரும் படம் பார்க்கச் சென்றார்கள்.
ஸ்ருதி அருகில் சேகரும் ரகுவும் அமர்ந்து விட ராகவனால் அவளை நெருங்க முடியவில்லை. அவளும் அவனாவது தன்னருகே அமர்வதாவது என்று எண்ணிக் கொண்டு படத்தைப் பார்த்தாள்.
பின் அனைவரும் வீட்டுக்கு கிளம்பினார்கள். மணி ஆறு மணிக்கு மேல் ஆனதால் இருட்ட ஆரம்பித்திருந்தது. அனைவரும் அலைந்த களைப்பில் உறங்கிக் கொண்டு வர பிரகாஷுடன் ஏதோ பேசுவது போல ஸ்ருதி அருகில் அமர்ந்து விட்டான் ராகவன்.
அது வரை வெளியே பார்த்துக் கொண்டு வந்தவள் அவன் அருகே அமர்ந்ததும் அவன் புறம் திரும்பியவாறு அமர்ந்து விட்டாள். காலையில் போல இல்லாமல் இப்போது அவளுக்கு இன்னும் நெருக்கமாக அமர்ந்திருந்தான். அவன் நெருக்கத்தில் சிலிர்த்துப் போய் அமர்ந்திருந்தாள் ஸ்ருதி.
இருவரும் அருகருகே அமர்ந்திருக்க அவனோ கால் ஆட்டிக் கொண்டே முன்னே இருந்த பிரகாஷிடம் பேசிக் கொண்டிருந்தான். அவனது ஒவ்வொரு அசைவிற்கும் அவனது கால் அவள் மேல் உரசிக் கொண்டு இருந்தது. அவன் தொடுகையில் தீ பற்றியது போல ஒரு அனல் இருவருக்குள்ளும் பரவியது.
அவள் தள்ளி அமர்ந்தால் அவனும் விலகி இருப்பான். ஆனால் அவன் மேல் பைத்தியமாக இருப்பவள் அவன் உரசினால் எப்படி விலகுவாளாம்?
அனைவருமே தூக்க கலக்கத்தில் இருக்க “இந்த நிமிடம் இப்படியே நீளாதா?”, என்று எண்ணினாள் ஸ்ருதி. அப்போது அவன் கைகள் நகர்ந்து அவளது கையைப் பற்றியது.
அவள் அதிர்ந்து அவனைப் பார்க்க அவனோ சலனமே இல்லாமல் பிரகாஷிடம் பேசிக் கொண்டிருந்தான். வேனில் விளக்கை அனைத்திருந்ததால் அது யாருக்கும் தெரியாமல் போனது.
“தெரியாம பிடிச்சிட்டானோ?”, என்று அவள் எண்ண அவனோ அவளுடைய விரலுடன் விரல் கோர்த்து இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.
அவன் அவளுடைய கரத்தை லேசாக அழுத்த ஜிவ்வென்ற உணர்வு எழுந்து அவளை இம்சித்தது.
“இது எதனால்?”, என்று அவள் மூளை கேள்வி எழுப்ப “பிளீஸ் என்னை டிஸ்டர்ப் பண்ணாத. நான் அவனோட தொடுகையை ரசிச்சு அனுபவிக்கணும்”, என்று மூளையிடம் சொன்னது அவள் மனது.
என்ன தான் அவன் தொடுகையை ரசித்தாலும் அவளால் சாதாரணமாக இருக்க முடியவில்லை. இதயம் தாறுமாறாக துடிப்பது போல ஒரு உணர்வு எழுந்தது. அவளது இதயத்துக்கு சிறகு இருந்தால் அது இப்போது சிறகடித்து பறந்திருக்கும். அப்படி ஒரு நிலை.
அவனுக்கோ தான் ஏன் இப்படி செய்கிறோம் என்று கூட புரியவில்லை. அவள் அருகில் அமர்ந்ததற்கும், அவளது கரத்தை இப்படி பற்றிக் கொண்டு அமர்ந்திருப்பதற்கும் காரணம் புரியவே இல்லை.
“அவ கையை விடு டா”, என்று மனசாட்சி எடுத்துரைத்தாலும் அதை செய்ய தான் அவனுக்கு மனதில்லை. தான் தொட்டதும் நெகிழ்ந்து நெளிந்து கொண்டு அமர்ந்திருந்தவளை கண்டவனுக்கு அவளை இழுத்துக் கட்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது. அவளை அப்படியே எங்காவது தூக்கிச் செல்ல வேண்டும் போல அவனது மனம் பரபரத்தது.
ஒரு வழியாக அவள் இறங்க வேண்டிய இடமும் வந்தது. அவனை விட்டுச் செல்ல வேண்டும் என்பதே அவளுக்கு தவிப்பைத் தந்தது. அவள் இறங்க வேண்டும் என்றால் அவள் சீட்டில் இருந்து எழ வேண்டும். ஆனால் அவன் கரத்தைப் பற்றி இருக்கையில் எப்படி அவன் கரத்தை விலக்கவாம்? அவளது தவிப்பை அவன் பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.
கையை விடுங்க என்பாளா? இல்லை கையை உருவிக் கொள்வாளா என்று அவன் நினைக்க அவளோ அவனுடைய கையில் இருந்து கையை உருவிக் கொள்ளும் மன நிலையிலே இல்லை.
“இவ என் கூடவே என் வீடு வரைக்கும் வந்தாலும் வருவா”, என்று எண்ணிக் கொண்டு அவள் கையை விட்டான். அவளும் ஏமாற்றமும் விடுதலை உணர்வும் கொண்டு எழுந்து நிற்க அப்போது பார்த்து டிரைவர் பிரேக் போட தடுமாறி அவன் மடி மீதே விழுந்தாள்.
“அச்சோ சாரி சார்”, என்று அவள் அவசரமாக எழ “பூ மேல விழுந்ததுக்கு எல்லாம் யாராவது கோபப் படுவாங்களா?”, என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு சொன்னான்.
நே என்று விழித்த படி அவள் நிற்க “ஸ்ருதி இறங்கலையா மா?”, என்று கேட்டார் டிரைவர்.
அதற்கு பின்னர் அவசர அவரமாக இறங்கிச் சென்றாள். சிறு சிரிப்புடன் அமர்ந்திருந்தான் ராகவன். எதற்காக அப்படிச் சொன்னான் என்று அவளுக்கு குறுகுறுப்பாக இருந்தது. ஆனால் அவனிடம் விளக்கம் கேட்க அவளுக்கு ஏது தைரியம்?
நாட்கள் இப்படியே நகர யாருக்கும் எந்த இடையூறும் இல்லாமல் சென்றது. இதற்கு இடையே ராகவன் மற்றும் ஸ்ருதி இருவரும் சேர்ந்து பாடிய பாடல் இடம் பெற்ற படம் ரிலீஸ் ஆக வேண்டிய நாளும் வந்தது.
error: Content is protected !!