Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Episode 10.1

நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

“ஹாய்  ஹாப்பி தீபாவளி.” என்றான் சுகந்தன் அவளுக்கு  கை நீட்டியபடி.

 

அவள் அவனை முறைத்துவிட்டு



Advertisement

“உனக்கு வேற வேலையே இல்லையா? நான் எங்க போனாலும் அங்க வந்துடற.” என்றாள்.

 

“நான் இங்க எதேச்சையா தான் வந்தேன்.  வீட்லதான் பூசை பண்ண என் பொண்டாட்டி என் பக்கத்துல இல்ல. சரி கோயிலுக்கு  ஆவது வரலாம்னு தான் கிளம்பி வந்தேன். வந்த இடத்தில உன்னை பார்த்தேன். ஹாப்பி தீபாவளி சொன்னேன். அவ்வளவுதான்

Advertisement

நீ எதுவும் தப்பா நினைச்சுக்காதே.”  என்றான் சிரிப்பை அடக்கிக்கொண்டு .

Advertisement

 

சரி வந்த வேலையை பாரு.” என்றாள்.

 

Advertisement

 அந்த வேலையை தான் பாத்துட்டு இருக்கேன்.” என்றான் அவன் அவளை பார்த்தபடி.

 

 அவள் அவனை முறைத்தாள்.

 

 அதாவது சாமி கும்பிடுவதை சொன்னேன்.” என்று அவள் பின் தூரத்தில் இருந்த விநாயகரை பார்த்து சொன்ன மாதிரி மாற்றி பேசினான்.

 

 அவள் எதுவும் பேசாமல் அங்கிருந்து எழுந்து வந்து சஞ்சனா உடன் அமர்ந்து கொண்டாள்.

அவன் அவளைப் பார்த்து சிரித்து விட்டு அங்கிருந்து சென்றான்.

 

அப்போது ஜோதி, ராஜேஷ், விஜயா மூவரும் கோயிலுக்கு வந்தனர். அவர்களும் சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு இவர்களுடன் சேர்ந்து அமர்ந்தனர்.

கோயிலில் இந்தியர்கள் அனைவரும் கூடி கம்பி மத்தாப்பு கொளுத்தி தீபாவளியைக் கொண்டாடினர்.

இரண்டு கைகளிலும் இரண்டு கம்பி மத்தாப்புகள் எரிந்து கொண்டிருக்க அதனை சுழற்றி சுழற்றி விளையாடிக்கொண்டிருந்தாள் ஜோதி.

 

“என்னம்மா இப்போ  உங்களுக்கு தீபாவளி கலகலப்பா இருக்கா?” என்று கேட்டாள் சஞ்சனா.

“ஆமாண்டி இப்போ சந்தோஷமா இருக்கு.” என்றார் கலைவாணி திருப்தியுடன்.

 

“இன்னும் தீபாவளி பார்ட்டியில் பாருங்க. ரொம்ப கலகலப்பாக இருக்கும்.” என்றாள் சஞ்சனா.

 

எனக்கு எல்லாம் ஆயிரம் வாலா வெடித்து தான் பழக்கம். என்னை போய் சின்னப்புள்ளத்தனமா கம்பி மத்தாப்பு ஏத்தி விளையாட சொல்ற?” என்று கேட்டபடி கையில் மத்தாப்பு உடன் நின்று இருந்தான் சுகந்தன்.

 இங்க மத்தாப்புக்காவது பர்மிஷன் இருக்கு. சிட்டியில் இதுக்கு கூட பர்மிஷன் கிடையாது. அதனால இருக்குறதை வச்சு சந்தோஷப்படு.” என்றான் கார்த்திக்.

 

 

சாதனா வீட்டில் இருந்து வேலை செய்து கொண்டிருந்தாள். லேப்டாப்பின் முன்பு அமர்ந்து கொண்டு  அவள் வேலை செய்து கொண்டு இருந்த பொழுது

ஜோதி “ஹாய் ஆன்ட்டி என்றபடி. அங்கு வந்தாள்

 

“ஹாய் ஜோ என்ன இன்னைக்கு ஸ்கூலுக்கு போகலையா ?”என்று பார்வையை லேப்டாப் இடம் இருந்து திருப்பி ஜோதியை பார்த்து கேட்டால் சாதனா.

 

“எனக்கு தேங்க்ஸ் கிவிங் பிரேக்.”

 

“ஓ அப்படியா?”

 

“ஆமாம்.  தேங்க்ஸ் கிவிங் டே வருது இல்லையா? சரி அப்போ உனக்கு ஜாலிதான்.” என்றாள் ஜோதியின் கன்னத்தை மென்மையாக தட்டியபடி.

 

“ஆன்ட்டி உங்க ஆபிஸ்ல லீவு விடலையா?”

 

“எங்க ஆபீஸ்ல  ஒன் வீக் லீவு விட மாட்டாங்க. தர்ஸ்டே, ஃப்ரைடே ரெண்டு நாள் மட்டும் தான் லீவு. அப்புறம் சாட்டர்டே சண்டே அதனால நாலு நாள் லீவு. அவ்வளவுதான்” என்று சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னாள் சாதனா.

 

“எங்களுக்கு போன ஃப்ரைடே தான் ஸ்கூல் இருந்தது. திரும்ப ஸ்கூல் அடுத்த மண்டே தான். சோ எங்களுக்கு 5  வீக் டேஸ் அப்புறம் 2 வீக் எண்டு ஹாலிடே. சோ நயன் டே ஹாலிடேஸ்.” என்று குதித்தாள் ஜோதி.

 

“ஆசம்” என்று கண்களை விரித்து ஜோதியுடன் சேர்ந்து  அவளுக்காக மகிழ்ந்தாள் சாதனா.

 

“எங்க கிளாஸ் டீச்சர் யாருக்கு தேங்க்ஸ் சொல்லுவீங்கன்னு எழுத சொன்னாங்க.  நான் பேரன்ட்ஸ்க்கு சொல்லுவேன்னு எழுதினேன்.

 

. வாங்க நாம எல்லார்கிட்டயும் கேட்போம்.” என்று சாதனாவின் கையை பிடித்து கூப்பிட்டாள். ஜோதி

 

“சரி” என்று ஜோதியுடன் கீழே இறங்கி வந்தாள் சாதனா.

 

ஜோதி வீட்டிலிருந்தே அனைவரிடமும் சென்று அதே கேள்வியை கேட்டாள்.  கலைவாணி, சஞ்சனா, விஜயா மூவரும் அவரவர் கணவன்மார்களுக்கு நன்றி சொல்ல விரும்புவதாக கூறினார்கள்.

 

வீட்டில் இருந்து வேலை செய்து கொண்டிருந்த விக்ரம் இடம் கேட்டதற்கு

“இந்த குட்டி பையனை எனக்கு கொடுத்ததற்கு சஞ்சனாவுக்கு தேங்க்ஸ்.” என்றான்.

 

“சரி. நீ யாருக்கு தேங்க்ஸ் சொல்ல போற?” என்று திரும்பி கேட்டான் .

ஜோதி “நான் என் அம்மாவுக்கு தேங்க்ஸ் சொல்றேன்.” என்றுவிட்டு விஜயாவின் கண்ணத்தில் முத்தம் கொடுத்தாள்.

 

“சாதனா  ஆன்ட்டி நீங்க யாருக்கு தேங்க்ஸ் சொல்ல  ஆசை படுறிங்க?” என்று கேட்டாள்.

“நான் கடவுளுக்கு தேங்க்ஸ் சொல்ல ஆசைப்படுறேன்.” என்றாள் சாதனா.

 

இதைக் கேட்ட ஜோதி

“நாம எல்லோரும் நமக்கு பிடிச்சவங்களுக்கு தேங்க்ஸ் சொன்னோம். ஆனால் ஆண்ட்டிக்கு பிடிச்சவங்க  யாருமே இல்லை போல இருக்கு. அதனால் தான் கடவுளுக்கு தேங்க்ஸ் சொல்றாங்க.”  என்று ஜோதி சொல்லவும் சாதனா திகைத்தாள்.

 

“ஜோ நான் அப்படி நினைச்சு சொல்லல. தேங்க்ஸ் நாம யாருக்கு வேணும்னாலும் சொல்லலாம். நமக்கு பிடிச்சவங்களுக்கு மட்டும்தான் சொல்லனும்னு கிடையாது. கடவுளுக்கும் சொல்லலாம்.” என்று விளக்கம் கொடுத்தாள் சாதனா.

 

ஜோதி வெகுளித்தனமாக அப்படி கேட்டு இருந்தாலும் உண்மையில் சாதனாவுக்கு மிகவும் பிடித்தவன் பெயரை அவளால்  இந்த சூழ்நிலையில் சொல்ல முடியாது என்பது சஞ்சனாவுக்கு தெரியும்.

 

அவள் சுகந்தன் மீது  சிறிதும்  பாசம், அக்கறை  இல்லாதது போல வெளியில் நடந்து கொண்டாலும் அவள் ஆழ்மனதில் அவன் மீதான காதல் அப்படியே இருக்கிறது என்பது அவளது மனதை புரிந்த தங்கைக்கு நன்றாகவே தெரியும்.

 

அங்கு ஒரு சிறு அமைதி நிலவியது. சூழ் நிலையை மாற்றுவதற்காக

சாதனா

“அப்புறம் விஜயா  உங்க வீட்டு வாஷிங் மெஷின் ரிப்பேர் ஆயிடுச்சுன்னு சொன்னீங்களே, தேங்க்ஸ் கிவிங்க்கு அடுத்த நாள் பிளாக் பிரைடே அன்னிக்கி எல்லா  கடையிலயும் நல்ல டீல் போடுவாங்க. நீங்க அப்போ வாங்கலாம்.” என்றாள்.

 

“ஆமாம் ராஜேஷ் சொன்னான். கம்பேர் பண்ணி பார்த்து வாங்கணும். அப்புறம் நீங்க இந்த ப்ளாக் ஃப்ரைடேக்கு என்ன வாங்க போறீங்க?”

 

“எனக்கு எதுவும் தேவை படல. அதனால நான் வாங்கல. சஞ்சனா குழந்தைக்கு நிறைய டாய்ஸ் வாங்க பிளான் பண்ணி இருக்கா.”

 

“நானும் ஜோதிக்கு கொஞ்சம் டாய்ஸ் வாங்கணும். நல்ல டீல் இருந்தா சொல்லுங்க சஞ்சனா.” என்றாள் அவளைப்பார்த்து விஜயா.

 

“கண்டிப்பா சொல்றேன் விஜயா. நானும் ஒரு லிஸ்ட் போட்டு வைத்திருக்கிறேன். வருஷத்துக்கு ஒரு தடவை வரும் டீல் இல்லையா தேவையிருந்தால் மிஸ் பண்ணாம வாங்கணும்.” என்றாள் சஞ்சனா.

 

“சரி நீங்க இந்த  ஹாலிடேல ட்ரிப் எதுவும் போகலையா?” என்று விஜயாவை பார்த்து கேட்டாள் சஞ்சனா.

 

“இல்லை சஞ்சனா. எங்களுக்கு குளிர் கொஞ்சம் பயம். அப்புறம் சம்மர்ல போகலாம்னு விட்டுட்டோம்.”

 

“முதல் வருஷம் அப்படித்தான் இருப்பிங்க. அடுத்த வருஷம் பாருங்க. இந்த குளிர் எல்லாம் உங்களுக்கு பழகிடும். அப்புறம் ஜாலியா ஊரை சுத்த வேண்டியதுதான்.” என்றாள் சஞ்சனா . விஜயா புன்னகைத்தாள்.

 

இரவு படுக்கையில் படுத்த சுகந்தன், நேடலி சுகந்தனை கட்டி பிடித்ததைப் பார்த்ததும் சாதனா பொறாமை பட்டதை நினைத்து மகிழ்ந்தான். அவனது திருமண வாழ்வில் நடந்தவைகள் அவன் கண்கள் வந்தன.

 

காலை வீட்டு தொலைபேசி ஒலித்தது. தாமரை தான் எடுத்து பேசினார்.

 

“அப்படியா? சரி ட்ரை பண்றோம்.” என்று  சொல்லிவிட்டு போனை வைத்தது அதே ஹாலில் இருந்த சாதனாவின் காதுகளில் விழுந்தது.

 

தாமரை போனை வைத்துவிட்டு மகன் மற்றும் கணவனிடம் வந்தார்.

 

சாதனா துவைத்து காய்ந்திருந்த துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள்.

 

“அவள்  அப்பா தான் கால் பண்ணாரு.” என்று தாமரை சாதனாவை காண்பித்து  சொன்னார்.

 

தாமரை, சுகன்யா புகுந்த வீட்டினரை வாய்நிறைய சம்மந்தி என்று சொல்வதை பல முறை சாதனா கேட்டிருக்கிறாள். ஆனால் சாதனாவின் தாய், தந்தையை எப்பொழுதும் இவளோட அப்பா, இவளோட அம்மா என்றுதான் சொல்லுவார். ஒரு நாளும் சம்மந்தி என்று சொன்னதே கிடையாது. இதைப்பற்றி சாதனா சுகந்தனிடம் ஒருமுறை குறை கூறியது கூட உண்டு . அதே ஞாபகத்தில் இப்போதும் தாமரை அப்படி குறிப்பிட சுகந்தன் சாதனாவை பார்த்தான்.

 

ஆனால் சாதனா தாமரை அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்று ஆர்வமாக அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சாதனா.

 

“தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷன் அடுத்த ஞாயிற்றுக்கிழமை வச்சி இருக்காங்களாம். அதுக்கு தான் கூப்பிட்டார்.”

 

“ஓ அப்படியா?” என்று கேட்டுக்கொண்டார் வாசுதேவன்.

 

சாதனா இந்த விபரத்தை ஏற்கனவே சுகந்தனிடம் சொல்லியிருந்தாள். துணிகளை மடித்து முடித்தவள் அதனை எடுத்து வைக்க வேண்டிய இடத்தில் வைக்க சென்றாள்.

 

“என்ன அப்படியா? இது ஒரு முக்கியமான பங்க்ஷன். இந்த ஃபங்ஷனுக்கு நேரில் வந்து கூப்பிடனும். இல்லையா? அதுதான் பண்ணல. சரி பரவாயில்லை உங்கள கூப்பிட்டு ஒரு வார்த்தை பேசி இருக்கலாம் இல்ல?” என்று கேட்டார் தாமரை .

 

சுகந்தனுக்கு அவர் கேட்டது நியாயமாகவே பட்டது.

 

எனினும் “அவருக்கு ஏதாவது வேலை இருந்திருக்கும். போகட்டும். விடுமா .” என்று தாயை சமாளித்தான் .

 

“ஆமா. நீ எப்பவுமே உன் பொண்டாட்டி வீட்டுக்கு தான் சப்போர்ட் பண்ணுவ.” என்று அவர் பங்கிற்கு அவனை தாக்கினார்.

 

இப்படி பல முறைகள் இவரிடமும் சாதனாவிடமும் வாங்கி கட்டிக் கொள்வது அவனுக்கு பழகி போயிற்று. இரு பக்கமும் அடி வாங்கும் மத்தளம் போல வாழ பழகிக் கொண்டான் .

 

 

சாதனா, சஞ்சனா இருவரும் திருமண பட்டு புடவை அணிந்து நாற்காலியில் அமர்ந்து இருந்தனர்.கலைவாணி மற்றும் சஞ்சனாவின் மாமியார் சஞ்சுளா இருவரும்  பரபரப்பாக விருந்தினர்களை கவனித்துக் கொண்டிருந்தனர்.

சஞ்சனா, சாதனாவை போலவே ஆடம்பரம் இன்றி ஒரே ஒரு சங்கிலி மட்டும் அணிந்திருந்தாள். வேண்டுமென்றே மற்ற நகைகளை தவிர்த்ததை கவனித்தான் சுகந்தன்.  அவள் மீது மரியாதை வந்தது.

அவள் அவனைப் பார்த்து “வாங்க மாமா” என்றுவிட்டு புன்னகைத்தாள். இவனும் புன்னகைத்தான்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!