Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Idhaya thirudan Episode 16.1

நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

ஆப்பமும் ஏலக்காய்  மணம் வீச தேங்காய் பாலும் எடுத்து வந்து பரிமாறினாள் மலர். ஆப்பத்தை  பிட்டு வாயில்  எந்திரத்தனமாய் வைத்துக்கொண்டு  சாப்பிட ஆரம்பித்தான் மாதவன்.

 



Advertisement

அவனது நினைப்பு வடபழனி கோவிலில் மதுமிதா மற்றும் அவளது குடும்பத்தினை சந்தித்ததை பற்றி இருந்தது.  ‘இப்படி கையில கிடைச்ச கோல்டன் ஆப்புர்ச்சுனிட்டியை விட்டுட்டோமே அப்பாவோட அறுபதாம் கல்யாணம் பத்திரிக்கையை வைத்திருந்தா அவள் குடும்பம் இங்கே வர ரெண்டு பேருக்கும் நல்ல நட்பு வளர்ந்து இருக்கும். “ப்ச்” என்று உச்சுக் கொட்டினான் மாதவன்.

 

இவனை கவனித்த மலர்

Advertisement

“என்ன மாதவா உச்சுக் கொட்டிட்டு இருக்க? என்ன விஷயம்? ஏதோ கஷ்டப்பட்டு சாப்பிடற மாதிரி தெரியுது? ஆப்பம் நல்லா இல்லையா?” என்று கேள்வியாக அவனைப் பார்த்தாள் மலர்.

Advertisement

 

“இல்லை இல்லை. அண்ணி நீங்க பண்ண ஆப்பம் எப்பவுமே நல்லா தான் இருக்கும்.” என்று மாதவன் மறுத்து கூறவும் பார்வதி அங்கு வந்து

“அவள் ஆப்பம் செய்யல அவளுக்கு  ஆதி கிட்ட கொஞ்சம் வேலை இருந்தது.  நான் தான் இன்னைக்கு ஆப்பம் பண்ணினேன்.” என்று அவனை திருத்தினார்.

Advertisement

 

“சரிமா யாரு பண்ணி இருந்தாலும் சரி. ஆப்பம் தேங்காய்ப்பால் எப்போதும் போல சூப்பரா இருக்கு.” என்றான் மாதவன்.

 

“அப்புறம் எதுக்குடா உச்சி கொட்டிட்டு இருக்க ?”என்று அவரும் அதே கேள்வியை திரும்பவும் கேட்டார்.

 

“அது அது வந்து ஏதோ ஒரு நினைப்பில் தெரியாம கொட்டிட்டேன். விடுங்க அம்மா. “என்று அவன் கூறும் பொழுதே வீட்டு தொலைபேசி  அடித்தது.

 

இதுதான் சமயமென்று தாயை திசைதிருப்ப நினைத்த மாதவன்

“அம்மா போன் அடிக்குது போயி எடுங்க.” என்று கூறினான்.

 

அவரும் எழுந்துசென்று தொலைபேசியை எடுத்து காதுக்கு கொடுத்தார்.

 

“அப்படியா சொல்லுமா.” என்று ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தார் பார்வதி.

 

சிறு இடைவேளைக்குப் பிறகு

 

“ சரிமா நான்  அவனையே கூப்பிடறேன். நீயே பேசு.” என்று  கூறி விட்டு திரும்பி மாதவனை பார்த்தார்.

 

மாதவன்  “போதும் அண்ணி.  எனக்கு வயிறு சரியில்லை. ஒரு ஆப்பம் போதும்.” என்று சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்து கொண்டிருந்தான்.

 

“ஒரு ஆப்பம் போதுமா?” என்று ஆச்சரியமாக கேட்டுக்கொண்டிருந்தாள் மலர்.

 

ஆனால் பார்வதி “பரவாயில்லை விடுமா.  மாதவா சாப்பிட்டு  முடிச்சிட்ட இல்ல இங்கே வா.” என்று அழைத்தார்.

 

மாதவன் அவரிடம்  சென்றான்.

 

அவர் தொலைபேசியை பொத்திக்கொண்டு

 

“மாதவா பேசு.  ரூபாதான் பேசறா.” என்று ரகசிய குரலில் கூறினார்.

 

மாதவனுக்கு தூக்கிவாரிப்போட்டது.

 

“என்ன என்ன சொல்றீங்க அம்மா ?”என்று புரியாமல் கேட்டான்.

 

“அது ஒன்னும் இல்லடா.  நீ தானே ரூபா கிட்ட பேசணும்னு சொன்ன.  நான் அவங்க அப்பாகிட்ட சொன்னேன். அவங்க அப்பா ரூபா கிட்ட சொல்லி இருக்காங்க போல.  அவ உனக்கு போன் பண்ணி இருக்கா.” என்று விபரத்தைக் கூறவும்

“அதுக்குள்ளே சொல்லிட்டீங்களா?”

 

“ஆமா பின்ன  நல்ல நேரம்  பார்த்தா சொல்லுவாங்க?” என்று அவனை பதில் கேள்வி கேட்டார் .

 

‘ஐயையோ நான் இப்ப எதுவுமே ப்ரிப்பேர் பண்ணலயே. என்ன சொல்றது இவள் கிட்ட?’ என்று யோசித்துக்கொண்டே நின்று கொண்டிருந்தான் மாதவன்.

 

“டேய் என்னடா யோசிக்கிற? இந்தா பேசு.” என்று தொலைபேசியை அவன் கையில் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார் பார்வதி.

 

அவன் தொலைபேசியை காதுக்குக் கொடுத்தான்.

 

“நான் மாதவன் பேசுறேன்” என்றான்.

“நான் ரூபா பேசுறேன். நாம இன்னிக்கி சாயந்திரம் மீட் பண்ணலாமா? எங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு.  அந்த பிள்ளையார் கோயிலுக்கு சாயந்தரம் வர முடியுமா?” என்று கேட்டாள்.

“ஐயோ இது என்னடா வம்பா போச்சு.  தேவையில்லாம அவளோட மனசுல நாம ஆசையை  வளர்க்கிற மாதிரி ஆகிவிடுமோ?” என்று குற்ற உணர்ச்சியில் யோசித்தான் மாதவன் .

 

“இல்லை எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.” என்று கூறி தவிர்த்து விட முடிவு செய்தான்.

 

ஆனால் அவள் வேறு சொன்னாள்.

 

“சாய்ந்திரம் முடியாதுன்னா எப்ப முடியும்னு சொல்லுங்க. நாம மீட் பண்ணலாம். ஆனால் நாம நிச்சயமா மீட் பண்ணனும். நிறைய பேசணும்.” என்றாள் அவள் விடாப்பிடியாக.

 

“சரி எப்படியும் நாம இவகிட்ட மதுமிதா விஷயத்தை சொல்லி தான் ஆகணும்.  இப்பவே சொல்லிடலாம். அவளும்  என் மேலே ஆசையை வளர்த்துக்க மாட்டா.” என்று முடிவு செய்தவன்

 

“ சரி நான் சாயந்திரம் 6 மணிக்கு அந்த கோயிலுக்கு வர்றேன். நானும் உங்ககிட்ட நிறைய விஷயம் பேச வேண்டி இருக்கு நாம இன்னிக்கு மீட் பண்ணலாம்.” என்று கூறி போனை வைத்தான் மாதவன்.

 

போனை வைத்துவிட்டு வந்த மாதவனை பார்த்த பார்வதி

“என்னடா என்ன சொன்னா ரூபவதி?” என்று ஆர்வமாக கேட்டார்.

“ஏதோ பேசணும்னு சொன்னா.  நானும் சரிu சொல்லி இருக்கேன். (Soma) அவ்வளவுதான்.” என்றான் மாதவன்.

 

“அவளுக்கு உன்னை ரொம்ப பிடிச்சு இருக்கு.  அதனால தான் உன்கிட்ட பேசணும்னு ஆசைப்படுகிறாள்u நினைக்கிறேன்.” என்று பூரிப்புடன் கூறினார் பார்வதி.

 

“இருக்கட்டும் எனக்கும் அவளைப்  பிடிக்கணும் இல்லையா? இன்னிக்கி தான் அவளை பார்க்க போகிறாய் இல்லையா ?பேசி பாரு.  உனக்கு கண்டிப்பா அவளை பிடிக்கும்.  ரொம்ப நல்ல பொண்ணு.  யாருக்கும் அவளைப் பிடிக்காமல் போகாது. “ என்று உறுதியாக கூறினார் பார்வதி.

 

“சரிமா பிடிச்சா நான் உங்ககிட்ட வந்து சொல்றேன். இல்லைன்னாலும் நீங்க நான் சொல்றதுக்கு ஒத்துக்கணும். “ என்று கூறிவிட்டு அவர் பதிலை எதிர்பார்க்காமல் கடைக்கு சென்றான் மாதவன்.

 

அன்று பார்க்கவேண்டிய கணக்குகளை பார்த்து முடித்த பிறகு சோர்வாக சாய்ந்தான் மாதவன்.

 

‘அப்பாகிட்ட சொல்லி வருங்கால மாமனாருக்கு பத்திரிக்கை அனுப்ப  சொல்லணும்.  அப்படியே போன் பண்ணி பேச சொல்லணும்.  நேர்ல பத்திரிக்கை வச்சிருந்தா ஒருவேளை குடும்பத்தோட வந்திருப்பாங்க. இப்போ பத்திரிக்கை அனுப்பினால்  வருவாங்களான்னு தெரியலையே. நாம கொஞ்சம் நிதானமா இருந்து பத்திரிக்கை வைத்திருக்கலாம்.’ என்று மீண்டும்  உச்சிக் கொட்டி நான் மாதவன்.

 

“என்னடா மாதவா  நீ இன்னிக்கி அந்த ரூபா பொண்ணை  பார்க்கணுமாமே, அதனால சீக்கிரமா உன்னை வீட்டுக்கு அனுப்ப சொன்னா.” என்று கூறிக்கொண்டே அவனிடம் வந்தார்.

 

“ஆமாம் ஆனால் சாய்ந்திரம் தானே.  அதுக்கு இப்பவே   கிளம்ப வேண்டுமா? இந்த அம்மா எல்லாத்தையும் இப்படித்தான் பெருசா பேசுவாங்க.” என்று சலித்துக்கொண்டாள் மாதவன்.

“அம்மாவுக்கு உனக்கு நல்ல பொண்ணா நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணனும்னு ஆசை.  அதனால இப்படி பண்றாங்க.  இதுல என்னடா தப்பு இருக்கு?” என்று மனைவிக்காக பரிந்து பேசினார் அண்ணாமலை.

 

“சரி சரி நீங்க அம்மாவை விட்டு கொடுப்பீங்களா?”

 

“அதுக்கு இல்லைடா.  நீ இப்போ கிளம்பினால் தான் வீட்ல போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு சாய்ந்திரம் அந்த பொண்ணை போய் பார்க்க வசதியாக இருக்கும்.  அதனால கெளம்பு.”. என்று அவனை கிளப்பினார்

“சரிப்பா என்று கூறிய மாதவன் அங்கிருந்து கிளம்பினான். மதிய உணவை சாப்பிட்டு முடித்த மாதவன் தோட்டத்து  வேப்பமர நிழலில் போட்டிருந்த கட்டிலில் உட்கார்ந்தான்.

 

‘சீக்கிரமே மதுமிதாவுக்கு பத்திரிக்கையை அனுப்பனும். அதுக்கு முன்னாடி இந்த ரூபா கிட்ட நம்ம எல்லா விஷயத்தையும் சொல்லணும்.  சரி எப்படி சொல்லலாம்? என்று யோசித்தான்.

 

‘நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன். அதனால என்னால உங்களை கல்யாணம் பண்ணிக்க முடியாது’ என்று நேராக விஷயத்துக்கு வந்து விடலாமா? என்று யோசித்தான்.

 

‘ இல்லை இல்லை  முதலில் சாரி  கேட்கணும். அதுக்கப்புறம் தான் நாம விஷயத்தை சொல்லணும். இதை மட்டும் சொன்னால் பத்தாது. அவளிடம் அழகு, படிப்பு, திறமை எல்லாமே இருக்கு.  அதனால என்னை விட நல்ல மாப்பிள்ளை அவளுக்கு கிடைக்கும் அப்படின்னு அவளை கஷ்டப்படுத்தாமல் சொல்லணும் . ஆனால் கண்டிப்பா சொல்லிடணும். அவ மனசுல என்னைப்பற்றி ஆசையை வளர்த்து காம பாத்துக்கணும் .’என்று முடிவு செய்தான் மாதவன்.

 

“மாதவா கிளம்பிட்டியா?” என்று அவசர படுத்தினார் பார்வதி.

 

“அம்மா நான் போய் அவளை கண்டிப்பா பார்ப்பேன்.  நீங்க வேலையை பாருங்க.” என்றான்.

 

“மலர் கோயிலுக்கு போகலாம் வா”. என்று கூப்பிட்டார் பார்வதி.

 

அவள் அவரிடம் வந்து “இல்லை அத்தை.  நான் இன்னிக்கி கோயிலுக்கு வர கூடாது.” என்று தயங்கியபடி கூறினாள்.

 

“ஓ .அப்படியா. சரி மா.  நான் ஆதித்யாவை கூட்டிட்டு போயிட்டு வரேன்.” என்று   கூறியபடி ஆதித்யாவை கையில் பிடித்துக் கொண்டார்.

 

“ஆதி பாட்டிக்கு தொந்தரவு கொடுக்காமல் ஒழுங்கா நடந்துக்கோ. கோயிலில் அங்கேயும் இங்கேயும் ஓடக் கூடாது. சரியா? அப்படி நீ எங்கேயாவது ஓடினேu தெரிஞ்சது அப்புறம் உன்னை நான் வெளியே எங்கேயும் விடவே மாட்டேன்.  சரியா? உன் வாலை சுருட்டி வச்சிட்டு ஒழுங்கா  நடந்துக்கோ .

பாட்டியால உன் கூட ஓடமுடியாது.  ஞாபகம் இருக்கட்டும்.”

என்று அவனை ஒற்றை விரல் உயர்த்தி

எச்சரித்தாள் மலர்.

 

“அம்மா அதெல்லாம்  நான்  எந்த வாலு தனமும் பண்ண மாட்டேன். . பாட்டியை நான் பத்திரமா பாத்துக்கிறேன்” என்று பெரிய மனிதன் போல பேசியதைக் கண்டு இரு பெண்களும்  சிரித்தனர்.

 

“நீ பாட்டியைப்  பார்த்துக் கொள்கிறாரோ இல்லையோ படுத்தாமல் இரு போதும்.” என்றாள் மலர்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!