EUNK – 1
இருளின் நிழல் மறைந்து, சூரியன் தன் ஆதிக்கத்தை பூமியில் செலுத்தும் நேரம். காலை மணி 4.30. நகரங்களில் பல வீடுகளில் இந்நேரம் அர்த்தஜாமம், ஆனால் கிராமப்புறங்களில் தனது அன்றாட வேலைகளைத் தொடங்கி இருப்பார்கள்,
அப்படிப்பட்ட ஓர் அழகிய கிராமம்தான் தஞ்சாவூருக்கு அருகில் உள்ள திருமலைசமுத்திரம், வளர்ந்துவரும் கிராமங்களில் ஒன்று. இக்கிராமத்தில் உள்ள ஒரு பெரிய வீட்டில் சாணம் வைத்து வாசலை தெளித்துக் கொண்டிருந்தார் அவ்வீட்டில் பணிபுரியும் பணிப்பெண். கோலமாவை கையில் எடுத்துக் கொண்டே கந்தா என்று கூப்பிட்டார் பொன்னம்மாள், அம்மா கூப்டீகளா,
ஆமாண்டா பால கரந்துட்டேனா வூட்டுக்கு எடுத்து வச்சிபுட்டு, மீதிய சொசைட்டில ஊத்திட்டு இந்தவார கணக்க சின்னவங்கிட்ட காட்டிடு என கந்தனுக்கு வேலை கூறினார் 72 வயதான அவ்வீட்டின் மூத்த பெண்மணி, சரிங்கமா, எனக் கூறிக்கொண்டே,
பாலை வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் ஊற்றிவிட்டு மீதி பாலை சொசைட்டியில் ஊத்துவதற்கு எடுத்துச் சென்றான் கந்தன். இந்த வயசிலயும் இம்புட்டு குளிரில இந்நேரத்துக்கு எந்திரிச்சு இந்த விரட்டு விரட்டுதே பாவம்யா இந்த வூட்டு மருமக என்று வெளியே வந்த கந்தனிடம் வம்பு பேசிக்கொண்டிருந்தாள் வேலை செய்யும் பெண் தாமரை. ஆமாம்புள்ள இந்த கிழவி சொ;ல்லுக்கு ஒரு வார்த்தை எதிர்த்து மகன் மருமக வாயிலிருந்து வராது. அதுக்குனு நீபாட்டுக்கு கொடுமைகாரினு நினைச்சிபுடாத தங்கமான ஆத்தா,
Advertisement
வேலை செய்யிற நம்மையே நல்ல கவனிசிக்கும்னா வூட்டில இருக்கறவங்ககிட்ட வாய்தான் சத்தம் போடுமே ஒழிஞ்சி, வார்த்தை பாசமதான் புள்ள இருக்கும், அதுவும் பேரனுகள கண்டுபுட்டா வாய்ல இருந்து காத்து மட்டுந்தே வரும். அம்ம்ம்புட்டு பயம் என சொன்னவன் அது சரி நீ வந்து இரண்டு நாள் தான ஆகுது. போகபோக உனக்கே புரியும் எனக் கூறிக்கொண்டே டிவிஎஸ் 50யை ஸ்டார்ட் செய்து புறப்பட்டான். கையில் சாணம் தெளித்த வாளியை ஒரு கையில் பிடித்துக் கொண்டு மற்றுமொரு கையை கன்னத்தில் வைத்திருந்த தாமரை கந்தன் சென்ற வழியையே பார்த்துக் கொண்டிருந்தாள். கோலமாவை எடுத்துக்கொண்டு மருமகளிடம் சில வேலைகளை சொல்லிவிட்டு வாசலுக்கு வந்து பார்த்தபோது கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு கனவுலகில் மிதந்து கொண்டிருந்த தாமரையைப் பார்த்த பொன்னாத்தாள், அடியே காலங்கார்த்தால வூட்டு வாசல்ல நின்னுகிட்டு கனவு கண்டுகிட்டு இருக்கிறியாடி, என்ற கத்தல் சத்தம் கேட்டவுடன் ஹீஹீஹீ என ஒரு அசட்டுச் சிரிப்பை சிரித்தபடி வேகவேகமாக வந்து கோலமாவை வாங்கிக் கொண்டு கோலமிட சென்றாள். செல்லும் அவளை ஒரு நொடி பார்த்துவிட்டு உள்ளே சென்றார் பொன்னாத்தாள். மருமகளிடம் அடுத்த வேலை ஏவுவதற்குள் இவ்வீட்டின் நபர்களை பார்த்துவிடலாமா!
அக்கிராமத்தில் உள்ள பெரிய வீட்டின் தலைவன் தலைவி பொன்னாத்தாள், பூபதிபாண்டியன், பூபதி காலமாகி இரு வருடங்கள் கடந்திருந்தன.
இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். ராஜபாண்டி மற்றும் துரைப்பாண்டி இரட்டையர்கள், ராஜபாண்டிக்கு இராணுவத்தின் மீது பற்று உண்டாக தனது 22 வயதில் மிலிட்டிரியில் சேர்ந்தார். 38 வருடங்களாக பல்வேறு பதவிகளை வகித்து தற்போது மேஜரரக டெல்லியில் உள்ளார்.
Advertisement
பஞ்சாபைச் சேர்ந்த தனது சீனியரின் தங்கைமேல் காதல் கொண்டு பெரிய எதிர்ப்புகளுக்கிடையே, இரு வீட்டினரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவரின் மனைவி அம்ரிதா, இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள், மகன் கல்லூரி மூன்றாம் வருடமும், மகள் பத்தாம் வகுப்பும் படிக்கின்றனர்,
Advertisement
மூத்தவனுக்குத் தன் தங்கை மகளை திருமணம் பேச எண்ணியிருந்தார் பூபதி, ஆனால் மகன் காதல் என வந்து நின்றான். மகன் மீது கோபம் கொண்டு வீட்டை விட்டு அனுப்பிவிட்டார், மேலும் சில வருடங்கள் கடந்த நிலையில் தனது இன்னுமொரு மகனுக்கும் திருமணம் தடைபடுகிறது, மகளுக்கும் திருமண வயது நெருங்குகிறது என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார்,
அச்சமயம் தனது ஓரே தங்கையின் கணவனும், தனது மைத்துனனுமான விருத்தாசலம் தனது மகளின் திருமணம் குறித்து பேசுவதற்காக வந்தார். ( அக்காலங்களில் உறவுகளுக்குள்ளேயே பெண் எடுத்து பெண் கொடுப்பர்)
மாமா என்ன முடிவு பன்னிருக்கீக, எனக் கேட்டார், என்ன சொன்னாலும் பெரியவன் ஒத்துக்க மாட்டேங்ககிறான் மாப்பிள்ள என்ன செய்யரதுனு ஒன்னும் அம்புடலையா என புலம்பினார்.
Advertisement
எனக்கு ஒரு யோசனை தோனுது எனக் கூறி, சில முடிவுகளை எடுத்தனர் மாமனும் மச்சானும் இணைந்து.
அதாவது இரட்டையரில் மற்றொருவரான துரையை தனது மாப்பிள்ளையாக்கிக் கொள்வது என்றும், தனது மகளை விருத்தாசலத்தின் மகனுக்கு முடிப்பதென்றும் முடிவு செய்து, அவரவர் துணைவியாரிடம் விஷயத்தைப் பகிர்ந்தனர்.
அவர்களுக்கு பூரண சந்தோஷம், அதன் பின் துரையிடம் விஷயம் சொன்னவுடன் முதலில் தயங்கியவன் தனது முகத்தை ஆவலுடன் நோக்கும் தனது அத்தை பெண்ணான சுகுணாவை பார்த்தவன் சரி உங்க விருப்பம் எனக் கூறிச் சென்றுவிட்டார்,
அதே போல் அடுத்த மணமக்களைக் கேட்டனர். அவர்களின் சம்மதத்துடன் இரு திருமணங்களும், அடுத்தடுத்த முகூர்த்தங்களில் இனிதாக நடந்து முடிந்தது.
திருமணத்தின் பின்புதான் சுகுணா தன்னை விரும்பியதை அறிந்து கொண்டு மிகவும் மகிழ்ந்தார். அண்ணணுக்கு முடிவு செய்த பெண்ணென்று சிறு நெருடலில் தான் திருமணத்திற்கு சம்மதித்தார். சுகுணாவின் விருப்பம் தன்மேல் என்றவுடன் அவரின் ஆனந்தத்திற்கு அளவே இல்லை எனலாம்.
மேலும் பல வருடங்கள் கடந்த நிலையில் ராஜபாண்டி அவர் விரும்பிய பெண்தவிர வேறு யாரையும் மணமுடிக்க மாட்டார் என்று அனைவரும் எடுத்துக்கூறி ஒரு வழியாக பூபதியை சம்மதிக்க வைத்து ராஜன் விரும்பிய பெண்ணையே சிறு காலம் சென்று கரம்பிடித்தார்.
இரு வருடங்களுக்கு ஒரு முறையாவது வந்து தன் தாய்மண்ணையும், தாயையும் குடும்பத்துடன் வந்து பார்த்துவிட்டுச் செல்வது அவரின் வழக்கம்,
( அப்பாடா ஒரு வழியா பூபதி அய்யாவோட குடும்பத்தை பார்த்தாச்சி, ஆனா தெரிஞ்சிக்க வேண்டிய நம்ம ஹீரோ ஹீரோயின காணமேப்பானு நீங்க தேடுறது புரியிது,,அடுத்த எபில கண்டிப்பா இழுத்துட்டு வருவேன் என்ற நம்பிக்கையுடன்,,,,,,,,)
“அன்பு ;கொண்டு உனை நினைப்பேனோ – எப்பொழுது
