Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Episode 17.1

நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

விக்ரம் வேகமாக படி ஏறி வருவதை பார்த்த சாதனா அவள் அறையில் இருந்து வெளியே வந்தாள். மேலிருந்து கீழே பார்த்தாள்.

ஹால் சோபாவில் சுகந்தன்அமர்ந்திருந்தான்.

விக்ரம் சாதனாவிடம்



Advertisement

“சாதனா கந்தனுக்கு ஹய் ஃபீவர் இருக்கு. நீ அவர்கிட்ட எதுவும் கோபமா பேசி விடாதே. ரொம்ப கஷ்டப்பட்டு பேசி கன்வின்ஸ் பண்ணி கூட்டிட்டு வந்திருக்கேன். உனக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேக்கம் கிளீனர் எடுத்து அங்கிருந்த அறையை சுத்தம் செய்ய போனான் விக்ரம்.

 

உண்மையில் சாதனா அவனை  இங்கு பார்த்ததும் நிம்மதி ஆனாள்.

Advertisement

‘நல்ல வேளை விக்ரம் இங்க கூட்டிட்டு வந்துட்டார். இனிமேல் இவனைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.” என்று தான் நினைத்தாள்.

Advertisement

 

ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ள விரும்பவில்லை.

 

Advertisement

 

அறைக்குள் சென்ற விக்ரம் அங்கு இருந்த பொருட்களை மலைப்பாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் பின்னே வந்த சாதனா

“இதையெல்லாம்  எடுத்து  ஒழுங்காக வைக்க ரொம்ப நேரம் ஆகும் போல இருக்கு.” என்றாள்.

“ஆமா சாதனா. இப்போ என்ன பண்றது?” என்று கேட்டான் விக்ரம்.

 

அப்போது அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

அதனை செயலாற்றும் விதமாக

“சாதனா நான் இப்படி கேக்கறேன்னு தப்பா நினைக்காதே. உனக்கு பிரச்சனை இல்லன்னா உன் ரூமில் சுகந்தன்தங்கலாமா? ப்ளீஸ்.” என்று கெஞ்சும் குரலில் கேட்டான் விக்ரம்.

விக்ரம் வேண்டும் என்றுதான் அப்படி கேட்டான். இப்படியாவது இவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் காதலை வெளிப்படையாக தெரிவித்துக்கொண்டு சேர்ந்து வாழட்டும் என்று நினைத்து சொன்னான்.

 

“என் ரூமிலா?” என்று ஆச்சரியமாக கேட்டாள் சாதனா.

சுகந்தன்இந்த வீட்டிற்கு வந்தது அவளுக்கு நிம்மதியை தந்தது. ஆனால் அவளுடைய அறையில் அவன் தங்குவதில் அவளுக்கு விருப்பமில்லை. அவன்  நன்றாக இருக்க வேண்டும் என்று அவள் நினைப்பது உண்மைதான். ஆனால் அவனுடன் சேர்ந்து வாழவேண்டும் என்று இன்னும் அவள் நினைக்கவில்லை.

“அது…. அது….. எப்படி விக்ரம்?” என்று இழுத்தாள் சாதனா.

 

“இப்போ வேற வழி கிடையாது. நீங்களே யோசிச்சு பாருங்க. இவரை கீழே தங்க வைத்தா  குழந்தைக்கு பரவ சான்ஸ் இருக்கு. அதனாலதான் மேல தங்க வைக்கலாம்ன்னு பார்த்தேன். ஆனால் இந்த ரூமை சுத்தம் பண்ண டைம் ஆகும். அப்படியே பண்ணாலும் யாராவது ஒருத்தங்க இவர் மேல ஒரு கண்ணு வைக்கணும். உங்க ரூம்ல இருந்தா நீங்க பாத்துக்கலாம்.” என்று தயங்கி தயங்கி சொல்லி  முடித்தான்.

 

“எனக்கும் ஆபீஸ்ல முக்கியமான வேலை இருக்கு. நான் லீவு எடுக்க முடியாது. சஞ்சனா குழந்தையை  பார்த்துக்கணும். என்ன சொல்றீங்க?” என்று கேட்டான்.

அவள் யோசித்தாள். விக்ரம் சொல்வதில் இருந்த உண்மை புரிந்தது. எனினும் இவனுடன் நான் ஒரு அறையிலா?” என்று யோசித்தாள்.

“எல்லாம் ரெண்டு மூணு நாள் தான். மிஞ்சி மிஞ்சி போனா ஒரு வாரம். அவ்வளவுதான். அதுக்கப்புறம் உடம்பு சரி ஆயிட்டா அவர் வீட்டுக்கு போய்விடுவார். இந்த நிலைமையில அவரை அங்க தனியா விட முடியாது. என்ன சொல்றீங்க?” என்று கேட்டான் விக்ரம் அவள் முகத்தை கூர்ந்து பார்த்தபடி.

சாதனா யோசித்து பார்த்தாள் அவளுக்கும் வேறு எந்த வழியும் தெரியவில்லை.

எனவே “சரி” என்றாள் ஒற்றை வார்த்தையில்.

“அதுவே போதும்.” என்று உற்சாகமான விக்ரம் வேகமாக படி இறங்கி சஞ்சனாவிடம் விபரத்தை தெரிவித்தான்.

சஞ்சனாவும்  மகிழ்ந்தாள்.

“எப்படியோ இவங்க ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்தால் போதும்.” என்றாள் சஞ்சனா.

 

“சுகந்தன்நீங்க வாங்க.” என்று அவனை அழைத்துக்கொண்டு சாதனாவின் அறைக்கு வந்தான்.

“நீங்க இங்க தான் இருக்கப் போறீங்க.” என்று சொன்னதும் சுகந்தன்அந்த அறையை ஒரு பார்வை பார்த்தான்.

பார்த்ததும் அது சாதனாவின் அறை என்று தெரிந்து கொண்டான்.

“இங்கேயா?” என்று தயக்கத்துடன் கேட்டான்.

“ஆமாம்.   ப்ளீஸ். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.” என்றான் விக்ரம்.

“எனக்கு  ஓகே தான். ஆனால் மத்தவங்களுக்கு எப்படி இருக்கும்னு தான் தெரியல.” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது சாதனா அறைக்குள் நுழைந்தாள்.

 

“யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. நீங்க நிம்மதியா ரெஸ்ட் எடுங்க.” என்று சொல்லிவிட்டு அவர்களுக்கு நடுவில் நந்தி போல இருக்க விரும்பாமல் வெளியே வந்தான் விக்ரம்.

சுகந்தன்“யாருக்காவது பிடிக்கலன்னா இப்பவே சொல்லிடுங்க. அப்புறம் 911க்கு கால் பண்ண போறேன்னு யாரும் என்னை  மிரட்ட வேண்டாம்.” என்றான் அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி.

‘அவங்கவங்க அவங்கவங்க வேலையை பார்த்தால் எந்த பிரச்சனையும் இல்லை. யாரும் யாருக்கும் கால் பண்ண வேண்டிய அவசியம் இருக்காது.’ என்று சொல்ல துடித்த நாவினை அடக்கிக்கொண்டு

‘உடம்பு சரி இல்லாம இருக்குற இந்த நேரத்துல இவன்கிட்ட வாயை கொடுக்க வேண்டாம்.’ என்று நினைத்து தொண்டை வரை வந்துவிட்ட  வார்த்தைகளை மென்று விழுங்கி அமைதியாக அங்கிருந்து சென்றாள் சாதனா.

அவள் அமைதியாக செல்வதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் கந்தன்.

‘இந்நேரம் பதிலுக்கு பதில் ஏதாவது சொல்லி இருப்பாள். என்ன அமைதியா போரா? என்மேல சிம்பதி வந்துடுச்சு போல.’ என்று அலட்சியமாக நினைத்தான் கந்தன்.

அதற்குப் பிறகு எதுவும் நினைக்க முடியாமல் உடலின் சோர்வு அவனை  உறக்கத்தில் ஆழ்த்தியது.

 

 

விக்ரம் கையில் மருந்து பாட்டிலுடன் அறைக்கு வந்தான்.

சுகந்தன்உறங்கிக் கொண்டிருந்ததை பார்த்தான்.

“அதுக்குள்ள தூங்கிட்டாங்களா? ரொம்ப டயர்டா  இருக்காரு போல இருக்கு. சரி டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். நான் டைமர் வச்சுட்டு போறேன். ஒரு மணி நேரம் கழிச்சு டெம்பரேச்சர் செக் பண்ணிட்டு அதிகமா இருந்தா இந்த மெடிசன்  போடணும்.” என்று வாய்விட்டு சொல்லியபடி அந்த மேஜையில் அந்த மருந்து பாட்டில்களை வைத்துவிட்டு சாதனா கவனித்துக் கொண்டிருக்கிறாளா என்று லேசாக பார்த்துவிட்டு சென்றான் விக்ரம்.

 

சாதனா எழுந்துவந்து  அந்த மருந்து பாட்டில்களை பார்த்து தெரிந்து வைத்துக்கொண்டாள்.

அசதியில் தூங்கிக்கொண்டிருந்த கந்தனுக்கு கம்பளி போர்த்தி விட்டாள்.

 

சாதனா  ‘தரையில் படுக்கலாமா?’ என்று யோசித்தாள்.

இந்த குளிரில்  அது அவளுக்கு நல்லது இல்லை என்று புரிந்துகொண்டு

‘சரி இது பெரிய பெட் தான். நாம இந்த  பக்கம் படுத்துக்கலாம்.’ என்று  நினைத்து அந்தப் பெரிய படுக்கையின் ஒரு பக்கத்தில் அவன் படுத்துக் கொண்டிருக்க இவள் இன்னொரு பக்கத்தில் படுத்தாள்.

கீழே இறங்கிய விக்ரமை பார்த்து சஞ்சனா

“சுகந்தன்சாப்பிட்டாரா?” என்று கேட்டாள்.

“ஐயையோ அதை கேட்க மறந்துட்டேன். எனக்கு தோணவே இல்லை பாரு.”

 

“சரி இப்ப போய் கேளுங்க.”

“இல்லை சஞ்சனா. அவர் தூங்கிவிட்டார்.”

“சரி விடுங்க. டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். எழுந்ததும் பேசிக்கலாம்.”

 

“பாத்தியா? இதுக்கு தான் லேடிஸ் வேணும்னு சொல்றது. சாப்பாடு சாப்டியான்னு கேட்க வீட்டில் எப்போதும் ஒரு பெண் வேணும்.” என்றான் விக்ரம் சஞ்சனாவின் கன்னத்தை லேசாக தட்டியபடி.

 

படுக்கையில் படுத்த விக்ரம் சஞ்சனாவை அணைத்தபடி உறங்கிப் போனான்.

திடீரென்று எழுந்து மணியை பார்த்தான்.

“அச்சச்சோ டைம் ஆயிடுச்சு. கந்தனுக்கு மாத்திரை கொடுக்கணும்.” என்று பரபரப்புடன் எழுந்து வெளியே வந்தான்.

‘ஒருவேளை சாதனா கொடுத்திருப்பார்களா?’ என்று யோசித்தான் எனவே ஓசைப்படாமல் படி ஏறி மேலே வந்தான்.

அறையில் மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது. லேசாக திறந்திருந்த கதவின் வழியாக ‘எட்டிப் பார்க்கலாமா?’ என்று யோசித்தான்.

 

‘புருஷன் பொண்டாட்டி இருக்கிற ரூமை இப்படி நடு ராத்திரியில் எட்டிப்பார்க்கிறது ரொம்ப பெரிய தப்பு. ஆனால் இவங்க இருக்கிற சூழ்நிலையில்  பார்க்கிறதில் தப்பில்லை.’ என்று நினைத்துக்கொண்டு பார்த்தான்.

சாதனா கந்தனுக்கு மாத்திரை கொடுக்க கையில் மாத்திரையுடன் அவனிடம் சென்றாள்.

‘இந்த நேரத்துல நான் உள்ள போய் இருந்தா தான் தப்பு. சாதனா அவரை  பார்க்கட்டும்.’ என்று  ஓசைப்படாமல் வந்த வழி திரும்பி வந்தான்  விக்ரம்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!