Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennavalin Innisai

Ennavalin Innisai 3 2

“வாசு”, என்று ராகவன் திகைப்பாக அழைக்க “உன்னை வேவு பாக்கணும்னு பாக்கலை. அந்த பிள்ளை கிட்ட பேசச் சொன்னோமே? இவன் பேசுறானா இல்லையான்னு பாக்க தான் பாத்தேன். ஆனா நடந்தது வேற. படத்துல கூட நான் பாக்காதது. எப்படி டா இதெல்லாம்? ஏன் இப்படி பண்ணின?”

“வாசு”



Advertisement

“நீ எதுவும் சொல்ல வேண்டாம். எனக்கு தெரிய வேண்டியது ஒரே ஒரு விஷயம் தான்”

Advertisement

“என்ன டா?”

Advertisement

“ஸ்ருதியை உனக்கு பிடிக்குமா? பிடிக்காதா ராகவா?

Advertisement

“என்ன கேள்வி டா கேக்குற? அவ சின்ன பொண்ணு டா. நயன்த் தான் படிக்கிறா”

“ஓஹோ அவ சின்ன பொண்ணுன்னு இப்ப தான் உனக்கு தெரிஞ்சதா? நேத்து அவ வாயை கடிச்சு வைக்கும் போது தெரியலையா?”

“வாசு”

“சரி விடு. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு. நான் என்ன அவளை இன்னைக்கே கல்யாணம் பண்ணி உன் வீட்டுக்கு கூட்டிட்டு போன்னா சொல்றேன். அவ மேல உனக்கு ஏதாவது எண்ணம் இருக்கா? பியூச்சர்ல அவளை லவ் பண்ணுற ஐடியா இருக்கான்னு தானே கேக்குறேன்?”

“அப்படி எல்லாம் ஒரு மண்ணும் இல்ல”

“அப்புறம் ஏன் டா நேத்து அப்படி பண்ணின?”

“அது கோபத்துல பண்ணினது?”

“அப்படி என்ன கோபம்?”

“டேய் அவ என்னைப் பாக்குறதுலயே அவ மனசுல ஏதோ ஒரு எண்ணம் இருக்கும்னு தெரியுது. அதை வளர விடக் கூடாதுன்னு தான் இதுக்கு தானே அலையுறேன்னு சொல்லி அவளை திட்டி அனுப்பினேன். இனி என் பக்கம் கூட அவ தலை வச்சி படுக்க கூடாது. அதான் அப்படி பண்னினேன்”

“நீ அவளைத் திட்டி அனுப்பினது சரி தான். ஆனா முத்தம் கொடுத்தது எங்கயோ இடிக்குதே?”, என்று வாசு கேட்க அந்த கேள்விக்கு ராகவனால் பதில் சொல்ல முடிய வில்லை.

அவன் அமைதியைக் கண்டு தனக்குள் சிரித்துக் கொண்ட வாசு “சரி நீ சொல்லுற காரணத்தை நான் நம்பிட்டேன்னு வை. நீயும் ஏதோ கோபத்துல அவளுக்கு முத்தம் கொடுத்துட்ட? இனி உன்னால அவளை மறக்க முடியுமா? இந்த முத்தம் உன் மனசை விட்டு போகுமா டா? உன் வாழ்க்கைல வேற ஒரு பொண்ணு வந்தா, உன்னால இதை மறந்துட்டு அவ கூட வாழ முடியுமா?”, என்று கேட்டான்.

அந்த கேள்விக்கு “இதை மறக்கவே முடியாது”, என்று  தான் அவன் மனம் பதில் சொன்னது. ஆனால் வாசுவிடம் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.

“அவளுக்கும் உன்னையோ இன்னைக்கு நடந்ததையோ மறக்க முடியாது டா. பேசாம அவளை லவ் பண்ணிறேன் டா. அவளாவது சந்தோசமா இருப்பால்ல?”

“இப்பவே லவ் அது இதுன்னு பேசி அவ வாழ்க்கையை கெடுக்கச் சொல்லவா?”

“சரி இப்ப சொல்லாத. காலேஜ் முடிச்ச பிறகு சொல்லு”

“நான் அப்பவும் சொல்ல மாட்டேன். நான் யாரையும் லவ் பண்ணவும் மாட்டேன்”

“ஏன் டா?”

“ஏன்னா லவ்ன்னு பேரைச் சொல்லி இரண்டு இழப்பை என் கண்ணு முன்னாடி பாத்தேன்”

“என்ன டா சொல்ற?”

“என் அப்பா கூட பிறந்த சித்தப்பா சூர்யா. என்னோட எட்டு வயசு பெரியவர். எங்க வீட்ல தான் இருந்தார். நாலு வருசத்துக்கு முன்னாடி அவர் காலேஜ் பைனல் இயர் படிச்சிட்டு இருந்தார்”

“சரி, அவர் இப்ப எங்க? உங்க வீட்டுக்கு வந்தப்ப அவரை நான் பாக்கலையே?”

“அவர் இப்ப இல்லை டா. தூக்கு போட்டு செத்துப் போய்ட்டார்”

“ராகவா, என்ன டா சொல்ற?”

“ஆமா டா, காலேஜ்ல தேவின்னு ஒரு அக்கா அவரை விரும்பிருக்காங்க. எங்க சித்தப்பா எங்க அப்பா மேல உள்ள மரியாதைல அவங்க காதலை ஏத்துக்கலை. ஆனா அந்த பொண்ணு சுத்தி சுத்தி வந்து எங்க சித்தப்பாவை காதலிச்சிருக்கு. அதுக்கப்புறம் எங்க சித்தப்பாவும் விரும்பிருக்காங்க. ஆனா அந்த பொண்ணு வீட்ல ஏதோ கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பாக்கவும் அந்த பொண்ணு சூசைட் பண்ணிக்கிச்சு. அந்த பொண்ணு இறந்ததும் எங்க சித்தப்பாவும் எங்க வீட்ல சூசைட் பண்ணிக்கிட்டார். நான் இப்ப மியூசிக் போடுற ரூம்ல தான். இப்பவும் எனக்கு அவர் அங்கயே இருக்குற மாதிரி தோணும். ரெண்டு பேரும் லவ்ன்னு ஒண்ணைப் பண்ணாம இருந்திருந்தா செத்துருக்க மாட்டாங்கல்ல? அதான் அந்த கருமத்தை பண்ணக் கூடாதுன்னு இருக்கேன். பண்ணவும் மாட்டேன்”

“டேய் அவங்க வாழ்க்கை அப்படி டா. ஆனா உன் வாழ்க்கைல அப்படியே நடக்கும்னு எதுவும் இல்லையே? நீ ஸ்கூல் முடிச்சு காலேஜ் போகப் போற? காலேஜ் முடிச்சு வேலைக்கு போனதும் ஸ்ருதி உன்னை விரும்பினா நீ ஏத்துக்குவ தானே?”

“இந்த ஸ்கூல்ல இருக்குற நிறைய பொண்ணுங்க என்னை சைட் அடிக்க தான் செய்யுறாங்க. அதுல ஸ்ருதியும் ஒண்ணு. நான் இந்த ஸ்கூல் விட்டு போன உடனே அவ என்னை மறந்துருவா. அப்புறம் அவளுக்கு வேற ஒரு பையன் மேல இண்டரெஸ்ட் வரும். எல்லாம் கடந்து போகும் டா. எனக்கும் லைப்ல பெரிய பெரிய எய்ம் இருக்கு. என்னால இந்த லவ்ல எல்லாம் விழ முடியாது”

“அப்ப அந்த பொண்ணுக்கு என்ன டா பதில் சொல்லப் போற?”

“நேத்து நான் கேவலமா பேசினதுக்கு அவளுக்கு என் மேல கோபம் வந்திருக்கும். கண்டிப்பா என்னை விட்டு விலகிருவா. நாளைல இருந்து அவளால என்னைப் பாக்க கூட முடியாது. அவளும் எல்லாம் மறந்துருவா. அவளும் லைப்ல நல்லா இருக்கணும் டா. அவளும் படிச்சு பெரிய ஆளா வரணும். அதனால தான் அப்படி நடந்துக்கிட்டேன். ஆனா அது கொஞ்சம் ஓவர் தான். கோபத்துல என்னையும் மீறி நடந்தது. அவளை என்னை விட்டு விரட்டணும்னு வேகத்துல பண்ணினது. எனக்கு இருக்குற ஒரே பயம் தேனு கிட்ட அவ எதுவும் சொல்லிருவாளோன்னு தான்”

“அப்ப உன் வாழ்க்கைல ஸ்ருதிக்கு இடமே இல்லை, அப்படி தானே?”

“காதலுக்கே இடம் இல்லைன்னு சொல்றேன்? பின்ன நீ அவளைக் கேட்டுட்டு இருக்க? அவ வாழ்க்கையிலும் நான் இனி இருக்க மாட்டேன் டா. நான் கொடுத்த டோஸ்ல அவளும் காதலை வெறுத்து படிப்புல கவனம் செலுத்துவா. எனக்கு அது போதும். சரி சார் வந்துட்டாங்க. அமைதியா இரு”, என்று சொல்லி விட்டான்.

நண்பனைப் புரிந்து கொள்ள முடியாமல் பாடத்தைக் கவனித்த வாசுவுக்கு அவன் பேசியதை எல்லாம் ஸ்ருதியிடம் சொல்ல வேண்டும் போல இருந்தது. அதற்கான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தான். 

அதே நேரம் “குட்டி மா எழுந்துரு டா. எழுந்து முகம் கழுவிட்டு வா. ஹாஸ்பிட்டல் போகலாம். உடம்பு நெருப்பா கொதிக்குது பாரு”, என்று வேணி ஸ்ருதியை எழுப்பிக் கொண்டிருந்தாள்.

“ஹாஸ்பிட்டல் வேண்டாம் மா. ஊசி போடுவாங்க. மாத்திரை கொடுப்பாங்க”

“அப்படின்னா காச்சல் எப்படி குணமாகுறது? ஒழுங்கா பிரஸ் பண்ணிட்டு வா”, என்று சொல்ல வேறு வழியில்லாமல் பல் துலக்கச் சென்றாள். 

பிரசில் பேஸ்ட்டை வைத்து வாய் அருகே கொண்டு செல்லும் போது நேற்றைய நினைவு வந்து அவள் முகத்தை சிவக்கச் செய்தது. அவன் பேசிய பேச்சுக்கு இனி அவனைக் காண கூடாது என்று நினைத்தாலும் அவனை ஒரு நாளும் மறக்கவே முடியாது என்று எண்ணி கொண்டு பல் துலக்க ஆரம்பித்தாள். 

அன்று முழுவதும் ஹாஸ்பிட்டல் ஊசி மாத்திரை என்று அவளுக்கு கடக்க தேன்மொழிக்கு தான் அவளுக்கு என்ன ஆனதோ என்று கவலையாக இருந்தது. அன்று முழுவதும் தோழிக்காக கவலைப் பட்டுக் கொண்டே இருந்தாள். 

அந்த கவலையில் தான் ஸ்ருதியை அவளுக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதே அவளுக்கு உரைத்தது.

அதற்கு அடுத்த நாள் எப்போதும் போல பள்ளிக்கு வந்தாள் ஸ்ருதி. ராகவன் எங்காவது தெரிகிறானா என்று தேடி அவள் கண்கள் அலை பாய்ந்தது. 

ஆனால் அவன் அவளுடைய கண்ணில் சிக்கவே இல்லை. ஏமாற்றத்துடன் கிளாசுக்கு வந்தாள். அவளைக் கண்டதும் “ஸ்ருதி, ஏன் டி நேத்து ஸ்கூல்க்கு வரலை? நீ எப்படி இருக்க?  நல்லா இருக்க தானே? நடந்ததுக்கு சாரி”, என்று தேன்மொழி அவசர அவசரமாக உளறினாள். அவள் கண்கள் கூட கலங்கி விட்டது. 

அவள் உளறலை புரிந்து கொள்ளாமல் “என்ன ஆச்சு தேனு? நேத்து முழுக்க எனக்கு நல்ல காச்சல் அதான் வரலை”, என்றாள் ஸ்ருதி. 

“காச்சலா? அதான் வரலையா? வேற ஒண்ணும் இல்லையே?”

“வேற ஒண்ணும் இல்லை டி”

“இப்ப பரவால்லயா?”, என்று கேட்ட தேன்மொழியின் கண்கள் ஸ்ருதியை நோட்டமிட்டது. பனித் துளியில் குளித்த புதுமலர் போல இருந்த தோழியைக் கண்டு வியப்பாக இருந்தது அவளுக்கு.

“இவ என்ன இப்படி பிரசா இருக்கா? அன்னைக்கு அண்ணன் முத்தம் கொடுத்ததுக்கு இவளுக்கு கோவம் இல்லையா?”, என்று எண்ணியவள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இப்ப காச்சல் விட்டுருச்சு டி. சரி நேத்து என்ன எல்லாம் நடத்தினாங்க?”

“நேத்து ஒண்ணும் பெருசா நடத்தலை. சரி நீ ஓகே தானே? உனக்கு ஒண்ணும் இல்லையே?”

“எனக்கு என்ன? நான் நல்லா தானே இருக்கேன்?”

“இல்லை, அன்னைக்கு நைட்டு”, என்று தேன்மொழி ஆரம்பிக்க அன்று நடந்ததை நினைத்து வெட்கத்தில் தலை குனிந்து கொண்டாள் ஸ்ருதி. அதை வியப்பாக பார்த்தாள் தேன்மொழி.

“அன்னைக்கு என்ன?”, என்று ஒன்றும் நடவாதது போல ஸ்ருதி கேட்க அதை தெரியாத மாதிரி காட்டிக் கொண்ட தேன்மொழியும் “இல்லை, அன்னைக்கு ரெஸ்ட் ரூம் போயிட்டு வரதுக்குள்ள நீ போய்ட்டியா? அதான் பயந்துட்டேன்”, என்று சொல்லி அவளை நோட்டம் விட்டாள்.

இசை தொடரும்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!